என்று தணியும் இந்த தீயின் தாகம்?
(புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )
ரயிலில் ஏறியது தொடங்கி அழகான ஆயிரம் கனவுகள். எல்லாமே என்னை ஆனந்தத்தில் தொட்டில் கட்டி தாலாட்டியது. மீண்டும் குட்டி தூக்கம் வாராதா? விட்ட இடத்தில் இருந்து கனாக்கள் தொடராதா? ஏக்கம். என்றாலும் பக்கத்து இருக்கையில் குழந்தையின் அழுகுரலும் , உரக்க பேசும் குரலொலியும் என்னை எழுப்பி விட்டது.இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்தால் ஊர் வந்து விடும். சற்றேறக்குறைய ஐந்து ஆண்டுகள் என் அஞ்ஞான வாசம் முடிவுக்கு வரப் போகிறது.ராணுவத்தில் சேர்ந்ததே என் கோபத்தின் உச்சக் கட்டத்தில் தான். நான் எங்கே இருக்கிறேன் , என்ன செய்கிறேன் என்ற எந்த விவரமும் தெரியாமல் அம்மா தவித்து போயிருப்பார்கள். ஊரில் ஆளுக்கொரு கதை கட்டி இருப்பார்கள். ஆனால் எந்த கட்டுக் கதைக்கும் செவிக்கொடுக்காமல் நான் கட்டாயம் திரும்பி என ஒற்றை காலில் தவமிருக்கும் கொக்கை போல காத்திருந்த ஒரே ஜீவன் என் சுந்தரி மட்டும் தான். 'சுந்தர் என்னை விட்டு உன்னால் போகவே முடியாது. எது வந்தாலும் காத்திருப்பேன்' என எழுதிய கடிதம் எனக்கு கிடைத்த பின் தான் ஊருக்கு வரவேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது. நான்கு ஆண்டுகளாய் மறைத்து வைத்திருந்த என் இடம், சூழ்நிலை எல்லாவற்றையும் விடுமுறையில் சென்ற என் தோழன் சுந்தரியிடம் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் கொடுத்து வந்துள்ளான் என்பது எனக்கு தெரிந்த போது தான் சுந்தரியின் சுருக்கமான கடிதம் மனதில் சுருக்கென குத்தியது.
நானும் அவளும் சேர்ந்து படித்த காலங்கள் நினைத்து பார்க்கும் போது தென்றல் வீசும் நிலாக் காலமாய் தெரிகிறது. கல்லூரி நாட்களை நினைத்தாலே நெஞ்சில் தேனூறும் இளம் உள்ளங்களுக்கு. அப்படி தான் இருந்தோம். கல்லூரி படிப்பு முடியும் வேளை திட்டங்கள் தீட்டினோம் எதிர்கால வாழ்வு குறித்து. ஒரே ஊர் , ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் என்ன பிரச்சனை வரப் போகிறது? நினைத்தது நினைத்த மாதிரி நடக்கும் என எண்ணினோம். ஆனால் அப்போது தான் ஒவ்வொரு மனிதனின் சுய உருவம் தெரிய ஆரம்பித்தது. நல்ல வேலை தேடும் முயற்ச்சியில் நானும் , சுந்தரியும் ஈடுபட்டிருந்த போது தான் எங்களின் மன நிலை ஊருக்கு புரிய தொடங்கியது.
"அதெப்படி? எங்க சாதி பயல, அவ கட்டுறது?" என ஒருவர் வாய் திறக்க பற்றிக் கொண்டது பல பேர் நாவின் நரம்புகளிலும். "ஏன்டா சுந்தரியோட பேசுற ?" என்று அம்மா கேட்ட போது " ஏம்மா? நானும் சுந்தரியும் ஒரே காலேஜில படிச்சோம். மூணு வருசமா பேசிகிட்டு தானே இருக்கோம் . என்ன புதுசா கேக்குற ?" என்ற போது, "டேய் நம்ம சாதி பயலுக ஒரு மாதிரி பேசுறாங்க. நீ அவ கூட பேசுறத நிறுத்திக்கோ" என்றாள் . "அம்மா நீ எவனோ சொல்றத வச்சி பேசாத. இந்த காலத்தில ஜாதி கீதினு பேசறத நிறுத்திக்கோ" என்றான். "டேய் நீ செய்யறது சரி இல்லைட சுந்தர் " என்றாள் கோபமாக. "அம்மா நான் அவளை கட்டிக்கிட்டு வந்து உன் கால்ல விழுந்தா என்னமா செய்வ" என்றான் கோபமாக. " டேய் அப்படி ஒரு நிலைமை வந்தா என்னை தூக்குல தான் பாப்ப" என்றாள் உரக்க கத்திய படி. " ஏம்மா நீ தானே சுந்தரி நல்ல பொண்ணுடானு சொல்லுவ" என்று கேட்டவுடன். "ஆமாண்டா விவரம் தெரியாத நல்ல பொண்ணுன்னு தான் பார்த்தேன். ஆனா அவ விசச் செடியால இருக்கா. உன் மாமன் பொண்ணு உனக்காக காத்துகிட்டு இருக்கா. நீ அப்படி ஏதாச்சும் செஞ்சினா. உன்ன பலி போட்டுருவாண்டா" என்று கொதிப்போடு பேசினாள். மேலும் மேலும் பேச்சு தடித்துக் கொண்டு போகவே விருட்டென வெளியே போனேன்.
எப்பவும் பார்க்கிற இடத்தில் சுந்தரியை பார்க்க போனேன். அவளும் அங்கேயே தான் இருந்தாள். கலகல பேச்சோ, சிரிப்போ இல்லை. "சுந்தர், நீங்க சாபிடல தானே? இதோ இதை சாப்டுங்க" என பொத்தி வைத்திருந்த பலகாரத்தை கொடுத்தாள். "வேண்டாம் சுந்தரி மனசே சரி இல்ல. மூணு வருஷம் நாம நல்லா தானே இருந்தோம். அப்போ யாரும் ஏதும் சொல்லலியே இப்ப மட்டும் எப்படி இப்படி பேசுறாங்க?" "சுந்தர் மனசு சரி இல்லைனாலே உடம்பு ரொம்ப சோர்ந்து போகும். அதோட சாப்பிடாம இருந்தா எப்படி?" என அவள் கொடுத்ததை சாப்பிட்டான். "இப்ப என்ன செய்யலாம் என்ற போது , "முதலில் நல்லா வேலை தேடுங்க , வீணான பேச்சும் , கவலையும் கூட எதிர் காலத்தை பாழாக்கும். மனதில் உறுதியோடு வேலை தேடுங்க. பாவம் உங்க அம்மாவும் எவ்வளவு நாள் பாடு படுவாங்க.? அவங்கள சந்தோஷ படுத்துறதும்,உங்க வேலை தானே? நான் தைரியமா இருக்கேன் என்ன பத்தி கவலை படாதீங்க " என பேசி கொண்டிருக்கும் போதே தங்களை யாரோ கடந்து செல்வதை போல தோன்றவே சுந்தரி திரும்பி பார்த்தாள் . யாரோ இருவர் தாண்டி செல்வது தெரிந்தது. "சரி, சுந்தர் நான் புறப்படுறேன்" என கூறி சென்றாள்.
வீட்டிற்குள் போகும் போதே மாமாவின் சத்தம் உரக்க கேட்டது. என்னை பார்த்ததும் '"இதோ பாருக்கா , உன் பிள்ளை கிட்ட சொல்லி வை. வேலி தாண்டி போனா? என் வெள்ளாட்டை கூட மன்னிக்கறது இல்ல. உன் பிள்ளை கிட்ட மனசுல உரைக்கிற மாதிரி சொல்லி வை. நான் போறேன் " என துண்டை உதறி போட்டு சென்றார். "டேய் மாமா கோவமா போறாண்ட , சொன்னா கேளு. கோவம் வந்தா அவன் கொளுத்திபுடுவான்" என்ற போது , நெஞ்சி நெருப்பாய் எரிந்தது. ஏதும் பேசாமல் பக்கத்தில் கிடந்த பத்திரிக்கையை புரட்டினால் நாளை ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடப்பாதாய் இருந்தது. யாரிடமும் சொல்லாமல் சென்றேன். நான் தகுதி பெற்றதாய் கடிதம் மூலம் தெரியவந்ததும் ஒருவரிடமும் சொல்லி கொள்ளாமல் வண்டி ஏறினேன்.
மளமளவென ஆண்டுகள் ஓடி போனது அங்கே உற்ற தோழனாய் உறவாய் என் உள்ளத்தில் உள்ளதை பகிர்ந்து கொள்ள நான் பெற்ற மகிழ்வையும் சோகத்தையும் அவன் ஒருவன் மட்டுமே அறிவான். அப்படி பட்ட உற்ற நண்பன் நகுலன். என் மனதின் சோகத்தை மகிழ்ச்சியாய் மாற்ற வேண்டும் என்ன வழி ? என எப்போதும் சிந்திக்கும் அவன் மனம் விடுமுறைக்கு வந்த போது , சுந்தரியை சந்தித்து என்னை பற்றி தெரிவித்திருக்கிறான். சுந்தரி ஒரு அலுவலகத்தில் மேலாலராய் பணி ஆற்றுவதையும் என்னிடம் வந்து கூறினான். அவளது பேச்சில் இருந்த உறுதியையும், வெகுவாய் பாராட்டினான். அவனது உந்துதல் காரணமாகவே நான் இப்போது ஊர் செல்கிறேன்.
ஊர் எல்லையில் கால் வைத்ததும் நான் கேட்ட முதல் பேச்சு , "யாரடி இவன் ? மிலிட்டரி காரன் மாதிரி தெரியுது" என என்னை அளந்தார்கள். நான் என் வீட்டை தேடுகிறேன். சிதிலம் அடைந்து சில கூரைகளோடு இருந்தது.வீட்டு தாழ்வாரத்தில் கிழிந்த நாராய் தலையெல்லாம் பஞ்சின் வெண்மையில் ஒரு ஜீவன் முடங்கி இருந்தது. அருகில் அமர்ந்து தலை தொட்டேன் "யாரது?" விழிப்புடன் கேட்ட குரல் , "அம்மா" என்ற வுடன் வாரி சுருட்டி எழுந்து என்னை உற்று பார்த்தது. பேச்சு இல்லை. கண்கள் மட்டும் நீர் சுரந்த படி என்னை தழுவிக் கொண்டது. என் முதுகை தடவி விட்டது. "அம்மா பேசும்மா" என்றேன். பேச்சு வெளிவரவில்லை. மடியில் படுத்துக் கொண்டேன். என் முகத்தில் கண்ணீரின் தூறல் சொட்டியது. என் கண்களும் குளமாயின. துக்கத்தின் உச்ச நிலையும் சந்தோசத்தின் உச்ச நிலையும் மௌனம். யாரோ சொன்னது நெத்திப் பொட்டில் பட்டது. "எவ்ளோ நேரம் இந்த மௌன நிலை? என் அம்மாவுக்கு எதோ சட்டன பிடிபட்டது போல், என் பிள்ளைக்கு பசிக்குமே எந்திரிப்பா ஏதாச்சும் குடிக்க தாரேன்" என்றாள் . "இரும்மா நான் போய் ஏதாச்சும் வாங்கி வரேன்" என்றவனை தடுத்து அடுப்பங்கரைக்கு சென்று , இரு கை அளவு சோறும் தண்ணீருமாய் கொண்டு வருகிராள். 'இந்தாடா, இத குடி", என தந்தவளிடம் இருந்து வாங்கி , குடித்த போது, பழைய தண்ணீர் கூட தேனாய் தித்தித்து. " அம்மா எப்படிம்மா இருக்க?" என்ற போது , "ஏன்டா நீ தான் எங்க இருக்கேன்னு தெரியல ஆனா நீ அனுப்பின பணம் என்னை காப்பாதுதே." ஏம்மா வயக்காட்டில ஏதாச்சும் வர்ரதில்லையா ?" "வயக்காடா ? அதெல்லாம் உன் மாமன் தான் பாத்துகாறான். நீ இல்லாமல் நான் என்ன செய்ய முடியும்? போங்கடான்னு நானும் விட்டுட்டேன். நீ அனுப்புற பணத்துல தான் பொழுது போகுது" என்றவுடன் திடுக்கிட்டு, "என்ன? நான் பணம் அனுப்புறேனா? இதோ பாருடா நேத்து தான் கைநாட்டு போட்டு வாங்கினேன்" சுருக்கு பையில் இருந்த ரசீதை காட்டினாள் . என் பெயரில் நான் அனுப்பியதாய் ரசிது சொன்னது. திக்கு முக்காடி போனேன். "அம்மா கொஞ்சம் பொறு , என் பிரண்டுக்கு ஒரு போன் பண்ணிட்டு வரேன்". நகுலன் கொடுத்த நம்பருக்கு போன் போட்டேன். "ஹலோ" நெஞ்சில் யாரோ தட்டியது போல இருந்தது."சுந்தரி?" என்றேன். அதற்க்கு மேல் இரு பக்கமும் சத்தம் இல்லை. 'நான் உன்னை பார்க்கணும், சரி வாங்க எங்க ஆபீசுக்கு " நறுக்கு தெறித்த பேச்சு. " அம்மா கொஞ்சம் வெளியில் போயிட்டு வாறேன்." பதிலுக்கு காத்திராமல் ஓடினேன்.
ஆபீஸ் வாசலில் நின்ற பியுனிடம் , 'சுந்தரி' என்றதும், 'மேடம் இருக்காங்க சார்'. அவன் கை காட்டிய வழியில் சென்ற போது . N சுந்தரி மேலாளர் பெயர் பலகை என் சுந்தரி இருக்கும் இடம் காட்டியது. 'May I come in ? " மரியாதையான வார்த்தைகளோடு கதவை தள்ளினேன். என்னை கண்டதும் எழுந்து 'வாங்க' என்றாள் . அமர்ந்தேன். இருவரும் பேச சில மணித்துளிகள் கடந்தது. அவள் நிறையே மாறி இருந்தாள் . எளிய உடையிலும் பளிச்சென நீண்ட சுருண்ட முடி கழுத்து வரை வெட்ட பட்டு அழகாக சேர்த்துக் கட்ட பட்டு இருந்தது. அழகு எளிமையிலும் பேரழகானது எப்படி ? அவளும் என்னை பற்றி இப்படிதான் யோசிச்சிருப்பாளோ ? 'எப்படி இருக்கீங்க?' மௌனம் கலைந்தது. 'நீ எப்படிம்மா இருக்கே ? உம் .......' நீங்க சொல்லாம போற அளவுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன் ? ' . ' எதோ என் மன நிலை அப்போ ஏதும் பேச தோனல. '
'சுந்தரி நீ தானே அம்மாக்கு பணம் அனுப்பின? ' . 'இத கேட்டு போக தான் வந்தீங்களா ? உங்க இடத்துல இருந்து நான் செஞ்சேன். நீங்க எப்படி உங்க அம்மாவை மறந்தீங்க? பாவம் பிள்ளையை பிரிஞ்சி சாப்பாட்டுக்கு வழி இல்லாம அவங்க என்ன செய்வாங்க? நீங்க அனுப்பினா தான் அவங்க மனம் ஆறுதலா இருக்கும். அதான் உங்க பேரு போட்டு , பாம்பேல இருக்கிற என் பிரண்ட அனுப்ப சொன்னேன். நாட்டுக்காக ராணுவத்தில் சேர்ந்தது மட்டும் பெருமையா இருக்கு. அம்மா கிட்ட பணம் விஷயம் பத்தி சொல்ல வேணாம். எனக்கு அத்தை மட்டும் தானே அதனால நானும் ஊரை விட்டு வந்து மூணு வருஷம் ஆச்சு. இன்னும் அங்க போகல. நீங்க எவ்வளவு நாள் லீவு'. நிதானமா ஆனா அழுத்தம் குடுத்து பேசினாள் . அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ' சுந்தரி அரை நாள் லீவு போட்டுட்டு வர முடியுமா? நிறைய பேசணும். " உம் ...... '
'போனில் யார் யாருக்கோ வேலை சொல்லி விட்டு 'போகலாமா ?'என்றாள் . அவளது சரளமான ஆங்கிலத்தை கண்டு அசந்து போனேன். இருவரும் வெளியில் வந்தோம். நிறைய பேசினோம் . திருமணத்தை பற்றி பேசிய போது, திருமணம் விரைவில் முடிக்க வேண்டும் என்பதில் நான் இருந்த உறுதி கண்டு வியந்தாள் . நேரம் இன்று ஏனோ ரெக்கை கட்டி பறக்கிறது. நான் வீட்டுக்கும் அவள் விடுதிக்கும் சென்றாள் . வீட்டில் மாமாவின் குரல் கேட்டது. எரிச்சலாக தான் இருந்தது.என்றாலும் வீடு தேடி வந்தவரை 'வாங்க' என்றேன். ' என்னப்பு இப்படி பண்ணிட ? நாங்க தேடாத இடமே இல்லப்பா. சரி நம்ம சாமி புண்ணியத்துல நல்ல படியா இருக்கீக. மிலிடரியில சேர்ந்து நம்ம வம்சத்துக்கும் பெரும சேர்த்துடிக. உங்களூக்காக காத்திருந்த என் பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிட்டேன்'. 'மாமா உங்கள பாத்து பேசணும்னு இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க. நான் கல்யாணம் பண்ணிகலானு இருக்கேன்' . " நல்லா பண்ணுவோம் , பொண்ணு?"
"நான் பார்த்த பொண்ணு தான் மாமா சுந்தரி. அடுத்த முகூர்த்ததுல கல்யாணம். அம்மா நீ என்ன சொல்ற?" . "உன் இஷ்ட படி செய்பா. நீ இல்லாம நான் பட்ட பாடு. சாமி சொல்லி முடியாது. தம்பி உன் பொண்ணுக்கு தான் கல்யாணம் ஆயிருச்சில ? இவன் இஷ்ட பட்ட படி இதையும் முடிச்சு வைப்பா." 'உடனே மாமா இல்ல நம்ம ஊரு........?' ஊரு சொன்னாலும் யாரு சொன்னாலும் என் முடிவு இதான் மாமா . " " சரிப்பா நான் வர்றேன்". எந்த பிரச்சனையும் இல்லாம திருமணம் முடிந்தது. இரண்டு மாத விடுமுறை , பேச்சு, சிரிப்பு சந்தோசம் என வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அள்ளித் தந்தது. நான் சென்ற பின் ஒரு வாரம் அம்மாவுடன் வீட்டிலேயே இருந்து விட்டு அவர்களையும் கூட்டிக் கொண்டு வேலை பார்க்கும் இடத்தில் வீடு பார்த்து போவதாய் ஏற்பாடு. எல்லாரிடமும் விடை பெற்று , பணிக்காக , பனி படர்ந்த மலைக்கு செல்கிறேன். சுந்தரி , அவளின் கரம் பற்றிய நான் ரொம்ப குடுத்து வைத்தவன் என்ற நினைவு எனக்கு பலத்தையும் தெம்பையும் கொடுக்கிறது.
இறைவன் தந்த அத்தனை உயிரிலும் பேரு பெற்றவன் மனிதன் என்றால், நரியின் குணமும் மனித உடலும் கொண்டு அடிமனதில் ஊறி போன சாதி வெறி கொண்டு எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என காத்திருந்த தாய் மாமன் என் பொண்ணு வாழ வேண்டிய இடத்தில் அந்த சாதிக்காரியா? அடி மனதில் எரிந்த நெருப்பு வீட்டின் மேல் விழுந்தது. எரியுது எரியுது அடுத்தடுத்த வீடுகளும் பற்றி எரியுது. ஏ! மானிடமே எந்த நூற்றாண்டில் நீ ''தீ'' ஆகாமலே திருந்துவாய்?
திருந்துவாயா நீ?
மானிடா திருந்து இல்லையேல்
திருத்தபடுவாய்
இந்த வாசகமெல்லாம்
உன் காது கேட்டு மரத்துபோனது
திருந்தும் நிலையில் நீ இல்லை
உன்னை திருத்த யார்
வரவேண்டும் அவதாரமாய்?
அடிமனதில் ஆழமாய் பதிந்து விட்ட
சாதி கல்வெட்டை தூக்கி
எறிய ஏன் தயக்கம்? தணலாய் தகிக்கும்
நெருப்பு வெளியில்
பூவாய் கருகுதே பெண்ணினம்
எப்படி முடியுது உன்னால்?
முற்றும் எரிந்து சாம்பலான பின்
நீ மட்டும் வாழ்வாயா
நடை பிணமாய் ?
என்றும் அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்

Vanakkam amma..Nalla kathai moolam saathi veri pattri soneergal..
ReplyDeleteInum saathiyai kondaadra samugam iruku illa ma..avanga maaranum...
arumaiyana kavithai varigal...palitch..:)
அன்புள்ள தர்ஷினி,
Deleteஎப்போதும் போல் உனது விமர்சனம் கருத்துள்ளதாகவும் சாதி பற்றி சாடியதாகவும் அமைத்துள்ளது கண்டு மனதில் பெரிய திருப்தி. உன்னைப்போல் உள்ளவர்கள் மனம் தெளிவடைந்தால் மட்டுமே எதிர்காலம் சிறப்படையும். வாழ்த்துக்கள்.
By
Pushpamamalraj
நல்ல கதை கரு.இந்த நவீன காலத்திலும் சாதிகள் நடைமுறையில் உண்டு.காதல் திருமணங்களை தவிர்த்து "அவங்க என்ன ஆளு?" என்று கேட்டு தான் திருமணமே நடத்தப்படுகிறது.பிறரின் திறமைகளையும் அவர்களிடம் இருக்கும் நற்பண்புகளையுமே நாம் பார்க்க வேண்டும்.சாதிகள் பேரில் பிறரின் மனதை நாம் புண்படுத்தக் கூடாது.சாதிக் கொள்கையில் மனிதன் தானே மனம் மாற்றம் பெற வேண்டும்.அவனை யாரும் மாற்றிவிட முடியாது.
ReplyDeleteஅன்புள்ள சுஜாதா
Deleteஎழுத்தைக் கண்டதும் மிகவும்
மகிழ்ந்தேன். விமர்சனத்திற்கு நன்றி .
.என்றாலும் மனிதனாக திருந்தாவிட்டால்
மாற்றம் யார் சொன்னாலும் வராது . நாம்
சொல்வதை வளரும் சமுதாயமாவது கேட்கட்டும்.
எந்த ஆளு என்பவரிடம் எல்லாம் நம்ம ஆளு தான்
என்றாவது சொல்லும் நிலை உருவாகட்டும் . உங்கள்
உள்ளக்கருத்துகளை என்றும் எதிர்பார்கிறேன். அன்புள்ள சுஜாதா
By
pushpamamalraj
Periyammma story nalla eruku........
ReplyDeleteRomba thanks da KANNAMMA.!!!!!!!!!!
DeleteBy Pushpamamalraj
Kathai romba nala iruku Periyamma !!!!!!!!!!!!!!!!, Ikkaalathirku thevaiyaana karuthu, Nandri Periyamma !
ReplyDelete
DeleteDEAR SHAFA!
vimersanam pidichirunthathu.meendum santhikkalam. GOD BLESS U.
Hello Madam,
ReplyDelete"ஜாதி" base-story (கதை கரு) is Good, but the way story narrated was not that much effective to feel the "Caste Problems" exist in our society. By reading this story, it reminds me the earlier eighties period of Director Bharathiraja movies (Ex: Mann Vasanai - A man had a problem with his village and head to the Military force and Vedham Pudhithu - A man fights for removal of Caste among village people).
Don't mistake me, this is what came up in my mind.
My Lovable lines:
"ஒற்றை காலில் தவமிருக்கும் கொக்கை போல காத்திருந்த ஒரே ஜீவன்"
"தென்றல் வீசும் நிலாக் காலமாய்"
"வீணான பேச்சும் , கவலையும் கூட எதிர் காலத்தை பாழாக்கும்"
"துக்கத்தின் உச்ச நிலையும் சந்தோசத்தின் உச்ச நிலையும் மௌனம்"
"பழைய தண்ணீர் கூட தேனாய் தித்தித்து"
"அழகு எளிமையிலும் பேரழகானது எப்படி?"
Story is Average, My Rating is 2/5
I heard that this story was written a day before it gets published. May be that would have caused the way of narration little bit down.
உங்கள் விமர்சனம் பார்த்தேன் ,உங்கள் மனதிற்கு பிடிக்காததையும் பிடித்த சில வரிகளையும் அழகாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி .இனி வரும் கதைகளுக்கும் உங்களது கருத்துகளை எழுத வேண்டுகிறேன் .
DeleteAmma described the core concept of social and communal harmony.It is ashamed for humanity considering caste as a qualification for marriage and such thing.what we can do, we are living in such a environment. We don't have adequate awareness about the social problems. This particular problem creates severe unrest in the country.
ReplyDeleteI think this story wrote in right direction and right time. It's Excellent.
அன்புள்ள விஜயன் ,
Deleteபல கதைகளுக்கு பிறகு உங்களின் கருத்துகள் எழுத்துரு பெற்றன .சமுதாய சீர் திருத்த கருத்துகளுக்கு நிகழும் செவி சாய்திருபது நல்லதே .எதிர் கல சமுதாயம் விழிபோடும் வீணான சம்பிரதயங்காளை தவிர்ப்பதும் நல்ல முயற்சியாக உருவாகட்டும் .
Hi aunty,
ReplyDeleteI liked this story very much.. indha kalathulaiyum jadhi pirachanai niraya nadandhutudhan irukudhu.. story read panuradhuku interest ah irundhuchu.. sundar military ponadhunaladhan amma othukitanga ilana mama ponadhan marriage pani irukanum idhu kadhaioda nala turning point.. sundari sundar perula ammaku money anupinadhulam remba nala character.. innum varum kaladhulaiyavadhu jadhi pirachanai varama irukanum nu kadavulai vendikuran.. kavithai remba unairchikarama irundhuchu.. super aunty :)
Revathi Durairaj :)
அன்புள்ள ரேவதி,
Deleteபாரதி சொல்லியும், பாரதிராஜா படமாக எடுத்தும் கூட சமுதாயத்தில் இன்னும் ஏனோ விழிப்புணர்வு வரவில்லை அவ்வபோது நாமும் சமுதாய விழிபுனர்வுக்கு எதாவது எழுதும்போது தான் இனி வரும் தலைமுறையாவது ஜாதியை மறக்கும் என நம்புவோம் .உங்களை போன்ற இளைய சமுதாயம் இது பற்றி சிந்திக்கட்டும் ,உங்களின் கருத்துகளை வரும் கதைகளிலும் எழுதுவீர்களென நம்புகிறேன் .
Very nice story amma. "ஒற்றை காலில் தவமிருக்கும் கொக்கை போல காத்திருந்த ஒரே ஜீவன்", "வீணான பேச்சும் , கவலையும் கூட எதிர் காலத்தை பாழாக்கும்" intha rendu varigalum enakku rompa pidichithu ma. Nalla thevaiyaana story :)
ReplyDeleteஅன்புள்ள ப்ரீத்தி !
ReplyDeleteஉனக்கு பிடித்த அந்த இரண்டு வரிகளும் எனக்கும் பிடிக்கும் '. உன் படிப்புக்கும் 1வேலைகளுக்.கும் இடையில் விமர்சனம் எழுதியதற்கு நன்றி .
மீண்டும் எழுத்துக்கலோடு சந்திக்கலாம். அதுவரை வாழ்த்துக்களுடன் அம்மா .
அன்புள்ள அம்மா,
ReplyDeleteசாதி வெறியர்களின் மீதான தங்களின்கோபத்தினையும்,
சகோதரத்துவமான சமுதாயத்திற்கான ஏக்கத்தினையும்
தீப்பிலம்பான கவிதை வரிகள் நன்கு காட்டுகின்றது.
கண்டிப்பாக இக்கதையின் கரு
பாபுதான் தங்களுக்கு அளித்திருப்பான்
ஏனென்றால்
முன்பெல்லாம் பாபுவின் ஊரிலும், எனது ஊரிலும்
சாதிகலவரங்களின் நடைபெற்றது.
அதிலும் பாபுவின் ஊரில்தான் மிகவும் கொடுமையாக இருந்தது.
தற்போது காலத்தின் மாற்றத்தினால் சற்று குறைந்துள்ளது.
அனைவரும் கல்வியறிவு பெறுவதில்தான்
சாதிபிரச்சினைகள் நீங்கும்.
எனது கருத்தினை தெரிவிக்க வாய்ப்பளித்த
தங்களுக்கும், பாபுவிற்கும் எனது நன்றி!
pushpamamalraj:
Deleteஎங்கே ராஜிவை காணோமே என தேடிய மனம் எழுத்தைக் கண்டதும் நிம்மதி ஆனது.
சாதி என்ற பிரச்சனை எங்கள் ஊர் உங்கள் ஊர் , என்று பாகுபாடு இல்லாமல் நீக்கமற
எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது . அதனால் ஏற்படும் வன்முறைகள் மறையவேண்டும்.
அப்போதுதான் நாம் நாகரீகம் அடைந்தவர்கள் . அந்த நாகரீகம் அடையும் வரை நாம்
பின்தங்கியவர்கள் தான் .. அருமையான விமர்சனத்திற்கு பாராட்டுக்கள் .
என்றும் அன்புடன் அம்மா .
ராஜீவ் அண்ணா , உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி. எப்போதும் மகிழ்ச்சியாய் எதிர் பார்ப்பேன் உங்கள் கருத்துக்களை.
Deleteஅம்மாவும் பிள்ளையும் ஒரே மாதிரியான எண்ணங்களை உள்ளவர்களாக இருக்கலாமே. நான் இந்த கதைக்கான கருத்தை சொல்லவில்லை. ஆனால் எனக்கும் இதே போன்ற எண்ணங்கள் உண்டு. அதை நீங்களும் அறிந்திருப்பது பெரும் மகிழ்ச்சி :)