வாழ்க்கை என்னும் வீட்டில் இருளை அகற்றும் ஒளியாய் வந்த நிலவுக்கு பிறந்தநாள் இன்று. திருமதி. புஷ்பம் அமல்ராஜ் அம்மா என்றும் நலமுடன் வாழ வாழ்த்தும் அன்பு மகன் பாபு
சத்தியத்திற்குள் சக்தியாய் !!!
( புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )சத்தியத்திற்குள் சக்தியாய் !!!
"சக்தி சக்தி!!! , எங்கே போயிட்ட. இங்கே சீக்கிரம் வா. உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். வா சீக்கிரம்" அலறிக்கொண்டிருந்தான் சத்தியா.
உள்ளே வேலையாய் இருந்த சக்தி நிதானமாக வந்து நின்று, " உம் சொல்லு , என்ன விஷயம். கத்தி ஊரையே கூட்றியே. என்ன சத்தியா தொண்ட கிழிய கத்துன , வந்து கேட்டா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிற. யேய் விசயத்த சொல்லு. ஹலோ சார் என்ன விசயம்னு சொல்லுங்க" .
"இல்ல சக்தி எனக்கொரு கம்பெனி காரன் வேலை போட்டு குடுத்துருக்கான்" நிதானமாக தனக்கே உரிய கிண்டலோடு சொன்னான். அடுத்த வினாடி " யேய்ய்ய்ய்ய்ய்ய் சத்தியாவுக்கு வேளை கிடைச்சிருச்சி". வானம் பூமி அத்தனையும் தன் கைவசப்பட்டது போல் அலைகடல் பிரவாகமாய் ஆனந்தத்தில் கத்தி தீர்த்தாள்.
" டேய் சத்தியா , எவ்ளோ பெரிய விஷயம். என்னமோ ஆற அமர சொல்றியே" என்றவளிடம்.
" நானும் அவசரமாய் , ஆவலாத்தான் ஓடி வந்தேன் . நீ வந்த நிதானத்தில் என் மகிழ்ச்சி சட்டென வற்றிவிட்ட நதியாகிவிட்டது சக்தி".
"ஓஹோ , வேலை கிடச்ச சந்தோசத்துல , வார்த்தைகளெல்லாம் கவிதையாய் கொட்டுதோ ?"
" சரி எப்போ interview போன என்கிட்டே சொல்லவே இல்லையே "
"உன் கிட்ட சொல்லாம நான் போயிருந்தா இந்த ரிசல்ட் வந்துருக்குமா ? "
" ஆமாமா நீ போன interview கணக்கில் அடங்காது. ரொம்ப சந்தோசமான செய்தி சொல்லிருக்க இரு இதோ வரேன்" என உள்ளே சென்ற சக்தி கையில் எதோ கொண்டு வந்தாள். "சத்தியா வாயை திற " என சர்க்கரையை கொட்டினாள்.
மகிழ்ச்சியான அவள் முகம் என்னை இலட்சியத்தோடு இலக்கு தொட வைக்கும். எப்படி அவளால் மட்டும் சிரிப்பால் சிகரம் தொட வைக்க முடிகிறது. எப்போதும் என்னுள் எழும் கேள்வி தான் இது.
"சக்தி , என்னோட சம்பளம் எவ்ளோன்னு நீ கேட்கவே இல்லையே ?"
" ஆண்களிடம் சம்பளம் எவளவு என்று கேட்பது நாகரிகம் இல்ல சத்தியா"
" ஓ அப்டியா ? சரி நானே சொல்றேன் நாற்பதாயிரம்."
" என்ன நாற்பதாயிரமா? ஐயா நீங்க ரொம்ப பெரிய ஆளு தான். நாங்கெல்லாம் உங்க கிட்ட நிக்கலாம் முடியாது "
" சக்தி இப்படியெல்லாம் பேசின இந்த வேலைய விட்டுருவேன் "
" ஐயய அப்டி எல்லாம் செஞ்சிராத சத்தியா சும்மா தான் பேசினேன். "
"சத்தியா இந்த வேலைக்காக நீ எடுத்துக்கொண்ட முயற்சி , உழைப்பு, இரவு பகல் பார்க்காத படிப்பு எண்ணும் போதே இந்த வெற்றி உன்னை உயரத்துக்கு ஏற்றி செல்லும் ஏணி என்று கூட சொல்ல தோணுது. நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன் சத்தியா. வீட்ல எல்லாரும் என்ன சொன்னாங்க ? "
" நான் இன்னும் வீட்டுக்கே போகல சக்தி. செய்தி தெரிஞ்ச உடனே உன் கிட்ட தான் முதல்ல சொல்லனும்னு தோணுச்சி. "
" சரி சத்தியா போய் வீட்ல சொல்லு . ரொம்ப சந்தோஷ படுவாங்க "
" சரி வரட்டுமா?" என்று விடை பெற்றான் சத்தியா.
சத்தியா ! அவனை நினைக்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்குது. சின்ன வயசுல இருந்து நானும் அவனும் நல்ல friends . அவன் எனது துக்கத்தில் - மகிழ்ச்சியில் - படிப்பில் - நட்பில் எனது தேவைகளில் - பாசத்தில் - அன்பில் என எல்லாவற்றிலும் அன்பு கொண்டவன். அவனுக்கு ஒரு வலி என்றாள் எனது தூக்கம் கெட்டு துக்கம் மேலிடும். எனது சொந்தம் என்று அவனை நினைப்பதை விட அவனை என் நண்பன் என்று சொல்லிகொள்வதில் பெருமையும் , பெருமிதமும் கொள்வேன். அவனுக்கு வேலை கிடைத்தது அவனை விட நான் பெருமை படுகிறேன் என்றாள் என்ன காரணம் என உங்களுக்கு புரிகிறதா? நட்பு தான்.
தினம் வேலை முடிந்து திரும்பும் போது எங்கள் வீட்டிற்கு வந்து வேலையை பற்றி - அன்று நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றி பேசி சிரித்த பின்னே தான் அவன் வீடு செல்வான். வறுமை என் வீட்டில் வற்றாத சீதனம். அதில் செழுமையாய் நினைவில் நிற்ப்பது சத்தியாவின் வரவும் பேச்சும் மட்டுமே. எனக்கு திருமணம் நடக்குமா ? கேள்விக் குறியான நிலையில் ஊரில் என் அத்தை தன் மகனுக்கு என்னை பெண் கேட்டார்கள். என் அப்பாவிடம் நீ எதுவும் செய்ய வேண்டாம் பெண்ணை குடுத்தால் போதும் என்றார்கள். அப்பாவும் நல்ல யோசனைக்கும் பின் ஒத்துக் கொண்டார்கள். இந்த நல்ல செய்தியை சொல்ல சத்தியாவை தேடினேன். ஏனோ அவனை காணோம். தவிப்பாய் தவித்தேன். டேய் தினம் தினம் வருவியே எங்கேடா போன????? மூன்று நாட்களுக்கு பின் என் தவிப்பு அவனுக்கு அப்போது தான் எட்டியது போல் சாவகாசமாய் வந்தான்.
வந்தவனை முதுகில் சுள்ளென்று ஒரு அடி , " யேய் சத்தியா எங்கே போன ? "
"என்ன சக்தி சொல்லு பிசாசு அறைஞ்ச மாதிரி அடிக்கிற? என்ன விஷயம்? "
" நீ எங்கே போன மூணு நாளா ? முதல்ல அத சொல்லு . "
" யேய் சக்தி அன்னைக்கு உன் கிட்ட சொல்லிட்டு வேலைக்கு போனேன்ல. கம்பெனில ஒரு ப்ராஜெக்ட் குடுத்து , மூணு நாளைக்குள்ள இத முடிச்சி குடுத்தா , ரிசல்ட் கரெக்டா இருந்தா நல்ல promotion என்று சொன்னார்கள். தூக்கம் இல்லாம, வீட்டுக்கு வராம, ஒரே சிந்தனையோடு உட்காந்து இப்ப தான் முடிச்சி குடுத்தேன். கரெக்டான ரிசல்டும் வந்துருச்சி, ஒரே பாராட்டு மழை தான். சரி நீ ரொம்ப சந்தோசமா இருக்கியே என்ன விஷயம் சொல்லு?, இந்த ப்ராஜெக்ட் நல்லா முடிஞ்ச சந்தோசத்துல MD ஸ்வீட் பாக்ஸ் குடுத்தாரு , இந்தா பிடி " என பெட்டியை தந்தான்.
" வேகமாய் பெட்டியை திறந்தவள் . நல்ல ஸ்வீட்டை தேடி எடுத்து. வாயை திற என கூறி வாயில் அடைத்தாள். திக்கு முக்காடி போனவன். அப்பாடி என்ன விஷயம் சொல்லு என்றான். "
" யேய் சத்தியா , எனக்கு .........!" என நிறுத்தி கொண்டு தரையில் காலால் கோலமிட்டாள். "யேய் லூசு என்னனு சொல்லித் தொல" என்றான். " என்னமோ புது பொண்ணு மாதிரி வெட்கப் படுறியே" என்றான்.
" ஆமாண்டா , நான் புது பொண்ணு தான் 'என்றாள். "ரொம்ப suspense வைக்காத சொல்லு " என்றான்.
"யேய் சத்தியா! ஊர்ல இருந்து அத்தை வந்து பொண்ணு கேட்டாங்க. முதல்ல அப்பா முடியாதுன்னு சொன்னாங்க. ஆனா அத்தை நீ எதுவுமே செய்ய வேண்டாண்ணா. இவள என் மருமகளா அனுப்பு போதுன்னாங்க . அப்பாவும் ரொம்ப யோசிச்சி கடைசில ஒத்துக்கிட்டாங்க. சத்தியா! எனக்கெல்லாம் கல்யாணம் ஆகும் என கனவுல கூட நினைக்கலடா. ஏன்னா எங்க நிலைமை அது மாதிரி நீயே நினச்சி பாரு . எனக்கு கல்யாணம் நடக்குதுனா கடவுளோட கருணை இல்லாம வேற என்ன? சொல்லு சத்தியா?"
" யேய் நீ ஏன் பேயறஞ்ச மாதிரி இருக்க? உனக்கு சந்தோசம் தானே சொல்லு சத்தியா? என கையை பிடிக்க போனவளை தட்டி விட்டுப் போனவன்தான். பத்து வருஷம் என் பிள்ளையின் வளர்ச்சியை பார்த்து தெரிஞ்சி கொண்டேன். வெளிநாடுகளின் தான் அவனது வாசம். பெற்றவருக்கோ அது அஞ்ஞான வாசம்.
ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தான். அவனோடு பேசவேண்டும் என்பதற்காக, அந்நிகழ்ச்சிக்கு நானும் என் பையனும் சென்றோம். அந்நிகழ்ச்சியில் அவன் தான் chief guest . பலரும் அவனை பற்றி பேசினார்கள். சத்தியா இப்படியோர் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு அவருடைய உழைப்பு தான் காரணம் என்றார்கள். அவனை பேச அழைத்தார்கள். ஆங்கிலத்தில் பேசுவான் என எதிர்பார்த்தேன். ஆனால் அவன் தூய தமிழில் கவிதைகளை மேற்க்கோள் காட்டி பேசினான்.
அப்போது அவன் "எனக்கு தான் கிட்டும் என எதிர் பார்த்தது எதுவும் கிடைக்காத போது , எதிர் பார்க்காத எத்தனையோ வாய்ப்புகளும் வசதிகளும் கிடைத்தது. இவற்றிக்கெல்லாம் இந்த சத்தியாவிற்க்குள் இருக்கும் சக்தி தான், சற்று நிறுத்தி "I mean power" தான் இதற்க்கு காரணம் என்றான்.
நிகழ்ச்சி முடிந்தது. வெளியில் வந்த என் மகனின் கையை பிடித்து யாரோ இழுத்தார்கள். யார் என பார்த்தால் சத்தியா தான் . கையை பிடித்து அழைத்து சென்று பேசிகொண்டிருந்தான் என் மகனிடம். தலையை வருடி முத்தம் குடுத்தான். என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. ஏன் சத்தியா நான் என்ன தப்பு செய்தேன். சில வேலை நிரபராதிகளும் தண்டிக்க படுகிறார்கள் அல்லவா? நீதி தேவதையின் கண்கள் கட்டபட்டல்லவா இருக்கிறது!!!
வெற்றி திருமகள் !!!
ஆழமான நல்ல நட்பு
காலம் நமக்களிக்கும் சிறப்பு
காதலுக்கும் நட்புக்கும் நூலிழை இடைவெளி
இல்லை இரண்டுக்கும் இடையில்
கண்ணுக்கு தெரியா மின்சாரமே இடைவெளி
இங்கிருந்து அங்கோ
அங்கிருந்து இங்கோ
தாவ நினைத்தால்
மரண அடி தான்
தோல்வியில் துவளாமல்
தாடி வளர்க்காமல்
தடம் புரளாமல்
சக்தியை மனதில் நிறுத்தி
தாண்டி வா
தடைகள் கடந்து வா
பூச்செண்டோடு தயாராய் நிற்கும்
தேவதை யாரென பார்
அவள் தான் உன் மனதில்
வைராக்கியமாய் நின்ற
வெற்றி திருமகள்.
என்றும் அன்புடன் புஷ்பம் அமல்ராஜ்
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அம்மா ..
ReplyDeleteநட்பு காதல்..புரிந்து கொண்டால் உறவை தொடரலாம் இல அம்மா..
கவிதை அருமை..
my hearty wishes amma...u always rock amma...
ReplyDeleteAmma, Happy Birthday to you!!!
ReplyDeleteNice story to give lots of confidence and positive thinking.
Nice kavithai.. I really enjoyed reading the kavithai.
Again Happy birthday to you...
periyamma wish u many more happy returns of day.....alwayz friendz ll be the best relation at any cost.............
ReplyDeleteMother gave the suitable story to younger generation.It reflects the real fact that what is going in the society.So don't deviate from the path, it leads to unnecessary problems.And my request to the readers is to follow Amma's all the invaluable messages.It is not the story to written for entertainment.All credits goes to the author. We are awaiting for more messages....
ReplyDeleteThanks Amma...