சித்திரமாய் நீ இருக்க, சிதையாமல் காத்திருந்தேன்....!!!
(புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )
"மணி, ரொம்ப நேரம் ஆச்சா? கொஞ்சம் வேலை அதிகமா இருந்துச்சு. சாரி'. நான்தான் சாரி கேட்டேன்ல. இன்னும் மூஞ்ச தூக்கி வச்சிருந்தா? என்ன அர்த்தம்".
இதோட ஆயிரம் தடவ இதையே நீ சொல்லிட்ட. பிறகும் இததானே செய்ய போற. சரி அத விடு. நமக்குள்ள இது பழகி போயிருச்சு. வேற என்ன விசேசம்? சொல்லு."
"இந்தா இது தான் விஷேசம்" என அழகாய் பேக் செய்யப் பட்ட பாக்ஸை கொடுத்தாள் . பிரித்து பார்த்தபோது லட்டு. "எங்க ஆபிசுல தீபாவளிக்காக கொடுத்தாங்க. சாப்பிடு உன் கோபம் கொஞ்சம் தணியட்டும்" என்றாள். "நாம சந்திக்கிற கொஞ்ச நேரத்துல சண்டையா போட முடியும்?" என்றாள். "யேய் மணி, சின்ன சண்டை கூட நினச்சி பார்க்கும் போது மகிழ்ச்சியா தானே இருக்கும். நாளைக்கு கண்டிப்பா சீக்கிரம் வந்துருவேன். இப்போ நேரம் ஆச்சி நான் வரட்டுமா?" என கிளம்பினாள். அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மணிக்கு எத்தனை தடைகள், தடங்கல் இருந்தாலும் தன்னை வந்து பார்க்கும் பெண்ணை எண்ணும் போதே மனதுக்குள் மத்தாப்பு வண்ணமாய் சிரிக்கிறது. பேருந்தில் ஏறிய மேகலைக்கோ சிறிது நேர சந்திப்பு தான் என்றாலும் கனவுகளின் தேர் ஏறி செல்லும் படியானது.
மணியும் மேகலையும் சந்தித்துக் கொண்டாலும் பேச மாதம் ஒன்றானது. பேச்சு நட்பாய் ஆன போது நான் மணியை விரும்புகிறேனோ? என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆம்! என தெளிந்த போது தான் மணியே என்னிடம் தன் விருப்பத்தை சொல்லி மீண்டும் தெளிய வைத்தான். அன்புக்கு மட்டும் சிறு துளி மழை பட்டாலே கிடுகிடு வென தழைக்கும் அல்லவா? நானும், மணியும் ஒருவரை ஒருவர் அறிந்த போது எங்களுக்குள் பேதம் இல்லா மன நிலையும், அனுசரணையும் ஏற்பட்டு மகிழ்ச்சியோடு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. நானும் என் அப்பாவும் மட்டுமே வீட்டில் இருந்தோம். அரசு வேலையில் இருந்து என் அப்பாவுக்கு பென்சன் வந்து கொண்டிருந்தது. அக்காவுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். நான் அன்று வேலைக்கு வந்த பின்பு அத்தானுக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவ மனையில் இருப்பதாக அப்பாக்கு செய்தி வரவே. சற்று நேரத்தில் எனது தொலைப்பேசியும் சிணுங்கியது. இருவரும் உடனடியாக ஊர் சென்றோம். பரிதாபமான நிலையில் இருந்த அக்காவும் பிள்ளைகளும் எங்களை பார்த்த பிறகு தான் தெளிந்தார்கள். ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்தும், அத்தானை காப்பாற்ற முடியவில்லை. எங்களோடு ஊருக்கு வந்த அக்காவும், பிள்ளைகளும் இங்கேயே தங்கி விட்டார்கள். பிள்ளைகளின் வரவு எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது. நமக்காக காத்திருக்காத காலம் மட்டும் ஓட்டமாய் ஓடியது.
மணியும் நானும், எப்போதும் போல இருந்தாலும், ஒரு நாள் மணி, எங்களின் திருமண பேச்சை தொடங்கினான். நான் தயக்கத்தோடு வீட்டின் நிலையை எடுத்துக் கூறி கொஞ்சம் அவகாசம் கேட்டேன். "அதுக்கில்ல மேகலை, வீட்டிலே ஒரே தொந்தரவு. அது தான் கேட்டேன். சரி யோசிச்சு முடிவு செய்" என்றான் பெருந்தன்மையுடன். அப்பாவின் முதுமை, அக்காவின் நிலைமை, என் தனிமை என எல்லாம் இணைந்து அப்பாவையும் நலியச் செய்தது. ஐந்தாம் வகுப்பில் வந்து சேர்ந்த அக்காவின் பிள்ளைகள் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயார் ஆனார்கள். யாரும் எதிர் பார்க்காத வேளையில் ஒரு நாள் அப்பாவும் இறைபதம் சேர்ந்தார். மணி துக்கம் கேட்க வந்தான். சிக்கலான சூழ்நிலையை கண்டு மிகவும் வருந்தினான். வீட்டின் கெடுபிடி காரணமாய் ஒரு வாரம் சென்ற பின் மீண்டும் என்னிடம் திருமணம் குறித்துக் கேட்டான். என்னால் திருமணம் செய்ய முடியாது என கூறியதை கேட்ட அவன் மனம் உடைந்தான். அவனது எந்த ஒப்புதலுக்கும் தலையாட்ட மறுத்த என்னிடம் எப்படி பேசுவது என தெரியாமல் என்னை எப்படியும் சம்மதிக்க செய்ய மேலும், மேலும் வற்புறுத்திய போது அக்காவின் பிள்ளைகள் மட்டுமே இனி என் எதிர்காலம் என்பதை கேட்டு மனம் முடைந்த மணி நான் அறியாமலே தன் சொந்த ஊருக்கு மாறுதல் வாங்கினான் என்பதை அறிந்த போதும் கூட என் கண்ணீருக்கு தடை போட்டது கடமை. நான்கு மாதங்களுக்கு பின் என் பெயர் போட்டு வந்த திருமண பத்திரிக்கையை பிரித்து படிக்கும் போதே எழுத்து மறைந்தது. கண்ணீர் துளிகள் விழுந்த வண்ணம் இருந்தது. முத்து முத்தான மணியின் கையெழுத்து கரைந்தது என் வாழ்வை போல.
பிள்ளைகள் கல்லூரிக்குள் கால் பதிக்க ஆரம்பித்த போது செயலில் லேசான மாற்றம் தெரிந்தது. அக்காவின் பேச்சிலும் செயலிலும் கூட பழைய மாதிரி இல்லாமல் ஒரு கட்டத்தில் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் என்ன செய்தாய் ? என்றொரு அக்காவின் கேள்வி என்னை அடியோடு சாய்த்தது. என் மணி என் இதயத்தில் படமாய் நின்ற படி கேட்டான். "மேகலா, நீ ஏன் இப்படி செய்தாய் என்று?". என்னால் அவனை பார்க்க கூட முடியவில்லை. எனக்கு ஏன் இப்படி ஒரு நிலை. என் மேல் எனக்கே ஒரு கோபம். யாரிடமும் காட்ட இயலாத கோபம். அக்காவும் பிள்ளைகளும், பேசுவது கூட கிடையாது. இந்த நிலையில் யாருக்காக நான் இவர்களோடு இருக்க வேண்டும். பிரமோசன் என்ற பெயரில் வந்த டிரான்ச்பர் ஒத்துக் கொண்டேன்.
பசுமையும், மலைகளும் சூழ்ந்த மழை கிராமம். மயிலிறகாய் வருடும் இயற்கையும், என் மனதுக்கு இதமாய் இருக்க என் மனமும் சற்றே மாறியது. பதினாறு வருடங்களாய் மறைந்து கிடந்த மணி அவ்வப்போது என் இதயத்தில் மணி அடித்து சிரித்தான். 'என் நிலையை பார்த்து நீயுமா மணி சிரிக்கிறாய்?' என்ற போது முறுவல் காட்டினான். என்னை நானே கடிந்து கொண்டேன். வேறொரு பெண்ணின் உடமையை நான் எப்படி உரிமையுடன் நினைக்கலாமென? இரவும், பகலும் ஏனோ அவனது நினைவுகள், பேச்சுக்கள், தீண்டல், சீண்டல் என பல உணர்வுகள். என் வீட்டு பக்கத்தில் இருக்கும் பெண் வந்து, "உங்களை பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். ஆமா நீங்க தானே மேகலை?" என உறுதி செய்து கொண்டாள்.
நானும் வெளியே சென்றேன். சிலையாய் நின்றேன். நாற்பத்தைந்துக்கு மேல் வயது. காதாறோம் நரை முடி. பெரிய கண்ணாடி. பார்த்த உடன், "மணி, இங்கே எப்படி?" நானே கேட்டுக் கொண்டேன். வா என்று கூட அழைக்க வில்லை . "உள்ளே வரலாமா?" மணியின் நிதானமான பேச்சு பொட்டில் பொறி தெறிக்க செய்தது. "உள்ளே வாங்க" என்றேன். உள்ளே வந்து அமர்ந்த பின்பும், ஏதும் கேட்க தோன்றாத என்னை பார்த்து. "தண்ணீர் கிடைக்குமா?" என்ற போது உள்ளே ஓடி தண்ணீர் எடுத்து தந்தேன். "மேகலை, எப்படி இருக்கீங்க? உங்க பழைய ஆபிசுக்கு போய் இங்கே இருக்கும் விவரம் அறிந்து இந்த ஊர் ஆபீசில் இந்த வீடு இருக்கும் விவரம் அறிந்து வந்தேன்" என்றான். 'எதாவது மாற்றம் தெரிகிறதா? பேச்சில், நிதானத்தில், எதுவும் மாற்றம் இல்லை'. "உங்க வீட்டிலே எல்லாம் எப்படி இருக்கீங்க? எத்தனை பிள்ளைகள்?" என விவரம் கேட்டேன். "ஒரே குழந்தை, பெயர் மாதவி". 'அப்படியா?' ம்ம், காபி கொண்டு வரேன்" என உள்ளே சென்றேன். சில நொடிகளில் காப்பியுடன் திரும்பிய போது எதோ புத்தகத்தை புரட்டிக் கொண்டு இருந்தான். காப்பியை ருசித்தவாறு, "மேகலை, என்னை நீங்க எதிர் பார்க்கலைல? என்றான். கண்ணை மட்டும் உயர்த்தி, "நான் எப்படி மணி எதிர் பார்ப்பேன்?". 'நமக்கு சொந்தமில்லாத எதையும் நினைக்க கூடதல்லவா?" என்றேன். 'அப்படியா? நான் இன்னும் உங்க கூட தான் இருக்கேன்" என்ற போது தூக்கி வாரிப் போட்டது.
"மணி?' என்றேன் கோபமாய். "மேகலை, ஏன் கோபப்படுறீங்க? நீங்க இருந்த இடத்தை யாருமே நிரப்ப முடியல". "இந்த கல்யாணம்..........?" என நான் நிறுத்திய போது , திருமண அழைப்பிதழ் அனுப்பியதோடு நின்று விட்டது" என்றான் நிதானமாக. என்னால் நீங்கள் இல்லாத வாழ்வை நினைக்க முடியாத நிலையை அந்த பெண்ணிடம் சொன்ன போது. புரிந்துக் கொண்டு அவளது பெற்றோரையும் சமாதானம் செய்து என்னையும் நல்லவனாக்கி, எப்படியும் மேகலையுடன் சேருவீர்கள் என வாழ்த்தி, மணி - மேகலை என பத்திரிகை எனக்கு வரும் என தீர்மானமாக என்னை வாழ்த்தினாள். மிகவும் பெருந்தன்மையான பெண் அவள்" என்றான். கல்லாய் நின்ற என்னை, "மேகலா, நீங்க உங்க வீட்டோடையே இருந்திருந்தா? நான் திரும்பவும் உங்களை டிஸ்டர்ப் செய்திருக்க மாட்டேன். இன்னும் எத்தனை வருசங்கள் ஆனாலும் காத்திருப்பேன்". "மணி, உங்களுக்கு பொண்ணு இருக்கானு சொன்னது ?". கனவில், கற்பனையில் நான் உங்களோடு வாழ்ந்த அந்த இனிய நாட்களில் கிடைத்த அருமையான பெண் தான் மாதவி. பேரு நல்லா இருக்கா சொல்லுங்க?". "இந்த வயசுக்கு பின்னாலே....?" என தயங்கிய என்னைக் கண்டு, "கவலை படாதீங்க, எல்லாத்துக்கும் நான் இருக்கேன். எந்த வயதிலும் திருமணம் செய்யலாம்" என நிதானமாய் ஆணித்தனமாய் அடித்து சொன்ன மணியை பார்த்து, "இன்னும் அப்படியே இருக்க மணி" என தோள் சாய்ந்தாள்.
மணம் வீசுதே என் வாழ்வே .......
மேககூடு உடையும் போது
வான் மழை பொழியுது
சிநேக கூடு உடையும்போது
கண் உதிரம் சிந்துது
மலையாக தெரிந்த அன்பு
மண் மேடாய் தேயுது
கண்கூடாய் தோன்றும் பாசம்
கடலலை போல் செல்லுது
பேச துடிக்கும் நாவு
பேச்சின்றி நிற்குது
மொட்டாய் நிற்கும் பூக்களெல்லாம்
சட்டென விரிந்து மனம் வீசுது
என்றும் அன்புடன்
vanakkam amma...azhagaana kathal kathai..mani megalai nalla pair...well written ma...
ReplyDeletekavithai romba unmayana varigal...
nandr amma..
intha holding hands pic nice ma...like it..
ReplyDeleteஅனபுள்ள தர்ஷினி !!
Deleteதங்களின் அருமையான விமர்சனத்துக்காக மீண்டும் ஒரு நல்ல
கதை கிடைகிறதா என்று தேட புறப்படட்டுமா தர்ஷினி .
. என்றும் அன்புடன்
இந்த கதையை படிக்கும் போது சிலருக்கு பழைய ஞாபகங்கள் தோன்றும். உண்மையாய் காதலிப்பவர்களுக்கு காத்திருப்பின் சுகமும் ஒரு இனிமையே... அருமையான கதை அம்மா. உங்கள் வயதுக்கும், சிந்தனைக்கும் தூரம் அதிகம்...
ReplyDeleteஅன்புள்ள பாபு !
Deleteபழமை மறவாமை வேண்டும் . நல்லவை என்றும்
நினைவிள் நின்றிட வேண்டும் இளமையுடன் மனம்
இருந்திட வேண்டும் .
அன்புடன் அம்மா
Hi Aunty,
ReplyDeleteஎனக்கு காதல் கதை பிடிக்கும்...இந்த கதை ரொம்ப பிடிச்சுருக்கு... நல்ல முடிவு...கடைசியா படிக்க படிக்க சேரமாட்டாங்கலோ என்று நினைத்தேன்...முடிவு படிச்சதுக்கு அப்பறம் சந்தோஷமாக இருந்தது...கவிதை வரிகள் அற்புதம்...
கூடிய சீக்கிரம் உங்களை சந்திப்பேன் என்று நீனைக்கிறேன்...
Still expecting different stories aunty..
Revathi Durairaj :)
அன்புள்ள ரேவதி !
Deleteவிமர்சனம் உங்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது .
மீண்டும் உங்களை எழுத்திலும் , நேரிலும் சந்திக்க
இறைவன் வரம் தரட்டும் .
வாழ்த்துக்களுடன்
புஷ்பம அமல்ராஜ் ....;
நல்ல காதல் கதை...................
ReplyDeleteகாதல் கல்யாணத்துக்கு வயது முக்கியம் இல்லை என்பதற்கு மணியும் மேகளையும் ஒரு நல்ல உதாரணம்...... முடிவு அற்புதம்.
நன்றி அம்மா
புதிதாக உங்களின் எழுத்தை பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் .
Delete.விமர்சனத்துக்கு நன்றி .மீண்டும் பார்க்கலாம்
என்றும் அன்புடன் .
Hello Madam,
ReplyDeleteStory is Good, but i felt these type of similar stories came out already. We are expecting much different Stories as Revathi says. In this story, last few lines after Mani revealed that he his still single, he no need to talk to her in giving respect, for example "கவலை படாதீங்க", instead he can talk to her saying "கவலை படாத". That will make readers to realize that he his still in love with her as he was earlier. My Rating is 2.5/5
Dear balaji `
DeleteThank u so much for the comments. please continue,your valuable lines
Good AfterNoon Periyamma !!!!!!!!!!
ReplyDeleteSuper Love Story !, Nice Ending ........... !!!!!, Poem lines are also good !!!!!!!!!
Dear SHAFA!!!!!!!!1
DeleteI am seeing your comments after along time.
thank u so much dear.
Nice story. Great poem
ReplyDeletethank u so much for the commentz !!!!!!!!!!!!
DeleteIts a fantastic story, It would be nice if it were in a movie..
ReplyDeleteyour commentz makes me to write even better stories !thankz u so much !!!
Delete"மலையாக தெரிந்த அன்பு மண் மேடாய் தேயுது
ReplyDeleteகண்கூடாய் தோன்றும் பாசம் கடலலை போல் செல்லுது"
- நடைமுறை வாழ்க்கையில் இதுதான் உண்மை...
உறவுகளுக்காக தனது கனவுகளை தியாகம்
செய்த அன்பு உள்ளமும்...
அந்த உள்ளத்திற்காக காலம் தாண்டி
காத்திருக்கும் காதலும்...
காலத்தை வென்றது
“கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?
கண் மூடிடும் அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!”
(மதன் கார்க்கியின் வரிகள், படம் : முகமூடி)
கதையின் வரிகள் காட்சிகளை கண்முன்னே காட்டுகின்றது.
கதையினை விளக்கும் கவிதை ஒரு உவமை ஓவியம்..
அன்புள்ள அம்மா
காலதாழ்ந்த எனது விமர்சனத்திற்கு மன்னிக்கவும்...
அன்புள்ள ராஜீவ்காந்தி !
Deleteகன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும் ............
உவமை வரிகளை சரியான
இடத்தில் கையாண்ட தங்களின்
அருமையான தேடலுக்கு வாழ்த்துக்கள் .
உங்களின் பாராட்டும் விமர்சனங்கலும்
மட்டுமே நல்ல கதை ஒன்றை உருவாக்க
முடியும. தாமதம்மானாலும் பிள்ளைகளின்
வரவு அன்னைக்கு ஆனந்தமே .
. என்றும் அன்புடன் அம்மா .
Hi Mam,
ReplyDeleteThis is Pradeesh (Revathi friend)...This is first time reading ur story...
Superb story...kavithai is very nice...picture is very nice...The Story gives me someinternal sensation about love...Waiting for your next story..
Pradeesh.S
Dear Pradeesh,
DeleteThank u so much for ur valuable comments . Keep reading and share ur thoughts . God bless u !!! :)
Periyammma really super love story........
ReplyDelete