ஈரம் இருக்கும் இடத்தில் பசுமையும் தாய்மையும் செழிக்கும் !
( புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )
மஞ்சள் நிறத்தில் பாவாடையும், அதற்கு எடுப்பான நிறச் சட்டையும் அணிந்து இடுப்புக்குக் கீழே தொங்கு கற்றை கூந்தலும் அவளை அந்த கிராமத்தின் அழகு தேவதையாய் தோன்ற செய்தது. ஊரணிக் கரையில் அவளுக்காகவே கட்டிய ஊஞ்சல் பலகை காற்றில் ஆடிய படி இருக்க ஓடிச் சென்றவன் கயிறுகளைப் பிடித்தபடி அமர்ந்தவளை ஓடி வந்து ஆட்டி விட்டவன் " ஆமா, ஏனித்தனை நேரம் ? " எனப் போய்க் கோபம் காட்டியவனை பார்த்து சிரித்தாள். " நீ லேட்டா வந்ததும் நல்லதா போச்சு. வீட்டுப் பாடமெல்லாம் முடிச்சுட்டேன். இல்லாட்டி கணக்கு டீச்சர் செம போடு போடுவாங்க" என்றான்.
" உனக்கென்னம்மா நீ வீட்டுக்கு போயி ஜாலியா இருப்ப. நான் தான் கஷ்ட பட்டு படிக்கணும்" என்றான். ஊஞ்சலை ஆட்டி விட்ட படி அவன் பேசியதெல்லாம் கேட்டு சிரித்தபடி ரசித்தாள். ஊஞ்சல் எத்தனை நாள், எத்தனை மாதம், ஆண்டுகள் ஆடியதோ, வடம் போட்ட பல கயிறுகள் அறுந்து, நைலான் கயிறு, கெட்டியான பலகை என மாறியிருந்தது . பன்னீர் மரக்கிளையும் அடிதாழ்ந்து ஊரணி கீழ் தோடு தூரத்தில் இருந்தது.
பக்கத்தில் இருந்த மஞ்சனத்திக் கிளையும் வளர்ந்து மஞ்சளும், வெள்ளையுமாய் பூக்கள் வண்ணத்தை மட்டுமல்ல, வாசத்தையும் தெளித்திருந்தது. அதோ வருகிறாளே , அவள் அன்று பார்த்தவளா? என்ன தெளிவு.... பார்ப்பவர்கள் மறுபடி பார்ப்பார்கள் . நிறம் மஞ்சளா? வெளுப்பா? என்று. முடி அவிந்திருந்தால் நீளமும், அடர்த்தியும் நெஞ்சில் பதியும் , வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரையும் காணவில்லை. ஏமாற்றம், சோகம் என கலந்த பார்வையைக் காண சகிக்காமல் " ஆமா , நீ மட்டும் லேட்டா வருவே, வந்ததும் சொகமாயிடுவே. உம்... இப்ப சிரி. நீ சோகமா இருந்தாலே கஷ்டமாயிடுது. சரி வா உட்காரு" என ஊஞ்சலில் உட்கார்ந்தவளை ஆட்டி விட்டான்.
இரவு பெய்த மழையில் நனைந்த பன்னீர் பூக்கள் வாசனை திரவியம் தெளிக்க வளை வளைவான நீரில் அவளின் அவிழ்ந்த கூந்தல் நனைய மேலே முகில் கூடாரம் போட மெல்லிய இருளின் வரவால் இருவரும் ஊரணி கரையேறி நடக்கும் போது " இதோ பாரும்மா, நாளை நான் சென்னைக்கு போறேன். நல்ல வேலை கிடைச்சிருக்கு. திரும்ப வரும் வரையில் கவலைபடாம பத்திரமாய் இருக்கணும்.. மழை காலம். அதனாலே தனியா ஊஞ்சல் ஆட வராதே . இந்த அழகான சிரிப்பை மட்டும் நான் எடுத்துகிட்டு போறேன்" என்றான்.
காலமெனும் சூறாவளி கரைகளைப் புரட்டி போட்டது.நீண்ட இருபது ஆண்டுகள் கிராமத்தில் அவன் கால் பட்ட போது புழுதியில்லை, காட்டு கருவேல மரங்கள் இல்லை , காய்ந்து காற்றில் சலசலக்கும் பனை மரத்து மட்டடைகளில்லை,மாடுகள் மேய வயல்வெளிகள் இல்லை, ஏறி நடக்க ஊரணிக்கரைகளில்லை, உற்று பார்த்தால் நெளிநெளியாய் நீரில்லை, ஊஞ்சலும், பன்னீர் மரமும், மஞ்சனத்தி மரமும் இல்லை, இவற்றோடு என்றும் பூக்கும் சிரிப்போடு அவளில்லை. நானும் நானாயில்லை.
சுற்றிச் சுற்றி காடு மேடெல்லாம் ஓட்டமும், நடையுமில்லாமல் கார் என்ற எந்திரத்தின் உதவியின்றி இயங்க முடியவில்லை. கிராமத்திலிருக்கும் தென்னந்தோப்பு ஒன்று தான் சொத்தாக மிஞ்சியது. அதை விற்பதை சாக்காக வைத்து பிறந்த ஊரைப் பார்க்க வந்தேன். சென்னை செல்கிறேன் எனச் சொல்லி சென்றவன் வசதியை பெருக்க தேசம் விட்டேன். வசதியும், வாய்ப்புகளும் தேசத்தை மட்டுமல்ல , நேசம் கொண்ட அனைத்தையும் நெஞ்சை விட்டு நீக்கியது. வாழ்வின் வசந்த வரவுகளால் கனவுகள் காற்றாற்று வெள்ளத்தில் பட்ட துரும்பாயின. எப்போதாவது ஊஞ்சலும் அதில் ஆடியவளின் முகமும் தெளிவில்லாமல் தெரியும். மங்கலாய் தெரிவதை கண்ணை மூடினால் ஒன்றும் தெரியாமல் போகும்.
பாவம் என்ற வார்த்தை மட்டும் பயனில்லாமல் வெளிவரும். அவளை பற்றி ஊருக்குள் கேட்ட போது " தாய் மாமன் சென்னையில் பெரிய மருந்துவராம், பெரிய மருத்துவமனை நடத்துகிறாராம். அங்கே முக்கிய பொறுப்பில் இருக்கிறாளாம். நம்மூர்காரர்கள் யாராவது சென்றால் நல்ல முறையில் கவனித்து அனுப்புவாளாம் " என்றார்கள்.
திருமணம் என்றபோது " கட்டிக் கொள்ளவே இல்லை" என்றார்கள். அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வு பரிதாபமா? பரவாயில்லையே, எனக்காகத் தான் என்ற எகத்தாளமா? ஊருக்கு கிளம்ப தயாரானபோது ஒரு எட்டு ஊரணி கரைக்கு சென்றேன். பன்னீர் மரத்தை ஓட்ட வெட்டியிருந்தார்கள். என்றாலும் சிறுவாட்டுப் பணத்தை கருவாட்டுச் சட்டிக்குள் ஒழித்து வைத்து தன் பிள்ளைகளுக்கு செலவுக்கு தரும் தாய் போல, வேருக்கடியில் ஒரு மூலையில் மறைத்து வைத்திருந்த நீரை கொண்டு மேலே பசுமையை தந்து கொண்டிருந்தது பன்னீர் மரம்.
அந்த மரத்துக்குள் ஈரத்தை பார்த்தேன். எனக்குள் ஏனில்லை என நொந்து கொண்டேன். எத்தனை செல்வத்தில் புரண்டாலும் இளம் வயது வறுமை கூட செழுமையாய் தான் இனிக்கிறது.
"ஐயா! ஆறு மணிக்கு பிளைட் மதுரைக்கு போகணும்" என் நினைவுபடுத்தவே கிளம்பினேன். காரின் வேகம் காட்சிகளை பின்னுக்கு தள்ளியது. நாளை சென்னையிலிருந்து லண்டன் செல்ல வேண்டும்.
விமானம் மேலே மேலே போய் கொண்டிருந்தது. என் மனம் நினைவுகள் எல்லாம் கீழே கீழே ஊஞ்சல் கட்டிய ஊரணிக்கே சென்று கொண்டிருந்தது.
பற்றிப் பிடித்த கைகளில் இருபுறமும் ஊஞ்சல் கயிறு காற்றில் ஆடும். அழகிய நீண்ட கூந்தல் நீரில் புரள அழகிய முகம் தெளிவாக தெரிந்தது.
என் அருகில் இவள் எப்படி? உதவியாளரை கேட்டேன். நாவு அசையவில்லை. நான் பேசுவது யாருக்கும் புரியவில்லை. ஏன்? கண்களை மூடுகிறேன். செவிப்புலங்களைத் தீட்டி கொண்டு பக்கத்திலிருந்தவர்கள் பேசுவதைக் கூர்மையாய் கேட்கிறேன்.
"என்ன சார் செய்யறது? நல்லாத்தான் பிளைட்டில் ஏறினார். சென்னை வந்ததும் இறங்காமல் இருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் சோதனை செய்தபோதுதான் நினைவு தப்பியது. வலது பக்க கை, கால் விழுந்து விட்டதும் தெரிந்தது. வலது பக்கம் என்பதால் பேச்சு போய்விட்டதாம். இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகிபோச்சு. இப்பத்தான் கண் முளிச்சிருக்காரு. பக்கத்திலிருக்கிற அம்மா அவுங்க ஊருக்காரங்கலாம். பதினைந்து நாளா கண் முழிச்சி காப்பாத்தினாங்க. இந்த ஆஸ்பத்திரியே கூட அவங்களோடதுதான்னு பேசிகிறாங்க. தாயை போல காப்பாத்துற ஈர நெஞ்சம் சிலருக்காவது இருக்கிறதால தான் இந்தப் பூமி கூட இன்னும் சுத்துது" என்றார்.
நீ பிறவியில் வாய்ப் பேச முடியாதவள் என்பதால் உன்னை ஒதுக்கினேன். இன்று நான்?
நீ ஏன் என்னை மறுபடி சந்தித்தாய்? அழுதேன். மன்னிப்பு கேட்டேன். ஏதேதோ பேசுகிறேன். யாருக்கும் புரியவில்லை. ஆனால் அவளுக்கு நன்றாய் புரிந்தது. என்னைத் தட்டிக் கொடுத்து தேற்றினாள். (பன்னீர் பூக்கள் மீண்டும் பூக்கும் )
Rasithu padinga... friends...
ReplyDeleteSuper Babu. I loved the story.
ReplyDeleteதிருமணம் என்றபோது " கட்டிக் கொள்ளவே இல்லை" என்றார்கள். அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வு பரிதாபமா? பரவாயில்லையே, எனக்காகத் தான் என்ற எகத்தாளமா?
Wunnerful lines!!!!!!. But author name could be more prominent.
Very nice...
ReplyDeleteஇந்த கதை என் பெரியம்மாவின் கதை.. ஆளுமை சிற்பி என்ற இதழில் அவர்கள் பிரசுரிக்கிறார்கள் ... அது நிறைய பேரை சென்றடையுமோ தெரியவில்லை... அதனால் தான் அவர்களுக்காக copy right வாங்கி நான் இதை பிரசுரிக்கிறேன் ..... இக்கதைகள் நன்றாக இருப்பின் அவர்கள் எண்ணுக்கு போன் செய்யுங்கள் போன் நம்பர் மேலே உள்ளது... நன்றி dear friends...
ReplyDeleteகதை அருமை!!!!
ReplyDeleteநீ ஏன் என்னை மறுபடி சந்தித்தாய்? அழுதேன். மன்னிப்பு கேட்டேன். ஏதேதோ பேசுகிறேன். யாருக்கும் புரியவில்லை. ஆனால் அவளுக்கு நன்றாய் புரிந்தது eppavum kathaln pesuvathu kathalikum penuku mattum than purium ....i like this line
ReplyDeletenice..........story name may be better
ReplyDeleteerum irukkum idathil pasumayum thaimayum selikkum..........wow wonderful frnd..........
ReplyDeleteHi Friend,
ReplyDeleteI like the last lovable and touchable line "நீ ஏன் என்னை மறுபடி சந்தித்தாய்? அழுதேன். மன்னிப்பு கேட்டேன். ஏதேதோ பேசுகிறேன். யாருக்கும் புரியவில்லை. ஆனால் அவளுக்கு நன்றாய் புரிந்தது. என்னைத் தட்டிக் கொடுத்து தேற்றினாள்.". The Story is also nice to read.
Convey my feed back to Your aunty.......Nice writer.
Nice Story..
ReplyDeletevery nice story for all village lovers...................
ReplyDeleteநீ பிறவியில் வாய்ப் பேச முடியாதவள் என்பதால் உன்னை ஒதுக்கினேன். இன்று நான்? நீ ஏன் என்னை மறுபடி சந்தித்தாய்? அழுதேன். மன்னிப்பு கேட்டேன். ஏதேதோ பேசுகிறேன். யாருக்கும் புரியவில்லை. ஆனால் அவளுக்கு நன்றாய் புரிந்தது. என்னைத் தட்டிக் கொடுத்து தேற்றினாள்
ReplyDeleteNice story ..............
2011 best love story
ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தயக்கம் அதாவது ஏதோ யார்கிட்டேயோ சொல்ல நினைச்சி சொல்ல முடியாம, தப்பு செய்துட்டு அதுக்காக மன்னிப்பு கேட்காம இருப்பாங்க. எல்லாம் வாழ்க்கையின் கடைசிலதான் நினைப்பாங்கன்னு ஒரு அருமையான கரு.
ReplyDeleteஇந்த கத படிக்கும் பொது எங்க கிராமம் தான் கண் முன் வருது.. பக்கத்தில் இருந்த மஞ்சனத்திக் கிளையும் வளர்ந்து மஞ்சளும், வெள்ளையுமாய் பூக்கள் வண்ணத்தை மட்டுமல்ல, வாசத்தையும் தெளித்திருந்தது.நல்ல வரிகள்..
ReplyDeletewow...very nice..realistic,,and moving..hats offf!!!!
ReplyDeleteஇதைப் படித்த அனைவரும் தங்களின் பள்ளி நாட்களை நினைத்திருப்பார்கள். நானும் தான்.........
ReplyDeleteநல்ல நடை எழுத்தில் .......
Nice lines with touching scripts
ReplyDeleteNice Story. I never want to miss reading this blog, so interesting and touching.
ReplyDeleteSimple, elegant and nice tamil with so much essence to the story. Lively and lovely story.