இதுவும் கூட மாறிப் போகும்
( புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )
வறுமை தான் எங்களின் நிலை என்றாலும், வயதுக்கு வந்த பெண்ணுக்கு ஒரு வாழ்வு கொடுக்க வேண்டும் அல்லவா? என் அப்பாவும் அதே எண்ணத்தோடு தான் பெரியவர் வீட்டுக்குச் சென்று, 'ஒரு மாப்பிள்ளை வந்துருகாரு. ஆனா படிப்பு ரொம்ப குறைவு . கூலி வேலை தான் பார்க்கிறானாம்' என்றவுடன் உள்ளிருந்து ஒரு குரல் "ஆமா நாம இருக்கிற வசதிக்கு இதுவே ரொம்ப அதிகம். பேசாம அதையே முடிக்க சொல்லுங்க" என்ற பெரியம்மாவின் அதட்டலான பேச்சு தன்மானத்தை தட்டி பார்க்க வைத்தது. அதற்கு மேல் எதுவுமே பேச முடியாமல் ஊமையாய் வந்த அப்பா என்னிடம் பேசினார்கள். "அம்மா ! உன் அழகுக்கோ குணத்துக்கோ எந்த குறையும் இல்லை. ஆனால் தகப்பன் என்ற நிலையில் நான் தான் என் பொண்ணுக்காக எதையும் சேர்த்து வைக்காம காலத்தை கழிச்சிட்டேன். இனக்கொரு நல்ல இடத்துல வரன் பார்க்க எனக்கு வாய்ப்பு இல்ல. அப்பா பார்த்து வைக்கிற இடம் பணத்தில் - வசதியில் படிப்பில் என பல குறை இருந்தாலும் பையன் மட்டும் நல்லவன் என்ற தகுதி மட்டுமே அவனிடம் இருக்கிறது . நீ உன் முடிவை சொன்னால் இந்த இடத்தை பார்க்கலாம்" என தளதளத்த குரலோடு பேசிய போது என் மனதில் வேதனை என்பதை விட வைராக்கியமே வேர்பிடிக்க ஆரம்பித்தது.
"பையன் நல்லா தான் இருக்கான். ஆனா தினக் கூலிக்கு வேலை பார்க்கிறானாம். எட்டாவது தான் படிச்சிருக்கானாம். பாவம் பொண்ணோட வீட்டுல இதுக்கு மேல செய்ய முடியல. அதனால
ஏதோ காமா சோமான்னு கலியாணத்தை முடிச்சிட்டாங்க" என ஊர் பேசியது.
"எனக்கு உன்னை கட்டிகிட்டதுல வருத்தம் தான் என முதல் நாள் முதல் வார்த்தை பேசிய தன் கணவனை ஏறெடுத்து பார்த்து விக்கி நின்ற போது 'இல்லமா! நீ நல்லா படிச்சிருக்க ரொம்ப லட்சணமா இருக்கே. அப்படி பட்ட உனக்கு நான் தகுதியானவனா? என நினைக்கும் போது எனக்கு வருத்தமா தானே இருக்கும். உங்க கிட்ட வசதி இல்லைங்கற காரணத்தால தானே எனக்கு பொண்ணு குடுக்க நினச்சாங்க. நான் ரொம்ப குடுத்து வச்சவன்தான். என் நண்பர்கள் கூட " டேய் நீ ரொம்ப குடுத்து வச்சவன்டா என்று சொல்றாங்க". ஆனா எல்லாரும் உன்னை பார்த்து " பாவம் இந்த பொண்ணு என்று தானே சொல்வாங்க. " நீ கூட இது நம்ம தலை எழுத்துன்னு தானே நினசிருப்ப? என தன் மனதில் பட்டதை தயக்கம் இன்றி தெளிவாக சொன்ன என் கணவரை பார்க்க பெருமையாய் இருந்தது.
எதையும் எனக்கு கொடுக்காம குறை வைத்தாலும் என் கணவரை மட்டும் எனக்கேற்றவராக கொடுத்த என் இறைவா உனக்கு தான் நன்றி கூற வேண்டும் என வேண்டிக் கொண்டு என் இனிய இல்லறத்தை தொடங்கினேன்.
சின்னதாக குடிசை வீடு . சுற்றிலும் வேண்டாத செடி கொடிகள் படர்ந்து கிடந்தது. அறுந்து போன கயிற்று கட்டில் அங்கும் இங்குமாக துணிகள் தொங்கிய கொடி கயிறுகள். உடைந்து முறிந்து போன சுற்று வேலி. இது தான் நான் வாழ வந்த வீட்டின் சூழல். முதலில் இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டுமென வரிந்து கட்டி வேலையில் இறங்கினேன். வேண்டாத செடிகளை கொத்தி எடுத்து குழியில் போட்டு தொங்கி கொண்டிருந்த துணிகளை மூட்டை கட்டி ஒரு ஓரமாக வைத்து, சுத்தமாக பெருக்கி சாணம் தெளித்து, புது மெருகு கொடுத்த பின் பார்க்க சற்றே பரவாயில்லை . நன்றாக தூங்கி எழுந்து வந்தவர், என்னம்மா ராத்திரியோட ராத்திரியா தேவதை வந்து மாயம் செஞ்சிச்சோ. ? என குளித்து முடித்து வந்த என்னிடம் கேட்கவே எனக்கும் பெருமையாய் இருந்தது. எங்கள் வீட்டில் இருந்து சீராய் கொடுத்த கொஞ்சம் பாத்திரங்களையும் , மளிகை சாமான்களையும் அடுக்கி சீர் செய்த வேளை எங்கே இவரை காணோம் என பார்த்தால், பால் வாங்கி வந்துக்கொண்டிருந்தார். நான் அவரை பார்த்தபடி எப்படியும் நாங்கள் உயர்ந்து விடுவோம் என்று உறுதியோடு இருந்தேன்.
பாலை கையில் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று மொழுகி வைத்திருந்த அடுப்பில் பால் பானையை வைத்து விட்டு, " நீங்க போய் குளிச்சிட்டு வாங்க சாமி கும்பிட்டுட்டு பால் காய்ச்சலாம் என்றேன். சொன்னபடி அவரும் வரவே, விளக்கேற்றி சாமி கும்பிட்டோம். பால் நன்றாக பொங்கி வந்தது. இருவரும் பால் சாப்பிட உட்கார்ந்தோம். உண்மையில் என் வாழ்க்கையில் வந்த தேவதை நீ தான் என்றார். ஏன் அப்படி சொல்லுறீங்க ன்று கேட்டேன். ஒரே ராத்திரியிலே என் வாழ்வே மாறிப் போன மாதிரி இருக்கும்மா. ஓ அப்படியா நான் ஒன்னுமே செய்யலியே இதுக்கு போய் ஏங்க ரொம்ப பெருசா பேசுறிங்க ? சரி நீங்க வெளிய போயிட்டு வரும்போது நித்திய மல்லி கொடி ஒன்னு வாங்கி வாங்க. வீட்டுக்கு பக்கத்துல வைக்கலாம் என்ற போது சரி என்றார்.
எங்க அம்மா அப்பா போன பிறகு தனி ஆளாய் நானே சமைச்சி, சாப்பிட்டு, தூங்கி எழுந்தேன். இப்போ நீ எனக்கு எல்லாமாய் வந்திருக்கே. அந்த சந்தோசத்துல என்ன பேசனு கூட தோனல என்றான். "நீங்க எட்டாவது படிச்சதா சொன்னாங்க. சர்டிபிகேட் (Certificate) எல்லாம் இருக்கா?என்றேன். ஓ .... எங்க அம்மா நான் BA படிச்ச மாதிரி பத்திரமா பெட்டிக்குள்ள வச்சிருக்காங்க. அப்படியா? உங்க அம்மாக்கு நீங்க படிக்கிறதுல அவ்வளவு ஆசையா? எனக்கு கூட ஆசை தான் . ஆனா சூழ்நிலை விடல என்றான். "ஏங்க நீங்க ஏன் படிக்க கூடாது" என்றவளை வியப்புடன் பார்த்தவன், "என்னம்மா விளையாடுறியா? என் ஒருத்தன் சாப்பாட்டுக்கே திண்டாடினேன் நான் எப்படி உனக்கு குறைவு இல்லாம சாப்பாடு போடுறதுன்னு? யோசிக்கிறேன் . நீ என்னடானா இப்படி கேக்குறியே ?".
"இங்கே பாருங்க முடியாது? எப்படி முடியும்!!" என கேட்டுகிட்டே இருந்தா எதுவுமே முடியாது. முயற்சி எடுப்போம். கஷ்டத்த ஒருவருக்கொருவர் பகிர்ந்துப்போம் என்றவள், நீங்க பத்தாவது தேர்வை அடுத்த ஆண்டு எழுதுறிங்க" என்றாள் உறுதியாக. "என்னமோ எல்லாமே புதுசா தெரியுதுமா . மறுபடியும் சொல்றேன் என் வீட்டுக்கு ஒரு தேவதை வந்தது போல தான் இருக்கு" என்றான் அவள் கைகளை பிடித்தபடி.
கண் மூடி திறப்பதற்குள் மாதங்கள் ஆறு ஓடி மறைந்தது. LKG முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் காலை மாலை டியூசனுக்கு வந்தார்கள் . அப்படி வரும்போது ஒரு நாள் "ஒரு அம்மா வந்து ரொம்ப சீக்கிரம் இவ வந்துடறா காலை டிபன் செய்ய நேரமே இருக்க மாட்டேங்குது" என்று அலுப்போடு சொல்லவே, "நான் வேண்ணா அவளுக்கு டிபன் இங்கயே தரட்டுமா? என்று கேட்டபோது சரிம்மா. அதுக்கான பணத்தை குடுத்துடறேன்" என்றார்கள். இப்படியாக பத்து பிள்ளைகளுக்கு காலை டிபனும், மதியம் சாப்பாடும் கொடுத்து விடும் வேலையும் கிடைத்தது. கணிசமான வருமானமும் வந்தது. இவர் காலையில் பிள்ளைகளை பக்கத்திலுள்ள பள்ளியில் விட்டு வருவார். நல்ல சாப்பாடும் பள்ளியில் விட ஆளும் கிடைத்ததால் பெற்றோர்களும் திருப்தியாக இருந்தது. அது மாத்திரம் அல்ல நான் கேட்காமலே நியாமான காசும் போட்டுக் கொடுத்தார்கள். இவருக்கு நான் படித்த வாத்தியாரிடமே போய் சொல்லி பத்தாம் வகுப்பு தேர்வுக்கு படித்து கொண்டிருந்தார். மேலே வரமுடியாத பள்ளத்தில் தள்ளி விட்டோம் இனி இவர்கள் மேலெழுந்து வர முடியாது என நினைத்த சொந்தங்கள் விழியுயர்த்தி, பார்த்தார்கள். அவர்கள் தள்ளி விட்டது பள்ளம் தானே பாதாளம் அல்லவே. முட்டி முட்டி முயன்று ஒருவரை ஒருவர் பிடித்தபடி ஏறி வருகிறோம் மேலே. தேர்வு நெருங்கிய நேரம் நானும் வேலைகளை சற்று குறைத்து கொண்டு அவருக்கு துணையாய் இணையாய் படித்ததும் படித்ததை நினைவு கூறவும் எழுதவும் திருத்தவுமென பல படிகளை கடந்த போது நல்ல மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு தேறினார். அதே கையேடு +2 காண applicationம் போட்டேன் . வேலைக்கு போறேன் என சண்டை போட்டார். படிச்சாலே ஆச்சு என நானும் விடாது வம்பு பண்ணினேன் . வென்றது வம்பு மட்டுமல்ல +2 விலும் சேர்த்து தான்.
நாங்கள் இணைந்து இருப்பதையும் , அவர் படிப்பதையும் நான் பிள்ளைகளுக்கு சொல்லி குடுப்பத்தையும் அவர்களுக்கு சாப்பாடு தயாரித்து கொடுப்பதையும் கண்டு உழைப்பை மதிக்க தெரிந்த பெற்றோர்களில் ஒருவர் இவர் அழகான கையெழுத்தையும் கண்டு அவரது கம்பெனியில் எழுத்தர் வேலை கொடுத்து மாதம் 3000௦௦௦ சம்பளமும் கொடுத்தார். உழைப்புக்கும் நேர்மைக்கும் எப்போதுமே பலமும் பலனும் அதிகம் தானே நாங்கள் முதன்முதலில் நட்டு வைத்த நித்திய மல்லி எங்களை போலவே செழிப்பாய் வளர்ந்து சிறிய பந்தல் மேல் பூத்து குலுங்கி செழித்திருந்தது. எந்த பிள்ளைக்கு பிறந்த நாளோ அவளின் தலையில் அழகாய் பூத்திருக்கும் எங்க மல்லி . கொஞ்சம் உழைப்பு - கொஞ்சம் முயற்சி - கொஞ்சம் வெள்ளை மனம் - கொஞ்சம் தன்னலம் - கொஞ்சம்
பொது நலம் - மனித நேயம் -தேவைக்கு பொருள் - மனிதரிடத்தில் அன்பு இவை மட்டுமே போதும். மனம் நிறைந்த சமாதானமும், சந்தோசமும் சேர்ந்து இளமை மாறாமல் அன்பே நம் கைபிடித்து அழைத்துச் செல்லும் வெற்றிக்கு.
அன்பைக் கொடு அத்தனையும் கிட்டும் !!!
ஏழ்மை என்பது போட்டியே
எதிர்த்து நின்றால் வெற்றியே
அன்பை அள்ளி கொடு
'ங' ப்போல் உறவுகளை வளைத்து விடு
இருமனம் கலந்தாலே திருமணம்
ஒருமனப் பட்டாலே நறுமணம்
இல்லறம் நல்லறமாய் மாறுமே
சந்தோசம் உன்னில் வந்து சேருமே
ஒலி தொடும் முன்னே
மனிதம் உன்னை நேசிக்கும்
வெற்றியோ உன்னிடம் வர யாசிக்கும்
என்றும் அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்
Very Nice. Family story. Great Poem too.
ReplyDeleteDear Anonymous!
DeleteThank u for the comment.
பெரியம்மா "போதும் என்றே மனமே பொன் செய்யும் மருந்து" ன்னு புரியவச்சிடீங்க.
ReplyDeleteநல்ல கதை, நல்ல கருத்து.
ன்புள்ள அர்ச்சனா ,
Deleteபோதும் என் நினைக்கும் உன் மனதுக்கு எல்லாம் பொன்னாக கிடைக்கும் .
வாழ்க வளமுடன் .
,
என்றும் அன்புடன்
கல்வியறிவு பெற்ற மனைவியின் வார்த்தைக்கு கட்டுபட்டு நடக்கும் கணவன்மார்கள் எத்தனை பேர்???
ReplyDeleteகல்வியறிவு உள்ள அல்லது இல்லாத என்ற
ReplyDeleteஎந்த பாகுபாடில்லாமல் அன்பு ஒன்று மாத்திரமே
எதையும் மாற்ற திறன் கொண்ட ஆயுதம். .
மனதில் பட்டது எழுத்தாகிறது
“பொய்மையில்லாத உண்மையான அன்பு ஒலியினை மிஞ்சும்”
ReplyDeleteசிறந்த உவமையை கொண்ட த்ங்களது கவிதை அழகு.
“நேர்மையான உழைப்பின் பயணம் வெற்றியை நோக்கித்தான்”
வாழ்வில் அனைவருக்குமான கருத்தை கூறும் கதை அறுமை.
மனித நேயம் சார்ந்த தங்களது கதை ஒவ்வொன்றும்
அனைவருக்கும் சென்றடையச் செய்யும்
பாபுவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புள்ள ராஜீவ் காந்தி ,
Deleteதலைமையும் பெருமையும் சேர்ந்த
உங்களது பெயர் தனித்துவமானது
கதையை கவனமாய் படிப்பது
ரசிப்பது கோடிட்டு காட்டுவது
அனைத்துமே உங்களை உயர்த்துவது
சின்னதாயினும் சிறப்பாய் செய்வது
உங்களின் திறனை பிரதிபலிகிறது
சிறப்பானவைகளை எல்லாம் தனதாக்கிய
அன்பு பிள்ளைக்கு அம்மாவின்
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் :)
தங்களுடைய வாழ்த்துக்க்கு நன்றி! அம்மா
DeleteVanakkam amma..inum oru vaazhai paadam unga kathai sonathu..romba pidichirundhathu ma..vaazhaiya azhaga aakurathu namma kita thaan irukula amma.kavithaium arumai.inum unga kathaiya padika aavalodu irukkum unga ponnu Dharshini..
ReplyDeleteThank you Mr.Babu for giving this story to us..
எனதருமை பொண்ணு தர்ஷினிக்கு !
Deleteஎழுபத்திமூன்று வயதில் அனுபவம்
எத்தனையோ பாடங்க்களை கற்றுதந்திருக்கிறது
அவற்றைத்தான் கதைகளாக உங்களுக்கு
எழுதிக்கொண்டு இருகிறேன் இதில்
ஒன்றும் வியப்பு இல்லை அல்லவா ?
இந்த காட்டில் உங்களை மகிழ்விக்க
மேலும் பல கதைகளும் கவிதைகளும்
வர இறை அருள் எனக்கு வேண்டும் அல்லவா ?
அன்புடன் அம்மா
Cute Couple,Super Story Periyamma !!!!!!!!!!
ReplyDeleteDear Shafa1
ReplyDeleteI pray for u just like same couple.God bless u my dear. Thank u Shafa.