Pages

Saturday, 27 October 2012

காடெல்லாம் பூத்திருக்கு (30)



வெற்றியால் பெற்றது தோல்வி!
(புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )


                 "கமலி என்ன கிளம்பிட்டியா ? என்னடி புறப்பட இவ்வளவு நேரமா? சீக்கிரம் ரெடி ஆகு. நான் போய் சுகுணா ரோசி எல்லாம் கிளம்பிட்டாங்கலானு பாத்துட்டு வாரேன் . நீ வெளில வந்து நில்லு". அவசரமாய் ஆர்த்தி வெளியே போனாள். நானும் தயாரித்து வைத்திருந்த குறிப்புகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, வாயிலை பூட்டி விட்டு வெளியில் வருவதற்கும், தோழிகள் என்னை நெருங்கி வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. "நல்லா ப்ரிபேர் பண்ணிட்டியா?" கேள்வி முடிவதற்குள் எல்லாரும் தலையை ஆட்டினார்கள் . "ஏய் எப்படியாது கலர் டிவிய பரிசாய் பெற்று விட வேணும் என ஆர்த்தி அடம் பிடிக்கிறாடி. அப்படியா?அவளுக்கு தான் தலைப்பே பிடிக்கலேன்னுன்னாளே.? அப்படி தான் சொன்னாள் . ஆனா அவள் எப்பவும் வீட்டில் பாக்கிற பையன தான் திருமணம் செய்வேன். இந்த காதல்ல நம்பிக்கை இல்லன்னு வாதாடுவாள். லவ் பண்றவங்கள பாத்துட்டா அவள போல கலாய்க்க முடியாதே. அப்படி பட்டவ எப்படி லவ் மேரேஜ் தான் சிறந்தது என வாதாட போறா ?" என்றாள் கமலி .

                 "நமக்கு பிடிக்காதத பத்தியும் பேசி ஜெயிக்க முடியும் என நிருபித்து பரிசு பெறுவது தானே திறமை இருக்கு. அதனால தான் காதல் திருமணமே சிறந்தது என ஆணித்தனமாக பேசி அந்த டிவிய தட்டிக் கொண்டு வர போறேன்" சவாலாய் பேசினாள் ஆர்த்தி. தொலைக்காட்சியில் மிக முக்கியமான சானலில் ஒளிபரப்பாகும் டாக் ஷோ அது. பல கல்லூரிகளில் இருந்தும் வெளியில்  இருந்தும் வந்த போட்டியாளர்கள் இரு அணிகளில் இருந்தார்கள்.காதல் திருமணம் என்ற பகுதியில் முதல் வரிசையில் மிக அழகாக அமர்ந்திருந்தாள். எதிர் அணியில் இரு பையன்கள் கிசுகிசுத்தார்கள். "டே மச்சான் , பஸ்ட்டு ரோ மூனாவுது செமடா. இவள லவ் பண்றவன் ரொம்ப குடுத்து வச்சவன் டா . பேசாம நான் அந்த பக்கம் போகட்டுமாடா? டே அடங்குடா."

              நிகழ்ச்சி ஆரம்பம் ஆக, அமைதியின் நடுவே ஒருவர் மட்டும் பேச ஆரம்பித்தார். இரு அணியிலும் பேச்சு சூடு பிடித்தது.ஆர்த்தியின் பேச்சு தெளிவுடன் காதலின் ஆழத்தை - அதை பெற்றவரின் செயல்களை - அவர்களுக்குள் உள்ள ஒற்றுமையை என ஒவ்வொன்றுக்கும் சரியான புள்ளி விவரத்தை கொடுத்து காதல் திருமணமே சரியென அங்கிருந்தவர்கள் முழு மனதோடு ஆமோதிக்க செய்தது.சுற்றி சுற்றி மைக் அவள் கைக்கே வந்தது. இறுதிகட்ட வேளை வந்தது. "நம் நிகழ்ச்சியின் பரிசு கொடுக்கும் நேரமிது உங்கள் அனைவருக்குமே தெரியும் யார் இந்த பரிசு பெற போகிறார்கள் என்பது. வாங்க ஆர்த்தி. உங்களுக்கு தான் இந்த அழகான டிவி பரிசாக கிடைக்கிறது" என்றார். சபையோரின் ஓ என்ற கரகோசத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அவளை சுற்றி ரசிகர் கூட்டம். துடுக்கான ஒருவன் "ஏங்க அவர் யாருங்க? இங்க வந்திருகாருல? காட்டுங்க அவர" பல கேள்விகள் மவுனம் மட்டுமே பதிலாகவும், புன் முறுவல் சிலருக்கு விடையாக கிடைத்தது. ஆர்த்தியின் தோழிகள் அவளை தோளில் தூக்காத குறையாக வெற்றிக் களிப்பில் மிதந்தார்கள். 

               தன் முன்னால் புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டிருந்த ஆர்த்திக்கு இவை அனைத்தும் டிவி யில் பார்ப்பதை போல தெளிவாக கண் முன்னே தோன்றியது. துள்ளித் திரிந்த கல்லூரி பருவத்தில் சில செயல்களை துணிச்சலாகத் தான் செய்கிறோம். அப்போது பெறுகின்ற வெற்றி பெரிதாய் தெரிகின்றது. ஆனால் சில வேளை காலம் வெற்றியை தோல்வியாக மாற்றி காட்டுகிறது. என் வாழ்விலும் தோல்வியாகவே மாற்றிக் காட்டியது. 

                 கல்லூரி படிப்பை முடித்து நல்ல கம்பனியில் வேலையில் சேர்ந்து இரு ஆண்டுகள் கடந்த போது என்னை பெண் பார்க்க வசதியான வேல்நாட்டில் வேலையில் இருக்கும் ஆனந்தன் குடும்பம் வந்தார்கள். இரு வருடங்களாய் தேடி அப்பா கண்டு பிடித்த அழகான மாப்பிள்ளை இரு வீட்டிலும் சம்பிரதாயங்கள் பேசி முடித்து திருமணம் தீர்மானித்தார்கள். என்னிடம் சிலமணித்துளிகள் பேசினார். நல்ல குணமுள்ள சாதுவான மாப்பிள்ளை கிடைத்ததாக மகிழ்ந்து போனேன். தினம் ஒரு முறை எனது செல்லில் பேசுவார். அளவு மீறாத, அன்பான பேச்சு என் வருங்காலம் பல வண்ணங்களோடு வானவில்லாய் தெரிந்தது.

               இருவரும் திருமணம் ஆகி, அவர் வேலையில் இருந்த வெளி நாடு வந்தோம். நாங்கள் வந்து இரு தினங்கள் மட்டுமே சென்றது. தமிழ் தொலைக்காட்சியை போட்டு சாப்பிட்டு கொண்டே பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது டாக் ஷோ நிகழ்ச்சி மறு ஒளிபரப்பாகிறது என்ற தொடக்கத்துடன் காதல் திருமணமா? வீட்டில் பார்த்து வைக்கும் திருமணமா? தொடங்க விருந்தது நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர் " ஏய் அதோ நீ இருக்க பாரு, நீ டிவி ஷோ பண்ணதாக சொல்லவே இல்லையே." என ஆர்வமாக நிமிர்ந்து உக்கார்ந்து பார்க்க ஆரம்பித்தார். ஷோ நடத்துபவரின் கேள்விகளுக்கு நான் சொன்ன அழுத்தமான பதிலை கேட்டு கொண்டிருந்தார். என்னவரின் முகத்தில் பல மாறுதல்கள். ஷோ முடிவதற்குள் கை கழுவி எழுந்து சென்றார். நான் முழுவதும் பார்த்து முடித்து போன போது லைட் ஏதும் போடாமல் படுத்திருந்தார் . நான் சென்று பேசிய போது , "தலை வலி தூங்க போகிறேன்" என்ற பதில் மட்டுமே வந்தது. டிவி ஷோ வை மறுபடி பார்த்த போது தான் அதிகம் பேசி விட்டோமோ? என எனக்கே தோன்றியது . ஒரு வேலை தலைவலியின் காரணம் இதுவாக  இருக்குமோ என பொறி தட்டியது. 

                 மறுநாள் அதிகாலை எழுந்து வந்தவர், 'யார் அந்த பையன் என்றார்?'. நானும் யாரு என திருப்பிக் கேட்டேன்? உன் லவ்வர் என்றார் . தூக்கி வாரிப் போட்டது. ஏங்க நான் ஜெயிக்கவேண்டுமென்ற தீர்மானத்தோடு, கற்பனையாக பேசியதுதான் எல்லாம்" என்றேன். "நீ உயிராய் நேசிக்காத யாரை பற்றியும் இப்படி தெளிவாய் நிதர்சனமாய் பேச முடியாது. இந்த நிகழ்ச்சியை முன்னாடியே பாத்திருந்தால் நம்ம கல்யாணம் நடந்தே இருக்காது. நீ என்னிடம் உண்மையை சொல்லாத வரை இனி உன்னோடு எனக்கு பேச்சு இல்லை என்றார்.

              வருடங்கள் ஐந்து கரைந்து கொண்டிருந்தது. அவரிடம் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. எத்தனையோ நாட்கள் அழுது அவரிடம் வாதிட்டேன் . பலன் இல்லை. ஒரே வீட்டில் இரு தனி தனி தீவுகளாய் ....... இந்த இடைவெளியை நானும் எனது தனிமையை போக்க வேலை ஒன்றை தேடிக் கொண்டேன். அடைபட்ட வீட்டுக்குள் இல்லாமல் அடைபட்ட அலுவலகத்தில் பாதி பொழுது போனது. நண்பர்கள் தெரிந்த இந்தியர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்கள் முன் அன்யோனிய தம்பதிகளாய் நடிக்க கற்றுக் கொண்டோம். அப்போது அவருடைய சின்ன சிரிப்பு தொடுதல், பேச்சு இவை இப்படியே நிலைக்காதா? ஏக்கம். அந்த சிறு பொழுது உணர்வுகள் மறுபடி கதவு அடைக்க படும் போது வற்றி போகும். கண்களில் நீர் ஒழுகிய தடம் கன்னத்தில் பதிந்து விட்டது. எப்படியோ வாழ்கிறோம் சாகாமலே. அவருக்கு மட்டும் வலி இல்லாமலா இருக்கும். கீதையில் சொன்னது போல இதுவும் கூட கடந்து போக வேண்டும் என வேண்டிக் கொள்வேன் 

          காலை கண் விழிக்கும்  போது தொலைபேசி நீண்ட இடைவெளி விட்டு விட்டு கேட்டது. 
இது இந்திய கால் என்று எனக்கு தெரியும் . அவர் தான் போனை எடுத்தார். நான் ஏதோ வேலையாக இருந்தேன். எடுத்த வுடனே ஜஸ்ட் எ மினட் என போனை கீழே வைத்தார். அப்படி என்றால் இது எனக்காக வந்த போன் கால் என அர்த்தம். எடுத்து பேசிய எனக்கு இன்ப அதிர்ச்சி. கமலி என் உற்ற சிநேகிதி தான் பேசினாள். நாங்கள் இருக்கும் இடத்தில் தான் அவளுக்கும் வேலை கிடைத்திருப்பதாக நாளை வருவதாகவும் கூறினாள். என்னால் தாங்க முடியாத சந்தோசம். 

                   நான் தான் விமான நிலையம் சென்று அழைத்து வந்தேன். எங்களை பற்றிய எதையும் அவளிடம் சொல்ல வில்லை. வீட்டுக்கு வந்த போது அவரும் எதையும் காட்டிக் கொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தார். சாப்பாடெல்லாம் முடிந்தது நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தோம். நண்பர்கள் ஊர் விஷயம் என எல்லாம் முடித்த பின் "ஆர்த்தி , ஐந்து வருட தாம்பத்தியத்தின் அடையாளம் எங்கே? மறுபடி மறுபடி கேட்ட போது அவள் மடியில் படுத்து அழுது கொட்டித் தீர்த்தேன். அதே அழுகையோடு நான் சொன்ன விசயங்களை எல்லாம் கேட்டு அதிர்ந்து போன அவள் அடி பாவி நீ எத்தனை பேருக்கு அப்பா அம்மாக்கு தெரியாமல் காதலிப்பது, அதனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எல்லாம் சொல்லி திருத்தி இருக்கே. இந்த டிவி நிகழ்ச்சி ஜாலிக்காக பிடிக்காததையும் பேசி பரிசு பெற வேண்டும் என நீ எடுத்த முடிவு வாழ்க்கை பிரச்சனை ஆகி குடும்பத்தை பிரிக்கும் என தெரியாதே. நான் அப்படி ஒரு சமயம் தகுதி இல்லா காதலில் விழுந்த போது எனக்கு தெரியாமல் என் டைரியில் நீ எழுதிய வரிகள் என்னை ஒரு பள்ளத்தில் இருந்து மீட்டது. அதே போல டிவி ஷோ பற்றி எழுதிய போது பிடிக்காததை பிடிப்பதாய் வாதாடி பெற்ற பரிசு என்று எழுதிய அந்த வரிகளும் எனது டைரியில் உள்ளது. டைரியை எடுத்து வந்திருக்கிறேன். நாளை அவரிடம் அதை காட்டி சொல்லலாம் . நான் இருக்கும் போதே இந்த மாற்றத்தை மாற்றலாம்" என்றாள். மணி ஆனதே தெரியாமல் உறங்கி போனோம். 

                   திடுக்கிட்டு எழுந்த நான் சமையல் அறை சென்ற போது காபி கப்போடு நின்றவர், "ஆர்த்தி எடுத்துக்கோ" என்றார். சிலையாய் நின்ற என்னை தட்டி, "காபி எடு" என்ற போது , என் கண்ணில் கொட்டிய நீரை துடைத்து, "நீ நிறைய அழுதுட்ட ஆர்த்தி" என்றவர் என்னை அனைத்துக் கொண்டார். "எப்படி என வியக்காதே. நீ உறங்கிய பின் கமலி என்னிடம் வந்து நிறைய பேசினார்கள். டைரியில் நீ எழுதிய வரிகளை காட்டினார்கள் என் மடமையின் தலையை தட்டினார்கள். சற்று முன் தான் படுக்க சென்றார்கள்" என தலை திருப்பிய போது கமலி அவளுக்கே உரிய முறுவலுடன் நின்றிருந்தாள். அவளை கட்டிப் பிடித்தேன். ஏதும் பேச வில்லை. "கவலையோடு இருப்பவர்களை எல்லாம் பார்த்து ஆர்த்தி நீ இதுவும் கடந்து போகும் என்பாய். நீங்கள் ஒன்று சேர்ந்த இந்த நிலை கடந்து போகாமல் இப்படியே இருக்கட்டும்" என வாழ்த்திய கமலியை மீண்டும் ஒரு முறை கட்டிப் பிடித்தேன்.


மகிழ்ச்சியோடு மகராசியாய்!........

"பெண்ணே ! 
எடுக்கவோ, கோர்க்கவோ 
துரியோதனன், கர்ணன் 
வாழ்ந்த காலம் இல்லை கண்ணே !!"

விவேகம் உன் வார்த்தைகளில் 
தெளிவு உன் நெஞ்சில் 
பின் விளைவை பிரித்தரித்தல் 
பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்த்தல் 
எல்லாம் கலந்த கலவை நீ 

உன் அம்மா மடமைக்கோ 
பேச்சு சுதந்திரத்திர்க்கோ 
எதிரி இல்லை என்றாலும் 
மகள் மகுடம் சூட்டி 
மகிழ்ச்சியாய் மகராசியாய் 
வாழ வேண்டும் என்ற 
ஆதங்கம் மட்டுமே என்னுள் உண்டு 
                                                                                        என்றும் அன்புடன்
                                                                                        புஷ்பம் அமல்ராஜ்

















13 comments:

  1. vanakkam amma..story romba romba romba superb...loved it..etharthamaana katha..its happenin nowadays inbetween Husband n wife. enakum romba pudichirukum amma..

    ReplyDelete
    Replies
    1. etharthamana vaalkaiyum kathaium ellorukkum pidikkum athanalthan ethumathiri kathai elluthukiraan nandri Dharshini.

      Delete
  2. Very nice story. Realistic. I liked it very much

    ReplyDelete
    Replies
    1. Thanks to your comment.Keep to read "Kaadellam pooththirukku".

      Delete
  3. periyammmma.......nice to read dis story.............romba practical ana kadhaiya eruku.......five year girls patience makes to live her life for more than 500 years.......NICE STORY..........

    ReplyDelete
    Replies
    1. thank u suganya. keep write your comments regularly

      Delete
  4. Hello Madam,
    Very Good Story, you have nicely narrated it.
    My Lovable lines are
    - ஒரே வீட்டில் இரு தனி தனி தீவுகளாய் ...
    - "ஆர்த்தி , ஐந்து வருட தாம்பத்தியத்தின் அடையாளம் எங்கே?
    - "கவலையோடு இருப்பவர்களை எல்லாம் பார்த்து ஆர்த்தி நீ இதுவும் கடந்து போகும் என்பாய். நீங்கள் ஒன்று சேர்ந்த இந்த நிலை கடந்து போகாமல் இப்படியே இருக்கட்டும்"
    - "பெண்ணே ! எடுக்கவோ, கோர்க்கவோ, துரியோதனன், கர்ணன் வாழ்ந்த காலம் இல்லை கண்ணே !!"
    My rating is 4/5 ****
    (Reason for not giving 5/5 is "டைரியை எடுத்து வந்திருக்கிறேன்", it was happened 5yrs ago and still she is having her diary and also she brought it along with her. Here the logic, slightly missing)

    ReplyDelete
    Replies
    1. பாலாஜி


      உங்களின் விமர்சனத்தை கண்டதும் எழாம் வகுப்பு "சி." பிரிவு மாணவி போல
      என் வயதையும் மறந்து துள்ளிக்குதிக்க வேண்டும் போல் இருந்தது .நீங்கள் கோடிட்டு

      காட்டிய அததனை வரிகளுக்கும் நன்றி . இடையில் வீட்டுப் போன வரிகள் சில இங்கே

      " நான் இங்க வருவதற்காக சில புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தபோது கல்லுரி
      நாட்களில் எல்லோரும் எழுதிய டைரி கிடைத்தது" . வாசித்து பார்த்தபோது சிரிப்பாகவும்

      வியப்பாகவும் இருந்தது . அதனால் அந்த டைரியும் எடுத்து வந்திருக்கிறேன்".என்றாள்
      இப்போது கதை கோர்வையகிவிடாத கோர்வையாகிவிடடதா .

      Delete
  5. நெருப்பென்றால் சுடவாபோகிறது
    என்று எண்ணிய பேதைக்கு அது
    அவள் வாழ்க்கையையே எரித்துநின்றது...

    கண்ணிற்கு பொய்யான மையிட்டாள்
    ஆனால் அந்த மை தன் வாழ்க்கையில்
    கண்ணீர் சிந்த வைத்துவிட்டது.

    "மனதோடு பெறும் வெற்றியே
    என்றென்றும் பெருமைப்படவைக்கும்"
    என்பதை தங்கள் கதையின் மூலம்
    நன்கு விளங்குகிறது அம்மா.





    ReplyDelete
    Replies
    1. ஐந்து வருடங்கள் இருவருமே நெருப்பில் வெந்து போயிருந்தாலும்

      ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்த அந்த நாட்கள் சிறப்பு .

      அல்லவா .சிறு தடங்களுக்கெல்லாம் கூட ஊரைக் கூட்டி உயிரை

      விடும் ` பலருக்கு முன் இவர்கள் பொறுமைகூட சிறப்பானதே!!!!!!!!!!!!

      உங்களின் . விமர்சனம் சிறப்பிலும் சிறப்பே .

      Delete
  6. Hi aunty,
    Very nice and different story…I liked this story verymuch aunty…
    Neeraya peruku marriage lifela problem varum,ana indha visayadhunala problem vandhuchuna remba pavam andha ponu…konjam andha husband wife soluradhuketa yosichu nadandhurukalam….kadaisila andha problem mudivuku vandhadhu santhosam dhan..
    kavithai is super…

    Revathi Durairaj :)

    ReplyDelete
  7. உங்களுடைய விமர்சனம் எனக்கு உணர்த்தியது

    கதையில் கூட எல்லோரும் சந்தோசமா இருக்கணும் .

    இந்த நல்ல குணம் உங்களை எப்பவும் சந்தோசமா

    இருக்க வைக்கும் . ஆசிகளுடன்

    ReplyDelete