புஷ்பம் அமல்ராஜ்
/
"அம்மா!, மலர் எங்கே? போன் பண்ணினாலும் எடுக்கல என்னாச்சுமா?" என்றான். "என்னமோ ஒரே சோகமா இருக்கிறா ? ரூம விட்டு வெளிலே வரலப்பா " என்று அம்மா கூறவே அவளது அறைக்கு சென்றான். அங்கே சோகமே உருவாக மலர் உட்க்காந்திருந்தாள். " என்ன மலர் என்னாச்சி உனக்கு?" என கேட்டான். "நாளைக்கு எனக்கு கெமிஸ்ட்ரி எக்ஸாம் . எதுவுமே புரியல எனக்கு பயமா இருக்குடா மாது" என்றவளை பார்த்து, "நல்ல கதையா இருக்கே? ஒண்ணுமே புரியலன்னு அழுதுட்டு உட்க்காந்திருந்தால் எப்படி ?". "சரி நீ எழுந்து பிரெஷ் ஆயிட்டு வா. நான் அஞ்சி நிமிசத்துல வந்துடுவேன்" என்று கூறி சென்றான் மாது.
திரும்பி வந்த போது மலரை பார்த்தால், பனியில் குளித்த புது மலராய் இருந்தாள். என்னை பார்த்தவுடன் , புத்தகங்களை எடுத்து வந்தாள். " சரி என்ன பகுதி உனக்கு புரியலன்னு சொல்லு?" என கேட்ட போது, அவள் சொன்ன பகுதிகளையும் அதிலுள்ள பார்முலாக்களையும் விளக்கினான். ஒரு மணி நேரம் கடகடவென ஓடியது. இப்போது தான் அவள் முகத்தில் தெளிவும் மகிழ்ச்சியும் காணப்பட்டது.
"மாது எப்படிடா உனக்கு மட்டும் எல்லாமே புரியுது ?". தெளிவா விளக்கமா சொல்லிதறியே. என்ன போல தானே நீயும் படிக்கிற? நீ மட்டும் எப்படிடா புரிஞ்சிக்கற? நீ ரொம்ப கெட்டிக்காரன். என்ன பாரு எனக்கு எதையும் சட்டுன்னு புரிஞ்சிக்க முடியல. நீ ரொம்ப புத்திசாலிதாண்டா" என மலர் சொன்ன போது, " ம்ம் புகழுங்க மை டியர் " என காலரை தூக்கி விட்டு கொண்டான். "மாது நான் விளையாட்டுக்கு சொல்லலைடா. நீ என் பிரண்டுன்னு சொல்லிக்கவே ரொம்ப பெருமையா இருக்கு. நீயும் நானும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா தானே படிக்கிறோம். எப்பவும் நீ தான் சொல்லி தருவியே தவிர, என்னால உனக்கு எதையுமே விளக்கமா சொல்லி தர முடியலையேடா".
"என்ன நீ எனக்கு எதையுமே சொல்லி தரலியா? யார் சொன்னது? நான் கவனமா படிக்க காரணமே நீ தானே. அது மட்டும் இல்ல மலர். அன்பா, நட்பா, இருக்கறது எப்படின்னு கூட நீ தானே மலர் சொல்லி கொடுத்திருக்கே. நாம ஆறாவது படிக்கும் போது உனக்கு கடுமையான காய்ச்சல். ஒரு வாரம் பள்ளி கூடம் வரவே இல்லை . அப்போ ' டேய் மாது பாடத்தை கவனமா படிச்சு தினம் எனக்கு சொல்லி குடுடா ப்ளீஸ் "என்று சொன்ன உன் பேச்சு இப்பவும் காதுல ஒலிக்கும். உனக்கு சொல்லி குடுக்கும் போது அந்த பாடம் எனக்கு இன்னும் ஆழாமா புரியுது" என்றான் மாது.
'எங்கே தன்னலம் அழிந்து போகுமோ ? அங்கே நீர் பொழி என் விழியே' என்ற வரிகளுக்கு கட்டு பட்டு என் விழிகள் நீர் பொழிந்தது.
கல்வியாண்டின் பன்னிரண்டு நிலைகளையும் கடந்து கல்லூரி படிப்பும் முடிந்தது. வரன் தேடும் படலத்தில் பலரும் , வேலை தேடும் படலத்தில் மாதுவும் பயணித்து கொண்டிருந்தார்கள். இரண்டு மூன்று கம்பனிகளில் கிடைத்த வேலை சரி இல்லையென ஆய்ந்து வேறு வேலை தேடிக் கொண்டும், பல வேலைகளுக்கான தேர்வுகளை எழுதிக் கொண்டும் இருந்தான். எப்போதும் பரபரப்பாய் இருந்தாலும், என்னோடு செலவழிக்கும் நேரத்தை அவன் தவிர்த்ததே இல்லை. ஒரு வழியாக மும்பை யில் மிக பெரிய சாப்ட்டுவர் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது.
அடுத்த வாரம் மும்பை செல்ல வேண்டிய நிலையில், எனக்கு மாப்பிளை வீட்டார், பெண் பார்த்து நிச்சயம் செய்ய வந்தார்கள். மாதுவுக்கு ஏகப்பட்ட சந்தோசம் 'நல்ல வேலை மலர் , நான் போறதுக்குள்ள மாப்பிள்ளை வர்றாரு. இல்லாட்டி மாப்பிளையை போட்டோவில் தானே பார்க்க முடியும்? . மலர் நான் பார்த்து, பேசி செலக்ட் பண்ணிய பிறகு தான் நீ உன் விருப்பத்தை சொல்லணும். சரியா ?'என்றான்.
'சரிடா உன் செலக்சன் எப்பவுமே எனக்கு சரியாக தான் இருக்கும். நீயே பாத்து சொல்லு' என்றேன். மாப்பிள்ளை இன்று வருகிறார் என்றதும், மாது எங்கள் வீட்டில் ஆம்பளை பிள்ளை இல்லாத குறையே தெரியாமல் பம்பரமாய் சுழன்று வேலைகளை பார்த்தான். மாப்பிள்ளையோட வெகுநேரம் பேசினான். இருவரும் சிரித்து சிரித்து பேசினார்கள். வெகு நாள் பழகியவர்கள் போல பேசி கொண்டிருந்தார்கள்.
'மலர் இவர் தான் உனக்கு. இப்படி ஒருத்தரை பார்க்கவே முடியாதம்மா' என்றான். 'எப்படிடா இப்படி உறுதியாய் சொல்ற?' என்ற போது ' ஆமா மலர் இவர விட்டா இது போல தங்கமானவரை பார்க்கவே முடியாது' என்று உறுதியாய் கூறினான் மாது. 'நீ யாருன்னு கேட்டாரா மாது' என்றேன். ' ஆமா, மலர் என்னோட பெஸ்ட் பிரண்டு என்று சொன்னேன்' என்றான். 'உங்கள போல பிரண்டு கிடைக்க மலர் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்' என்று மாப்பிள்ளை கூறியதாக சொன்னான்.
ஆகாயத்தை தொட்டு பிடிக்கும் போராட்டங்கள் ஓய்ந்து , அவரை என் இதயத்துக்குள் போற்றும் நாட்களுக்குள் சங்கமம் ஆனேன். மாதுவும் மும்பை சென்றான். அவன் இல்லாதிருப்பது சங்கடமாக இருந்தாலும் , அவனது வளர்ச்சியையும் எதிர் காலத்தில் அவன் உயர்ந்தது இருக்கும் நிலையையும் எண்ணி வருத்தத்தை மறந்து மகிழ்ச்சியானேன். கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருந்தது. அப்பா மட்டும் மாது இல்லாம ரொம்ப சிரமமா இருக்கு என புலம்பி கொண்டிருந்தார். தினமும் போன் பண்ணி நடக்கும் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வான். அவ்வப்போது மாப்பிள்ளைக்கும் போன் செய்து, எனக்கும் அவரை பற்றி டிப்ஸ் கொடுப்பான்.
கலியாணத்துக்கு ஒரு வாரம் முன்னே வந்து வேலைகளையெல்லாம் இழுத்து போட்டுக்கொண்டு செய்தான். திருமண நாளன்று எனக்கும் அவருக்கும் மோதிரம் வாங்கி வந்து எங்களை போட சொல்லி கொடுத்தான். ' ஏன்டா மாது இவ்வளவு செலவு உனக்கு?' என நான் கேட்ட போது. ' இப்ப ஐயா நிறைய சம்பாதிகிறார்ல, ஏன் மாப்ள சார் என் கல்யாணத்துல இது மாதிரி இன்னொரு பங்கு போட்டு அசத்திர மாட்டிங்களா?' என அவரிடம் கேட்க அவரும், ' அதுகென்ன உங்களுக்கு செய்யாமலா?' என கூறி சிரித்தார்.
சூரியன் தன் கடமையை தவறாமல் செய்ததால் நாட்கள் , மாதங்கள், வருடங்கள் என மாறி கொண்டே இருக்க எங்களின் இனிமையான இல்லறத்துக்கு துணையாய் மாதேஷ் சுட்டியாய் பிறந்து வளர்த்தான். சுகமான இல்லறம் என்றால், எங்களதே என பிறர் சுட்டி காட்ட நகர்ந்த நாட்களில் மாதுவும் சில வேலை எங்களோடும், பல நேரம் தொலைபேசி தொடர்பிலும் இருந்தான்.
அவருக்கு ஒரு வாரம் காய்ச்சல் , சிறுநீர் கழிப்பதிலும் சங்கடம் என மருத்துவரிடம் சென்றோம் . பதினைந்து நாட்கள் பல மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கிட்னியில் பிரச்சனை என்றார்கள். மாதுவும் அவ்வப்போது விசாரித்துக் கொண்டும் இருந்தான். கிட்னி பிரச்சனை என்றவுடன், நேரில் வந்தான். நெடு நேரம் டாக்டரோடு பேசிக்கொண்டிருந்தான். அவனும் இரண்டு நாள் தங்கி இருந்தான். பத்து நாட்கள் கலக்கத்தில் சென்றது. 'என்னடா மாது இப்படி பண்ணிட்டியே?' என அழுது கொண்டே கேட்டேன்.
'அழாதே மலர் இரண்டு கிட்னி நல்லா இருக்கும் போது , உனக்காக அவர்க்கு ஒண்ணு குடுத்தா என்ன தப்பு ? , நட்பு என்பது உங்கள் சந்தோசத்தில் மட்டும் அல்ல , உங்கள் துக்கத்திலும் எனக்கு பங்கு உண்டு என ஏற்பது தானே ?" என்றான் அவனுக்கே உரிய சிரிப்போடு .
என் வீட்டுக் காரர் கையெடுத்து கும்பிட போனவரை தடுத்து,' இப்படியெல்லாம் செஞ்சு என்னை தனியா பிரிக்க பாக்காதிங்க. ஏன்னா? நான் இப்போ உங்களில் ஒரு அங்கம் ' என்றான் புன்னகையுடன். ஒரு மாத விடுமுறையில் எங்களோடு தங்கி இருந்தான். என் மகன் பள்ளியில் இருந்து திரும்பி வந்தவன் , ' மாமா எனக்கு இந்த பாடம் ஒண்ணுமே புரியல , கொஞ்சம் சொல்லி குடுக்கிறிங்களா?' என்றான். 'அதெப்படிடா அம்மாக்கு புள்ள தப்பாம பிறந்துருக்கு' என்று கேட்டு வாய் விட்டு சிரித்தான் மாது . பக்கத்தில் நின்று கொண்டிருந்த நான் யோசிக்கிறேன். இவன் மனசு மாத்திரம் எப்படி வானத்தின் நீள அகலத்தில் இருக்கிறது என்று ? .
இந்த காட்டில் பூப்பதெல்லாம் நட்பு பூக்களே . மீண்டும் பூக்கும் மலர்க்கை காத்திருப்போம்.
நட்பே நீ புதையலா ... ?
நண்பனே ! நீ என் ஆசான் ,
ஆகாயத்தில் நான் கட்டும் கோட்டைக்கு கூட
அடிக்கல் ஆனவன் நீ
என் ஒவ்வொரு அடிக்கும்
சறுக்காமல் ஆதரவு தந்தவன் நீ
உன் நட்பு கிடைத்ததற்கு நான்
கொடுத்து வைத்தவளாம்
ஆம் . உன்னிடம் நட்பென்னும்
புதையலை கொடுத்து வைத்தவள் நான்
வேண்டும் போதெல்லாம் நீ
எனக்கு அன்பு , பாசம், மனிதநேயம் என
அள்ளி தரும் விலைமதிப்பில்லா
பொக்கிஷமும் நீ
நட்பின் இலக்கணமும் நீயன்றோ?
என்றும் அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்
இக்காலத்தில் இந்த மாதிரியான நட்பு எனக்கும் கிட்ட வேண்டுமென அந்த இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteஅன்புள்ள சுஜாதா ,
Deleteஇந்த காலத்திலும் இதை விட சிறந்த நட்பு இருக்கிறது . வைரம் மறைந்து கிடப்பதை போல நட்பும் ஒளிந்திருக்கிறது .தேடுங்கள் கண்டடைவீர்கள் !!!
உண்மையான நட்புக்கு ஈடு இணை இல்லை.
ReplyDeleteVanakkam amma..romba naal aachu unga story parthu..natpu endrumae thani siraputhaan..nam kaila thaan irukku natpu amairathu kathaiyai padikkum pothu la ma.nadri amma.
ReplyDeleteஅன்புள்ள தர்ஷினி
Deleteஉன்னை நேரில் பார்க்கவும் பேசவும் ஆசைதான் , ஆனால் முடியாத போதும் கூட நாம் எழுத்தின் மூலமாக நட்பை வளர்கிறோம் ! தொடரட்டும் நம் நட்பு !!!!!! :)
தன்னலமில்லா தூய அன்பினை
ReplyDeleteதாய், தந்தைக்கு அடுத்தபடியாக காட்டுவது
நண்பன் மட்டுமே என்று
நட்பின் பெருமையையும,
சிறந்த நட்பின் இலக்கணத்தையும்
தங்கள் கதை சிறப்பாக விளக்குகிறது.
இன்பத்தில் பங்குகொள்வதைவிட
துன்பத்தில் துணைநிற்பதே சிறந்த நட்பு!
நட்பால் கிடைக்கப்பெற்ற
தங்களின் நட்பிற்கு
எனது நன்றி!
வாழ்வின் பொறுப்பான கட்டத்தில்
Deleteவத்திருக்கும ராஜிவ்காந்திக்கு வாழ்த்துக்கள்
நட்பைப் பற்றி அழகாய் விமர்சித்த வரிகள் அருமை
நட்பும் பாசமும் வளர ஆசிகள் .
என்றும் அன்புடன் வாழ்வின் பொறுப்பான கட்டத்தில்
வத்திருக்கும ராஜிவ்காந்திக்கு வாழ்த்துக்கள்
நட்பைப் பற்றி அழகாய் விமர்சித்த வரிகள் அருமை
நட்பும் பாசமும் வளர ஆசிகள் .
என்றும் அன்புடன் வாழ்வின் பொறுப்பான கட்டத்தில்
வத்திருக்கும ராஜிவ்காந்திக்கு வாழ்த்துக்கள்
நட்பைப் பற்றி அழகாய் விமர்சித்த வரிகள் அருமை
நட்பும் பாசமும் வளர ஆசிகள் .
என்றும் அன்புடன் வாழ்வின் பொறுப்பான கட்டத்தில்
வத்திருக்கும ராஜிவ்காந்திக்கு வாழ்த்துக்கள்
நட்பைப் பற்றி அழகாய் விமர்சித்த வரிகள் அருமை
நட்பும் பாசமும் வளர ஆசிகள் .
என்றும் அன்புடன் வாழ்வின் பொறுப்பான கட்டத்தில்
வத்திருக்கும ராஜிவ்காந்திக்கு வாழ்த்துக்கள்
நட்பைப் பற்றி அழகாய் விமர்சித்த வரிகள் அருமை
நட்பும் பாசமும் வளர ஆசிகள் .
என்றும் அன்புடன் வாழ்வின் பொறுப்பான கட்டத்தில்
வத்திருக்கும ராஜிவ்காந்திக்கு வாழ்த்துக்கள்
நட்பைப் பற்றி அழகாய் விமர்சித்த வரிகள் அருமை
நட்பும் பாசமும் வளர ஆசிகள் .
என்றும் அன்புடன்
தங்கள் வாழ்த்துக்களுக்கு
Deleteநன்றி! அம்மா
Again another nice story and poem. This time I got delayed in reading it, but it worth a wait, nice writing.
ReplyDeleteLooking forward for the next one. Thanks for writing such a nice tamil.
Dear Anonymous!
DeleteI am so happy to see your comment. Thank you. I need your comment
always.
Nice Friendship based Story Periyamma !!!!!!!!!!!! , Kavithai also Super !!!!, I too lucky having such best friends in my life Periyamma !!!!!!!
ReplyDeleteDear Shafa!
ReplyDeleteYou encouraged me for your writings. thank you very much.Friendship is almost always the union of a part of one mind with a part of others. people are friends in spots.
என்ன பெரியம்மா? நீங்க போட்ட வாழ்த்துக்களை பார்த்தா நாங்களும் சீக்கிரம் ENGAGEMENT PHOTOS அனுப்பனும் போல தோணுது.
ReplyDelete.அன்புள்ள பாபு ,
ReplyDeleteபிள்ளைகளுக்கு திருமணம் என்றால் அம்மாவுக்கு மகிழ்சசி .
ஆசைக்கும் அளவில்லை அதனால் தான் மனம் நிறைந்த
வாழ்த்துக்களை வாரி வழ்ங்கி இருக்கிறோம் .
especially for women,the friendship will not remain forever.but i thank GOD as my friend is my life partner too, to share my boons and banes in my life.
ReplyDeletethank you for the nice story.
Dear Kala!
ReplyDeleteThank u very much to share your ideas.By GOD's grace u got a life partner is your
think friend too. GOD bless my dear
உண்மையான நட்புக்கு ஈடு இணை இல்லை.
ReplyDelete