Pages

Saturday, 10 December 2011

காடெல்லாம் பூத்திருக்கு (18) !


            
கடலறியாமல்... 
( புஷ்பம் அமல்ராஜ்  - 044 25730952 / 9941459848 )


சென்னையில் உள்ள மிக பெரிய ஷாப்பிங் சென்டர் என்பதை விட இளைஞர்களின் பொழுதுபோக்கு இடம் என்று சொல்லக் கூடிய EA க்கு நானும், என் மகனும் சுற்றிப் பார்த்து விட்டு ஏதாவது சாப்பிடலாம் என்று ஒரு இடத்தில் அமர்ந்தோம். 


            "அம்மா! நான் போய் ஏதாவது வாங்கிட்டு வாரேன். நீங்க இங்கே இருங்க" எனக் கூறிச் சென்றான். அவன் சென்ற சில நிமிடங்களுக்கெல்லாம் ஒரு பெண் வந்து, "இங்கே யாராவது வாராங்களா?" என என்னிடம் கேட்டாள். 

            "ஆமா, என் பையன் வருவான் " எனக் கூறி நிமிர்ந்தேன். அந்த முகம் எங்கோ பார்த்தது போலிருக்கவே, "நீங்க நீலா தானே?" என்ற போது மிக ஆச்சரியத்துடன், "ஆமா! நீங்க?" என்றேன். 

            "யேய் ! நான் சந்திரா" என்றது தான் தாமதம் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். "எத்தனை வருஷம் ஆச்சு என்னை மறக்காம நினைவு வச்சிருக்க, ரொம்ப சந்தோசம்" என்றேன். 

            "ஆமா நீ ஸ்டேட்ஸ்ல இருப்பதாகக் கேள்விப்பட்டேன். எப்போ இங்கே வந்தே?" என்றாள். "ஆமா, பாலா வரலியா?, மகனோட வந்திருக்கியே, எத்தனை பிள்ளைகள்?" என அடுக்கிக் கொண்டே போனாள். 

            "ஒரே பையன் தான். அதோ வர்றான் பாரு " என்றேன். 
            "யேய்! அச்சு உறிச்சு பாலா மாதிரி இருக்கான், கலர் மட்டும் கொஞ்சம் அதிகம் " என்றாள்.

            இதற்கிடையில் கண்ணனும் வரவே, "கண்ணா? இவங்க என்னோட பெஸ்ட் பிரண்டு" என்றதும், 'வணக்கம் ' என்றான். 

            "அமெரிக்காவிலே இருந்தாலும் தமிழ் பண்பாட்டோட வளர்த்திருக்கே" என்றாள். வாங்கி வந்த சமோசாவை மூவரும் சுவைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். 

            கண்ணனிடம், "நீ போய் படம் பாரு. நானும் இவளும் பேசிக் கொண்டிருப்போம் " என்ற போது, 'ஓகே அம்மா, நான் போகட்டுமா?' எனக் கேட்டுச் சென்றான். 

            இப்போது நானும் சந்திராவும் வசதியாக ஓரிடத்தில் அமர்ந்தோம். "பாலாவை மட்டும் விட்டுவிட்டு நீங்க மட்டும் தான் வந்தீங்களா?" என்றாள். மீண்டும் அவளே தொடர்ந்தாள். "யேய் , நீயும் , பாலாவும் நம்ம காலேஜ்ல லைலா, மஜ்னுவா சுற்றி வந்த நாட்களை நினைச்சா இப்பக் கூட பொறாமையா இருக்கு. நீயில்லாம அவனையோ, உன்னையோ கற்பனையே பண்ண முடியாது. நாம படிச்ச நான்கு வருசத்திலே ஒரு நாள் கூட நீங்க கோபப்பட்டோ, மனவருத்தமாவோ பார்க்கவே இல்லை. நாமெல்லாம் டூர் போனப்ப நீங்க ரெண்டு பேரும் நம்ம டீமை எப்படி அழகா வழிநடத்தி கொண்டு வந்தீங்க. அந்த டூர்தாண்டி வாழ்க்கையில் மறக்க முடியாத ஸ்பெஷல் டூர்."

            "பாலா கிடைக்க மாட்டானான்னு எத்தனை பேர் ஏங்கி இருக்காங்க  தெரியுமா?. நீ கூட பாலாவுடன் அவன் ஊருக்குப் போகப் போறேன்னு போனியே?". மளமளவென நிகழ்ச்சிகளை, நினைவுகளை ஒவ்வொன்றாய் கண்முன் நிறுத்தினாள். கண்களில் பொங்கிய நீர் தரைவிழு முன்னே நெஞ்சத்தின் கொதிப்பால் ஆவியானது.

            நானும், பாலாவும் ஊருக்குள் கால் வைத்தோம். பசுமையான, ஆரோக்கியமான கிராமத்தின் சூழல் என்னை வெகுவாக கவர்ந்தது. இயற்கையின் சூழலை ரசித்தபடி சென்ற நாங்கள், வீட்டில் நுழைந்தவுடன், "ராஜம்மா , இதோ நீலாவும், பாலாவும் வந்துட்டாங்க. வாம்மா!"  என பெரிய சப்தத்துடன் பெரியவர் குரல் கொடுக்க, " இதோ வந்துட்டேன்" என பதில் குரல் வர, "வாங்க, வாங்க," என்ற சிறப்பான வரவேற்ப்பில் மயங்கி...,

            "பாலா என் பேரு அவங்களுக்கு எப்படித் தெரியும்" என்றேன். நான் முன்னாடியே போனில் சொல்லியிருக்கேன் என்றான். இவர்களுக்குப் பின்னால் மிக அழகான கிராமத்து தேவதை நின்றாள். 

            "பாலா அவங்க யாரு?" எனக் கேட்ட போது, "வா உள்ளே போய் பேசலாம்" என்றான். இருவர் காலையும் பாலா தொட்டுக் கும்பிட்டான். நானும் அதையே செய்தேன். "மகராசியா இரும்மா" என வாழ்த்தினார்கள் பாலாவின் பெற்றோர். 

            "கண்ணம்மா நிலாவை உள்ளே கூப்பிட்டுப் போம்மா' என்றார்கள். அவளும் அன்போடு 'வாங்க! ' என அழைத்துச் சென்றாள். குளித்து முடித்து சுடச்சுட இட்லி , குழிபணியாரம் என கிராமத்துப் பலகாரங்களுடன் காலை டிபன் முடிந்தது. 

            கண்ணம்மா தான் கோழியை விரட்டி பிடித்தாள். எப்படி இவளால் பறந்து பறந்து ஓடும் கோழியை எப்படி லாவகமாக பிடிக்க முடிந்தது. ஆச்சரியப்பட்டேன். பக்கத்திலிருந்த பாலாவிடம் , "பாலா உன்னால இப்படி கோழி பிடிக்க முடியுமா?" என்ற போது, அவன் "உன்னை வேணும்னா புடிக்க முடியும்" என்றான் கண்ணடித்தபடி. " டேய் அடங்கு! என செல்லமா கடிந்துகொண்டேன்".  

            மிகமிக சுறுசுறுப்பாக கண்ணம்மா வேலையை முடித்தாள். இதற்கிடையில் "உங்க துணியெல்லாம் குடுங்க" என என்னிடமும், "அத்தான் உன்னோட துணியையும் குடு ஊரணிக்கு போய் துவச்சிட்டு வரேன்" என்றாள்.  

            "கண்ணம்மா வேண்டாம்" என்றதையும் கேட்காமல் எல்லா துணியையும் மூட்டை கட்டி கொண்டு சென்றாள். அவள் போவதையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்த என்னிடம் பாலாவின் அம்மா வந்து "என்னம்மா பார்க்கற, கண்ணம்மா அவரோட தங்கச்சி மகம்மா . அம்மா போய்ட்டா. அவ அப்பா வேற கல்யாணம் பண்ணிகிட்டான் . நாங்க தான் வளர்க்கறோம். அவளுக்கு ஒரு நல்லதா பண்ணனும் பார்த்துகிட்டு இருக்கோம்" என்றாள். 

            கண்ணம்மா, பாலாவின் அத்தை மகள் என்பது எனக்கு தெரிந்த போது நெஞ்சில் ஏனோ சுருக்கென்றது . "பாலா உனக்கென்ன முறை பொண்ணு இருக்காளே" என்றேன். "நீதான் என் முதல் பொண்ணு" என்று சிரித்தான். 

            போன சுருக்கில் கண்ணம்மா துணிகளை துவைத்து முடித்து வந்தாள். மாலை நானும் அவளும் தனியாக இருந்தோம். "உங்களை அக்கானு கூப்பிடலாமா" என்றாள். "வேண்டாம் நீயும் நானும் ஒரே வயசு தானே நீலானு கூப்பிடு" என்றேன். 

            "நான் ஒரு விஷயம் கேட்பேன்" என்றாள். "ம்ம்! கேளு" என்றேன். "நீலா, என் அத்தான் எப்படி?" என்றாள்.

             "உங்க அத்தான் ரொம்ப நல்லவரு அதனாலதானே எங்க வீட்ல அவர் கூட அனுப்பினாங்க". 

            "நீலா, அவர் ரொம்ப நல்லவருன்னு எனக்கு தெரியும். சூழ்நிலை காரணமாக வேற யாரையாது கட்டிக்கிட்டாலும் நான் அவர் வீட்டில் வேலைக்காரியாகவாவது இருந்துக்குவேன். எனக்கு அப்பா, அம்மா கிடையாது . சின்ன வயசில் இருந்தே அத்தான்னா ரொம்ப பாசம். அத்தை மாமா காலத்துக்கு பிறகு எனக்கு யாருமே இல்ல நீலா". கண்ணீரோடு என் மடியில் படுத்துகொண்டாள்.  சுனாமி இப்படி தான் திடீரென தாக்குமோ? நிலை தடுமாறிப்போனேன். 

            வெகுளியாக  அவள் பேசியது என்னை சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது . "பாலா" அவன் இல்லாம என்னால் இருக்க முடியுமா? காலம் பதில் சொல்லட்டும் என என் மனதை தேற்றியபடி, "கண்ணம்மா உன் அத்தான் உன்னை கைவிட மாட்டார். உன்னை எனக்கு காட்டத்  தான் என்னை கிராமத்துக்கு கூட்டி வந்தார்" என்றவுடன் மகிழ்ச்சியின் பூரிப்பில் கட்டி பிடித்து முத்தமிட்டாள்.

            என்னை வெளிநாட்டில் படிக்க வைக்க எனது பெற்றோர் தயாராக இருந்தார்கள். பாலாவுக்கு இதை பற்றி சொன்ன போது ரொம்பவும் நொந்து போனான். "உனக்காக காத்திருக்கேன்" என்றான்.  ஓராண்டு ஓடியது. கடிதங்கள் , தொலைபேசி அழைப்புக்கள், நெட்டில் பேச்சு என தொடர்ந்தாலும் கண்ணம்மா என் கண் முன்னே நின்றதால் பட்டும் படாமலும் உரையாடல்கள் நிகழ்ந்தன. எனக்கு இங்குள்ள பையனுடன் நிச்சயமானதாக செய்தி சொன்னேன். கோபமான பல கடிதங்களுக்கு பின் அவனது திருமண அழைப்பிதழ் கிடைத்தது. அழுதேன் . என் நெஞ்சம் வெடிக்கும் வரை அழுதேன். கண்ணமாவின் சிரித்த முகத்துக்கு முன்னே என் துயரம் தேய்ந்தது. இப்போதெல்லாம் கண்ணம்மாதான் போனில் பேசுவாள். நானும் அடிக்கடி அவளை கூப்பிட்டு பேசுவேன். 

            ஒரு நாள் அலறியபடி கண்ணம்மா போனில் கூப்பிட்டாள். "நீலா, அத்தான் என்னை விட்டுட்டு போயிட்டாரு, எனக்கும்,  என் பையனுக்கும் யாரும் இல்லையே..." அவள் குரலை என்னால் கேட்கவே முடியவில்லை. குழந்தை பிறந்த செய்தி கேட்டு அவசரமாய் வண்டியில் போனா போது விபத்து. என்ன செய்வேன். என்னால் தாங்க முடியவில்லை. பறந்து வந்தேன் கிராமத்துக்கு. கண்ணம்மா சொன்ன செய்தி என்னை கதிகலங்க செய்தது. நீலா, நீயும் அத்தானும் உயிருக்குயிராய் நேசித்து விட்டு எனக்காக விட்டு குடுத்தியே , உன்கிட்ட இருந்திருந்தாலாவது நல்லா இருந்திருப்பாரு. என் புள்ளைய எப்படி வளர்ப்பேன் . யாரை பார்த்து தைரியமா இருப்பேன் என்று தேம்பி தேம்பி அழுதாள்.   கண்ணம்மா உன் புள்ளைய நான் பெரிய ஆளா வளர்த்து தாரேன் என்றதும், "நீலா எனக்காக அவரையே விட்டுக் கொடுத்த உனக்கு அவர் பிள்ளைய தரமாட்டேனா?" என என்னிடம் கொடுத்தாள்.  ஆலின் விழுதுகளாய் காலம் இறங்க கண்ணன் வளர்ந்து நிற்கிறான் என் மகனாய்.

             ஒவ்வொரு வருடமும் நாங்கள் இருவரும் கண்ணம்மாவை பார்க்க கிராமத்துக்கு சென்று ஒரு மாதம் தங்கி செல்வோம். ஆனால் கண்ணம்மா அவனிடம், தான் அவனது அம்மா என காட்டிக் கொண்டதே இல்லை . இவன் 'சித்தி' என பாசமாய் அழைப்பதை கேட்டு பூரித்து போவாள் என என் கதையை சொல்லி முடிக்கவும், கண்ணன் வரவும் சரியாக இருந்தது. 

            இதையெல்லாம் கேட்ட சந்திரா , கண்ணீர் பெருக "கடலறியாமல்  சிப்பிக்குள் வளரும் இரு முத்துக்கள் தான் நீயும், கண்ணம்மாவும்" என விசும்பினாள்.  கண்ணனை பார்த்தவுடன், "சரி நாளை மகனோடு வீட்டுக்கு வா" என்ற அழைப்பை எற்றபடி கிளம்பினோம். 


வாழ்வே பதில் தருமா?

சலசலத்து கடலை முத்தமிடும்
சிப்பிகள் கூட்டத்தில் 
அமைதியாய் தனித்திருக்கும் 
சிப்பிக்குள் மட்டுமே 
முத்து வளர்ந்து கடலுக்கு
பெருமை சேர்க்கும் 

வித்துக்கள் எல்லாம் விளைவதில்லை
வீரியமுள்ளதே விருச்சம் ஆகிறது 
காய் தரும், கனி தரும், நிழல்  தரும்
தன்னையே தானமாய் தரும் ,
நீ கடல் அறியா சிப்பியா?
கனி தரும் விருச்சமா?
வாழ்வே பதில் தரும்.
                                                                                           என்றும் அன்புடன்
                                                                                            புஷ்பம் அமல்ராஜ்  



9 comments:

  1. So natural, touching story. When I read, I can easily absorbed by your stories. So nice, touch of love, family. Nice, really enjoyed reading this blog especially the stories.

    ReplyDelete
  2. Hi Babu super storynga ... arumayaana description... Tamil la kathaigal padichu romba naal aachu... adhulayum indha story awesome... heart touching one... ella ponnungalukkum ippadi oru manapaanmai irundha (vittukodukkuthal)ulagam sezhithirukkum...

    ReplyDelete
  3. வணக்கம் அம்மா..உருக்கமான கதை ..கதை ஆரம்பம் மற்றும் அதன் முடிவு அழகா இருந்தது அம்மா.. கவிதை அருமை...

    ReplyDelete
  4. very nice story amma...touching..nice kavithai..

    ReplyDelete
  5. Thanks Mathi. But all the stories are written by my amma Pushpam Amalraj. She is a author. If you wanna wish please call to her number.
    044 25730952 / 9941459848.

    ReplyDelete
  6. Indeed, it's a very good story. I don't have that much age to admire the author, but it's my privilege to appreciate her as a regular reader of this blog.In this story the village atmosphere and their culture was beautifully decorated.Neela's sacrifice is highly appreciated.
    The pictures and the verse are perfect match for the story. thankzma

    ReplyDelete
  7. Nice Story Periyamma ..................!!!!!!!

    ReplyDelete
  8. Nice story...........................Periyamma!!!

    ReplyDelete
  9. It is unfortunate that we can't seen any lady like Neela in the selfish real world. Nalla kavithai.Nalla kathai.Nalla pictures. Intha blogsil ulla kathaigal annithum sirappaga ullana.Ennudaya sirappu vazhthugal.Nandri.

    ReplyDelete