Pages

Wednesday, 2 February 2011

காடெல்லாம் பூத்திருக்கு (2) !



எந்த நாளும் சாபம் அல்ல, வரம்!
                                                     ( புஷ்பம் அமல்ராஜ்  - 044 25730952 / 9941459848 )

          ஒவ்வொரு நாளும் புலரும் பொழுது கடவுள் நமக்கு வழங்கும் வரம் என்று பெரியவர்கள் கூறுவார்கள். "அப்படியானால் ஏன் இறைவா இன்றையப் பொழுது சாபமாய் விடிந்தது?"


          கண்ணீர் மல்க இறைவனிடம் மன்றாடினேன். "சிறு வயது முதல் துன்பத்தில் என்னை ஆட்டிப் படைக்கிறாயே... நான் பிறந்தது கூடத் தெரியாமலே தாயைப் பறித்தாய். தந்தையோ என் பள்ளிப் பருவத்திலே பேருந்தில் பலியானார். சொந்தங்களை அண்டி, அனுசரித்து பள்ளிப் படிப்பை முடிய வைத்தாய். சொந்தக்காரர் வீடுகளில் எப்போது வேலைக்கு ஆள் தேவையோ அப்போதெல்லாம் அங்கு சென்று வேலைக்காரியாய் வலம் வந்தேன். 


          சுற்றமெல்லாம் சேர்ந்து வரன் பார்த்தன. இரண்டாம் தாரம், மூன்று பிள்ளைகள். மத்திய அரசில் வேலை. எனது தகுதிக்கு இதுவே ரொம்ப அதிகம்  என்றார்கள். நான் என்ன சொல்ல முடியும்? மௌனமாய் இருந்தேன். சம்மதம் என எடுத்து கொண்டார்கள். எல்லார் வீட்டு பிள்ளைகளையும் தூக்கியும், சோறு ஊட்டியும், விளையாடியும் வளர்த்ததனால் இந்த மூன்று பிள்ளைளும் கூட அந்நியமாய் தோன்றவில்லை. என் பிள்ளைகளைப் போல் பள்ளிக்கு அனுப்புவதில்  இருந்துசாப்பாடு ஊட்டி கதை சொல்லி உறங்க வைப்பதுவரை பொழுது அவர்களோடு மூன்றாண்டுகளாய் ஓடிய போது எனக்கும் ஒரு பையன் பிறந்தான். நான்கு பேரையும் வளர்ப்பதிலும், கவனிப்பதிலும் காலம் காற்றாற்று வெள்ளமென வேகமாய் ஓடி விட்டது. பெரியவனுக்கும், சின்னவனுக்கும் திருமணமாகி பேரன், பேத்திகள் என வீடு கலகலப்பாயிற்று. மூன்றாவது பையனுக்கும் பெண் பார்த்தாகி விட்டது. 


         என் பையனும் கப்பல் சார்ந்த படிப்பிற்காக வெளியூரில் இருக்கிறான். பெரியவன் தான் குடும்பத்தை பார்த்து கொள்கிறான். நிறைய சம்பாதிக்கிறான். வீட்டுக்குக் குறைவில்லாமல் எல்லாம் வாங்கிப் போடுவான். சின்ன வயதிலிருந்தே 'அம்மா , அம்மா' என்று அன்பாய், பாசமாய் இருப்பாய். இன்று காலையில் வந்தான். "உங்களையும், அப்பாவையும் நானே வச்சிப் பார்க்க முடியாது. தனியே வீடு பார்த்திருக்கிறேன். அங்கே போய் இருங்க" என்றான். தூக்கி வாரிப் போட்டது. "என் பிள்ளையா இப்படி பேசுறான்? என்னப்பா இப்படி பேசுறே? நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா? ஏன்டா எங்களை தனியா போகச் சொல்றே?" என்ற போதே கண்களில் நீர் நிற்காத ஆறாய் வழிந்தது. 


        "இங்கே பாருங்கம்மா, சின்னவனும் கலியாணம் ஆகி தனிக்குடித்தனம் போயிருவான். நம்ம தம்பியும் படிச்சி முடிச்சா கல்யாணம் பண்ணிரலாம். நம்ம தம்பி என்று அவன் குறிப்பிட்டது என் மகனைத்தான். அதனால தான் இந்த முடிவு. வீடெல்லாம் பார்த்தாச்சி. அடுத்த வாரம் பால் காய்ச்சிரலாம். இன்னும் தள்ளிகிட்டே போனா ஆடி வந்துரும். போக முடியாது. உங்களுக்கு வேண்டியதை எடுத்து ரெடி பண்ணி வையுங்க" என்றான். 


        எங்க வீட்டுகாரரும் வாய் பேச முடியாம அமைதி ஆயிட்டாரு. நான் அழுததைப் பார்த்த அவருக்கு மனக் கலக்கமாயிடுச்சி. "கவலை படாதே, விதின்னு நெனச்சிக்கோ" என்றார். அவன் குறித்த நாளும் வந்தது. நெருங்கிய சொந்தங்களை மட்டும் அவனே போய் அழைத்தான். நானும் அழுதழுது விதியென்று ஓஞ்சி போயிட்டேன். "இன்றைய பொழுதாவது நல்லதாய் விடியட்டும் இறைவா" என வேண்டிக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பினோம்.


        பார்க்க புது வீடாய் இருந்தது. "என்னடா புது வீடா இருக்கே? " என்றேன். "ஆமா என் சிநேகிதனோட வீடு" என்றான். பால் பொங்கியது. மகனும், மருமகளும் எங்கள் இருவரின் காலில் விழுந்து வணங்கினார்கள். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அவனைக் கட்டிக் கொண்டு அழுதேன். "அழாதீங்கம்மா" என்று என் கையில் ஒரு பேப்பரை கொடுத்தான். என்னான்னு பார்த்தேன். பத்திரம்! "என்னப்பா இது?" என்றேன். "அம்மா இந்த வீட்டுப் பத்திரம். உங்க பேருக்கு பதிவு பண்ணிருக்கேன். அப்பாவோட பென்ஷன் வருது. சொந்தமா வீடு இருக்கு. முதிய வயசில இதுதாம்மா உங்களுக்கு நம்பிக்கையும், தெம்பும் தரும். இது இரண்டும் இருந்தாலே நோயெல்லாம் பாதி கொறஞ்சு போகும்மா. அப்பாவும், நீங்களும் சந்தோசமா இருங்க" என்றான். 


        "எத்தனையோ காலமா சலிப்பில்லாமே உழைச்சிட்டீங்க. இனிமே ஓய்வா இருங்கம்மா" என்றான். சிலையாக சில நொடி நின்றவளை மருமகள் தான் "என்ன அத்தை வீடு பிடிச்சிருக்கா?" என்று கேட்டு தன்னிலைக்கு வர வைத்தாள். "உங்க மகன் தான் எப்போ பார்த்தாலும் "எங்கம்மா பாவம், எங்கப்பாவைக் கலியாணம் செய்துட்டு வந்த போது சின்ன வயசு தான். அப்ப இருந்து எந்தப் பாகுபாடும் இல்லாம எங்களை வளர்த்து ஆளாக்கி நல்ல நிலைக்கு உயர்த்தியிருக்காங்கன்'னு சொல்வாரு. அவங்களுக்கு எதாவது செய்யணும் என்று சொல்வாரு. நாங்க இரண்டு பேருமா சேர்ந்து போட்ட திட்டம் தான் இந்த வீடு.   கால் கிரவுண்டு இடம் தான். உங்களுக்கு வசதியா பார்த்து பார்த்து கட்டியிருக்கோம்" என்றாள்.  


          சாமிக்கு முன்னாள் போய் நின்றேன். 'எல்லா நாளையும் வரமாத் தான் கொடுக்கிறாய். நாங்க தான் மனசுக்குப் பிடிக்காததை சாபம் எடுத்துக்கிறோம். உன் கணக்கு படி நீ நல்லதே செய்யிறே. இறைவா, நீ எல்லாவற்றிற்கும் காலத்தையும் நிர்ணயம் பண்ணிருக்கிறே அழுகைக்கு ஒரு காலமுண்டு. மகிழ்ச்சிக்கு ஒரு காலம் உண்டு. துயரப்பட ஒரு காலமிருப்பது போல் துள்ளிக்குதிப்பதர்க்கும் ஒரு காலத்தை கணித்திருக்கிறாய். இறைவா, என் மக்களெல்லாம் நிறைவோடும், உன் பாதையிலும் நடக்க வரம் தா' என வேண்டிக்கொண்டு திரும்பி பார்க்கையில் மூத்தோரை முதியோர் இல்லங்களில் சேர்க்கும் இந்தக் காலத்தில் மூத்தொர்க்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்திருக்கிறான் உங்க மகன். தீர்க்காயிசோட இருப்பான் என பெரியவர்கள் வாழ்த்தியதைக் கேட்க மகிழ்ச்சியாய் இருந்தது. (மீண்டும் பூக்கும்)  :) 

10 comments:

  1. wow...superb no wordz to express it............

    ReplyDelete
  2. amazing ya god decided for the right time of people..........

    ReplyDelete
  3. அழுகைக்கு ஒரு காலமுண்டு. மகிழ்ச்சிக்கு ஒரு காலம் உண்டு. துயரப்பட ஒரு காலமிருப்பது போல் துள்ளிக்குதிப்பதர்க்கும் ஒரு காலத்தை கணித்திருக்கிறாய்.nice lines.....

    ReplyDelete
  4. எல்லாமே நம்ம எடுத்துக்குற விதத்தில் தான் இருக்கிறது என்பதை மிக அழகாக சொல்லி இருகாங்க. Like these lines very much. எல்லா நாளையும் வரமாத் தான் கொடுக்கிறாய். நாங்க தான் மனசுக்குப் பிடிக்காததை சாபம எடுத்துக்கிறோம்.

    ReplyDelete
  5. எல்லாத்துக்கும் மனசு தான் காரணமுன்னு,இந்த கத தான் எ.க..

    ReplyDelete
  6. Nice Story ....... We can also take all negative things in the positive ways. Its all in our hand........
    'எல்லா நாளையும் வரமாத் தான் கொடுக்கிறாய். நாங்க தான் மனசுக்குப் பிடிக்காததை சாபம் எடுத்துக்கிறோம். உன் கணக்கு படி நீ நல்லதே செய்யிறே'
    This line teaching us we can take our life in another way also. Nice Line Good ........ :)

    ReplyDelete
  7. அண்ணா கதை நல்லாஇருந்தது .வாழ்க்கையில எது நடந்தாலும் நமக்கு நல்லதுன்னு நினைக்கணும்னு ஒரு நல்ல கருவ சொல்லி இருக்க. nice,keep it up.

    ReplyDelete
  8. vimarsanagalukku nandri...
    -meendum sandhippom,
    PUSHPAM AMALRAJ

    ReplyDelete
  9. 'புஷ்பம் அமல்ராஜ்' எனக்கு கல்வி கற்றுக்கொடுத்த அன்னை......நான் இன்று ஒரு நல்ல நிலைமையில் இருப்பதை பார்த்து பூரிப்படையும் என் அன்னை.........பாசத்தின் பொருள்.....அன்னையின் சிரிப்பை போல் பாசத்தை போல் அவர் வரிகளும் அழகோ அழகு........வாழிய நீர் பல்லாண்டு........அன்புடன் மகன்..arul

    ReplyDelete