நீ இல்லாதபோது நான்.......?
(புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )
பரபரப்புடன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தன் பெண்ணுக்கு காலை டிபனும், மதிய சாப்பாடும் செய்து வைத்த கையோடு அதே அடுப்பில் சுடுதண்ணியும் வைத்து விட்டு' புவனா, எழுந்திருமா, சாப்பாடு, டிபன் எல்லாம் வச்சிருக்கேன், சுடுதண்ணியிலே குளிச்சிடுப் போ, நேரமாச்சு. நான் கிளம்புறேன்" என சொல்லிவிட்டு ஒரே ஓட்டமும் நடையுமாக லட்சுமி பிளாட் வாசலை அடைந்தாள். அவளைக் கண்டதும், "என்னம்மா லட்சுமி, உன் இஷ்டத்துக்கு வருவியா?காலையிலே ஒரு வேலையும் ஆகலே. வரவர லேட்டா வர ஆரம்பிச்சுட்டே"என கத்தினார்கள்.
காதிலே எதையுமே போட்டுக்காம பரபரன்னு வேலையை முடிக்கும் போது ஒரு டம்பளர் காப்பியைக் கொடுத்தார்கள். குடித்தபோது சற்று இதமாக இருந்தது. பக்கத்துக்கு பிளாட் மாமியும் இதே போல தான் சத்தம் போட்டார்கள். ஆச்சரியமாய் கவுண்டர் வீட்டு அம்மா இன்று ஏனோ ஏதும் சொல்லாமல் வேலை முடிக்கிறவரை பார்த்துக் கொண்டே இருந்து விட்டு துணி காயப்போடும் போது "லட்சுமி , நீ தினம் இதே நேரத்துக்குத்தான் வருவேன்னா நாளையில் இருந்து வரவேணாம்னு மருமக சொல்லச் சொல்லுச்சி. ஆனா எனக்கு உன்னை நிறுத்த மனசு வரல்லே, சீக்கிரம் வாம்மா"என்றார்கள். "வேணாம்னா நின்னுடுரேன். ஏன்னா எல்லா வீட்லேயும் வேலை முடிச்சிடுத்தானே வரணும். நான் என்னம்மா செய்வேன்?" என அந்த அம்மாவிடம் பேசிவிட்டு வீடு வந்து சேரும்போது உடம்பெல்லாம் அடிச்சுப் போட்ட மாதிரி இருந்தது. ஓட்டத்திலும், பலருடைய ஏச்சிலும், பேச்சிலும், சாப்பிட்டும், சாப்பிடாமலும், காலத்தின் பெரும் பகுதியை ஒட்டிவிட்ட லட்சுமிக்கு அவளது மகளைப் பார்க்கும் போது மட்டும் பட்டபாடுகளும் துன்பங்களும் மறந்தே போனது.
புவனா மூன்றாம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் பார்ப்பதற்கு நிறமாக, அடர்ந்து நீண்ட தலை முடியோடும், செழிப்பான உடலமைப்பும் கொண்டு நல்ல வசதியான வீட்டுப் பெண்ணைப் போல இருப்பாள். அதிக அலங்காரம் இல்லாவிட்டாலும், நெற்றியிலிட்டிருக்கும் சிறிய பொட்டும், சந்தனக்குறியும் அவளது அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இருந்தது. எந்தக் குறையும் இல்லாமல் அவளைத் தன் கண்ணாய் கவனித்துக் கொள்ளும் அம்மா இருப்பதால் அவள் அப்படியிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. கல்லூரி விட்டு வீடு செல்லும் போது வீட்டில் அம்மா இல்லாவிட்டாலும் டிபன் ரெடியாக இருக்கும். ஏழு மணி கழிந்த பின்னே வீட்டுக்கு வந்த லட்சுமி, "புவனா,டிபன் வச்சிட்டுப் போனேனே, சாப்பிட்டியா?" என அன்போடும், அக்கறையோடும் கேட்ட அம்மாவைக் கண்டு கொள்ளாமலே 'உம்' என்று மட்டுமே சொன்னால். ஓடியாடி வீடுகளில் வேலை செய்து வரும் தன்னிடம் மகள் பாசமாய் ஒரு வார்த்தை பேசாதது அவளுக்கு வருத்தமாக - ஏக்கமாக கூட இருந்தது. காலேஜிக்கு உடுத்திச் சென்ற உடைகளை எடுத்து சோப்பு பவுடரில் ஊற வைத்து விட்டு, வேலை செய்த வீடுகளில் கொடுத்த சாதம், குழம்பு, பொரியல் இவைகளை நன்கு சூடுபடுத்த தயாரானாள். மகள் படிப்பில் மிகவும் கவனமாயிருந்தாள். "வாம்மா சாப்பிடலாம்" எனக் கூப்பிட்ட போது, "நாளை காலேஜிக்குப் போகும் போது ஐநூறு வேணும். எக்ஸாம் பீஸ் கட்டணும்" என்றாள். "ஐநூறு ரூபாயா? காலையிலேயேவா? நான் எங்கேமா போவேன்? ஒரு வாரம் முன்னாடி சொல்லக் கூடாதா? கழுத்திலே கத்தி வைக்கிற மாதிரி கடைசி நேரத்திலே சொல்றியே?" என்றாள். வேண்டா வெறுப்பாக. " நாளைக்கு தான் கடைசி தேதி. நான் காலேஜி போகும்போது கண்டிப்பா வேணும்" என்றாள் கறாராக. "எப்படிம்மா காலையிலே கொடுக்க முடியும்? நாளை யார்கிட்டயாவது வாங்கி வைக்கிறேன். நாளை மறுநாள் கட்டிவிடு" என்றாள் மகளிடம் கெஞ்சாத குறையாக. "நாளை நான் போகும்போது பணம் இல்லைன்னா நான் காலேஜிக்குப் போக மாட்டேன்" என்றாள்.
மகளின் பிடிவாதம் தெரிந்தது தான். ' நீ சாப்பாடு போட்டு சாப்பிடு. நான் கொஞ்சம் வெளியில் போய் வாரேன் " என்று கிளம்பினாள். மனதுக்குள் பெரிய போராட்டம். கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள் பணம் கிடைக்க வேண்டுமென்று. நாலு தெரு கடந்து சென்றாள். தெருவின் கடைசி வீட்டுக்கு சென்று " அக்கா...அக்கா..." என கூப்பிட்டாள். "யாரும்மா இதோ வாரேன்" என எதிர் குரல் கொடுத்தவாறு வெளியில் வந்தவள் " என்ன லட்சுமி ரொம்ப நாளா ஆளையே காணோம். என்ன விஷயம் என்றாள்? " அக்கா நாளைக்கு எம்பொண்ணுக்கு பீஸ் கட்டணும். ஐநூறு ரூபாய் இருந்தா குடுங்கக்கா. இது தான் அவளுக்கு கடைசி வருஷ படிப்பு. இல்லைன்னு சொல்லாம குடுங்கக்கா. அடுத்த மாசம் புதுசா ஒரு வீட்ல வேலைக்கு வர சொல்லிருக்காங்க. அட்வான்ஸ் வாங்கி தாரேன்" என்றாள் பணிவுடன்.
"லட்சுமி, வட்டி பத்து ரூபாய் என்ன சொல்லுற?" என்றாள். "அக்கா கொஞ்சம் பாத்து குடுங்கக்கா" என்றவளிடம், "நீ சொன்னா கரக்ட்டா குடுத்துருவ, அதனாலே எட்டு ரூபாய்க்கு தரேன். அதுக்கும் கம்மியா தர மாட்டேன்" என்றவளிடம் "சரிக்கா" என சொல்லவே 460 ரூபாய் கையில் குடுத்து 'வட்டி போக மீதி' என்றாள். "ரொம்ப நன்றிக்கா" எனக் கூறித் திரும்பினாள். மணி பத்தரை தாண்டி இருந்தது. அப்பவும் புவனா படித்துக் கொண்டு தான் இருந்தாள். 460 ரூபாயுடன் தன் முந்தானையில் முடித்து வைத்திருந்த 40 ரூபாயும் சேர்த்து 500 ஆக மகளிடம், "இந்தாம்மா, நாளைக்கே பணம் கட்டிரு" எனக் கொடுத்தாள். அவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் வாங்கி கொண்டாள்.
'அம்மா நீ பாவம், இந்நேரத்திலே போய் யார்கிட்டயோ வாங்கி வந்துருக்கியே, நான் வேலைக்குப் போய் உன்னை ராசாத்தி மாதிரி வச்சிருப்பேன். கவலைப்படாதே என மகள் சொல்லிருந்தால், பட்ட பாடெல்லாம் மாறிப்போயிருக்குமே' என மனம் ஏங்கித் தவித்தது. ம்ம் ...... அது எப்பவுமே இப்படித் தானே என சமாதானப் படுத்திக் கொண்டவள் , சாப்பிட மனம் இன்றி படுத்துக் கொண்டாள். உறக்கம் மட்டும் வரவில்லை. உடம்பு அடிச்சுப் போட்டது போல வலி. கடந்த கால வலிகள் இதை விட அதிகம் அல்லவா?' நல்லா சம்பாதிச்சிட்டு வாரேன் லட்சுமி' என கழுத்திலிருந்த நகையை வாங்கிப் போனவன் தான், இவளோட அப்பா. இன்று வரை வரவில்லை. அன்றிலிருந்து வீட்டு வேலை செய்து மகளுக்காகவே வாழுகிறாள். இன்னும் கொஞ்ச நாள் இவள் வேலைக்கு போனால் எல்லாம் சரியாயிடும் என தானே சமாதானம் ஆனாள். தேர்வில் மிக நல்ல கிரேடுடன் முதல் இடம் பிடித்தாள் புவனா. இப்போது வேலைக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாள். பொழுது சாயும் வேளை வீட்டிலிருந்தாள்.
லட்சுமி மயங்கி விழுந்து விட்டதாக இருவர் ஆட்டோவில் தூக்கி வந்தார்கள். "ஏம்மா நாலு நாளா காச்சலோட இருக்காங்களே உங்க அம்மாவ டாக்டர்கிட்ட கூட்டி போகலையா? என்ன பிள்ளைமா நீ ? பாவம் மயக்கம் போட்டு சாஞ்சிட்டா, உடம்பு அனலாய் கொதிக்குது" என்றவர்களிடம், 'எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க அம்மா காச்சலுன்னு சொல்லவே இல்லையே' என்றாள் பதறியபடி. "உங்க அம்மா எதை தான் சொல்றாங்க ? " எல்லாத்தையும் மனசுக்குள்ளயே சுமந்துக்குவாங்க" சரி பொழுது விடிஞ்சதும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போ " என சொல்லி சென்றார்கள். வாழை இலையாய் துவண்டுக் கிடந்தாள் லட்சுமி. எதற்குமே அழாத, கவலை படாத புவனா நெருப்பாய் கொதிக்கும் அம்மாவின் முகத்தை பார்த்து " அம்மா பாரும்மா , எனக்கு பயமா இருக்கு" என அழுத படி பக்கத்தில் படுத்துக் கொண்டாள். அவளும் எதுவும் சாப்பிட வில்லை. "அம்மா நீ இதுவரை சாப்பிட்டியா , உனக்கு என்ன வேணும் என எதுவுமே இதுவரை கேட்டதில்லை. ஆனா நீ என்னை எப்பவும் ஏதாவது கேட்பாயே, இப்ப பேசாம இருக்கிறியே, இனி நான் உன் கூட நல்லா பேசி சிரிச்சி இருப்பேன்" என ஏதேதோ எண்ணிக் கொண்டே உறங்கிப் போனாள்.
கண்விழித்த போது, அதே போல படுத்திருந்தாள். இதுவரை அம்மா இப்படி தூங்கி பார்த்ததே இல்லை. தொட்டுப் பார்த்தாள் தேகம் சில்லிட்டிருந்தது. 'ஓ' வென கத்தினாள். அக்கம் பக்கம் எல்லாம் ஓடி வந்தார்கள். என்னைத் தனிமைப் படுத்தவே விடிந்த பொழுது, என் அம்மாவை கொண்டு சென்றது. அவளது மறைவில் சேர்ந்த கூட்டம், ஒவ்வொருவரும் சொன்ன வார்த்தைகள் எல்லாம் அம்மா வாழ்ந்த நல்ல அர்த்தமுள்ள வாழ்க்கையை எனக்கு சொல்லிக் கொடுத்தது. நான் அவர்களிடம் அதிகம் பேசியதில்லை. அது ஏன் என எண்ணிப் பார்க்கிறேன். என்னிடமிருந்த கர்வமா? வேலைக்காரி என்ற ஏளனமா? ஆனால் அவர்கள் எனக்கு அரவணைப்பாய் , அன்பாய், அரணாய் இருந்தார்கள் என்பதை பிரிவு உணர்த்துகிறது. அம்மா நீ என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் இட்ட போது தட்டி விட்டிருக்கிறேன். அம்மா நீ எனக்கு வேண்டும். உன் மடிமீது சாயவேண்டும். உன்னோடு பேசிச் சிரிக்க வேண்டும். வாம்மா எனக் கத்தினாலும் கேட்காத தூரமல்லவா சென்று விட்டாய். நீயிருந்தபோது உணராத பாசத்தை உன் இழப்பு எனக்கு உணர்த்துகிறது. உன் உழைப்பை, உன் உயிரை உறிஞ்சிப் படித்த படிப்பு, உனக்கு எந்த வகையிலும் பயன் தரவில்லையே?"
தனிமையில் தவித்தழும் எனக்கு ஆறுதலாய் ஆதரவாய் பேசக்கூட யாருமில்லை. நீயில்லாத போது தெரிந்து கொண்டேன், உனது அருமையை. அம்மா, நீ இந்த சிம்னி விளக்கின் ஜோதியாய் - நான் படித்து வாங்கிய பட்டத்தின் வெற்றியாய் - நான் தேம்பியழும் போது அணைக்கும் தென்றலாய் காய்ந்த மனதைத் துளிர்க்கச் செய்யும் மழைத்துளியாய் - என் சுவாசமாய் - என்னைச் சுற்றியே இருக்கிறாய் என்பதை உணர்கிறேன். உன் தாய்மைப் பூவில் சந்தன வாசம் என்னில் மட்டும் அல்ல, இக்காட்டிலும் பரவிக்கிடக்கிறது. நான் உணருகிறேன்உன் அருமையை.
எட்டி உதைத்த போதும் .......!!!
இருட்டுக் கருவூலத்தில்
எனைத்தாங்கி
ஏக்க பெருமூச்சில்
உன் உயிர்க்காற்றை
என்னுள் தந்தவளே
நீதான் அன்னை
என அறிந்தும்
அறியாமல் உனை
எட்டி உதைத்த போதும்
கட்டி முத்தமிட்டவளே
நீ அன்னை - ஆசான்
அனைத்துக்கும் மேலாய்
கடவுளும் நீயே
பாசத்தின் பகிர்வில்
பண்பின் தெளிவில்
அன்பின் அணைப்பில்
என அத்தனையும்
எனக்கு அளித்தவளே
உன்னை நேசிக்க
மனதில் பூஜிக்க
தேடுகிறேன் வாடுகிறேன்
நீ எங்கே அம்மா
உனைக் காணாது
உன் பிரிவில் வாடும்
உன் அருமை தேடும்
மகள்
என்றும் அன்புடன்
*புஷ்பம் அமல்ராஜ்*
Hello Ma,
ReplyDeleteFor the Past couple of your stories only i have started reading yours. Sorry to Say, This story is not that much interesting of your previous stories. Story Starts with so much expectation on that Mother & Girl, but at last it ends up with simple reasons. My expectation is how the girl take care of her mother or left her alone. My Rating is 2/5
Dear son,
DeleteFirst of all, i say thank u so much for the comment. Different people have different kinds of opinions. U have to written your opinion.A good writer has to satisfy all readers. I will try to write good stories. continue to read and
write comments too.
Vanakkam amma..Nee illaathapothu naan?kathai thalaippu arumai..namakku vendiyavargal irukkum pothu theriyatha arumai illaathapothu therium nu nalla solirukinga ma..yen neenga antha ponu ava amma kitta pesatha mathri story solirukinga nu nenachen but story ending la atha solitinga..nice maa...
ReplyDeleteதங்கள் விமர்சனத்துக்கு நன்றி.. மேலும் கதைகளை படிக்கவும்,
Deleteதங்eகளின் கருத்துக்களை எழுதவும் அன்புடன் வேண்டுகிறேன்
Hi Aunty
ReplyDeleteகதை ரெம்ப நல்ல இருக்கு...ரொம்ப கஷ்டமா இருக்குது aunty...
இப்படில அம்மாவை கவனிக்கத மகள் இருப்பாங்களா ?..
ஒருத்தங்களோட அருமை அவங்க இல்லாத பொது தான் தெரியும்
இந்த கதைல நல்ல சொல்லிருகிங்க ..கவிதை வரிகள் ரொம்ப அழகு...
waiting for next story aunty...Hope i will met u soon
Thank u very much :):)
நீங்கள் என்னை விரைவில்; சந்திப்பதாக கூறியதற்கு நன்றி .
Deleteவிரைவில் நடக்க வேண்டுகிறேன். எப்போதும நம் மனம்
அருகில் இருப்பதைவிட எட்டி இருப்பதை பிடிப்பதில் தான்
ஆர்வமுடன் இருப்போம் .அதைத்தான் அருமை உணராத
அந்த மகளும் செய்திருக்கிறாள். அழுதாலும கிடைக்காத
இன்பத்தை இழந்து; வருந்துகிறாள். அவள் நமக்கு ஒரு
பாடமல்லவா!!
நெருக்கமானவர்களின் உண்மையான அன்பினை
ReplyDeleteஅவர்களின் பிரிவு உணர்த்தாமல் போகாது...
மகளின் அன்பிற்காக ஏங்கும் தாய் இறந்தபின்தான்
அவளின் அன்பினை புரிந்துகொள்ளும் மகள்
"கயிறு அறுபட்ட பட்டமே"!
உயரம் செல்லும் பட்டத்திற்கு
கீழே உள்ள கயிற்றின் அருமை புரியாது,
அது அறுபட்டபின்னரே புரியும்!
கதைக்கேற்ற தலைப்பும், கவிதையும் அருமை அம்மா
கவிதையின் படத்தினை தேர்வு செய்யத்தான்
பாபுவிற்கு கொஞ்சம் குழப்பம்
எனது கருத்தினை தெரிவிப்பதற்கு வாய்ப்பளித்த
பாபுவிற்கும், உங்களுக்கும் எனது நன்றி!
சில சமயம் பிள்ளைகளை காணாமல் தாய் மனம் வாடும் .
ReplyDeleteசிலரது எழுததுக்களும் அப்படிததான். தங்களின் உவமை
மிகவும் அருமை . தங்களின் எழுத்துக்கும் , விமர்சனங்களுக்கும்
நன்றியுடன் வாழ்த்துக்கள் .
அன்புடன் அம்மா .
Very nice story. I was late this time reading but worth reading. Nice work.
ReplyDeleteYour comment is very valuable one. thank you so much
ReplyDelete"Very touching story Periyamma !!!!!!!!!!"
ReplyDeleteDear Aunty,
ReplyDeleteToday only i have read your story.
A Nice one....Ofcourse if My father Mr Guru.shanmugam read this one,
He definitely praise his sister.... for such a wonderful thing done by her....
Keep going.....
with regards.V.S.ILANGUMARUN..