Pages

Sunday, 4 November 2012

காடெல்லாம் பூத்திருக்கு (31)

தீபாவளி வாழ்த்துக்கள் 
(புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )


               நெடுநேரமாய் என் செல் போன் ஒலித்துக் கொண்டிருந்தது. வேலையாய் இருந்த நான் வந்து எடுத்த போது எதிர்முனையில் இருந்து, "பெரியம்மா பாபு பேசுறேன். கதை எழுதிட்டீங்களா? " என்றான் பாபு. "எனக்கு கதை எழுத முடியல பாபு. மனசே சரி இல்ல" என்ற உடன் "பெரியம்மா நான் நாளைக்கு வரேன். நீங்க கதை எழுதி வச்சிருக்கீங்க" என்றான். அவனது அன்பான கட்டளைக்கு பணிந்த நான், 'ஈரம் இருக்கும் இடத்தில் பசுமையும் தாய்மையும் ஜெயிக்குமே' என்ற முதல் கதையை ஆரம்பித்தேன். அவன் போட்ட பிள்ளையார் சுழி இன்று காடெல்லாம் பூத்திருக்கு. அதுமட்டும் அல்ல ஏறத்தாள எட்டாயிரம் பேர் இக்காட்டுக்குள் வலம் வந்து, வாசம் நுகர்ந்து, சுற்றிப் பார்த்து, சுகம் கண்டு, மனதில் பட்டதை மறைக்காமல் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். பாபு காணும் கனவுகள் நனைவாக, மகிழ்வு தர, தீபாவளி திருநாளில் வண்ணமிகு வாழ்த்துக்கள். 

              விஜயன், இலட்சியக் கனவுகளை கண்ணில் தேக்கி தட களங்களை தாண்டிக் கொண்டே நேர் பாதையில் நடப்பவன். லட்சிய கனவுகள் முயற்சியோடு இருப்பதால் நிச்சயம் நனவாகும் என்ற நம்பிக்கையோடு தீப ஒளி திருநாளில் வாழ்த்துக்கள். 

              செல்ல கண்ணம்மாஅடுத்த ஆண்டு உன் தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வந்துகிட்டு இருக்காரும்மா. வாழ்த்துக்கள்.

              ஷபா, உன் வசந்த வாயிலில் வாழ்த்து தோரணங்கள் எல்லாம் என் வாழ்த்துக்களால்  நிறைவுரட்டும்.

              தர்சினி, வாழ்வின் வளங்களை எல்லாம் பெற வேண்டி இந்த அம்மாவின் தீப திருநாள் வாழ்த்துக்கள் டா . 

                 சரியான கருத்தை சரியான நேரத்தில் எடுத்து சொல்லும் சுஜாதா. தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

     தலை தீபாவளிக்கு தம்பதியராய் அன்னை இல்லம் செல்லும் அர்ச்சனா. அம்மாவின் தீப ஒளி  திருநாள் வாழ்த்துகளும் உன்னோடு.

                 அழகான கனவுகளோடு படிப்பை தொடரும் அன்பான ப்ரீத்திக்கு அம்மாவின் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

                  ரேவதி, அனிதா எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழ தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
                 மனதுக்கு பிடிக்காததை பட்டென சொல்லும் பாலாஜி உங்களின் வெளிப்படையான கருத்துக்கள் . மதிப்பெண் இடும் பாங்கு அத்தனையும் பிடிக்கும் . சர்ரென பாய்ந்து வண்ண பொறி பறக்கும் தீப ஒளி திருநாளின் நல வாழ்த்துக்கள்.


                  பெரிய அரசியல் தலைவரின் பெயர் கொண்டு உயர்வான எண்ணங்களையும்  , கருத்துக் களையும் கொண்ட மகன் ராஜீவ் காந்திக்கு எல்லா வளமும் நலமும் பெற்று வாழ ஆசியுடன் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

                 எந்த ஊர் , என்ன பெயர் யாரென தெரியாமலே பூக்கள் பூத்த காட்டுக்குள் வந்து நல்லதையும் சுகங்களையும் பெற்று , தன் கருத்தை தவறாமல் தரும் மாயாவி (அனானிமஸ்) மகள்/மகன் விரும்புவதெல்லாம் இறைவன் அள்ளித் தரவேண்டுமென்ற பிரார்த்தனையுடன் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

               என்னை ஊக்க படுத்த கதை களத்திற்குள் வந்து வாசித்து செல்லும் அத்தனை வாசகர்களுக்கும் வளமான வாழ்வும்-வளர்ச்சியும்-செல்வமும்-சிறப்பும்-நல்லவையாய் நினைக்கும் அத்தனையும்  இறைவன் அருள வேண்டி தீப ஒளி  திருநாளின் வாழ்த்துக்களை சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன். 

என்றும் அன்புடன்
                                                                                                                                புஷ்பம் அமல்ராஜ்



11



8 comments:

  1. periyammmma thanq so much.........unga chella kannama vu ku varaea diwali yea thala diwali dha..........thanx for ur blessing and ur blessed words.........

    ReplyDelete
  2. Thanks You very much Madam, wishing You and Our Family (All the Readers)- HAPPY DEEPAVALI:):):)

    ReplyDelete
  3. அன்புள்ள அம்மா,
    அனைவரையும் பாசத்தோடு அரவணைக்கும் தங்களுக்கும்,
    பாபு மற்றும் அனைத்து வாசகர்ளுக்கும்
    எனது இனிய தீபாவளி நல்வாழ்க்கள்!

    ReplyDelete
  4. Hi Aunty,,
    Thank u verymuch for your wish..i opened this 31st blog as story aunty..
    diwali wish pathavodana santhosama agiduchu aunty..
    Happy Diwali to u also aunty..

    Revathi Durairaj :)

    ReplyDelete
  5. Happy Deepavali to all the Beautiful flowers in this garden..Special wishes to you maa and to Babu sir..

    ReplyDelete
  6. Happy Deepavali Amma to you and Babu too....
    Be happy always..

    ReplyDelete
  7. Thankyou so much amma....happy diwali..:)

    ReplyDelete
  8. Very nice of you. Remembering the anonymous on the festival time. Thanks for your blessing. Wishing every one a Very happy diwali and joyous holiday season.

    ReplyDelete