காடெல்லாம் பூத்திருக்கு (16)
தீப ஒளி திருநாளின் இனிய நல்வாழ்த்துக்கள் !

என் உயிரினும் மேலான என் உயிர் தன் இறுதி நேரத்தில் தன் மூச்சை என்னுள் ஊதிச் சொன்ன வார்த்தைகளை எண்ணிப் பார்த்தால் மெய் சிலிர்த்து போகிறேன். "ஆமாங்க நீங்க பெரிய ஞானி தான் " நான் எப்போதும் கேலியாக சொன்ன வார்த்தைகள் எத்தனை உண்மை. என் வார்த்தைகளை உண்மையாக்க உள்ளிருந்து உதிர்ந்த வார்த்தைகள் " நான் போன பின் நீ அழாதே . உன்னை அழாம பாத்துக்க நிறைய பிள்ளைகள் , அன்புள்ளவங்க உன்னை சுற்றியே இருப்பார்கள். நான் மட்டும் என்ன? உன் நெஞ்சிக்குள்ள தானே இருப்பேன்" வார்த்தைகள் நிஜமானது.
மழையின் தூறலாய், மயிலின் இறகாய் என் இதயம் வருட , கவலை களைய வந்த என் இளைய மகன் பாபு. "டே உன்னால் மட்டும் எப்படிடா? துயரம் தோய்ந்த என் உள்ளம் வருடி மருந்திட்டவன் . அம்மா நீங்க வருத்தமா இருக்க கூடாது. ஏன்னா நாங்க இருக்கோம். எழுதுங்க, நிறைய எழுதுங்க உங்களை நேசிக்க உலகம் ரொம்ப பெருசும்மா" வார்த்தைகள் நம்பிக்கையோடு வர , அப்பாவின் குரலும் பின்னில் ஒலிக்க காடெல்லாம் பூக்க தொடங்கியது.
வீசும் தென்றல், தேடும் பாடல் , மூடும் இமைகள் எல்லாமே சுகம். " என்னங்கம்மா எப்டி இருக்கீங்க உரிமையும் பாசமும் கலந்த குரல் என்றால் அவன் விஜயன். மனமெல்லாம் IAS கனவு. துன்பங்களை நாளை மாற்றலாம் என்ற மனது. என்னை வெகுவாக ஈர்த்தது. எப்போதும் கனவுகளை மெய்பிக்கும் நம்பிக்கை. அதுவே உனது பலம்.
ஆசிரியரும் மாணவனும், அன்னையும் மகனுமாய் மாற முடியுமா? மாற்றியவன் அருள். பல சமயங்களில் வியக்க வைத்தவன். வளம் அத்தனையும் பெற்று வளமே வாழவேண்டும்.
அக்கறை சீமையில் பொருளீட்ட சென்றாலும் , மனமெல்லாம் இக்கரையில் தான். நினைவுகளின் பலத்தில் தினங்களை கரைத்து கொண்டிருக்கும் கார்த்தி , ஃபர்கான் இவர்களும் என் செல்ல பிள்ளைகளே.
மலர்களுக்கு ஆதி நாளில் எப்படி பெயர் வைத்தார்கள்? ஏன் நாமும் நம்முடைய விருப்பமான பெயர்களை, நம் காட்டில் பூத்த மலர்களுக்கு வைக்க கூடாது என்ற என் ஆதங்கத்தில் உருவான என் மலர்களுக்கு இட்ட பெயர் சுகன். இந்த மலரின் சிரிப்புக்கு நானடிமை. கொஞ்சலான பேச்சோடு அவள் சொல்லும் "ச்சொல்லுங்க பெரியம்மாமாமாமா... அடிவயிற்றிலிருந்து வரும் ஓசை". எப்போதும் என்னோடு பேச நினைத்தாலும் விடுப்பது missed call . கோவபடாதடா செல்லம்!.
ப்ரீத்தி! அனிச்சம் இவள். அழகு இவள். அன்பு இவள். முகத்தில் மட்டும் அல்ல, பேச்சிலும் அதுவே பிரதிபலிக்கும். அவளுக்கு அம்மா நானென்றால் , நான் தானே ரொம்ப கொடுத்து வைத்தவள்!.
யாஷினி ! இந்த மலர் அழகாய் விமர்ச்சிக்கும் அன்பு மலர். " என்னம்மா நான் சொல்லுறது சரிதானேம்மா?" விமர்சனத்தின் எழுத்துகளில் பேசுவாள். "ஆமாண்டா கண்ணம்மா நீ சொன்னா எப்போதுமே சரிதான்".
அர்ச்சு ! நாகர்கோவில் மனம் வீச பேசும் , இவளின் மரியாதையும் பாசமும் மனதை விட்டு நீங்கா இடம் பெற்றவை.
பெயரால் எனை ஈர்த்த மலர் ஒன்றும் உண்டு. பெயரை சொன்னால் உங்களுக்கே புரியும் . ஷஃபா!
அனானிமஷாய் (anonymous) என்னை அம்மாவெனஅழைத்த இன்னும் சில மலர்களும் இந்த காட்டில் பூத்து காய்ந்து விடாமல் என் நெஞ்சில் என்றுமே வாழும்.
மனிதர்களை ஊடுருவி பார்க்கும் கண்கள் ,
அதை மறைக்க அணிந்திருக்கும் கண்ணாடி ,
அறிவை அளந்து சொல்ல நீண்ட மூக்கு,
அவ்வப்போது திறந்து மூடும் வாய்,
கருப்பு கூட்டுக்குள் மறந்திருக்கும் மெலிந்த உடல்,
எட்டித் தொட்டு விடும் அளவான உயரம்,
இதை கம்ப்யூட்டர்ல் போட்டு எடுத்தால் வரும் உருவம் தான் பரதன்.
என்ன பரதன் எப்படி இருக்க எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? அம்மா தான் பரதன். நியாபகம் வருதா? பிரசாந்தி , ஹம்சலா, ஆர்த்தி எப்படி இருக்காங்க?
எனதருமை பேரன்கள் அன்பு, ப்ரேம், சுரேந்தர், தீபக், விவேக், மௌலி , விக்கி , குரு மற்றும் தேவா நீயும் இந்த பூக்கள் நிறைந்த காட்டிற்குள் தான் இருக்கிறாய்.
"பாட்டீ! நான் campus லே செலக்ட் ஆயிட்டேன்" தொடர் ஓட்டத்தில் முதல் வெற்றியாளன் மைகேல் எல்லா நிலையிலும் திறமையுடன் முதல்வனாய் வா.
இந்திய மண்ணில் மட்டும் அல்லாமல் , வெளிநாட்டு தமிழர்களும் இந்த காட்டுக்குள் வந்து வாசம் நுகர்ந்தவர்களே.
வெள்ளை புறா ஒன்று பொன் சிறகை விரித்து , வெகு தொலைவில் இருந்து தொலைந்து பூ பூத்த நம் காட்டுக்குள் வந்து அமர்ந்தது. அனைவரிடமும் நட்போடும் அன்போடும் பழகி எல்லார் மனதையும் இடம் பிடித்தது. அன்போடு அம்மாவென அழைக்கும் Sam (Samantha Dargallo) . என் மனம் கவர்ந்த அன்பு மகள்.
இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீப திருநாள் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதங்கள் !!!
நீ அறியாததும் , உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்று வாக்களித்த இறைவன் எனக்கு செய்த செயற்கரிய காரியங்களுக்காக நன்றியோடு மீண்டும் தொடர்கிறேன்.
என்றும் அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்


வணக்கம் அம்மா..
ReplyDeleteதீபத்திருநாள் நல்வாழ்த்துகள்...
இந்த வார அம்மா படைப்பில் நாங்கள் எல்லாம் கதாபாத்திரம் ஆகிவிட்டோம் ...:)
ரொம்ப மகிழ்ச்சி அம்மா.நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்..நன்றி..
Keep writing ma..we are waiting..
This comment has been removed by the author.
ReplyDelete@ யோஷினி - Thanks for your commenting ma ...
ReplyDeleteவணக்கம் பெரியம்மா.தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள். எங்களுக்கு உங்க ஆசியை அழகா உங்களுக்கு நாங்க சொந்தமான எழுத்தில தந்திடீங்க.இதைவிட ஒரு பெரிய வாழ்த்து இருக்க முடியாது.
ReplyDeleteநெருப்பு அழியாதது தூய்மையானது நிலையானது
அதுபோல் உங்கள் எழுத்தும் இருக்கட்டும்.
periyamma no words to express my happinesssssssss...........really i love u alot and thousands of kissesssssssssssss...........
ReplyDeleteAmma i dont knw how to express my happiness....thanks God to have u in my life.....so happy..
ReplyDeleteI think this edition of the story is Amma's Deepavali gift to the readers.It gives me immense pleasure to be part of this intellectual cluster.In this list my vote goes to Karthik, Babu, Prem .Amma we are with you always. Don't feel isolate. Amma is my mentor. The preface picture is fine.
ReplyDeleteReally thanks to Karthik to found a great Amma for all of us. Love you Amma.
ReplyDelete