Pages

Sunday, 24 June 2012

காடெல்லாம் பூத்திருக்கு (25)


புலரும் பொழுதெல்லாம் நீயே

(புஷ்பம் அமல்ராஜ்  - 044 25730952 / 9941459848 )
         
               ஜன்னலை அகல திறந்து விட்டதால் பெய்கின்ற சாரல் மழையும், அதில் சுகமாய் குளிக்கும் இரு சிட்டு குருவிகளும், பூத்து குலுங்கும் மல்லிகையின் மனமும் என் மனதை மயக்கத் தான் செய்தது. எங்கிருந்தோ ஒற்றை குயில் ஒன்று "குக்கூ" என தன் துணைக்கு வலைதள செய்தியை அனுப்பிய வண்ணமாய் இருந்தது. செய்தி கிடைத்த மறுநொடி எதிர்முனையில்"குக்கூ"என அதை விட பன் மடங்கு அழுத்தமான எதிர்பாட்டோடு வந்தமரவே இனி இவற்றின் அந்தரங்கத்தில் தலை இடாமல் தலை திருப்பினேன். 

              என் கண்களும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருந்தது. கண்கள் கண்டு கொண்டன வெகு நேர தேடலுக்குப் பின். சிவப்பு நிறத்தில் வெண்புள்ளி இட்ட சேலையும், குளித்து நீவி விட்ட கூந்தலில் ஒற்றை பூவை சொருகி, அவள் எங்கே போகிறாள். வேகமாய் ஜன்னலை தாண்டி ஓடி வருகிறேன். எட்டி பிடித்து விட்டேன் என்று கருதிய நேரம் எங்கே அவளை காணோம். அம்மா என சிறு சத்தம் கேட்டு கீழே குனிந்த போது அவள் சகதியில் கால் விட்டிருப்பது தெரிந்தது. கையை பிடிச்சிக்கோ என்று நீட்டிய போது , வரப்பின் விளிம்பில் கை வைத்து , அவளே எழுந்து நின்றாள்.  "என் கை பிடித்து எழுந்தால் ஆகாதோ என்ற போது, அப்படி இல்லை என்னால் முடிந்த போது உங்களை ஏன் சிரம படுத்த வேண்டும் என்று தான் பிடிக்க வில்லை" என்றாள்.

              சென்னையில் படிக்கும் அவள் தாத்தா பாட்டியை பார்க்க வந்திருக்கிறாள். வயல் வெளியை சுற்றுவதும், ஓடையில் கால் நனைத்து விளையாடுவதும், மழை சாரலில் தேவதையாய் சுற்றுவதும், என்னை கிறங்க செய்வதும் அவளது பொழுது போக்காய் இருந்தது. அவள் வந்து இறங்கிய போது கிராமத்துக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் நாகரிக உடையில் நடை போட்டவள், மறுநாள் எங்கே அந்த புதுப்பெண் என நோக்கிய படி இருந்த எனக்கு ஆச்சரியம். தழைய பின்னிய ஜடையும் , பாவாடை தாவணி உடையும், நாணிய முகமுமாய் காட்சி தந்தாள். அவர்கள் பண்ணையில் வேலை பார்க்கும் பெண்கள் கூட்டம் , "அம்மா எங்க கிராமத்து தெய்வமே வந்தது போல இருக்கும்மா என புகழ்ந்து கொண்டிருக்க, நாம இருக்கிற இடத்துக்கு ஏற்ற மாதிரி நடந்துக்கணும் . நானும் உங்களோட சேர்ந்த பொண்ணு தான் என்னை பிரிச்சி பாக்காதீங்க" என அவள் சொன்னதாக அந்த பெண்கள் சொன்ன போது எனக்கு ஏனோ பெருமையாக இருந்தது. எல்லோரையும் போலத்தான் நானும் அவளை பார்த்தேன். என் மனதுக்குள் மட்டும் மின்மினியாய் ஏன் வெளிச்சம் காட்டுகிறாய். நான் பக்கத்தில் உள்ள கல்லூரியில் MSC படித்துக் கொண்டிருக்கிறேன். விடுமுறை நாட்களில் பண்ணை வீட்டில் பெரியவர் வெளியில் போகும் போது, காரை ஓட்டுவதும் , அங்குள்ள வெளிவேலைகளை செய்வதும் என்னுடைய பொறுப்பாய் இருந்தது.

              பாட்டி 'கண்ணம்மா' என கூப்பிட்டால் மின்னலாய் ஓடி வரும் அந்த அழகு கூட பேரழகே. அவளை பார்ப்பதிலும் ரசிப்பதிலுமே இரண்டு மாத விடுமுறை ஓடி மறைந்து விட்டது. இந்த 60 நாளில் அவளிடம் பேசிய வார்த்தைகள் ஆறாக மட்டும் இருக்கும் என்றாலும் அவளிடம் காலங்காலமாய்  பேசியது போன்ற உணர்வு.  நாளை அவள் ஊருக்கு போகிறாள். மாந்தோப்பில் கயிற்றுக்   கட்டிலில் உட்கார்ந்து எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். நானும் அந்த பக்கம் போகும் போது அவளை பார்த்து, ' ஹலோ' என்றேன். நான் வந்தது கூட தெரியாமல் அப்படி ஒரு சிந்தனை. 'இந்த உலகத்தில் இருக்கீங்க ' சத்தமாக கேட்டேன். திடுக்கிட்டு போனவள். 'ஹாய் வாங்க' என்றாள். 'என்ன யோசனையில் இருக்கீங்க ? ஒன்னும் இல்லைங்க வந்து இரண்டு மாதமா பொழுது போனதே தெரியல. இயற்கைக்கு எதையும் மறக்க செய்யும் சக்தி உண்டு என இங்கே வந்த பின் உணருகிறேன்'. 'கணேஷ் ஊரில் எங்க வீட்டில் இந்த குறையும் இல்ல. ஆனா என்னோட பேசி என்னோட எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஆசையாய் சாப்பாடு போட் எனக்காக காத்திருக்க யாருமே இல்ல' . ' அப்பா வாரதத்தில் இரண்டு மாதங்கள் தவிர, மீதி நாட்கள் வெளி நாட்டில் தான். அம்மாவுக்கு கம்பெனி , எஸ்டேட் , பிசினஸ் இதெல்லாம் கவனிக்க நேரமே பத்தல . என்னுடைய எல்லா காரியங்களையும் கவனித்து கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள். அனால் இங்கே பாட்டி மாதிரி என்னை கவனிச்சிக்க, என்னோட சந்தோஷத்தில் பகிர நம்ம பண்ணை ஆட்கள் மற்றும் உங்கள மாதிரி இருக்கிறவங்க யாரும் இல்ல. அங்கே யாருமே இல்லை என்றாலும் , எனக்காக கண்ணன் மட்டும் இருக்கிறான். நான் இங்கே வருவதை அறிந்து கண் கலங்கியவன் அவன் மட்டும் தான்'. ' கண்ணை யாருங்க ' என கேட்டேன். ' அவன் என் கல்லூரி தோழன். நான் சிரிக்கும் போது சிரிக்கவும், நான் அழும் போது என்னை தேற்றவும் அவன் மட்டுமே உண்டு. நான் இங்கே வரும்போது கலங்கிய கண்களோடு என்னை பார்த்தது என் மனசை விட்டு போகவே இல்ல. நாளை அங்கே சென்ற பின் இங்கே நடந்தவைகளை பகிரும் போது எவ்வளவு ஆர்வமாய் சந்தோசமாய் கேட்பான் என கற்பனை செய்தது பார்த்துக் கொண்டிருந்தேன் ' என அவள் சந்தோசமாய் சொன்னாள். நானோ என்னை சுற்றி தூய காற்று இருந்தும் சுவாசிக்க முடியாமல் மயக்க நிலையிலேயே கேட்டுக் கொண்டிருந்தேன். 'என்ன கணேஷ் ஒண்ணுமே சொல்லலையே என் கண்ணனை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க' என்றாள்.

              கண்ணன் ரொம்ப அதிஷ்ட சாலி என்றேன் இந்த உணர்வும் இல்லாமல். 'அக்கா பாட்டி உங்களை கூப்டறாங்க ' என ஒரு பெண் வந்து கூப்பிடவே , 'சரி கணேஷ் வர்றேன் நாளைக்கு நீங்க தானே கார் ஓட்டுவீங்க பாக்கலாம்' என கிளம்பினாள். நானே என்னை தேற்றி கொண்டிருந்தேன். ஒரு கெட்டதிலும் ஒரு நல்லது உண்டு என்பதை போல நான் அவளையே நினைத்து பைத்தியம் ஆகி அலைவதை தடுத்து முதலிலேயே என் வேண்டாத கற்பனைக்கு முற்று புள்ள வைத்த கண்ணமாவுக்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.

              மாற்றம் தன் நிலையில் இருந்து மற்றவைகளை மாற்றி கொண்டிருக்க நானும் இந்த அழகிய பூமியை விட்டு ஐந்து ஆண்டுகளாய் வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருந்தேன். என் அப்பா அம்மா எத்தனை வேண்டி கூப்பிட்டும் வராத நான் இம்முறை நானே நம் இயற்கை கொஞ்சும் பூமியை பார்க்க வந்தேன். ஊர் முழுவதும் மாறி இருந்தது. பண்ணை வீட்டில் கலகலப்பு அற்று வெறிச்சோடி இருந்தது. நான் வந்து வாரம் ஒன்று ஓடி விட்டது. என் நண்பனை பார்த்து விட்டு பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தேன் திருச்சி யில் ஒரு பெண் குழந்தையுடன் ஏறினாள் அவளை எங்கோ பார்த்ததாக என் நியாபக குண்டூசி குத்தியது. 'கண்ணம்மா' என்னை அறியாமல் வந்தது. சட்டென திரும்பி பார்த்த அவள் 'கணேஷ் நீங்க இங்கே எங்கே?' என்றாள். பக்கத்தில் இருந்த இடத்தை சுட்டி காட்டி உட்கார சொன்னேன். அவளும் குழந்தையுன் அமர்ந்தாள். 'கண்ணம்மா எங்கே போறீங்க ? ஆளே மாறிப் போயிட்டீங்க பையன் பேர் என்ன?' என பல கேள்விகளை விடாது கேட்கவே, 'என் பையன் பெயர் கலை அரசன்'. 'நான் நம்ம ஊருக்கு தான் போறேன் என்றாள். ஊரா எல்லாமே மாறிப் போச்சி . நீங்கள் ஊரை விட்டு சென்ற மறுநாள். நானும் அங்கே இருந்து கிளம்பியவன் தான் இம்முறை தான் ஊருக்கு திரும்பினேன். ஊரை பார்க்கவே ரொம்ப வெறுப்பா இருக்குங்க என்றவன், சரி கண்ணம்மா நீங்க எப்படி இருக்கீங்க ? கண்ணன் எப்படி இருக்காரு.? என கேட்டு அவள் முகத்தை பார்த்தேன் . என்னை பார்க்காமல் தலை கவிழ்ந்தாள். என்ன கண்ணம்மா என கேட்ட போது நிமிர்ந்தவளின் கண்கள் குளமாகி இருந்தது.

              நான் பதறி போய் 'கண்ணம்மா' என்றேன் . 'கணேஷ் நான் வீட்டில் கண்ணனை பற்றி சொன்ன போது யாருமே எதிர்ப்பின்றி ஒத்துக் கொண்டு திருமணம் செய்து கொடுத்தார்கள். இரண்டு வருடங்கள் என் உலகம் சொர்க்கமாக விளங்கியது. எங்களை மகிவிக்க பிறந்தவன் தான் கலை அரசன் . கண்ணன் வேலை பார்த்த கம்பெனியில் மெடிக்கல் செக்கப்புக்கு போயிருந்த போது தான் அவருக்கு பிளட் கேன்சர் இருப்பது கண்டு பிடிக்க பட்டது. அதுவே சோதனைகளின் ஆரம்பமும் நோயின் இறுதிக் கட்டமுமாய் இருந்தது. பணம் தண்ணீராய் செலவானது. அப்பாவின் ஷேர் மார்க்கட்டும் சரிவை எட்டியபோது அப்பாவுக்கு அட்டாக் வந்தது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சியது நானும் கலை அரசனும் . இந்நிலையில் நான் எப்படி எல்லாவற்றையும் தாங்கி இருப்பேன். நீங்களே சொல்லுங்கள்' என என்னையே எதிர் கேள்வி கேட்டாள். என் நெஞ்சில் பொக்கிசமாய் காத்த கண்ணம்மாவுக்கு எத்தனை சோகங்கள் சோதனைகள். நான் அவளை நிலவுக்கு கூட ஒப்பிட்டதில்லை .  காரணம் நிலவு தேயும் தன்மை கொண்டது  என்பதால். நான் எப்போதும் அவளை பசுமையாய் என் நினைவுகளோடு மட்டும் ஒப்பிடுவேன். அப்படி பட்டவளின் வாழ்வில் காயங்கள் ரணமாக்கி உள்ளதே. எண்ணிக் கொண்டிருந்த வேலையில் பஸ் 10 நிமிஷம்  இங்கே நிற்கும் என்ற அறிவிப்பு கேட்டது. கலை அரசன் விழித்து அம்மா பிஸ்கட் வேணும் என கேட்க அவனையும் தூக்கி கொண்டு கீழே இறங்கினேன். கடையில் அவனுக்கு பிஸ்கட் வாங்கிக் கொண்டிருக்கையில் அனைவரும் அலறி அடித்து ஓடுவதை கண்டு கலக்கத்துடன் திரும்பி பார்த்தால், நாங்கள் வந்த பஸ்சின் மேல் கண்டைனர் லாரி மோதி நசுக்கி கொண்டிருந்தது. ஓடி சென்றால் எங்கும் ஒரே அலறல் சத்தம். எங்கிருந்தோ "கலை அரசா..." என்ற நீண்ட குரல் சுற்றி சுற்றி பார்க்கிறேன். கண்ணம்மா அலறலுடன் பஸ்சின் பக்க வாட்டில் ரத்தம் சொட்டிய முகத்துடன் 'கண்ணம்மா' என உலுக்குகிறேன்.'கணேஷ் அவன பத்திரமா பாத்துக்கோங்க.' வெளியில் தலை மட்டுமே தெரிந்தது.

              எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்திய காலம் கலை அரசனை எனக்கு துணை ஆக்கியது மட்டும் அல்ல அவனே எனது லட்சியமாகவும் மாற்றி இருவது ஆண்டுகளை பின்னோக்கி தள்ளி விட்டிருக்கிறது. இன்று அவன் ஒரு MBA பட்டதாரி அவனது உருவம் பேச்சு எல்லாமே கண்ணம்மாவை அவ்வப்போது எனக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்கும். என் பக்கத்தில் இருந்த அவன் அப்பா நான் வர ரெண்டு வாரம் ஆகும் . 'வேலை விசயமா பெங்களூர் போறேன் பத்திரமாய் இருங்கப்பா' என மடியில் படுத்த வாறே சொல்ல, 'சரிப்பா நீ பாத்து போயிட்டு வாப்பா' என்றேன் பாசத்துடன் என்னை விட்டு ஒரு நாள் கூட பிரிந்திராத என் செல்ல மகனை பார்த்து.
மாறாத இயற்கையோடு இந்த காடெல்லாம் பூக்குதே.

நினைவுகளின் பசுமையில்


நிலவுக்கு ஒப்பிடாத அவளை
என் நினைவுக்கு ஒப்பிட்டேன்
என்றும் பசுமையுடன் இருக்க,

தேயாமல் இருப்பதே பாசம் 
தேய்ந்து வளர்ந்தால் வேசம்
போற்றி வளர்த்த நினைவுகளை
பேணி காப்பதே உறவு

கற்பென்பது பெண்ணுக்கு மட்டும் அல்ல 

ஒருத்தியின் நினைவோடு இருக்கும் 

ஆணுக்கும் உண்டல்லவா?
                                                                                      என்றும் அன்புடன்
                                                                                            புஷ்பம் அமல்ராஜ்


 


12 comments:

  1. itu thangalin karpanai kathaiyah allatu unmai sambavama???

    therintukolla aaval.
    kathayin thiruppam manathai negila seikirathu..

    ReplyDelete
  2. அன்புள்ள் சுஜாதா ,
    உங்களின் விமர்சனம் படித்து மகிழ்ததோடு
    கதை கற்பனை மட்டும தான் என்பதும்
    உண்மை . சில நேரங்களில் கற்பனைகள்
    உண்மையாகவும், உண்மை கற்பனையாகவும
    தோண்றுவது மனநிலை சுழ்நிலை இவை
    காரணமாக்கூட இருக்கலாம் .என் மனதில்
    பட்டதை எழுதி இருக்கிறேன
    என்றும் அன்புடன்.

    ReplyDelete
  3. vanakkam amma..iyarkai varnanai yodu kathai sona vitham superb ma..story ending i didnt except this.:D..avalin nijangal thevai illai ninaivugal mattum pothum endru arumaiyaaga soneergal..poem frst line..நிலவுக்கு ஒப்பிடாத அவளை
    என் நினைவுக்கு ஒப்பிட்டேன்
    என்றும் பசுமையுடன் இருக்க.kaadhalaium pasumaiuden soneergal...nice maa..

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள தர்ஷினி ,
      உங்களின் விமர்சனம் படித்தபின் மீண்டும் நல்ல கதை
      எழுத வேண்டும என்ற எண்ணம் வந்திருக்கிறது நீங்கள்
      தான் என்னை தட்டிக் கொடுப்பவர்கள் . நன்றி தர்ஷினி .

      Delete
  4. Very nice story and kavithai. I really enjoyed reading this blog.

    ReplyDelete
    Replies
    1. Dear Anonymous!
      Every time the story comes you are my first vimarsagar.So i am happy.Sometimes
      if u are late i am worried.Thank u so much. We will meet soon

      Delete
  5. Replies
    1. Dear Archu!
      How r u ma. thank u for your comments.

      Delete
  6. அம்மா தங்களில் கதையை போன்றே
    நான் நேற்று இரவு ஒரு சம்பவத்தை
    முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் கேட்டேன்.

    “அவர் தன் தங்கை பிரவசத்தின் போது
    ஒரு பெண்குழந்தை பெற்றெடுத்துவிட்டு
    மஞ்சள்காமாலையால் உயிரிலந்து விட்டதாகவும்

    அந்த குழந்தையை தானே வளர்க்கிறேன் என்று
    அதன் தந்தை மும்பைக்கு கொண்டுவந்ததாகவும்.

    அடுத்த மூன்று மாதத்தில் அக்குழந்தையின்
    தந்தையும் விபத்தில் இறந்துவிட்டதாகவும்.
    உடனே தானும் மும்பைக்கு வந்ததாகவும்.

    அந்த குழந்தையை அத்தையே (தந்தையின் அக்கா)
    வளர்க்கிறேன் என்று கூறியதாகவும்
    நான் நாளை ஊருக்கு கிளம்புவதாகவும்”
    புலம்பிக்கொண்டிருந்தார்.

    பொதுவாக
    பெற்றோர்களை இழந்த குழந்தையை
    பாட்டி (தாயின் அம்மா), சித்தி (தாயின் தங்கை),
    குழந்தையின் தாய்மாமா இவர்கள் யாரிடமாவது
    ஒப்படைப்பதே சரியானது.
    அவர்கள் மட்டுமே பாசத்தோடு நன்றாக வளர்ப்பார்கள்.

    “தாய்வழி உறவுக்குத்தான் பாசம் அதிகம்.”

    தங்கள் கதையில்
    “தாய்வழி சொந்தம் போல பாசத்தோடு
    கண்ணம்மாவின் குழந்தையினை வளர்க்கும்
    கணேஷ் ஒரு தாயுமானவன்.”


    எனது கருத்தினை தெரிவிக்க வாய்ப்பளித்ததற்கு
    நன்றி! அம்மா.

    ReplyDelete
  7. அன்புள்ள ராஜீவ்காந்தி ,
    தங்களின் விமர்சனங்கள் பல விஷயைங்க்களை விளக்கியது .
    தாய் .அல்லது தந்தை உறவுகளையும் தாண்டி
    குழநதை நம்முடையது நாம் நாம்தான் எலலாம்
    என்ற தாய்மை உணர்வு மட்டும் இருந்தால் போதும்
    குழ்ந்தையைப பாசமுடன் வளர்ப்பதற்க்கு. நம்
    கணேஷிடம் இருந்தது . அதுதான் சிறப்பு. நிறைய
    விஷயங்களைப பகிர்ந்துகொண்டதரக்கு நன்றி.
    என்றுமஅன்புடன

    ReplyDelete
  8. Hi Aunty,
    this is very nice story aunty..i liked verymuch..Kavithaiyum Super...
    But,indha kannamma mari nejadhula yarukum nadakakudadhu aunty..
    romba pavam andha kannamma..

    Expecting more stories aunty :)

    Thanks
    Revathi D

    ReplyDelete
    Replies
    1. Dear Revathi!
      I am very happy to see your comment. ullagaththula Kannamma mathiri niriya pavappatta pillaigal erukiraingka. ellorukkum nallathu natakka vanduvom.
      We will meet soon.thank u so much dear.

      Delete