மனமென்னும் மந்திரக்கோல் !
(புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )
சுருக்கம் விழுந்த நெற்றியும், தும்பைப் பூ தலையும் என் வயதை காட்டினாலும், என் மனசு மட்டும் இன்னும் இளமையோடு தான் இருக்கிறது. என் கணவர் நல்ல உறக்கத்தில் இருக்கிறார். எனக்கு மட்டும் ஏனோ கண்களில் உறக்கத்தின் சாயலை கூட காணோம். பழைய நினைவுகள் என்னும் புதையலின் சுவடுகளைத் திருப்பிப் பார்க்கிறேன்.
என் இனிய இளமை நாட்கள் என் கண்ணில் பட்டது. என்னைக் கண்டு நானே வியந்து போனேன். கருகருவென்ற சுருண்ட அடர்த்தியான முடியும் , வெளேர் என்ற நிறமும் எனக்கே உள்ள தனித்துவம். M.Com படித்து முடித்தவுடன் முன்னணி நிறுவனம் ஒன்றில் பொறுப்பான வேலையும் கிடைத்தது. என் குடும்பத்தில் வசதிக்கு ஒன்றும் குறைவு இல்லை என்றாலும், நான் வேலைக்கு போவது என்பது எனது லட்சியம். ஆகவே அப்பாவும் விட்டு விட்டார்.
கோயம்புத்தூர் பக்கத்தில் இருந்து என்னை பெண் பார்க்க வந்தார்கள். சம்பிரதாயங்கள் எல்லாம் பேசி முடித்தப் பின் திருமண ஆனா பிறகு பெண் வேலைக்கு போக வேண்டாம் என சட்டம் போட்டார்கள். ஆனால் என்னை எல்லோருக்கும் பிடித்து போய்விட்டதாகவும் சொன்னார்கள். நான் என் அப்பாவிடம் "அப்பா என்னை வேலைக்கு போக வேணாம் என்றால், எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம்" என்றேன். அம்மா ரொம்பவும் புலம்பினாள். "சௌந்தர்யா இது நல்ல இடம். வேலைக்கு போக வேணாம் என்றால் நீ ராசாத்தி மாதிரி இருக்க வேண்டியதானே?. ஏண்டி அடம் பண்ற? மாப்பிள்ளை ரொம்ப நல்ல பையனா தெரியுது. ஆஸ்திக்கு ஒரே பையன் நீ யோசித்து பாரும்மா" என வேண்டினாள். அம்மாவின் புலம்பளுக்கெல்லாம் ஒரே வார்த்தையில் NO என்றேன். கோபத்துடன் அம்மா கட்டி வைத்த சாப்பாட்டை கூட எடுக்காமல் அலுவலகம் சென்றேன்.
நான் வந்து அரைமணி நேரம் கூட ஆயிருக்காது. பியூன் வந்து "மேடம் உங்களை பார்க்க ஒருவர் வந்திருக்கிறார் வர சொல்லட்டுமா? " என்றார். "என்னை பார்க்கவா? சரி நானே வரேன் " என வெளியில் வந்தேன். என்னை பெண் பார்க்க வந்த அதே மாப்பிள்ளை தான். எனக்கு 'திக்' என்றது. என்னை பார்த்ததும் எழுந்தார். 'உக்காருங்க' என்றேன். சில நொடிகள் மௌனம் அதை கலைக்க அவரே பேசினார்.
"நான் உங்களை பார்க்க தனியா வந்திருக்க கூடாது. வேறு வழி இல்லை. அதனாலே தான் வந்தேன். வேலை பார்ப்பது உங்க சுதந்திரம் அதில் நாங்க தலை இடக்கூடாது. அதனாலே நீங்க இந்த கல்யாணம் வேணாம் என்று சொன்னதாக கேள்வி பட்டேன். எங்க ஊர்ல நீங்க செய்ய நிறைய வேலை இருக்கு. அந்த வேலையில சம்பளமா மனநிறைவும் சந்தோசமும் நிறைய கிடைக்கும். என் பேச்சை நம்பி ஒத்துக்கோங்க. ஒரு நாள் நீங்க ரொம்ப திருப்தியோட இருப்பீங்க. உங்களை இழக்க எனக்கு விருப்பம் இல்ல. நல்லா யோசனை பண்ணி சரின்னு பட்டா
ஒத்துக்கோங்க " என்றார்.
என்னால் அவர் முகத்தை பார்க்க முடியவில்லை என்றாலும், "யோசிக்கிறேன்" என்று மட்டுமே பதில் சொன்னேன். அவரும் போய் விட்டார். அலுவலகத்தில் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அலுவலகத்தில் உடல் நலம் இல்லை என கூறி விட்டு வீட்டுக்கு வந்தேன். "என்னமா சீக்கிரம் வந்திடீயே. ? உடம்புக்கு முடியலியா? என்றாள் அம்மா. "ஒன்னும் இல்லம்மா" என்றேன். நீங்க இப்போ பேசி முடிச்ச அதே இடத்தையே முடிச்சிருங்க" என்றேன். அம்மாவுக்கு ஆச்சரியம். நான் எப்படி மனம் மாறி சம்மதித்தேன் என்ற விஷயம் இதுவரை புரியாத புதிராகவே இருந்தது. அப்பாவுக்கு நான் மனம் மாறியதில் சந்தோசம்.
எங்களின் திருமணம் இனிதே நிறைவேறியது. என் மாமனார் மாமியாருக்கு, "எவ்வளவு படிச்ச புள்ள வேலையை விடனும் என்றதும் விட்டுட்டாளே" என்று பெருமையாக பேசிக் கொண்டார்கள். இருவருக்கும் தன் பேச்சை மதித்தது மகிழ்ச்சியே. பெரிய வீடு, பண்ணை நிலம், தோட்டம் , தோப்பு , சுற்றிலும் சலசலத்து ஓடும் நீர், பச்சை புடவை கட்டிய இயற்க்கை அன்னையின் எழில் முகமும், சில்லென்ற காற்றின் மணம், மழை முகட்டில் தவழும் பஞ்சு பொதி மேகம் என என்னை வேறொரு நிலைக்கு கொண்டு வந்து மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கியது. நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் என் கணவர் அலுவலகம் சென்ற பின் தோட்டத்திருக்கு செல்வது, பண்ணை ஆட்களோடு சேர்ந்து வயலுக்கு செல்வது, அவர்கள் செய்யும் வேலைகளை கவனிப்பது என பொழுது போனது. மாதம் ஒன்று வேகமாக பறந்து போனது.
காலை தினசரியை படித்துக் கொண்டிருந்தேன். பண்ணையில் வேலை பார்க்கும் சிறுவன் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான். "என்னப்பா ரொம்ப நேரமா பாத்துக் கிட்டே இருக்க' என்ற போது , 'நீங்களும் ரொம்ப நேரமா அந்த பேப்பர்ல என்ன பாக்குறிங்க?' என்றான். 'நான் செய்திகள் படிக்கிறேன்' என்றேன். 'எங்களுக்கு அதெல்லாம் தெரியாது' என்றான். 'படம் போட்ட புத்தகம்னா படம் பார்ப்போம்' என்றான் வெகுளியாக. "உனக்கு படிக்க ஆசையா?" என்றேன். 'ஆமாம்' என்று தலையை மட்டும் ஆட்டினான் அவன். இதை என் கணவரிடம் சொன்னேன். சாயங்காலம் வரும் போது நோட்டு பென்சில் சிலேட்டு வாங்கி வர சொன்னேன். சரி என்றவர் ,'நாளையில் இருந்து உனக்கு வேலை கிடைச்சிருச்சி' என்றார் சிரித்துக் கொண்டே.
மறுநாள் அதிகாலை நான் வெளியில் வந்தபோது, திண்ணை பக்கமாக ஒதுங்கி நின்றான் அந்த சிறுவன். 'உன் பேர் என்ன சொன்ன?' என்றேன். 'முனுசாமி' என்றான். 'என்ன காலையிலேயே வந்துருக்க? ' என்ற போது, 'படிக்க' என்றான். சட்டை இல்லாத உடம்பில் அழுக்கான டவுசருடன் இருந்தான். விருந்துக்கு வந்தவர்களில் யாரோ குழந்தையின் உடையை விட்டு சென்றிருப்பது நியாபகத்துக்கு வரவே, அதை தேடி எடுத்துக் கொடுத்து, 'குளிச்சிட்டு இத போட்டுக் கொண்டு வா' என்றேன். வாங்கிக் கொண்டு ஒட்டமாக ஓடை நோக்கி ஓடினான் அந்த சிறுவன். அவன் அழகாய் திரும்பி வந்தான். அவர் வாங்கி வந்த நோட்டு , சிலேட்டு , பென்சில் என எல்லாம் அவனிடம் குடுத்தேன். பூஜை அறைக்கு கூட்டிச் சென்று சாமி கும்பிட சொன்னேன். "என் மாமனாரும் மாமியாரும் என்னம்மா?" என்றார்கள். இவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க போறேன்' என்ற போது, 'நல்ல காரியம் இந்த ஊர்ல ஒரு பள்ளிக் கூடம் கூட இல்ல பாவம் இந்த பிள்ளைகள் படிக்க முடியாம இருகிறாங்க. நீ சொல்லிக் கொடும்மா' என என்னை ஊக்கப்படுத்தினார்கள்.
முதல் நாள், 'அ' என எழுதிக் காட்டினேன். கை பிடித்து எழுதினேன். மறுநாள் வரச் சொன்னேன். மாதம் ஒன்று நகர்ந்த போது பத்து மாணவர்கள் ஆனார்கள். கிராமத்தில் ஒரு பெண் படித்து வேலை இல்லாமல் இருந்தாள், அவளை கூப்பிட்டு பேசி அவளுக்கு ஓரளவு சம்பளம் தருவதாய் கூறி எங்கள் வீட்டுக்கு பின்னால் ஒரு அறையை சுத்தப் படுத்தி வகுப்பறை ஆக்கினேன். எழுத்தோடு நின்று விடாமல் சிறு, சிறு ஆங்கிலப் பாடல்களையும், தூய்மையாய் இருப்பது எப்படி என்பது பற்றியும், செடிக் கோடி மரம் வளர்ப்பது பற்றியும் கற்று தந்தோம். சந்தோசப் பட்டவர்கள் பிள்ளைகளை விட பெற்றோர்களே. எனக்குள் ஒரு உத்வேகம். இன்னும் ஏதாவது செய்ய முடியுமா என்று. பண்ணை நிலத்தை எப்படி எல்லாம் பயனுள்ளதாக மாற்ற முடியும். இயற்க்கை வளம் நிறைந்த இந்த கிராமத்தை எப்படியெல்லாம் மாற்ற முடியும் என்று நானும் என் கணவரும் சிந்தித்தோம். ஆட்களை எப்படி எப்படி பயன்படுத்த முடியும் என யோசித்தோம். கொஞ்சம் கல்வி கற்ற பெண்களுக்கு typing சொல்லி கொடுத்தோம். சிறிது சிறிதாக பரந்த பொறி இன்று , கிராமமே ஜோதியாக ஒளிர்கிறது. அடுத்த மாதம் எங்களின் திருமணம் ஆன ஐம்பது ஆண்டுகள் நிறைவடைகிறது. காலம் ஓடினதே தெரியவில்லை. நான் கடந்து வந்த பாதையை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. எங்கள் கிராமத்தில் இருந்து விரட்டியது தீண்டாமையை மட்டும் அல்ல, பிளாஸ்டிக் என்ற தீமையையும் தான், நீரற்ற கிணறுகளுக்கும், வாயற்ற பிராணிகளுக்கும் , மெல்லிய பிளாஸ்டிக் பேப்பர் செய்யும் தீமைகளையும் விளக்கிய தோடு , அழிவற்ற அதை ஒழித்து விடுவது என கூறி வெற்றி பெற்றோம். காற்றை, நீரை மாசு படுத்துவது பாவம் என கூறி மாசுக் கட்டுப் பாட்டை ஆதரித்தோம். இளைஞர்கள் எல்லோருக்கும் வேலை என்று அவரவருக்கு ஆர்வமுள்ள துறையில் வேலை கற்றுக் கொடுத்து இன்று ஒவ்வொரு வீட்டிலும் Computer, அயல் நாட்டு வேலைகளை பேரா Consultancy ஆரம்பித்து வெகு சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. இளம் பெண்களுக்கு, கைவினை பொருள்களை செய்யவும், சிலரை Marketing ஆக வெளியிலும் அனுப்பி உள்ளோம். வேளாண்மையை பெருக்க வேளாண் பல்கலை கழகத்தோடு தொடர்பு கொள்ள செய்து விவசாயிகளுக்கு நவீன சாகுபடி முறையை கற்றுத் தந்து, வீணாகும் நீரை மறுசுழற்சி முறையில் விவசாயத்துக்கே பயன்படுத்தி நிறைய மகசூல் பெறப் பட்டது.
எங்கள் கிராமத்தில் குழந்தை பிறந்த வுடன் அந்த வீட்டருகே மரம் ஒன்றை நட்டு, அந்த குழந்தைக்கு இடும் பெயரையே மரத்துக்கும் சூட்டி மகிழ்ந்து பராமரித்தோம். அதே போல் யார் இறந்தாலும் அவர் நினைவாகவும் மரம் ஒன்று நட்டோம். அம்மரம் அதே வீட்டுக் காரர்களால் பராமரிக்கப் பட்டது. இங்குள்ள இடுகாட்டை கண்டு யாரும் முகம் சுளிக்க மாட்டார்கள். நந்தவனமாக காட்சி தருவதால் அங்கு செல்ல யாருக்கும் பயம் இல்லை. மரங்கள் நிறைந்த கிராமம் ஒரு வசந்த பிரதேசமாகவே கருதப் பட்டது. இயற்க்கை உரமிட்டு வளர்ந்த காய்கறிகள், பண்ணையில் வளரும் மாடுகளின் கலப்படமற்ற பால், குறைவான விலையில் எங்கள் ஊர் சிறார்களுக்கு கிடைப்பதால், ஆரோக்கியத்திலும் விளையாட்டிலும் கூட அவர்கள் குறைவு போகவில்லை. என்னிடம் முதன்முதலாக பயின்ற முனுசாமி என்ற மாணவனோடு ஆரம்பமான கல்வி இன்று இவ்வூரில் தலைசிறந்த பள்ளியாக, அழகான உச்சரிப்போடு கூடிய ஆங்கிலம் பேசும் மாணவர்களால் நிரம்பி உள்ளது. இப்படி பல சாதனைகளால் வளர்ந்து இருந்தாலும் மது குடிப்பதற்கும், மது கடை வைப்பதற்கும் கடுமையான தடை உண்டு. சிறு வயதிலேயே அதன் தீமையை வலியுறுத்திக் கூறுவதால் அதன் மேல் வெறுப்பும் அதை பயன்படுத்துவோரை கண்டால் அருவருப்பும் இயல்பாகவே வந்துள்ளது. தேசிய கொடியையும் தேசிய தினங்களையும் கொண்டாடுதல் உண்டென்றாலும் மற்ற கட்சிகளின் கொடிகளுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் இடம் இல்லை. இந்தியன் என்ற உரிமையோடு தவறாமல் வாக்களிக்கிறோம். எங்கள் கிராமத்தில் எங்களை அப்பா, அம்மா என்று அழைத்த பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி இன்று தாத்தா பாட்டி என்று அழைக்க நிறைய பேர பிள்ளைகள் இருக்கிறார்கள்.
எங்களுக்கு ஒரு மகன் அகத்தியன் என்று பெயர். அமெரிக்காவில் Software Engineer ஆக வேலைப் பார்க்கிறான். எங்கள் கிராமத்துக்கு கிடைத்த பல வெளிநாட்டு வேலைகள் அவன் வழியாகவும் கிடைக்கிறது. எத்தனையோ முறை மகனும் மருமகளும் அழைத்தாலும் அங்கு செல்ல மனமில்லை. என் மண்ணையும், மண்ணின் மக்களையும் பிரிய மனம் இல்லை. மகன் மருமகள் பேரன் பேத்திகளோடு இரு வருடங்களுக்கு ஒரு முறை வருகிறார்கள். தொலைபேசியில் பேசுகிறோம், பேரனும் பேத்தியும் தமிழ் அழகாக பேசுகிறார்கள். அங்கு பிறந்தவர்கள் என்றாலும் அவர்களை தமிழில் பேச பழக்கியிருக்கிறார்கள் என்பதில் எனக்கு அவருக்கும் ரொம்ப பெருமை தான். அடுத்த மாதம் எங்களின் 50 வது திருமண விழாவிற்கு வர இருக்கும் அவர்களை வரவேற்க எங்கள் கிராமமே காத்திருக்கிறது. காரணம் மருமகள் இதேகிராமத்தை சேர்ந்த எங்க பண்ணையில் வளர்ந்த பெண் தான். இருவரும் விரும்பினார்கள். மறுக்காமல் இணைத்து விட்டோம். மனிதரில் வேறுபாடு இல்லை.
திருமணத்திற்கு முன்பு என் கணவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எத்தனை உண்மை என்பதை மனதார உணருகிறேன். மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு 58 வயதில் Retired ஆகி முதுமையை உணர்ந்து நம்மையே வருத்திக் கொள்ளும் நிலையை மாற்றி இயற்கையோடு நடைபோட்டு முயற்சி, உழைப்பு, சொந்தம் , சுற்றம் என அனைத்தையும் தழுவி, இன்பமாய் நடக்கும் இந்த நாட்களை என்னால் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
மனம் மந்திரக்கோல் போன்றது. நல்ல எண்ணங்களோடும், கனவுகளோடும், நம்முன் வரும் இறைவன் செல்வத்தையும், அமைதியையும் வாரி வழங்குகிறார் என்பார்கள். எனக்கும் இவை எல்லாம் வாரி வழங்கிய இயற்கை பரம்பொருளுக்கு எப்போதும் நன்றியும், இந்த காடெல்லாம் பூத்து களம் நிறையட்டும் என்ற ஆவலையும், என் மனம் எப்போதுமே வேண்டுகிறது.
இயற்கையின் வளங்களை காப்போமா?
சந்தர்ப்பங்கள் நம் மனக்கதவை தட்டும் போது ,
காதுகொடுத்து கேட்டு விட்டால்,
எதிர் காலம் ஏற்றமாய் மாறும்,
எல்லோரும் நம்மவர் என்ற நிலை ,
எப்போதும் இருந்து விட்டால்,
எல்லாமே சுற்றமாகும் நம்மிடையே,
இயற்கை நமைக் காக்கும்,
எனும் நினைவோடு,
நாம் இயற்கை வளம் காத்தால்
என்றுமே அது கைவிடுவதில்லை.
இயற்கையின் மாற்றங்கள், சீற்றங்கள்
நாம் அதை நிராகரிக்கும் போது
மட்டுமே நம்மை தாக்கும்
தாக்காது காக்கவே அதனை நேசிப்போம்
காப்போம், மகிழ்ச்சியோடு இருப்போம்.
என்றும் அன்புடன்
*புஷ்பம் அமல்ராஜ்*
பெரியம்மா இப்படி ஒரு கிராமம் எங்க இருக்குன்னு சொல்லுங்க ... நான் எவ்வளவு செலவு ஆனாலும் பரவா இல்லன்னு போய் பாத்துட்டு வந்துடறேன்.
ReplyDeleteஅன்புள்ள பாபு !
Deleteஇந்தியாவில் இது போன்ற நிறைய கிராமங்கள் இருக்கிறன .
நாம் அனைவரும் சேரந்து இப்படிப்பட்டஇயற்கை வளம் நிறைந்த இடங்களையும் .
பண்பான மக்களையும் சென்று பார்க்கலாம் . நேரமும் தக்க சமயமும் விரைவில் அறிவிக்கப்படும்
என்றும் அன்புடன்
பெரியம்மா.
நன்றி பெரியம்மா... சீக்கிரம்... சீக்கிரம்... சொல்லுங்கள்
Deletevannakam amma..kathai romba azhaga irundhathu ma..unga kathaiyila pasumai maram valarkrathu athellam soluringa..athu ennaku puduchirukku..nandri ma arumaiyana katha thanthathukku..
ReplyDeleteஅன்புள்ள தர்ஷினி !
Deleteதங்களின் அழகான விமர்சனத்துக்கு எனது பாராட்டுக்கள் .
உங்களின் வாசிப்பும், அதன் சுவை ரசிக்கும் தன்மையும்
என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் நீங்கள் ரசிக்கும் கதை
ஒன்றைத் தேடப் புறப்படுகிரேன். வரட்டுமா.
அன்புடன் அம்மா
அன்புள்ள தர்ஷினி !
Deleteதங்களின் அழகான விமர்சனத்துக்கு எனது பாராட்டுக்கள் .
உங்களின் வாசிப்பும், அதன் சுவை ரசிக்கும் தன்மையும்
என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் நீங்கள் ரசிக்கும் கதை
ஒன்றைத் தேடப் புறப்படுகிரேன். வரட்டுமா.
அன்புடன் அம்மா
periyamma
ReplyDeletenice story..........padichaa ah nalla job ku dha poganum nu illama ipdiyum padipiku value erukunu oru nalla story ah sollirikiga.........thanx for ur story
கண்ணம்மா !
Deleteஉங்களோட விமரசனம் நெடுநாளா காணாம வருத்தமா
இருந்தது . இப்போ ரொம்பவும் மகிழ்சசியாக இருக்கிறது .
எங்கோ இருப்பதற்கு பறப்பதை விட அருகில் இருப்பதை
ரசிப்பது நலலதல்லவா .உன்னுடைய எழுத்துக்கள் அருமை டா .
அன்புடன் .
Hi Aunty,
ReplyDeleteStory ramba nala irukudhu...valakam pol vidhiyasama kadhai..
nala karuthu ulla kadhai...School poi dhan namaku therinchadha
mathavangaluku solikudukanum ila namaku therinjadha apadi nalum soli
kudukalam nu indha kadhai mulama therinjukitan....
kavithai ramba alagu...
Waiting for next story aunty :)
Thanks & regards,
Revathi Durairaj..
Dear Revathi
Deleteதங்கள் விமர்சனத்துக்கு நன்றி.. மேலும் கதைகளை படிக்கவும்,
தங்eகளின் கருத்துக்களை எழுதவும் அன்புடன் வேண்டுகிறேன்
Nice story line. So nicely done. Great poem. I enjoyed it.
ReplyDeleteThanks for your great writing
thanks for ur inspirational words .
Deleteyour comments indulge me to write more and more stories !
keep reading the stories !