உன் வயிற்றில் நான் மகனாய்
( புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )
ஆட்களின் கூட்டம் , குழந்தைகளின் விளையாட்டு சத்தம், மாமாவின் அதிகார கத்தல், அப்பாவின் அவசர பரபரப்பு என வீடே விழாக்கோலம் கொண்டிருந்தது. விடிந்தால் அக்காவின் திருமணம். அக்கா பாதி கனவிலும் மீதி வெட்கத்திலும் தோழியரோடு பேசிக்கொண்டிருந்தாள். எனது கல்லூரி தோழியர் இருவர் என் அக்காவின் திருமணத்திற்க்காக வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களோடு பேசுவதிலும், அவர்களின் தேவைகளை கவனிப்பதிலும் எனக்கு நேரம் சரியாக இருந்தது. இதற்கிடையில் மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் தங்கள் பந்தாவை அடிக்கடி வாய் பேச்சால் நிருபித்துக் கொண்டிருந்தார்கள். சாப்பாடு பந்தி முடிந்து அவரவர் தூங்குவதற்காக கிடைத்த இடத்தில் படுத்தார்கள்.
என் தோழிகளும் நானும் ஒரு அறையில் படுக்க சென்றோம். என் தோழிகளில் ஒருத்தி, "ஆதிரை உனக்கும் சீக்கிரம் திருமணம் செய்துவிடுவார்கள் இல்லையா?" என என்னை வம்புக்கு இழுத்தாள் மாலதி. "ஏய் இப்ப ஆனத்திக்கு என் அக்கா திருமணத்திற்கே அப்பா சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறார். எனது திருமண பேச்சை எடுக்கவே இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும்" என்றேன். "ஏண்டி உங்கள் வீட்டில் காதல் திருமணத்திற்கு சம்மதிப்பார்களா?" என்ற போது, "அப்படி ஒரு பேச்சை எடுத்தாலே வெட்டிப் போட்ருவாங்க எங்க வீட்டில். அப்படி செய்வது கூட பாவம் என்பது போலத்தான் கருதுகிறார்கள். உங்கள் வீட்டில் எப்படி?" என கேட்ட என் கேள்விக்கு, "உடனே ஒத்துக்க மாட்டாங்க , ஆனா எங்க குடும்பத்தில பல காதல் திருமணங்கள் தான்."
"என்ன இருந்தாலும் அப்பா அம்மா ஆசையாய் அலைந்து திரிந்து மாப்பிள்ளை பார்த்து ஊர் கூடி, சொந்த பந்தங்கள் நிறைந்து, சடங்குகளும் , சம்பிரதாயங்களும் செய்து முடிக்கும் திருமணத்திற்கு தனியான மரியாதையும் சிறப்பும் இருக்கத்தானே செய்கிறது. உண் அக்காவை பாத்தியா? அழகான கற்பனையையும், மகிழ்ச்சியிலும் கனா கண்டுக் கொண்டு தானே இருக்கிறாள். இதை விட்டு திருமணத்தின் அன்று கூட ஒரே குழப்பத்திலும் பயத்திலும் , மனபதட்டத்துடன் காதல் திருமணம் அவசியமா?" இது திலகாவின் கேள்வி. "சொந்தங்கள் கூடி செய்யும் திருமணங்கள் தான் நல்லது இல்லையா? என தன பேச்சுக்கு வலு சேர்த்தாள்" திலகா. "நம்ம கூட படிச்சாலே சரளா ஒரு பையனை காதலிச்சு கல்யாணம் செய்ய என்ன பாடு பட்டாள் . இரண்டு வீட்டிலும் சண்டை. இவளை அவங்க வீட்டில் சிறை வைத்து அவள் அதை தாண்டி வெளியில் வந்து, நண்பர்கள் சிலர் சேர்ந்து பதிவு திருமணம் செய்து வைப்பதற்குள் அவளுக்கு போராட்டமாய் தானே திருமணம் நடந்தது. ஆமாண்டி அவ இப்ப எப்படி இருக்கா? தெரியலடி. அதன் பிறகு அவளை பார்க்கவே முடியல. என்ன தான் சொன்னாலும் நம்ம பெரியவங்க பாத்து வைக்கிற திருமணம் தான் சிறந்தது" என்ற வுடன் " அம்மா தானே ! பட்டி மன்ற தலைவர் மாதிரி தீர்ப்பு சொல்லாதே. வா படுக்கலாம். காலை மூன்று மணிக்கெலாம் எழுப்பி விட்ட்ருவாங்க . தூங்குங்கடி" என ஆதிரை அதட்டவே தூங்க ஆரம்பித்தார்கள்.
எனக்கு மட்டும் தூக்கம் என் கண்களை விட்டு வெகு தூரம் கோபித்துக் கொண்டு போனது போல் இருந்தது. அனைவரும் அசந்து தூங்கி விட்டார்கள். என் மனம்ஆனந்தனையே சுற்றிக் கொண்டிருந்தது. என் தோழிகள் யாருக்குமே தெரியாத அவன் என் கல்லூரியில் படிப்பவன் தான். இதுவரை இரண்டு மூன்று முறை மட்டும் பேசியிருக்கிறோம். ஆனால் நீண்ட நாள் பழகியது போல் என் மனம் அவனை மட்டுமே சுற்றி வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை எப்படியாவது அவனை ஏதாவது ஒரு சந்தர்பத்தை ஏற்ப்படுத்தி பார்த்து விடுகிறேன். அவனும் அப்படித்தான் . அதிகம் பேசிக் கொள்ளா விட்டாலும் பார்த்தவுடன் ஒரு மலர்ச்சி. மனதுக்குள் ஒரு படபடப்பு கூட்டத்தில் கூட அவனை தனியாக கண்டுகொள்ளும் போது சட்டென அவனும் திரும்பிப் பார்த்தால் அவனுக்காகவே பிறந்தது போன்ற உணர்வு. என்றாலும் தலை தானாக கவிழும் அந்த வேளை என் மேல் அருவி கொட்டி சிலிர்ப்பது போன்ற ஒரு உணர்வு. இவை என் உணர்வுகளோடு நிற்குமா? இல்லை தொடர்ந்து உண்மையாகுமா? ஆக வேண்டும் என்றே என்னிடம் இருந்து பதில் வந்தது. எப்படி தெரியவில்லை. அவனை நான் பார்ப்பேன் என எண்ணியது கூட இல்லை. ஆனால் பார்த்தேன் இப்போது கூட அவனை பற்றியே எண்ணுகிறேன். அவனுக்கும் எனக்கும் என்ன பந்தம். தெரியாது. ஆனால் பந்தப்பட வேண்டும் என்று மட்டும் மனம் ஏங்குகிறது. கேள்வியும் பதிலுமாய் அலைகள் மாறிமாறி அடிக்க அசதியில் உறங்கிப் போனேன்.
படபடவென கதவை தட்டி எழுப்பினார்கள். மடமடவென வேலைகள் நடந்தன. அலங்காரம் பெண்ணுக்கு மட்டும் அல்ல. ஒவ்வொரு பெண்ணும் தன்னை தானே அலங்கரிப்பதில் அக்கறை காட்டினார்கள். ஒவ்வொருத்தியும் தன்னை ரதி என்றும் மேனகை என்றும் எண்ணிக் கொண்டார்கள். அக்காவோ உண்மையாகவே ரதி போல தான் இருந்தார். மாப்பிளையும் அவளுக்கு பொருத்தமாகவே தான் இருந்தார். தாலிக் கட்டும் நேரம் சலசலப்புக்கும் மகிழ்ச்சிக்கும் எல்லை இல்லாமல் அனைவர் முகத்திலும் ஆனந்தம் . 'அப்பாடா' என அம்மாவும் அப்பாவும் ஓய்ந்தார்கள். அவர்கள் நினைத்த படி
திருமணம் முடிந்தது. ஆனால் நினைக்காத அளவு செலவு ஆனது. அக்காவும் மகிழ்வோடு மாமியார் வீடு செல்ல தயாரானாள் . சாப்பிட்டு முடித்து கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, " ஆனந்தி உனக்கு நல்லபடியா நம்மாளுக பையனா பாத்து செஞ்சிட்டேன். உன் தங்கை ஆதிரைக்கும் இது போல சம்பந்தம் வந்தா நல்லா இருக்கும்: என ஏக்கத்தோடு அப்பா சொன்னார். எனக்கென்னவோ சுருக்கென்றது . '
அவரவர் வேலை முடிந்து புறப்பட்டார்கள். நானும் தோழியரோடு கல்லூரி விடுத்திக்கு சென்றேன். அங்கு படிப்பு தேர்வு என மாறி மாறி நடந்ததால் இம்முறை நானும் ஆனந்தனும் அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நூலகத்தில் பார்த்தால் பேசாமல் பார்வைகள் மட்டுமே பேசின. மைதானத்தில் பார்த்தால் வாய் பேசினாலும் மனம் ஏதோ ஒரு உலகத்தில் லயித்து போனது. நான் எப்போதும் இப்படி இருந்ததில்லை. அவனை பார்க்காத நாள் இருண்டு போக, பார்த்ததும் முழு நிலா ஒளி சிந்தியது. எங்களை அறியாமலே ஒருவர் மேல் மற்றொருவர் உயிரானோம். அப்பா பற்றிய பயமும் அவரது பேச்சின் நயமும் என்னுள் தலை காட்டும் பொழுதெல்லாம் ஆனந்தனின் புன் முறுவல் தட்டி விட்டது.
ஒரு நாள் அப்பா கல்லூரிக்கு வந்தார். நான் அதை எதிர் பார்க்க வில்லை. நானும் ஆனந்தனும் பேசிக் கொண்டிருந்ததை அவரும் எதிர் பார்க்கவில்லை. அப்பாவை பார்த்ததும் ஆனந்தன், "ஆதிரை வரட்டுமா?" என நகர்ந்தான். "யாருமா அந்த பையன்?" என்றார். "என்னோட பிரண்டு தான்பா" என்றேன். "சரிமா நான் வரட்டுமா?" என கூறி சென்றார். எனக்கு அப்பாவை பற்றிய பயம் பற்றிக் கொண்டது. என்ன செய்வாரோ என்ற குழப்பம். பத்து நாட்கள் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நாட்கள் நகர்ந்தது. அப்பாவை பற்றி ஆனந்தனிடம் நிறைய பேசி இருக்கிறேன் என்றாலும் இப்பொது எதோ நடக்க போவதாக தோன்றியது. தேர்வு நாள் நெருங்கி படிப்பில் கவனமாய் இருந்ததால் மற்றவை பற்றி சிந்திக்க நேரம் இல்லை. எங்காவது பார்க்கும் போது ஒருசில வார்த்தைகள் அது கூட மனதில் நெருக்கத்தை ஏற்ப்படுத்தியது. ஆனந்தன் அவனால் எப்படி அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆனால் அழுத்தமாய் அன்பையும் ஈர்ப்பையும் செலுத்தவும் என்னுள் பதிய வைக்கவும் முடிகிறது? எனக்குள்ளே அவனை பற்றி அப்படி ஓர் வியப்பு.
தேர்வு முடியும் நாள், அப்பா அவசரமாய் வந்து அழைத்து சென்றார். காரணம் கேட்ட போது, "வா போகணும் " என்று மட்டுமே சொன்னார். வீடு போய் சேரும் வரை பேசவே இல்லை. தேர்வு முடிந்து வந்தவுடன் தரதரவென இழுத்து வந்தது போல் வந்தார். இடையில் இருமுறை ஏதோ கேட்ட போது கூட வேறு எங்கோ பார்த்தது போல இருந்தார். வீட்டுக்கு போனவுடன் அம்மாவிடம் " என்னமா விவரம் ?" என்ற போது . "ம் ம் ம் ம் உனக்கு மாப்பிள்ளை பாத்திருக்கு நாளை உன்னை பெண் பார்க்க வருவாங்க" என்றாள். " ஏம்மா இவ்வளவு அவசரமா மாப்பிள்ளை பாக்கறிங்க? என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டிங்களா?" என்ற போது அவசரமாய் உள்ளே வந்த அப்பா, "உங்களுக்கு தேவையானதெல்லாம் பார்த்து பார்த்து செஞ்ச எங்களுக்கு உங்க எதிர் காலம் எப்படி அமைக்கணும்னு தெரியாதா? உங்க கிட்ட கேட்டு தான் செய்யணுமோ?' என்றார் யாரோ எதிரியிடம் பேசுவதை போல. "அப்பா என்னோட வாழ்க்கை அது எப்படி இருக்கணும்னு கூட கேட்க்க மாட்டிங்களா? " " இதோ பாரு நாங்க பாக்கிறது தான். எதிர்த்து ஏதாவது செய்யலாம்னு நினைச்சா வெட்டி போடுவேன்" என்ற அப்பாவை பார்த்து, "வெட்டி போட்டா கூட பரவாயில்லப்பா. ஆனா காலமெல்லாம் வேக வச்சிராதீங்கப்பா. என்ன கொஞ்சம் பேச விடுங்கள்" என்றாள் கெஞ்சும் குரலில். "யேய் உன் பொண்ணுகிட்ட சொல்லி வை என்ன மீறி எதுவும் நடக்காது. பெரியவ நாம சொன்னத கேட்கல? இவ மட்டும் என்ன? பெரிய படிப்பு படிச்சிடான்களோ? நாளைக்கு ஆகவேண்டியது பாருங்க" என சொல்லி விட்டு வேகமாய் சென்றார்.
ஆதிரைக்கு அடுத்து என்ன செய்வதென தெரியாமல் குழம்பி போனாள். தலையில் கை வைத்த படி சோகமாய் இருந்தவளை அம்மா கூப்பிட்டார்கள். இவள் போவதற்குள் அவர்களே வந்து, 'என்னடி கப்பலா கவுந்து போச்சு இப்படி உக்காந்துருகியே ? வா சாப்பிட" என அழைத்தார். "அம்மா நான் சொல்றத கொஞ்சம் கேளுங்கம்மா. இப்ப தான் படிச்சி முடிச்சிருக்கேன். ஒரு வேலை பார்த்து அதுக்கு பிறகு' என சொல்லி முடிக்கும் முன், "நீ சம்பாதிச்சு நாங்க ஒண்ணும் சாப்பிட வேணாம். எங்க மானம் மரியாதைய நீ கெடுக்காம நம்மாளுங்க பையனா பார்த்து முடிக்கிறோம் என்றவளிடம். "அம்மா எத வச்சி இப்படியெல்லாம் பண்றிங்க' என்ற போது வெடித்தாள் அம்மா. "உன் கிட்ட கேட்க கூடாதென இருந்தேன். ஏண்டி உன்ன படிக்க வைக்க உன் அப்பா பாடா பட்டார் நீ படிக்கிற இடத்தில ஒரு பையனோட ......... எனக்கு பேசவே அவமானமா இருக்குடி". "அம்மா இதுவே உனக்கு அவமானம்னா. ஒருத்தனோட மனசிலும், இன்னொருத்தனோடு உடம்பாலும் வாழ்வதா?. சொல்லும்மா? " என்ற போது, அம்மாவுக்கு என் பேச்சு சுருக்கென தைத்திருக்க வேண்டும். மேலே பேசவில்லை.
அப்பா அம்மா சுற்றம் சொந்தம் நட்பு என எல்லாமுமாய் ஆனந்தனே என்றாகி ஆண்டு இரண்டு ஓடி விட்டது. அப்பா அம்மா என்னை தலை முழுகிய போது என் சொத்தில் சல்லிகாசு கிடையாது என வீடு தோட்டம் எல்லாவற்றையும் அக்கா பெயருக்கே மாற்றிவிட்டதாக தகவல். ஆனந்தன் , "இவை எல்லாம் கிடைக்காதது பற்றி வருத்தமில்லையா? ஆதிரை" என்று கேட்ட போது, "நீ என்னோடு இருக்க இதுபோதும், எனக்கு இது போதுமே" என பாட்டு பாடி காட்டினாள் . எங்கள் வாழ்க்கை சொர்க்கத்தின் சாயலாக போய் கொண்டிருந்தது.
அம்மா இறந்து விட்டார்கள். துடித்து அங்கே போன எங்களை, துரத்தி அடித்த அப்பாவை மன்னிக்க முடியாத மனதோடு அவமானத்தை சுமந்தவர்களாய் வெளியேறினோம். காலம் யாரையும் எதையும் எதற்கும் கவலை படாமல் வாழ்க்கை தடங்களை மாற்றிப் போட்டுக் கொண்டே போனது. மாற்றத்தின் வேகத்தில் ஒரு செய்தி காதுக்கெட்டியது. அப்பாவுக்கு சுகமில்லை. கையில் காசு இல்லாத மாமனாரை கவனிக்க, மாமாவுக்கு அக்கறையோ, அக்காவுக்கு நேரமோ இல்லை. அப்பா அரசு மருத்துவமனையில் இருப்பதை அறிந்து போய் பார்க்க வேண்டும் என்ற ஆனந்தனின் வற்ப்புறுத்தளோடு சென்ற எங்களை பார்த்து திரும்பி படுத்துக் கொண்டார். எனக்கோ கடும் கோபம். நான் திரும்பி விட்டேன். வீட்டுக்கு வந்த ஆனந்தன், என் மீது கோபப் பட்டார். "பாவம் நோய்வாய் பட்ட மனிதர். நீ இப்படி கோபப் பட்டு வரலாமா? அவர் நம்மேல் காட்டிய உதாசீனம் கூட அவரை பேச விடாமல் தடுத்திருக்கலாம். நானும் இப்போதைக்கு அவரை கவனிக்க வில்லை என்றால் நாம் மற்றவர்களை போல் தானே. நாம் மனிதர்களாக இருப்போம். நொந்து போன அவரை மேலும் குத்திப் பார்க்காமல் ஆறுதலாய் இருப்போம்" என்றார் . ஆனந்தனின் பேச்சை தட்ட முடியாமல் பத்து நாட்களை போய் பார்த்து வந்தோம். எங்களிடம் எதுவுமே பேச வில்லை. எனக்கே சலிப்பு தோன்றி, "நான் நாளை அவரை பார்க்க மாட்டேன்" என வம்பாய் பேசினேன்.
மறுநாள் ஆனந்தனிடம் இருந்து போன் வந்தது. "இன்று மட்டும் வா. நாளையில் இருந்து நாம் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம்" என்றான். அங்கு சென்ற போது அப்பா உயிரற்ற உடலாம் பேசாமலிருந்தார். அவர் கைக்குள் கடிதம் ஒன்று இருந்தது. எடுத்து வாசித்த போது 'மன்னித்து விடு' என்ற சொல் மட்டும் திரும்ப திரும்ப எழுதி இருந்தது. இறுதியாக 'உன் வயிற்றில் குழந்தையாக பிறப்பேன். என்னை அடித்து திருத்தி விடு' என்று முடித்திருந்தார். மருமகனுக்கு என குறிப்பிட்டு 'எவனிடம் மனிதம் உண்டோ அவனே நம்ம ஆளுங்க. நீங்க தான் நம்மாளு' என முடித்திருந்தார். நான் சிந்திய கண்ணீரில் கடிதம் நனைந்திருந்தது.
"நம்மாளுக அவனென்று
சொத்தெல்லாம் எழுதி வச்சேன்
வேத்தாளு நானென
விலக்கியே வச்சானே.
மனித நேயம்
மனதில் கொண்ட
எவனோ அவனே
நமது சொந்த ஆளு.
உறவுகளை
பிரிந்த பின் தான்
சிநேகம் உள்ள
மனதினை அறிந்தேன்.
மகளே உன் வயிற்றில்
மகனாய் பிறந்தால்
மனிதரில் பேதம்
பார்த்த என்னை
அடித்து திருத்தி விடு !!!"
என்றும் அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்

touching story amma...no words to express....
ReplyDeleteDear Preethi!
DeleteThank u for the comments. "no words to express" this line is so powerful.
துன்பம் ஒருவனை தழுவும் போது வீண் கர்வம் அவனை விட்டு நழுவும்.பொதுவாக நம் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து அமைந்த கதைக்கரு அருமை.காதல் என்றாலெ சிவப்பு கொடிதானே பெற்றவர்கள் கையில்.இதில் ஜாதியை இணைத்து கொண்டால் சொல்லவா வேண்டும் அவர்களுக்கு.இனி வரும் காலங்களில் காதல் திருமணம் வெற்றிக் கொண்டால் தான் அடுத்த தலைமுறையினர் கையில் 'காதல் வாழ்க'எனும் படைப்புகளைக் காணலாம்.பிள்ளைகளே பெற்றவர்களின் சொத்துக்கு உரிமைக் கொண்டாடாதீர்.இவ்வுலகைக் காண நமக்கு அவர்கள் வழங்கிய வரத்திற்கு கைம்மாறு கிடையாது.அப்படி இருக்க இருப்பதை சுருட்டிக் கொண்டு ஓடினால் அடுத்த பிறப்பு நமக்கு எப்பிறப்போ??
ReplyDeleteஅன்புள்ள சுஜாதா!
Deleteஉங்களின் விமர்சனத்திற்கு நன்றியும் பாராட்டுக்களும் . உங்களின் ஒவ்வொரு வரியும்
நீங்கள் கதையை ஆழ்ந்து வாசித்ததை தெளிவுபடுத்துகிறது. எதுகை .மோனையுடன்
அழகான வரிகள் ஆச்சரியப்படுத்தின. உங்கள் மனதின் அனல் வரிகளில் தெரிகிறது .
தெளிவான ,அழகான , விமர்சனதிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
Hello Amma,
ReplyDeleteGood Story for this Valentine's Day
If "True Lovers ask question to their parents like our heroine in this story asked(ஒருத்தனோட மனசிலும், இன்னொருத்தனோடு உடம்பாலும் வாழ்வதா? சொல்லும்மா? ) to her mother?" and this question is truthfully answerable by the parents from their HEART, sure they will accept this wonderful GOD's gifted, "LOVE".
My Lovable lines are :
*தூக்கம் என் கண்களை விட்டு வெகு தூரம் கோபித்துக் கொண்டு போனது
*அவனுக்கும் எனக்கும் என்ன பந்தம். தெரியாது. ஆனால் பந்தப்பட வேண்டும் என்று மட்டும் மனம் ஏங்குகிறது
*கேள்வியும் பதிலுமாய் அலைகள் மாறிமாறி அடிக்க அசதியில் உறங்கிப் போனேன்
*ஒவ்வொருத்தியும் தன்னை ரதி என்றும் மேனகை என்றும் எண்ணிக் கொண்டார்கள்
*பேசாமல் பார்வைகள் மட்டுமே பேசின
*பார்க்காத நாள் இருண்டு போக, பார்த்ததும் முழு நிலா ஒளி சிந்தியது
*அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆனால் அழுத்தமாய் அன்பையும் ஈர்ப்பையும் செலுத்தவும் என்னுள் பதிய வைக்கவும் முடிகிறது
*வெட்டி போட்டா கூட பரவாயில்லப்பா, ஆனா காலமெல்லாம் வேக வச்சிராதீங்கப்பா
*ஒருத்தனோட மனசிலும், இன்னொருத்தனோடு உடம்பாலும் வாழ்வதா? சொல்லும்மா?
*நொந்து போன அவரை மேலும் குத்திப் பார்க்காமல் ஆறுதலாய் இருப்போம்
*உன் வயிற்றில் குழந்தையாக பிறப்பேன். என்னை அடித்து திருத்தி விடு
*உறவுகளை பிரிந்த பின் தான் சிநேகம் உள்ள மனதினை அறிந்தேன்
*மகளே உன் வயிற்றில் மகனாய் பிறந்தால் மனிதரில் பேதம் பார்த்த என்னை அடித்து திருத்தி விடு
*எவனிடம் மனிதம் உண்டோ அவனே நம்ம ஆளுங்க, நீங்க தான் நம்மாளு
My rating is 3/5 ***
Happy Valentine's Day to All in Love, here love doesn't mean between boy and girl, it means love between father & son, father & daughter, mother & son, mother & daughter, grand parents & grand children, all family members and to all lovable in this world.
அன்புள்ள பாலாஜி !
ReplyDeleteநீங்கள் கோடிட்டுக் காட்டிய வரிகளுக்கு மிக்க மகிழ்ச்சி . அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும்
வாழ்த்துச்சொல்லும் நாளாக குறிப்பிட்ட தங்களுக்கும் அம்மாவின் வாழ்த்துக்கள். ஐந்து
மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கிறேன் . நன்றியுடன் வாழ்த்துக்கள் .
vanakkam amma...intha aandukaana nekilvaana kathai ....nice maa
ReplyDelete"intha aandukaana nekilvaana kathai " are really nice words from you.
DeleteI expect more comments from you..Thank you da
Super story Periyamma !!!!!!!!!!!!!, 'மன்னித்து விடு', ''உன் வயிற்றில் குழந்தையாக பிறப்பேன். என்னை அடித்து திருத்தி விடு', - very touching lines Periyamma ............
ReplyDeletepushpamamalraj:
DeleteThe lines you have quoted shows how deeply you read this story... intha varusham ungala elarayum paka kadavul chance kuduparunu nenaikara..
Take Care
Dear Aunty,
ReplyDeleteSorry for late comment..Super story..climax is very touching..letter kan kalanga vaikudhu appavin kadaisi varigal..kavithai very nice..thanks aunty..
Revathi
'CHANGE INDEED IS PAINFUL,YET NEEDFUL.'everything changes,we have to face booms and banes in our life.
ReplyDeleteசமுத்திரமாக திகழ்ந்த அன்பான குடும்பத்தில்
ReplyDeleteஎழுந்த காதல் அலையினை
ஜாதியெனும் புயலாக வீசி
அன்பு மகளை வெறுத்து ஒதுக்கிய தந்தைக்கு
அன்பெனும் சமுத்திரத்தை விட்டு ஒதுங்கியது மகள் அல்ல
ஜாதியெனும் பள்ளத்தில் விழுந்தது தான்தான் என்று
காலம் விளங்கவைத்தது.
அம்மா தங்களது கதையின் வரிகள்
தந்தை மகள் உறவினை மிகவும் உணர்வுப்பூர்மாக விளக்குகிறது.
காலம் கடந்த எனது கருத்துக்கு மன்னிக்கவும்...