Pages

Sunday, 18 March 2012

காடெல்லாம் பூத்திருக்கு (22)!


காயங்கள் ஆறினாலும் !!!
புஷ்பம் அமல்ராஜ்  -             044 25730952       /             9941459848       ) 

    "அம்மா .. ஏம்மா அப்பா உன் கூட பேச மாட்டேன்கிறாரு ? நாம எங்கே வெளியே போனாலும் கூட அவர் ஏம்மா நம்ம கூட வர மாட்டேங்கிறாரு. என் ஸ்கூல்க்கு கூட வர்ரதில்லேம்மா. என் ப்ரண்ட்ஸ் முன்னால எனக்கு ரொம்ப அவமானமா இருக்கும்மா. அவங்கெல்லாம் என்ன பாத்து, 'ஏண்டி உன் அப்பா உன்ன ஒரு நாளும் கொண்டு வந்து விடறதில்லை? அப்படின்னு கேக்குறாங்கம்மா.  நான் இப்படி கேட்கும் போதெல்லாம் நீ அழுகிறியே தவிர பதில் சொல்ல மாட்டேன்கிற. " யார் கேட்டாலும் என் பெண்சாதி, பிள்ளைன்னு உங்கள பத்தி சொல்லமாட்டேன்'  என்று சொன்னாரே. "நானும் அவர என் அப்பான்னு சொல்ல மாட்டேன்மா' என கோபத்தில் பேசிய என் மகளை அணைத்து கொண்டேன். மெதுவாக என் மகளின் கோபத்தை தணித்து என் மடியில் போட்டு தட்டி கொடுத்து தூங்க செய்தேன். அவள் கண்ணயர்ந்தாள். நான் என்றோ தொலைத்த தூக்கத்தை தேடி இரவெல்லாம் விழித்திருக்கிறேன். விழிகள் என்னை பல வருடங்களுக்கு முன்னாள் அழைத்து செல்கிறது. 

             திருமணமாகி நானும், என் கணவரும் என் அம்மா வீட்டுக்கு வந்திருந்தோம். என் கணவர் ஏதோ வேலை என  வெளியில் செல்வதாய் கூறி சென்றார். சற்று நேரத்துக்கெல்லாம் வாசக்கதவை யாரோ தட்டவே வந்து பார்த்தால் வாட்ட சாட்டமாய் அழகாய் உயரமாய் புன்னகையுடன், "நான் ஞானசேகர் துபாய்ல இருந்து வந்திருக்கேன். அத்தை இருக்காங்களா?" என கேட்டவரை பார்த்து , யேய் அத்தான் வா! வா! என பாசத்தோடு அழைத்தேன். 

                 "யேய் நீ பானுல?" 
                 " என்ன பானு இல்லையா, பானுவே தான் . உள்ளே வா" என அழைத்தேன். "அம்மா இங்கே வந்து பாருங்க அத்தான் வந்துருக்கு". அம்மாவும் அவசரமாய் ஓடி வந்து, "வா வா எப்போ வந்த? " உக்காருப்பா. "ஏம்மா பானு, தம்பிக்கு காப்பி போடும்மா" என என்னிடம் கூறினார்கள். 

             சளசள வென ஜாலியாக பேசும் அத்தானோடு பேசி கொண்டிருந்தாலே பொழுது போறது தெரியாது. "என்னப்பா துபாய்க்கு போன புள்ள நாலஞ்சி வருசமா இந்த பக்கமே வராம இருந்துட்டியே ? ".  "ஆமா அத்தை நீங்க தான் உங்க பொண்ண தர மாட்டேண்டிங்கலே". "தரக்கூடாதுன்னு இல்லப்பா அது என்னன்னா? நீயும் தலச்சம் புள்ள பானுவும் தலச்சம். எல்லாரும் நல்லா இருக்கணும்லாப்பா. அதான் இப்படி ஆயிருச்சி". "உனக்கென்னப்பா ராசா மாதிரி இருக்க. நான் நீனு போட்டி  போட்டு பொண்ணு தருவாங்க". அதற்குள் நான் காப்பியோடு வரவே, "என்னமா பானு உன் வீட்டு காரரு எப்படி இருக்காரு?"  "நல்லா இருக்காரு அத்தான். இதோ இப்போ வந்துருவாரு. இருங்கத்தான் இருந்து சாப்பிட்டு தான் போகனும்". "இல்ல பானு நான் கிளம்புறேன்". "என்னப்பா வந்துட்டு கை நனைக்காம போறியா. இருப்பா, சீக்கிரம் சாப்பாடு ரெடி பண்றேன். சாப்பாடும் ரெடி ஆனது. 

            "ஏம்ப்பா  சாப்பிடலாமா?" என்றவுடன். "இல்ல அத்தை அண்ணனும் வரட்டுமே சாப்பிடலாம்" என்றார். "ஆமா அத்தான், யார பாத்து அண்ணன்க்ற?" . "ஏன் உன் வீட்டுகாரர தான்". "யேய் என்ன சந்தடி சாக்ல அவர வயசானவரா காட்றியா?. உனக்கும் அவருக்கும் ஒரே வயசு தான் தெரியுமா?" . "இருக்கட்டுமே அவருக்கு தானே முதல்ல கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு" என்றார். "ஓ அப்படி வாரிகலோ? அவர் வர லேட் ஆகும். நீ சாப்பிடு அத்தான்" என்றேன். 'ம்ம்ம் சரி' என கை அலம்பி விட்டு வந்து உட்காந்தார். 

           என் மகளும் தூங்கி எழுந்து வரவே என் மகளை பார்த்து, "வாடா குட்டிமா இங்கே பாரு இவங்க உன் பெரியப்பா" என்றேன். "வாங்க, வாங்க என் செல்லம்" என சிரித்து கொண்டே கூப்பிட்டதும் ஓடி வந்து அவர் மடியில் உட்காந்து கொண்டாள். நானும், அம்மாவும் பக்கத்திலேயே இருந்து சாப்பாடு பரிமாறினோம். கொஞ்சம் கரி வச்சிக்கோங்க என நான் கரண்டியை கொண்டு போகவும், "வேண்டாம்மா" போதுமென என் கையை பிடிக்கவும், என் கணவர்  வீட்டுக்குள் வரவும் சரியாய் இருந்தது.  இதோ அவங்களும் வந்துட்டாங்க . "ஏங்க இவரு எங்க அத்தான். துபாய்ல இருந்து வந்துருக்காங்க" என்றேன். "அண்ணே எப்படினே இருக்கீங்க" என மனந்திறந்த சிரிப்போடு கேட்டார். நல்லா இருக்கேன் நீங்க எப்போ வந்தீங்கன்னு" கேட்டார். "நான் காலைலேயே வந்தேன். இவங்க ரெண்டு பேரும் போக விடவே இல்ல. சாப்பிட்டு தான் போகணும்னாங்க. சரி உங்களையும் பாத்துட்டு போலாம்னு இருந்துட்டேன்". என் மகள் அவர் மடியை விட்டு இறங்கவே இல்லை. "ஏங்க நீங்களும் சாப்டுங்க" என்றேன். "இல்ல பசி இல்ல. அப்புறம் சாப்டறேன். எனக்கு தலை வலியாய் இருக்கு போய் படுத்துகிறேன்" என உள்ளே சென்றார். 'என்னத்தான் எப்போ கலியாணம்" என்றேன். "கலகலன்னு பேச்சும், பாசமா பாத்துகற குணமும், அதோட கொஞ்சம் அழகும், படிப்பும் சேர்ந்து உன்னை போல பொண்ணு கிடைக்கட்டும். உடனே கல்யாணம் தான்" என்றார். அத்தான் சொன்னது எனக்கே ஒரு மாதிரியாய் இருந்தது. வேறு வேறு பேச்சுகளுக்கு இடையே பொழுது போனதே தெரியல. "என்னமா மணியாச்சி, மாப்பிள்ளையை சாப்பிட கூப்பிடு " என்றார். 

            நான் போய் "ஏங்க சாப்பிட வாங்க" என கூப்பிட்டதும் கம்மென்று படுத்திருந்தார். "அம்மா அவர் நல்லா தூங்கறாருமா" என்று சொன்னேன். "ஏன் அண்ணன் ரொம்ப பேச மாட்டாரோ" என கேட்டார். "ஆமா அத்தான். அவங்க வீட்லயே யாரும் ரொம்ப பேசிக்க மாட்டாங்க. நான் தான் சளசளன்னு பேசிட்டு இருப்பேன்" என்றேன். "சரி பானு நேரமாச்சு அத்தை நான் கிளம்புறேன்னு" சொன்னார்.  "இந்தா பானு உன் கல்யாணத்துக்கு கூட வரல இந்த மோதிரம் தான் உனக்கு வாங்கி வந்தேன். இது இந்த குட்டி பொண்ணுக்கு" என வாங்கி வந்த சட்டை சுடிதார் என பல சாமான்களையும் கொடுத்தார். "எதுக்குத்தான் இதெல்லாம், மாமா தான் கல்யாணத்துக்கு நிறைய செஞ்சிட்டாரே" என்றேன். "பரவால வச்சிக்கம்மா" என என் கைகளில் கொடுத்தார். நானும் வாங்கி கொண்டேன். அவரும் புறப்பட்டார். அவர் போகும் போது, "பானு அண்ணன் கிட்ட சொல்லிரும்மா" என்று சொன்னார். 

          அவர் சென்ற ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் எழுந்தவர். "யேய் நான் வீட்டுக்கு போறேன் நீ வரியா இல்லையா?" என்றார். "என்னங்க நாலு நாள் இருந்துட்டு போலான்னு தானே கூட்டிட்டு வந்தீங்க. ஏன் இப்போ சட்டுன்னு கிளம்புறிங்க?" என்றேன். "நீ வரியா நான் போகட்டுமா?" என கோபமாக கேட்கவே நானும் தடதடவென கிளம்பினேன். அம்மா ஏதும் புரியாமல் , "என்னம்மா என்ன ஆச்சு" என்றாள். "நீ கூட சாப்பிடலியே" என கவலையுடன் கேட்ட அவளிடம், "தெரியலமா. சரிமா.. நான் கிளம்புறேன்" என்றதும். என் மகள் லட்சுமி, "பாட்டி வீட்லயே இருக்கலாம்" என அழ தொடங்கினாள். அவர் தான் அவளை பரபர என இழுத்து கொண்டு போய்  வண்டியில் ஏத்தினார். நானும் கலங்கிய கண்களுடனே சென்றேன். 

       அதே கலங்கிய கண்களோடும் கலக்கத்தோடும் நாட்களை வருடங்கலாக்கி கொண்டிருக்கிறேன். ஆறு மாதத்திற்கு முன்பு அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக சொல்லவே அங்குசென்று பார்த்து வந்தேன். என் மகளுக்கும், எனக்கும் என் தாய் வீட்டு சொந்தம் இம்மட்டுமே இருந்தது. 

             பலமுறை அவரிடம் காரணம் கேட்டும் எதற்குமே பதில் சொல்லவில்லை. நாளடைவில் குறைந்த பேச்சும் மிக குறைந்தது. சொந்தம், பந்தம், சுற்றம் என ஏதுமற்றவளாய்  நான்கு சுவர்களுக்குள் காலம் சிதறியது. குழந்தை மனதில் அவருடைய நடவடிக்கை பசுமரத்தாணியாய் பதியவே அப்பாவோடு பேச்சு மிக குறைந்த நிலையிலே இருந்தது. "அப்பா ஏதோ கோபத்தில இருக்காரும்மா, நீயும் அவரோட போட்டி போடாதே?" என்றேன். "நானுந்தாமா கோபத்தில இருகிறேன்" என்கிறாள் மகள். 

               திடீரென ஒரு நாள் மயக்கமாய் விழுந்தார். ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். மூளையில் ரத்தம் கட்டியதாக சொன்னார்கள். பேச்சு வரவில்லை. ஒரு வாரத்துக்கு பிறகு தான் நினைவு திரும்பியது. என்னையும், மகளையும் பார்த்தார். எதோ பேசுவதற்கு முயற்சித்தார். பேச்சு வரவில்லை. அதிர்ச்சியானாள். என்னையும், மகளையும் கட்டி பிடித்து கொண்டு அழுதார். மகளை பேச சொன்னார் சைகையால் தான். அவள் என்ன பேசுவாள்? கெஞ்சுகிறார் பேச துடிக்கிறார். வாய் அசைகிறது. ஒளி மட்டும் வர வில்லை . எல்லோரும் பார்க்க வந்தார்கள். ஏதேதோ சைகை செய்து காட்டுகிறார். பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. அவர் நன்றாக இருக்கும் போது யாருடனும் பேச பிரியப்படவில்லை. ஆனால் இப்போது எல்லோரிடமும் பேச வேண்டுமென ஆசை படுகிறார். ஆனால் ...... ? இதையெல்லாம் கேள்வி பட்டு அத்தான் வந்தார். அவரிடம் "கல்யாணம் எப்போ?" என கேட்கிறார். "தேடி தேடி பானு மாதிரியே ஒரு பொண்ணை கண்டு பிடிச்சி கல்யாணம் பண்ணிகிட்டேன். இங்கே யாரும் ஒத்துக்க மாட்டாங்கனு அங்கேயே கல்யாணத்த முடிச்சிட்டு வந்துட்டேன்" என்றார். "பொண்ணு எங்கே?" என அவரிடம் கேட்கிறார். "கூட்டிட்டு வாரேன்'னு வெளியில் சென்றார். ஒரு பொண்ணோடு வந்தார். அண்ணே இவ நம்ம ஊரு பொண்ணு தான். ஆனா மதமும்  இனமும் வேறு" என்றார். வந்தவள் அவரின் கட்டிலுக்கு அருகில் அமர்ந்து, "எப்படி இருக்கீங்க?" என கேட்டு அவரது செயலற்று போன கையை எடுத்து மடக்கி நீட்டி சிகிச்சை செய்தாள். "என்னண்ணே  பாக்குறிங்க?. அவளும் பிசியோதெரபிஸ்ட் தான் .  ஸ்பீச்(speech) தெரப்பியும் படிச்சிருக்கா. அதனால அவளுக்கு இந்த சிகிச்சை தெரியும்" என்றார். மாறாத சிரிப்பும் பாசமும் கொண்ட அவளையும் அத்தானையும் பார்த்தார். இந்த நிலையில் நான் கல்லாய் இருப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும் . 

                       "நாங்க போற வரைக்கும் உங்களுக்கு தேவையான சிகிச்சைய இங்கே வந்து இவளே செயவாண்ணே" என்றார் அத்தான். என் மகள் பெரியப்பாவை கட்டி பிடித்துக் கொண்டாள். இந்த காட்டுக்குள் பாச பூக்கள் என்றும் மலர்ந்து கொண்டு தான் இருக்கும். 


ஒற்றை பனையாய்.....

கம்பீரமாய் தலை நிமிர்ந்திருக்கும் 
ஒற்றை பனை மரத்துக்கு
 நீர் ஊற்றி வளர்த்தவர் யார்?
எப்போதும் எனை வியக்க வைத்த
அம்மரம் இம்முறை காணவில்லை
மாடு வந்து உரசிய போது
சாய்ந்து விட்டதாய்  செய்தி
மேல்பட்டை மட்டுமே இருக்க
உள்ளே செல்லரித்து போச்சாம் 
பல்லாயிரம் செல்களால் ஆனதே
எலும்பும் தசையுமான உடல் 
ஏதாவது ஒரு விதத்தில் 
சாயக்கூடும் மறவாதே
இருக்கும் வரை பேசு 
சிரி சிறப்பாய் செயல்படு
சந்தேக கரையான் உன்
மனதுக்குள் சென்றால்  கேடு 
உனக்கு மட்டுமா? உன்னைச்
சுற்றிய மனங்களும் சேதப்படும் . 
நம்பு! நம்பிக்கையே உனது 
ஆணிவேராய் ஆழமாய்ச் 
செல்ல செல்ல நீயும் சுற்றமும் 
நட்பும் தழைக்கும்  
காற்றோடு ஊர்வலம் செல்லும் 
பூவின் மனமாய் மணக்கும் 
                                                                                           என்றும் அன்புடன்
                                                                                            புஷ்பம் அமல்ராஜ் 


 

14 comments:

  1. touching story ma....very nice....

    ReplyDelete
  2. Dear Dear Preethi
    You r the first reader to write comment. Thank u so much.

    ReplyDelete
  3. Very nice touching story and kavithai. Really like the kavithai, touching the closeness with life (can be tree, human, animal etc).

    Very nice, liked so much.

    ReplyDelete
  4. Dear Anonymous|
    I am so happy to see your comment.I think that your comment is reflect the index of your mind. Thank you so much

    ReplyDelete
  5. nalla arumaiyana kathai.silar ithai paditaavatu tiruntaddum....

    ReplyDelete
  6. வணக்கம் அம்மா..
    உறவுகளின் மகத்துவம் ,சந்தேகத்தின் சங்கடங்கள்.கதை ரொம்ப சூப்பர் ம்மா..

    சந்தேக கரையான் உன்
    மனதுக்குள் சென்றால் கேடு
    உனக்கு மட்டுமா? உன்னைச்
    சுற்றிய மனங்களும் சேதப்படும் .
    கவிதை அருமை ம்மா ..thanks for sharing this story..amma.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தர்ஷினி
      மனிதன் பிறந்தது முதல் இறக்கும வரை உறவுகள் எல்லா நிலையிலும நம்முடன் தொடர்ந்தே வருகிறது . அதை போற்றுவதும் காப்பதும் கூட நமது கடமை அல்லவா. சந்தேக கண்ணோடு பார்ப்பவன் மனிதன் அல்ல. ஆகவே நாம் மனிதராக வாழ்ந்தாலே இம்மாநிலம் உய்யும் .நன்றி தர்ஷினி , மேலும் இதே எழுத்துக்களோடு சந்திபோமா !

      Delete
    2. saringa ma..your every story conveying one message to our readers..thank you for your reply amma.

      Delete
  7. Dear Sujatha|
    Thirundhuravanka eathaium paarkamalae tirunthuvanga.aanna thirunthamataanu adam pidikgiravanga enna sonnaalum tirunthamattanga Sujatha sari athy vidunga unkalukgu kathai pidichirukka . rompa santhosham.

    ReplyDelete
  8. Touchy Story Periyamma ...............

    ReplyDelete
  9. It's really interesting to read this blog. I found that something different things from these realistic stories.This one is not exception. This story expounds the dark face of 'misunderstanding'. We should trust our family members and friends, otherwise it leads to different kind of problems. Sometimes it spoils our offspring. Amma hiddenly scourge the perpetrators. It's totally nice story.

    ReplyDelete
    Replies
    1. Dear Vijayan
      Your comments are always very valuable one. Hats off dear.

      Delete
  10. TO Forgive and forget,we need a piece of heart. otherwise it will spoil the peace of us and also the people around us.

    ReplyDelete
  11. Dear Kala
    I think that you are write a first comment in this page. Thank you so much dear. your comment is very powerful and valuable. The true pleasure of life is to live with your inferiors. we will meet soon the same black and white
    thank you.

    ReplyDelete