Pages

Sunday, 15 July 2012

காடெல்லாம் பூத்திருக்கு (26)


ஓவியமாய் தூரிகையில்!!!
(புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )

          
                          வெகு நேரம் காத்திருந்து பார்த்தேன். ஏனோ இன்னும் வரவில்லை. சுற்றி பார்த்து எந்த நிழலும் கண்ணுக்கு தெரியாததால்,கண்கள் ஏமாற்றத்தில் வலித்தது. சென்று விடலாம் என நடக்க தொடங்கியபோது, மோதிக் கொண்டு வருவது போல் வந்த சைக்கிளைக் கண்டு மிரண்டு ஒதுங்கியபோது, " யேய் நான் தான்! பயபடாதே" என்ற குரல், நிமிர்ந்து பார்த்த போது தனக்கே உரிய புன்னகையுடன் சுந்தர் நின்று கொண்டிருந்தான். " என்ன சுகன் பயந்துட்டியா?" என்று கேட்ட அவனிடம். " ஆமாம் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? ஒரு நிமிஷம் லேட்டா ஆயிருந்தால் நான் போயிருப்பேன்" என கோபத்துடன் திரும்பிய அவளிடம். "நான் வந்து அரைமணி நேரம் ஆச்சு. நீ என்ன செய்யற? நான் வராத போது உன் முகம் எப்படி எல்லாம் மாறுது? என பார்த்து கொண்டிருந்தேன். நீ எனக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கிறே? எனவும் பாத்துட்டு தான் இருந்தேன்" என்றவனிடம், "ஓஹோ எனக்கு டெஸ்ட் வச்சி பாக்குரிங்கலோ?" என முகத்தை திருப்பிக் கொண்டு கேட்டாள்.  "அப்படி இல்ல, எனக்காக நீ........ என்ற நினைவில் ரசிச்சிக் கொண்டிருந்தேன் சுகன். கோவிச்சிக்காத சுகன்" என கெஞ்சினான். "சரி நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும் பஸ்ல போறேன்" என்றவளை "கோவ படாதே வா நடந்தே போகலாம்" என்றான். இருவரும் நடக்க தொடங்கினார்கள் 

            சுந்தர் சைக்கிளை உருட்டிக் கொண்டே வந்தான். வாடிக்கையான தெருக்களில் பேசிக் கொண்டே நடந்தார்கள். சுகன் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து வீடு சற்று தொலைவில் தான் இருந்தது. இருவரும் பேசிக் கொண்டே நடப்பதால் தூரமும் குறைந்தே தோன்றியது. அவர்கள் கடந்த ஈராண்டாக தொடர்ந்து நடப்பதால் அவர்களுக்கு வாடிக்கையாக மட்டும் அல்ல, மனதுக்கு இதமாகவும் இருந்தது. சுகன் BSC படித்தவள். ஒரு நல்ல நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறாள். சுந்தரும் அவளும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள் என்றாலும் ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு மேல் வீட்டிற்கு வருவதும் அடிக்கடி பேசுவதும் தவிர்க்க பட்டாலும் அன்பும் நட்பும் இந்த சந்திப்புகளால் வளர்ந்துக் கொண்டு தான் இருந்தது. சுந்தர் MBBS முடித்து வேலைக்கு சேரவேண்டிய நேரம். எது எப்படி இருந்தாலும் சரியான நேரத்திருக்கு வந்து என்னை பார்ப்பதை-பேசிக் கொண்டு நடப்பதை வாடிக்கையாக்கி கொண்டான். எங்கள் வீட்டை கடந்து தான் அவன் வீட்டிற்கு செல்ல வேண்டும். இரண்டு தெருக்களுக்கு முன் வரும்போதே சைக்கிளை மிதித்த படி சென்று விடுவான். நான் நடந்து வீட்டுக்கு வருவேன். நாட்கள் மனதின் பூரிப்பிலும் அவனின் பேச்சின் இனிமையிலும் ஓடிக் கொண்டிருந்தது. 

          சில வேலைகளில் கோவிலில் பார்ப்பது உண்டு என்றாலும், அங்கெல்லாம் பேச முடியாது. கால்களால் தேடுவதும், கண்டு பிடித்தவுடன் கண்களால் பேசுவதும் வாழ்வில் எந்த நிலையிலும் அவை தரும் சுகம் வேறெதிலும் கிட்டுவதில்லை. ஆற்றில் நீரோட்டம் சீராய் இருக்கும் வரையிலும் அழகே. ஏதோ தடை என்றால், நீர் பிரிந்து இருவழிப் பாதை ஆகிறது அல்லவா? வாரம் இரண்டு கடந்து விட்டது. சுந்தர் என்னை பார்க்கவில்லை பேசவில்லை. வானம் ஒளி இன்றி சூனியம் ஆகி விட்டதை போல் தோன்றியது. சாப்பிட, யாரோடவும் பேச பிடிக்கவில்லை. அலுவலக நேரங்களில் வேலையில் கவனம் செலுத்த முடியாததால் மேலதிகாரிகளால் சுட்டிக் காட்டபடுகிறேன். கடவுளே இந்நிலை கடந்து போகுமா? நான் நானாக இல்லாத போது வீட்டில் உள்ளவர்களிடம் கூட 'ஏன்?' என்ற கேள்விக்கு ஆளானேன். சுந்தர் நீ  எப்போதும் என் வீட்டை கடக்கும் போது கூட உன்னை பார்க்க முடியவில்லையே. ஒரு வேளை  ஊருக்கு போய் இருப்பாயோ? எப்படி கேட்பது ? யாருடம் கேட்பது? மனம் மட்டும் ஏனோ நிலத்தில் குதித்த மீனாய் துடித்துக் கொண்டிருந்தது. ஏறக்குறைய இருபது நாட்களுக்குப் பின் ஞாயிற்று கிழமை அன்று நோட்டில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன். வாசல் மணி அடிக்கவே, அம்மா போய் கதவை திறந்தாள்.

               " வாப்பா வா வா.. என்ன பாத்து ரொம்ப நாளாச்சி?" என யாரையோ வரவேற்று கொண்டிருந்தாள். 'ஆமா அத்தை கொஞ்சம் வேலையாய்  கோயம்புத்தூர் போயிருந்தேன்'. குரலை கேட்டவுடன் இடுக்கில் புகுந்த காற்றாய் பறந்து வந்தேன். சுந்தர் இந்த இருபது நாளில் அவ்வளவு அழகாய் மாறி இருந்தான். 'என்னை பார்த்து என்ன சுகன் எப்படி இருக்க?' என்றான். "ம்ம் என்று மட்டும் கூறினேன்". ஒரு பத்திருக்கையை கையில் எடுத்து, "அத்தை எனக்கு வரும் ஆறாம் தேதி கல்யாணம் கட்டாயம் வாங்க" என்றான். "சுகன் நீயும் கண்டிப்பாய் வா!" என்ற போது "என்னப்பா பொண்ணு சொந்தமா? என்ன பண்றாங்க "என அம்மா கேட்டுக் கொண்டிருக்க எனக்கு பூமி பிளந்து நான் கீழே கீழே போவது போன்ற உணர்வு. எல்லாம் இருண்டு போனது. "சொந்தம் தான் அத்தை. என்னை போல அவளும் MBBS  படிச்சிருக்கா . இந்த காலத்தில படிப்பு ரொம்ப முக்கியம் இல்லையா?" என  என்னை பார்த்தே கேட்பது போல இருந்தது. "சரி அத்தை வரட்டுமா? எல்லாரும் வந்திருங்க சுகன் நீயும் தான். சின்ன வயசில் இருந்தே என்னோட பிரண்டு இல்லையா?" என சொன்ன போது, அவன் கிண்டலாய் பார்ப்பது போல இருந்தது. எத்தனை நாள் என்னனவோ பேசி என் மனதை நிலை இல்லாமல் செய்தவன் இன்று என்னை எப்படி தெரியாதவன் போல நடிக்க முடிந்தது. நம் கல்யாணம் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என நடித்து காட்டியவனால் தனது கல்யாணத்திற்கு புதியவனாய் மாறி என்னை வரச் சொல்ல முடிந்தது. என் முகத்தை பார்த்து பேசும் போது கூட எந்த ஏமாற்றமும் இல்லையே எப்படி? யோசித்து -அழுது-முரண்டு பிடித்த மனதோடு போராடி அவனது திருமண நாளன்று புதியவளாய் ஏதும் அறியாதவளாய் அம்மாவுடன் சென்றேன். மனதில் தெளிவும் , அமைதியும் , நிதானமும் குடிப்புக அழகான மேக்கப்புடன் சென்றேன். பூக்கொத்தும் வாங்கி சென்றிருந்தேன். என் மனம் மட்டும் வைராக்கியத்துடன் இருந்தது. 'கண்க்ராசுலேசன் சுந்தர்' என்றேன். அவன் அதிர்ச்சியுடன் 'உன்னை எதிர் பார்க்க வில்லை. ரொம்ப ஸ்போட்டிவா தான் இருக்க' என்ற போது, 'உங்களை விட அதிக ஸ்போட்டிவா தான் இருக்கேன்' என்றேன். மனைவியிடம் அறிமுகம் செய்து வைத்தான். 

           என் அம்மாவிடம் மேல படிக்க வேண்டும் என்று எவ்வளவு அடம் பிடித்தும், 'மேல மேல படிச்சிட்டு போனா மாப்பிள்ளை கிடைக்காது' என்று என்னை BSC  யோடு நிறுத்தினார்கள். ஆனால் மதமோ, இனமோ, வசதியோ கூட குறைவு இல்லாவிட்டாலும் படிப்பில் மட்டுமே குறை என கண்டான் சுந்தர். அடுத்து அவனை பார்க்கும் போது அதிலும் கூட குறை காணக் கூடாது என மனம் சபதம் செய்தது. இரண்டாண்டுகளாய் நடந்துகொண்டே பேசிய செய்திகள் எல்லாம் கல்வெட்டாய் மாறி புதை பொருளாய் ஆனது. கரை புரண்டு காட்டாறாய் பொங்கி பெருகி ஓடிய எங்கள் ஊரின் ஆறு நூலை போல் ஓடி இன்று அதுவும் வற்றி நடைப்பாதை ஆனது போல, காலம் தேய்ந்து தேய்ந்து இருபத்தைந்து ஆண்டுகளை கடந்தது. எத்தனை மாற்றங்கள் என்னிலும், என் பின்னிலும் . நான் வேலை சம்பந்தமாக படித்து பல படிகளை கடந்து அந்த நிறுவனத்தின் உயரிய பதவியில் இருக்கிறேன் . எந்த குறையும் இல்லை. என் வாழ்வின் உயர்வு எனக்கே வியப்பளிக்கிறது. 

            "அம்மா எங்க காலேஜி டூர் போக போறோம். நானும் போயிட்டு வர்றேன்மா" என்ற மகனை பார்த்து, "டூர் எல்லாம் சரி தான் போகும் போதும், வரும் போதும் ரொம்ப கேர் புல்லா இருக்கணும் சரியா?" என்றேன். "ஓகே மா உன் பேச்சை என்னைகாவது தட்டிருக்கேனா?" வளர்ந்து வாட்ட சாட்டமான அழகான என் மகனை பார்த்தாலே கவலை எல்லாம் பறந்தோடி போகும். எப்போதும் என் காலை சுற்றும் பூனை குட்டியாய் அவன் வளைய வரும்போது இருக்கும் சுகம் உலகின் அத்தனை சுகங்களும் என் காலடியில் வந்து கிடப்பது போல ஆகும். 

              நாளை அவனது பிறந்த நாள். அவன் நண்பர்களை எல்லாம் கூப்பிட்டு இருப்பதாய் கூறினான். "சந்தோசமாய் கொண்டாடலாம். எல்லோரையும் கூட்டிட்டு வா" என கூறினேன். மறுநாள் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். ஸ்பெஷல் அழைப்பாளர்களாய் பெண் பிள்ளைகள் வந்திருந்தார்கள். அதில் ஒரு பெண்ணை மட்டும் நான் இதுவரை பார்த்ததில்லை . "வாங்கம்மா.. வாங்க என்று எல்லோரையும் உபசரித்து அழைத்தபோது. உன்னை மட்டும் நான் பார்த்ததில்லையே" என கேட்டேன். "ஆமாமா நான் இப்போ தான் வந்திருக்கேன் உங்க வீட்டுக்கு. சொந்த ஓர் கோயம்புத்தூர். ஹாஸ்டலில் தங்கி படிக்கிறேன்" பேரை கேட்ட போது 'அனுபிரியா' என்று கூறினாள் . மிக அழகாக அடக்கமாக, ஆனால் பெரிய இடத்து பிள்ளை என்ற அடையாளத்தோடு இருந்தாள். என் பக்கத்திலேயே அவள் உக்கார்ந்ததால். பேசிக் கொண்டே இருந்தாள். அழகான நீண்ட மூக்கும் விழியும் எங்கோ பார்த்த முகமாக தென்பட்டது. "BE முடிச்சாச்சே அடுத்து என்ன பண்ண போறீங்க?'' என கேட்ட போது. 'அப்பா படிப்பு போதும்' என்கிறார். 'அடுத்து என்ன செய்கிறாங்கனு தெரில?' என்றாள்.  எனக்கு போன் வரவே 'சாரிமா, இதோ வர்றேன்' என எழுந்து போனேன். பிள்ளைகளின் அரட்டை கச்சேரியில் அனுவை 'கலாய்த்து' கொண்டிருந்தார்கள். அவர்களின் பேச்சில் இருந்து அனுவையும், ஆதவனையும் சேர்த்து பேசுவதாக தெரிந்தது. இந்த வயதில் இது பெரிதில்லை என்றாலும் , என் மனதுக்குள் என்னனவோ ஓட்டங்கள். எல்லாரும் சென்ற பின் இது பற்றி கட்டாயம் ஆதவனிடம் பேச வேண்டும் என தீர்மானித்தேன். எல்லாம் ஓய்ந்த போது இது பற்றி கேட்டேன். அவனும், 'அம்மா நானே பேசலான்னு இருந்தேன்'. உண்மை தான் என ஒத்துக் கொண்டான். "ஆதவா, உன்னை என் உயிருக்கும் மேலாக மட்டும், அல்ல கட்டுப் பாடுடன் வளர்த்திருக்கிறேன். அப்படிபட்ட நீ எந்த சூழ்நிலையிலும் உன்னை விரும்பிய பெண்ணை ஏமாற்றி விடாதே. பணம், பதவி, படிப்பு என்ற எதுவும் உன்னை மாற்றி விடக் கூடாது" என்ற போது, "அம்மா நீங்க வளர்த்த பிள்ள, உங்க மனம் நோகும் படி நான் நடக்க மாட்டேன்" என்று கூரியவனிடம், 'சரி நீ அனுவிடம் சொல்லி அவங்க அம்மா, அப்பாவை பேச சொல்' என்றேன். ரொம்ப சந்தோசமாக ஒத்துகொண்டான். 'ஆமாம் அவங்க அம்மா, அப்பாவ பத்தி கேக்கணும்னு நினைச்சேன் முடியல'. 'அவங்க ரெண்டு பேருமே டாக்டர்ஸ் மா. ஆனா சொந்த ஓர் திருச்சின்னு சொல்லுவா'. திருச்சியா குழப்பமாக கேட்டேன். மனதில் ஏதோ இனம் தெரியாத பதட்டம். 'அம்மா இதோ அனு தான்கூபிடுறா' என செல்லை கையில் குடுத்தான். 

             'அனு எப்படிமா இருக்க? உங்க அப்பாவ என் கிட்ட கொஞ்சம் பேச சொல்றியா?" என சொல்லி, 'போனை ஆதவனிடம் குடுக்கிறேன்' என அவனிடம் கொடுத்தேன். அன்று மாலை அனுவின் அப்பா போன் செய்து நாளை நேரில் வருவதாய் கூறினார். அடுத்த நாள் நானும், ஆதவனும் காத்திருந்தோம் . அனுவும் அவள் அப்பாவும் வந்தார்கள் . வந்தவரை பார்த்தவுடன், என் யூகம் சரியானது என்றாலும் எதையும் வெளிக் காட்டவில்லை. அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை என்பது எனக்கு உறுதி ஆனது. 'அப்பாவுடன்  கொஞ்சம் பேசணும். ரெண்டு பேரும் கொஞ்சம் வெளில பேசிட்டு இருங்க' என இருவரையும் அனுப்பினேன். அவரை பார்த்தபோது அவர் வயதுக்கு தளர்ந்து இருந்தது தெரிந்தது. டிப்டாப் உடையால் அதை மறைத்து இருந்தார். 'உங்களை பற்றி அனு நிறைய சொல்லிருக்கா. எனக்கு ஒரே பொண்ணு செல்லமாகவும், வசதியாகவும் வளத்திருக்கிறேன். உங்களும் ஆதவனும் ஒரே பையன்னு சொன்னா. சார் எங்கே வெளி ஊரிலா?'  என கேட்டு என்னை பார்த்தார். 

         சாரா !!?? என்ற போது அதிர்ச்சியுடன் என்னை பார்த்தார். அப்படியாரும் இல்லையே என்ற போது அதிர்ச்சி வியப்பானது . "இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால நடந்த சம்பவம் எதுவுமே உங்க நியாபகத்துல இல்ல? அன்னைக்கு நான் ஸ்போட்டிவா எடுத்துகிட்ட முடிவு , வைராக்கியத்துடன் எடுத்து வைத்த    ஒவ்வொரு துணிவான அடியையும் சேர்த்து சுகன் என்ற சுகன்யாவை இந்த நிலையை எட்ட வைத்திருக்கிறது. என் எதிர் காலத்துக்காக என் பாதுகாப்புக்காக நான் தத்தெடுத்து வளர்த்தவன் தான் ஆதவன். அனுவை பார்த்த போதே உங்க சாயல் உள்ளது கண்டு அவளது அப்பா நீங்களாகத் தான் இருப்பீர்கள் என எண்ணினேன்" என்ற போது  ஒரு நிமிடம் அதிர்ந்து போன சுந்தர், 'சுகன் நான் எதிர் பார்க்கவே இல்ல'. தடுமாறிய வார்த்தைகளால் உள்ளிருந்த பயம் கலந்த துக்கம் வெளிப்பட்டது. "சரி சுந்தர் இப்போ என்ன சொல்றிங்க ? உங்க மகளுக்கு ஏற்றவன் தானா என் ஆதவன்?" என்று தலை நிமிர்ந்து கேட்டேன். "சுகன் நீங்க தான் என் பொண்ணோட கனவை நினைவாக்க வேண்டும்" என்றான். இது கெஞ்சலா? சஞ்சலாமா? தெரியவில்லை. 'சுந்தர் என்றோ நடந்து முடிந்த நிகழ்ச்சி நம்மை பிரித்தாலும், சம்பந்திகளாக நம் உறவு தொடரட்டும். நம் பிள்ளைகளின் கனவு நனவாக துணை நிற்ப்போம்" என பெருந்தன்மையுடன்  சொன்ன சுகன் என்ற சுகன்யாவை பார்த்து நன்றியால் கை கூப்பினார்.



மனம் என்னும் தூரிகையில் 
                                                                               
தூரிகையில் அழகை ரசித்தால்
கண்ணோடு மட்டுமே போகும் 
மனம் என்னும் தூரிகையில் 
பதிந்த ஓவியம் 
காலத்தாலும் அழியாது நிற்கும் 
                                                  
பெண்ணே ! நீ ஏமாற்றப்படும் 
வேளையில் கூட  
உடைந்து போகாதே 
வைராக்கியம் கொண்ட மனம் 
வளைய விடாது காக்கும் !
                                                                             
தோல்விகளால்  துவண்டு விடாமல் 
வெற்றி வேர் கணுவை கண்டால் 
முட்டி மோதி தொட்டு பிடித்து 
உன் தோள்கள் நிமிர்ந்தால் 
பெண்ணே நீயே சாதனையின் சின்னம்  !!! 

                                                                                           என்றும் அன்புடன்
                                                                                            *புஷ்பம் அமல்ராஜ்*


12 comments:

  1. Again nice soothing family story. Very confident giving poem. Please keep writing.

    Very nice picture in this time.

    ReplyDelete
    Replies
    1. Dear anonymous
      Your comments are helping me to write good stories. Thank u so much.

      Delete
  2. பெரியம்மா உங்க கதைகளில் எனக்கு பிடிச்ச விசயமே positive approach தான்.அப்புறம் எல்லாமே நல்ல முடிவா இருக்கும்.Energetic, enthusiastic,lovable story.anna nice picture....

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள அர்ச்சனா
      உங்களின் விமர்சனம், எனது எழுத்து மேலும் சிறப்பாகவும்,
      நல்ல படைப்பாகவும், அமைய வேண்டும் , அதற்காக சிந்திக்க
      வேண்டும் என்ற தெளிவை தந்திருக்கிறது . நன்றியுடன்
      வாழ்த்துகளும்.
      என்றும் அன்புடன்
      PUSHPAM AMALRAJ !!

      Delete
  3. Hi Aunty :)

    Very nice story..
    Suganyavoda vairagiyadha romba paraturan..
    ovvaru time unga storya padikum podhu adudha story apadi irukum nu expectations adhigama adgudhu..
    Aunty ungaluku apadi ipadilam kadhai aludha thonudhu?
    unga karpanaithiran very super aunty :)
    Expexting more story aunty :)

    Thanks,

    Revathi Durairaj

    ReplyDelete
  4. vanakam amma..really story was superb...story startin and then finish up ellam pakka..kadasila anuvum aadhavanum serathu kathaiku nalla ending...thnks ma for givin this story..loved it.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள தர்ஷினி
      கதையை ஆழ்ந்து படித்து அழகாய் எழுதிய
      விமர்சன வரிகளுக்கு நன்றி . வாசகர்களாகிய
      உங்களால் மட்டுமே என்னை போல் எழுதுபவர்களை
      ஊக்கப்படுத்தமுடியும் .என்றும் உங்களின் வரிகளை
      எதிர்பார்க்கும் அம்மா.

      Delete
  5. Hello Mam,

    This is the first time i am reading your story. Very Nice,hereafter i will continue reading your stories. In this entire story i loved the below mentioned lines very much, this shows how Confident and Bold she is and this is how everyone should be in their life....

    "அவன் அதிர்ச்சியுடன் 'உன்னை எதிர் பார்க்க வில்லை. ரொம்ப ஸ்போட்டிவா தான் இருக்க' என்ற போது, 'உங்களை விட அதிக ஸ்போட்டிவா தான் இருக்கேன்'"

    ReplyDelete
    Replies
    1. Dear Balaji!
      I am very happy to see your complements .Thank u so much.keeping reading
      and write your valuable comments.

      Delete
  6. காலத்தின் மாற்றத்தினால் காட்சிகள் மாறாலாம் ஆனால்
    அக்காலங்கள் வரைந்து செல்லும் நினைவுகள்
    என்றும் மனதைவிட்டு அகலாது.

    கவித்துவமான தலைப்பு “ஓவியமாய் தூரிகையில்”

    நம்பிக்கையூட்டும் தங்கள் கதையும், கவிதை வரியும் அருமை.

    ReplyDelete
  7. அன்புள்ள ராஜிவ்காந்தி
    ஒவ்வொருமுறையும் நீங்கள் எழுதும் கருத்துக்கள்
    மேலும் நல்ல சிந்தனையோடு கதை எழுத தூண்டுகிறது .
    நன்றியுடன் அம்மா

    ReplyDelete