காடெல்லாம் பூத்திருக்கு (17) !
" மௌனம் புரிந்து விட்டால்!!! "
"அம்மா ஊரணிக்கு போய் தண்ணி எடுத்துட்டு வரேன்"
" ஏண்டி? போற நேரத்த பாரு ... பொழுது ஒரு பக்கமா இருட்டிட்டு வருதே இந்நேரம் போறியே .. குடத்த வை நாளைக்கு போகலாம் "
"இல்லம்மா மல்லிகாவும் தான் வர்றா , ரெண்டு பெரும் போயிடு வரோம்மா"
" ஹ்ம்ம் சொன்னா கேட்க மாட்ட , பாத்து போய்ட்டு வா"
குடத்தை எடுத்தவள் சிட்டாக பறந்தாள். பாதி வழி போனதும் நின்றாள். யார் வருவது என பார்த்தாள். தயங்கினாள். பின்னால் வந்த உருவம் எட்டி நடை போட்டு எதிரில் வந்து நின்றது. பயத்தில் "ஆ ஆ ... என்றவளை வாய் பொத்தி "நான் தான் கத்தாதே" என்றது.
வந்தவன் கார்த்திக். "என்ன? அவசரமா வர சொன்னிங்க? என்ன விஷயம் என்றாள்?"
" ஒண்ணுமில்ல நம்மூர் டெண்டு கொட்டகையில சினிமா பார்க்க வரியா? " அதுக்கு தான் கூப்பிட்டேன்.
" ஆத்தாடி !!! என்னால முடியாதுப்பா சாமி . வழிய விடுங்க "
" யேய் நாளை மதியம் புளியந்தோப்புக்காவது வரியா? நாளை மறுநாள் நான் ஊருக்கு போறேன்."
"உம்ம் .. பார்க்கலாம் "
துள்ளி ஓடும் நடையோடும் , குடம் நிறைய நீரோடும் என்னை தாண்டி சென்றாள்.
மறுநாள் ஏதேதோ சாக்கு சொல்லி விட்டு புளியந்தோப்புக்கு சென்றாள். அவளுக்கு முன்பாக அங்கிருந்தவனை பார்த்து புன்னகை பூத்தாள். "இங்கே வா உட்காந்து பேசலாம்" என்றவனை பார்த்து , "உட்காந்தெல்லாம் பேச முடியாது. நான் மரத்துக்கு இந்த பக்கம் உட்காருவேன், நீங்க அந்த பக்கம் இருங்க."
"ஐயோ கடவுளே இவ கிட்ட பேச கூட முடியலியே. எப்படி இவள கல்யாணம் பண்ணிக்க போறேன்? ஒண்ணுமே முடியல "
அவர்களின் பேச்சு மரத்தின் இரு புறமும் இருந்த படியே தொடர்ந்தது. அவன் இவளுடைய மாமா பையன் தான் . எப்பவோ ஏற்பட்ட சண்டையில் இரு வீட்டுக்காரர்களும் பேசி கொள்வதில்லை. பகை இரு வீட்டாரின் மனதையும் மறைத்து இருந்தது. அதனால் தான் இந்த ஒளிவு மறைவான பேச்சு.
நாளை அவன் கல்லூரி படிப்பை தொடர ஊருக்கு செல்ல வேண்டும். இந்த ஒளிவு மறைவான பேச்சு எப்படித்தான் முடிவுக்கு வரும். கவலை இருவர் மனதிலும் நிறைந்திருந்தது. .
அவன் மறு நாள் படிப்பை தொடர ஊருக்கு சென்றான். சரியாக ஆறு மாதம் கடந்து ஊரிலிருந்து அவனை பார்க்க வந்த நண்பன் சொன்ன செய்தி அடி வயிற்றில் இடி இறங்கியதுபோல் இருந்தது. அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சாம். ஒரு மாதத்திற்குள் கல்யாணமாம். அவனால் தாங்க முடியாத செய்தி இது.
உடனே ஊருக்கு புறப்பட்டு சென்றான். அதே புளியமரத்தடியில் அவளை வர சொல்லி பார்த்தான். இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன் விளைவு இருவருக்குமே பெரும் சரிவு.
எத்தனை எத்தனை துன்பங்கள். சகிக்க முடியாத நிலையில் செத்து விடலாம் என்று கூட நினைத்த நேரங்கள் அப்போதெல்லாம் 'அப்பா' என கண் துடைத்த மகளை பார்த்து தான் மனம் மாறினான்.
அவள் அவனை தொடர்ந்த நாள் தொட்டு உடலாலும் மனத்தாலும் பட்ட துன்பங்கள் சொல்லி முடியாது என்றாலும் அவளது திடமான வைராக்கியமே அவனையும் கூட தூக்கி நிறுத்தியது. அவன் எப்பொழுதும் மனதில் சொல்லி கொள்வது, என்னுடைய பலவீனமான எண்ணங்களால் வழுக்கி விழுந்த போதெல்லாம் சட்டென கை பிடித்து தூக்கி விட்டு அன்பால் என் அவஸ்தையை போக்கும் இவள், நான் உழைத்து திரும்பும் போதெல்லாம் என்னை ஓர் இளவரசனாக்கி, சாப்பிடும் கஞ்சியை கூட தேவாமிர்தமாக்கி, குடிக்க குடுக்கும் பாங்கு அவளுக்கு மட்டுமே கைவந்த கலை.
நம் நிலை எப்படியும் மாறும் என்றாள். அவள் சொன்னது போலவே நடந்தது. அதற்காக அவள் கொடுத்த விலை பெரிது. நாள் முழுதும் நெருப்பும் எண்ணெய் சட்டியுமாக காய்ந்து தீந்தாள். சிறுக சிறுக மெருகேறும் தங்கம் போல பலகார கடை சூடு பிடித்தது. நானும் என் கல்லூரி சான்றிதல்களை மூட்டை கட்டி விட்டு, அவளோடு தோள் கொடுத்தேன். என் மகள் இன்று கல்லூரி இறுதி ஆண்டில் கால் பதித்துள்ளாள்.
செல்போன் எப்போதும் சிணுங்கிய வண்ணமே இருந்தது. எப்போது கேட்டாலும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி செல்போனை நிறுத்துவாள். அல்லது பேசுவாள். "ஏண்டி எப்போதும் செல்போன் கையுமா இருக்க?" என அம்மா கேட்கும் போது ஏதேதோ சொல்லி சரிக்கட்டினாலும் அம்மாவுக்கு மட்டும் 'தன்னுடைய அம்மாவிடம் சொன்ன பொய்களெல்லாம் மறுவடிவம் பெறுகிறதோ?' என தோன்றியது. எதையும் அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஒரு நாள் கல்லூரி முடிந்து யாரோ ஒரு பையனோடு வண்டியில் வந்தாள். நெஞ்சில் எதோ நெருடியது. கமல் bye என்றாள். அவனும் பதிலுக்கு விமல் வரட்டுமா என்றான். உள்ளே வந்த அவளை "யேய் யாருடி அவன்? அவன் கூட பைக்ல வர்ற. என்னமோ விமல்னு சொல்லி கைய ஆட்டிட்டு போறான்." என்று கோவமாய் கேட்ட அம்மாவிடம்.
"அம்மா அவன் என்னோட படிக்கிற பிரண்டும்மா. விமலான்கிற என் பேர சுருக்கி விமல்னு சொல்லிருக்கான். ஏனம்மா தப்பா? " ஒன்றுமே நடக்காதது போல என்னிடமே கேள்வி கேட்டாள்.
தாயின் மனம் ஏதோ கலங்கி போனது. அவர் எப்போது வருவார் என காத்திருந்தாள் விவரம் சொல்ல. வேலை எதிலும் மனம் லயிக்கவில்லை. கடையிலே சரக்கு போட்ட பணம் வசூலிக்க காலையில கிளம்பினார். எப்படி வசதிகளோடு இருக்க வேண்டியவர். எல்லாம் கனவு போல் நடந்து முடிந்து விட்டது. களைத்து வந்தவருக்கு குடிக்க காபி போட்டு குடுத்தேன். களைப்பில் கால் நீட்டி படுத்து கொண்டார். நானும் பக்கத்தில் உட்கார்ந்தேன். அசதியாக கண் மூடி இருந்தவர் நான் அருகில் இருந்ததை பார்த்து, " என்னம்மா? என்ன விஷயம்?" என்றார்.
"ஒன்னும் இல்லேங்க சும்மா தான்" என்றேன்.
" ஏதோ விஷயம் இருக்கு சும்மா சொல்லு" என்றார்.
நான் மெளனமாக தான் உட்காந்திருந்தேன். என் உள் மனம் எப்படி தெரிந்தது . மறுபடியும் அவர் கேட்டபோது "ஒன்னும் இல்லேங்க "என்றேன். "ஒன்னும் இல்லாட்டா நீ இப்படி பக்கத்தில உட்கார மாட்ட, 25 வருசமா உன் கூடவே இருக்கனே எனக்கு தெரியாதா? " என்றார்.
"நம்ம பொண்ணு யாரையோ விரும்புற மாதிரி தெரியுதுங்க"
"என்ன!!? " என வாரி சுருட்டி எழுந்தான்.
" ஏங்க அவசர படாதீங்க இன்னைகொரு பையன் பைக்ல கொண்டுவந்து விட்டான். கேட்டால் ஏதோ சாக்கு சொல்றா. "
" கூப்பிடு கூப்பிடுமா அவளை" என்று கோபத்தோடு எழுந்தார்.
" ஏங்க ஆத்திர படாதீங்க. நிதானமா கேட்கலாம்" என்றேன். இருவரும் அமைதியானோம்.
கடல் அமைதி ஆனாலும், உள்ளுக்குள் அலை அடித்து கொண்டுதான் இருந்தது. "விமலா சாப்பிட வா" அம்மாவின் அழைப்பை கேட்டு வந்து அமர்ந்தாள். "அப்பா, என்னப்பா ஒரு மாதிரியா இருக்கீங்க " என அன்போடு தோள் தொட்டாள். அவளை பார்த்து கொண்டே இருந்தார். அவர் மனதில் ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. "நான் சோர்ந்து போகும் போதெல்லாம் நீதான் என்னை உற்சாக படுத்தினாய். நீ இல்லை என்றால் நானும், உன் அம்மாவும் எப்போதோ செத்துப் போயிருப்போம். நீ எப்போதும் கேட்பாயே, நமக்கு சொந்தங்களே இல்லையா? என்று. நமக்கு நிறைய சொந்தங்கள் உண்டு . நானும் உன் அம்மாவும் அவர்கள் சம்மதம் இல்லாமல் ஓடி வந்தோம் . அதனால் நாங்கள் பட்ட துன்பங்களுக்கு அளவே இல்லை. அவள் உன்னை நிறை மாதமாய் சுமந்த வேலையில் பார்க்க ஆளும் இல்லை. கையில் காசும் இல்லை. பக்கத்தில் ஒரு குடிசையில் இருந்த பாட்டியை கூட்டி வந்து பிரசவம் பார்த்தேன் . உன்னை பெற்றவளுக்கு அன்று சாப்பிட கொடுக்க கூட ஏதும் இல்லை. அந்த பாட்டி தான் கொஞ்சம் கஞ்சி வைத்து கொடுத்தார்கள். வறுமை எங்களை உலுக்கிய நேரம் எல்லாம், உன் சிரிப்பு மட்டுமே எங்களை செழுமை ஆக்கியது. இத்தனையும் எதனால்? சொந்தம் வேண்டாமென பந்தம் அறுத்து வந்ததால் தானே. உனக்கும் அப்படி ஒரு நிலை வர வேண்டுமா?" மனதுக்குள் அவர் எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருந்தார்.
என் மகளுக்கு எல்லாம் புரிந்து விட்டதோ. அவளும் கண்ணீரோடு அவரை பார்த்தாள். "அப்பா.. நீங்களும் அம்மாவும் பயபடாதீங்க அப்பா . உங்கள் சம்மதம் இல்லாமல் என் திருமணம் நடக்காது. நீங்கள் பட்ட துன்பங்களை எல்லாம் பலமுறை சொல்லி தான் வளர்த்தீர்கள் . நீங்க எனக்கு ஆசி கூற நடக்கும் திருமணத்தில் சுற்றமும் நட்பும் சூழ்ந்தே இருக்கும். நீங்க இழந்த சொந்தங்களையும் என் திருமணத்தில் கூட்டி வருவோம்" என நம்பிக்கையுடன் அப்பாவின் கரங்களை எடுத்து கண்களில் ஒற்றி கொண்டாள்.
எனக்கு மட்டும் ஒரே ஆச்சரியம் "உன் அப்பா எதுமே பேச வில்லை. நீயாக அவர் மனதை புரிந்து பதில் சொல்லியது எப்படி?" என அதிசய பட்டு கேட்டேன்.
"அம்மா! , அப்பாவின் மௌனம் அவரின் உள்ள குமுறலை எனக்கு சொல்லியது . மௌனத்தை புரிந்து கொண்டால் மறுவார்த்தை ஏது அம்மா" என்றாள். மௌனமாய் பூக்கும் மலர்களுக்கு மணம் அதிகம் தானோ ?
சுற்றமும், நட்பும்
மண் இன்றி மரம்
வேர் இரங்கல் ஆகுமோ?
நீரின்றி அம்மரம்
நிலை பெறுதல் கூடுமோ?
தனி மரம் என்றாவது
தோப்பாதல் நடக்குமோ?
பூவிதழ் விழுந்த பின்னே
மலராதல் முடியுமோ?
கூட்டமாய் பறக்கும்
பறவைகள் அழகு
கொட்டி கிடக்கும்
மல்லிகையும் அழகு
சுற்றமும், நட்பும்
கூடி இருத்தலே இன்பம்
அதை காண்பதுவும்
அழகோ அழகு !!!
அதை காண்பதுவும்
அழகோ அழகு !!!
என்றும் அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்

The story reveals that the problems faced by the couples after their abscond. Amma describes the necessity of the relationship. If one family rift with others, there is no meaning. Amma's way of writing is totally different.The story is really informative.It is very nice to see such a greeny picture with the verse.
ReplyDeleteThe story reveals that the problems faced by the couples after their abscond. If proper understanding between the family and its members is absent, complexity may occur.Amma describes the necessity of relationships. Amma's way of writing is totally different.It is nice to see such a greeny picture with the verse.Thanks for Amma and Babu.
ReplyDeleteவணக்கம் அம்மா...
ReplyDeleteமீண்டும் ஒரு நல்ல கதை...
அம்மா,அப்பா மற்றும் உறவுகளும் வேண்டும்,காதல் திருமணம் செய்தாலும்...
"மௌனமாய் பூக்கும் மலர்களுக்கு மணம் அதிகம் தானோ?"
உண்மை தான் அம்மா..
சுற்றமும், நட்பும்..கவிதை அருமை..:)
@Mr.Babu:Thanks for posting Amma stories and related picture for us..
ReplyDeleteThanks for your appreciation யோஷினி :)
ReplyDeleteஅம்மா வணக்கம். ஒரு குடும்ப கதை கொடுத்ததுக்கு நன்றி.
ReplyDeleteகுடும்பத்தை விட்டு பிரிந்து போகும் காதலர்களுக்கு, அவர்களின் குடும்பத்தை பற்றி புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்பம்.
சுற்றமும், நட்பும்
கூடி இருத்தலே இன்பம்
அதை காண்பதுவும்
அழகோ அழகு !!! உண்மைதான்
இன்னும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துகள் அம்மா.
It happened to me first time to read this blog insisted by Mr. Vijayan. The character of vimal(vimala) has been narrated beautifully. Thanks to the Writer who knew the bond of relationship between parents and children. I strongly believe the brought of one make changes in their life.
ReplyDeleteThanks
Gurumurugan R
amma eppavum pola superb.......very nice story
ReplyDeleteசுற்றமும், நட்பும்
கூடி இருத்தலே இன்பம்
அதை காண்பதுவும்
அழகோ அழகு !!! yes amma.....
dear viewers ,
ReplyDeleteI'm so happy that two flowers have blossomed in our forest . welcome anitha & gurumurugan and also thankz for commentz .a special thankz to all my children ,who had encouraged ur mom . i'll try to fulfill your satisfaction in my upcoming stories ,,, thank u all so much :) Pushpam Amalraj
Lovable story. Parents acceptance is more importance and it will be good if we start our life with their blessings.
ReplyDeleteThanks for providing this story ma.
Thanks,
Priya