Pages

Sunday, 31 July 2011

காடெல்லாம் பூத்திருக்கு (12) !






நடப்பாய் ! நடத்துவாய் !!
( புஷ்பம் அமல்ராஜ்  - 044 25730952 / 9941459848 )


அம்மா வெண்ணிலா? 

     "இதோ வந்துட்டேன் மாமா". கையில் தண்ணீர் டம்ளருடன் மாத்திரையுமாய் வந்தவள், "இந்தாங்க மாமா" என கையில் இருந்த மாத்திரையும் தண்ணீரும் தந்தாள். கையில் 
வாங்கி மாத்திரையை போட்டார். " ஏம்மா வெற்றி எங்கே போயிட்டான்?" என்றவரிடம், "நம்ம கடை வரைக்கும் போய் சரக்கெல்லாம் இறக்கி வைக்க போயிருக்கார் மாமா ". "ஏன் மாமா மாத்திரையை சரியாதானே கொடுத்தேன்?" என சந்தேகமாய் கேட்டாள்.

     "அதுகில்லமா, எப்பவும் அவன்தான் குடுப்பான். நீ வந்த பின்னால அவரு ரெஸ்ட் எடுத்துகராறு" என சொல்லி கொண்டிருக்கும்  போதே, "வெண்ணிலா " என்ற குரல் கேட்டு , "மாமா அத்தை கூப்பிடறாங்க. இதோ வரேன் அத்தை", சமையலறை பக்கம் வந்தாள்.
        " உம் ... சொல்லுங்க அத்தை" என்றவளிடம், "சும்மா தானேமா இருக்கே காய்கறி நறுக்கி குடுக்கலாமேனு தான் கூப்பிட்டேன் ".

     " ஆமாம் , மதியத்துக்கு என்ன வைக்கலாம் சொல்லுங்க அத்தை", "கத்தரிக்கா இருக்கு, கீரை வாங்கி வச்சிருக்கேன்" என்றவளிடம் " கத்தரிக்கா புளி குழம்பு வச்சிட்டு கீரை , பருப்பு போட்டு செய்யலாமே ?" " சரி ரெண்டையும் குடும்மா நறுக்கி தாரேன் " 

     " ஏம்மா நீ இன்னும் டிபன் பண்ணாம இருக்கியே?" இதோ அவரு கடைக்கு போயிருக்காரு அத்தை, வந்ததும் சாப்டறோம்". 

     " வெண்ணிலா? என்ற வெற்றியின் குரல் கேட்கவே", " இதோ வந்துட்டேங்க " என குரல் குடுத்துகொண்டே பக்கத்து அறைக்குள் சென்றாள்.

     " என்ன வெண்ணிலா இந்த பக்கமே காணோம் ?" "ம்ம்ம், நீங்க கடைக்கு போயிருன்தீங்கலே, எப்ப வந்தீங்க?"


       " வந்து குளிச்சிட்டு கூட வந்துட்டேன்". 

     "சரிங்க டிபன் எடுத்து வைக்கிறேன், நீங்க ஆபீஸ் கிளம்ப நேரமாகுது" என கூறிக்கொண்டே டிபன் எடுக்க சென்றாள். 

     டிபன் தட்டோடு வந்தவளிடம், " வெண்ணிலா நீ வந்த பின்னால எனக்கு பாதி வேலை குறைஞ்சி போச்சி". " எப்ப பாத்தாலும் எல்லாருக்கும் வெண்ணிலா தான்".  " முன்னாலெல்லாம் எல்லாரும் வெற்றி, வெற்றின்னு தான் கூப்பிட்டுகிட்டே இருப்பாங்க  இப்ப வெற்றி வெட்டி பயலா இருக்கேன், அப்படி தானே வெண்ணிலா? " 

     " நீங்க என்னங்க?",


       'ஆபீஸ் போறீங்க , மாமாக்கு துணையா கடைய பாத்துகுறீங்க, நான் வீட்ல இருக்கிற வேலைய தானே பாத்துகறேன்". 

      " இல்ல வெண்ணிலா, உங்க வீட்ல ஒத்த பிள்ளையா செல்லமா இருந்தவ நீ , இங்கே வந்து எல்லா வேலையும் பாத்துக்கற, எல்லாரோடையும் அன்பா இருந்துகர , எனக்கு ரொம்ப பெருமையா தான் இருக்கு " என்று செல்லமாக கையை பிடித்தவனிடம், 


      " ஏங்க நான் என்ன இங்கே வந்து கஷ்ட படவா செய்யுறேன், ரொம்ப சந்தோசமா தான் இருக்கேன் . பொம்பள பிள்ளைங்க வளரும் போதே போற வீட்ல நல்ல பேரு எடுக்கணும் , எல்லார்கிட்டயும் அணுசரனையா இருக்கணும்னு சொல்லி வளர்ப்பாங்க. அது தானே நம்மளோட பண்பாடு. அத விட எங்கே காலேஜ்ல ஒரு மேடம் இருந்தாங்க. அவங்க கவுன்சலிங் குடுப்பாங்க பாருங்க . டீன் ஏஜ்  பிள்ளைங்க தப்பு பண்ணவே முடியாது. யாருக்காவது கல்யாணம்னு பத்திரிக்கையோட போனா, தாய் மாதிரி அட்வைஸ் பண்ணுவாங்க. "

     " ஆமா என்ன கதை கேட்டுட்டு உட்க்காந்துட்டே இருக்கீங்க? ஆபீஸ்க்கு  நேரம் ஆகலியா என்றவளிடம்".


     " இன்னிக்கு இந்த வெண்ணிலாவோட ஊர் சுத்தலாம்னு நேத்தே லீவ் லெட்டர் குடுத்துட்டு வந்துட்டேன்".


        " ம்ம்ம் அப்படியா என் கிட்ட சொல்லவே இல்ல ?, ஆமா எங்கே போறோம்?" என்றாள்?. அதற்குள் " வெண்ணிலாம்மா , வேலையெல்லாம் முடிச்சிட்டேன் வீட்டுக்கு போலாமா? என்று குரல் கொடுத்த வேலைக்காரியிடம் ,  "இதோ ஒரு நிமிஷம் இருங்க வந்து டிபன் தாரேன்" என்று கூறி கொண்டே வெளியில் வந்தாள். 

       அவளை அனுப்பி விட்டு, சமையல் அறையில் மாமியார் நறுக்கி வைத்திருந்த காய்களை போட்டு குழம்பும் , கீரையும் செய்து முடித்தாள்.


      " ஏம்மா? வெற்றி வேலைக்கு போகலியா.? " என கேட்ட மாமியாரிடம்,  "இல்லங்க அத்தை, லீவு போட்டுருக்காராம். நாங்க மதியத்துக்கு மேல வெளிய போயிட்டு வரட்டுமா?" என்றாள்.


           "நல்லா போய் வாம்மா" என்றாள் மாமியார் .  

     "வெண்ணிலா, சமையல் முடிசிட்டனா கொஞ்சம் வந்துட்டு போ ", என வெற்றி அழைத்தான். "இதோ வரேங்க என கூறிக்கொண்டே " வந்தாள். 

"     இந்த பைலலாம் கொஞ்சம் சரி பாத்து வைக்கிறியா? , அப்பா அவசரமா கூப்பிட்டு இருக்காரு   , கடை வரை போயிட்டு வரேன்" என சென்றவன், சற்று நேரத்துகெல்லாம் திரும்பி வந்தான். 

       நானும் , அவர் தந்த வேலையெல்லாம் முடிச்சிட்டு எங்க கல்யாண ஆல்பத்தை பார்த்துகொண்டிருந்தேன்.

       " ஏங்க இதோ பாருங்க . நான் சொன்ன மேடம் இவங்க தான்" என்று ஒரு போட்டோவை காட்டினேன். "சரி உன் கல்யாண பத்திரிக்கையை பாத்துட்டு உன் மேடம் என்ன சொன்னார்" என கேட்டான்?.

     " உங்கள பத்தியும் , குடும்பத்தை பத்தியும் கேட்டாங்க".


       " ஐயாவ பத்தி அள்ளி விட வேண்டியது தானே".

     " ஆமா உங்கள பத்தி என்ன தெரியும் எனக்கு. அவர் பேரு வெற்றி செல்வன் என்றேன்". 

    " பரவாலியே, வெற்றி - வெண்ணிலா. பேர் ரொம்ப பொருத்தமா இருக்கு என்றார்கள்". " உன் குடும்ம்பத்தை உன் உள்ளங்கையில் பொத்தி வச்சிக்கோ!" 

    " குடும்பத்தை  சேர்ந்தவர்களை நேசி. எந்த அளவு அன்பை கொடுக்கிறியோ ? அதை விட அதிகமா உனக்கு திரும்ப  கிடைக்கும் " என்றார்கள். 

      " அதோடு கூட நடந்த சம்பவம் ஒன்றையும் சொன்னாங்க. அவங்களோட உயிர் தோழிக்கு திருமணம் முடிந்து , ஓராண்டு மாமியாரோடும் மற்றவர்களோடும் , ரொம்ப நன்றாக இருந்தாங்க . பிறகு சின்ன சின்னதாய் எதோ பிரச்சனைகள் அவ்வப்போது வீட்டுக்குள் வந்து போகும். நாத்தனார் எதாவது இவளை பற்றி சொல்லுவது பிடிக்கவில்லை. வீட்டுக்கு வரும் மகளை மாமியாராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அன்றும் அப்படி தான் அவள் வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறாள். என் தோழி பணம் வைத்திருந்த இடத்தில் 500 ௦௦ ரூபாய் நோட்டை காணோம். 

     " மாமியாரிடம் கேட்டு இருக்கிறாள் ". " நான் பார்களியேம்மா என்று சொல்லிருக்கிறார்கள் ."

   " வைத்த இடத்தில் பணம் இல்லை என்றாள் எப்படி போகும்?" என கேட்ருக்கிறாள். "மருபடி மருபடி பேச வார்த்தைகள் அதிகமாகி , கடைசியில் "ஆமா உங்க மகளுக்கு கொடுத்து விட்டுரிபீங்க என சொல்லவே ".


     " உனக்கு தெரியாம நான் அவளுக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை" என சொல்லிகொண்டிருக்கும் போதே மகன் வரவே இருவரும் அவனிடம் சொல்லி இருக்கிறார்கள். 

       வேலையில் இருந்து வந்தவன் இருவரும் பேசியதை கேட்டு " கஷ்ட பட்டு வேலைக்கு போய் வந்தா நிம்மதியாய் இருக்க  முடியலை. எப்ப பாத்தாலும் போராட்டமா போச்சி".

    " நீயும் சும்மா இருக்க  மாட்டேமா. ஏன்? அவ கூட சண்ட போடுற? 

   " அவதாண்டா " என முடிப்பதற்குள். "அவ அப்படி தான் பேசுவா. நீ இங்கே இருந்தா இரு" என சொல்லி முடித்து வெளியே சென்றான். அவனது பேச்சி நெஞ்சில் சொருகிய முள் இரவெல்லாம் உறுத்திகொண்டிருந்தது.

     மருமகளும் இரவில் யோசிக்கும் போது தான் , காஸ் க்கு கொடுத்த 500௦௦ ரூபாய்    நியாபகம் வந்தது. குற்றம் செய்த நெஞ்சும் காலையில் மாமியாரை பார்த்தாள். வீட்டில் இல்லை. எல்லா இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை இன்று வரை. 

    குற்ற உணர்வோடு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சரியான பேச்சு  வார்த்தை இல்லை. சின்ன சொல் தான் வாழ்க்கையையே மாத்தி போட்ருச்சி பாத்தியே ".

"எது பேசினாலும் கவனமாக பேசு. உன் வீட்டில் நல்ல பெண்ணாக நடப்பாய் . குடும்பத்தை சிறந்ததாக நடத்துவாய். என் இனிய வாழ்த்துகளுடன் ஆசிர் என்றார்கள்" என்று சொல்லி முடித்தாள் வெண்ணிலா.

                              சாய்ந்தால் உன் மடி தான் !


கண்ணே ! நீ பிறந்த நேரம் தானே 
எனக்கு யோகம் பிறந்தது.

பொக்கிசமே கிடைத்ததென , 
பூரிப்பில் பூத்திருந்தேன்.

சின்ன சின்ன நடை பார்த்து
சிரித்தேன் மகிழ்ந்திருந்தேன். 

நீ உறங்கும் அழகு பார்த்து 
உறங்காமல் விழித்திருந்தேன்

பள்ளிக்கு செல்கையிலே 
பாடமெல்லாம் சொல்லி தந்தேன்.

கால் காசு  அரை காசு
கணக்கு பார்த்து சேர்த்து வைத்தேன்.

கல்லூரி சென்ற மகன் 
வரும் வரையில் தவமிருந்தேன்

வேலையில் சேர்ந்த மகன் 
விவாகம் முடித்து வைத்தேன்

கொடிக்கு காய் பாரமில்லை
காய்க்கு வேர் பாரமானதேன்?

எங்கே நான் இருந்தாலும் 
உன் முகம் காணா துன்பம் தான் 
துளைக்குது நெஞ்சில் ரணமாய்

உன் மடி சாய்ந்து 
என்னுயிர் போனால் 
எனக்கு நேரே சொர்க்கமடா !!!

என்றும் அன்புடன்                                                                                        
                                                                                            புஷ்பம் அமல்ராஜ்  



7 comments:

  1. simple and superb to read............moral for dis story
    THINK TWICE BEFORE U SPEAK A SINGLE WORD..........
    periyamma u bless me to a have gud family as such ur written story ll cum to live........
    U bless me alwayz......
    வெற்றி - வெண்ணிலா. பேர் ரொம்ப பொருத்தமா இருக்கு

    ReplyDelete
  2. எளிய எழுத்துநடை சிறப்பு.
    எத்தனைகாலம்தான் இப்படி பெண்களுக்கே அறிவுரை சொல்லிகிட்டே இருப்பீர்கள். ஆண்களுக்கு அறிவுரை கிடையாதா?.

    ReplyDelete
  3. புஷ்பம் அமல்ராஜ்3 August 2011 at 4:37 pm

    மரத்தின் வேரில் ஊற்றும் நீர்
    நுனிக்கிளை வரை செலுத்திச்
    செழிப்பாக்குதல் போல்,

    சமுதாயத்தின் ஆணி வேராம்
    பெண்ணுக்குச் சொல்லும் செய்திகள் அனைத்தும்
    ஆணுக்கும் சென்றடையும்,
    என்பதால் பெண்ணுக்கே சொல்லப்படுகிறது.


    அனலி அமைப்பும்,
    அதன் வேராம் சுதனும், வளமோடிருக்க வாழ்த்துக்கள் .

    என்றும் அன்புடன்
    புஷ்பம் அமல்ராஜ்

    ReplyDelete
  4. "எது பேசினாலும் கவனமாக பேசு. உன் வீட்டில் நல்ல பெண்ணாக நடப்பாய்"
    நல்ல பாடம் இன்றைய பெண்களுக்கு!!
    இயல்பான கதை.

    ReplyDelete