திருந்துங்கள், திருத்துங்கள்
( புஷ்பம் அமல்ராஜ் - / )
" சார் உங்களைப் பார்க்க ஏதோ ஸ்கூல்ல இருந்து ரெண்டு பேரு வந்துருக்காங்க. வரச்சொல்லலாமா சார்?"
" உம் ... வரச்சொல்"
சிறிது நேரத்துக்கெல்லாம் இரண்டு பெண்கள் வந்தார்கள்." வணக்கம் சார். ஸ்கூல்ல 'படிப்பே வராது', 'இவன் உருப்படவே மாட்டான்', 'எதுக்குமே லாயக்கில்லாதவன்'னு சில பிள்ளைகளை ஓரம் கட்டி வச்சிருப்பாங்க. அதைப்போல இருக்கிற பிள்ளைகளைத் தேடி பிடித்து அவங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா பயிற்சி கொடுத்து இந்தச் சமுதாயத்துக்கு முன்னால் திறமையுள்ளவங்கலாகக் காட்ட ஒரு சின்ன முயற்சி எடுத்திருக்கோம். அந்த மாதிரிப் பிள்ளைகளுக்கு எப்படி பாடத்தைப் புரிய வைக்கிறது? அதற்க்கான மாதிரி பயிற்சியும் எடுத்திருக்கோம். என்கிட்டே ஆர்வம், படிப்பு, சேவை மனப்பான்மை எல்லாமே இருக்கு. அதற்க்கான பணம் என்கிட்டே இல்லே. ஒரு சில நல்லவங்ககிட்ட வாங்கி நடத்தலான்கிற முடிவோடதான் உங்களைப் பார்க்க வந்திருக்கோம்" என்றார்கள்.
"ரொம்ப நல்ல காரியம் செய்யப் போறீங்க. வாழ்த்துக்கள் . உங்களது இந்த முயற்சிக்கான எல்லா செலவையுமே நானே ஏத்துக்கறேன்" என்றவுடன் வியப்பில் " நன்றி" என்றார்கள்.
" சார், இதோட தொடக்க விழாவ நீங்க வந்து தலைமை தாங்கனும்" என்றார்கள்.
"எனக்கு இந்த விழாவிலே எல்லாம் பேசத் தெரியாது. இருந்தாலும் கட்டாயம் வாரேன்" என சம்மதித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்கள்.
விழா பெரிய அளவில் இல்லை என்றாலும் அதிகமான பெற்றோர்கள் வந்திருந்தார்கள். அன்று என்னைப் பார்க்க வந்த இருவரும் முதலில் பேசினார்கள். எனது நேரமும் வந்தது. " அன்பானவர்களே வணக்கம்" என ஆரம்பித்தேன். " ஒரு மாணவன் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது அவனாகவே ஏதோ பேசிக் கொண்டும் அவனது நோட்டில் எதையோ வரைந்து கொண்டும் இருந்தான். அவன் தனக்கென தொன்றியதை எல்லாம் வரைந்து கொண்டிருந்தான். ஆசிரியர் அவனை கண்டுபிடித்து 'என்ன பண்ணிக்கிட்டிருக்கே?'என நோட்டை பிடுங்கிப் பார்த்தார். அவர் எழுத சொன்ன எந்த ஒரு விசயமும் அவனது நோட்டில் இல்லை. சின்னச் சின்னதாய் காரும், சக்கரமும் தனித்தனியாக வரைந்திருப்பான். ஆசிரியருக்குக் கடுமையான கோபம். நோட்டைப் பிடுங்கி கிழித்தது மட்டுமல்ல , அவனது உடம்பையும் பிரம்பால் துவட்டி எடுத்தார். நாளை உன் அப்பாவைக் கூட்டி கொண்டு வர வேண்டும்' என்றார். வீட்டுக்குப் போனவுடன் அப்பாவிடம் நடந்ததைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கடுங்கோபத்தோடு அவர் பங்குக்கு அவரும் சாத்தினார். அடியை வாங்கிக் கொண்டு சும்மா இருப்பதைப் பார்த்தவுடன் டென்சனாகி உட்கார்ந்தார். மூச்சி வாங்குவதைப் பார்த்து ' அப்பா, நீங்க கவலை படாதீங்கப்பா. நான் நல்லா படிப்பேன்' என்றான். அழுதார் அப்பா. ' அழாதீங்கப்பா' என அவர் கண்களைத் துடைத்தான். அவனைக் கட்டிபிடித்த படி 'டேய் நீ படிக்காட்டா இந்தக் காலத்திலே பிழைக்க முடியாதுடா' என்றார். ' அப்பா , என்னாலே படிக்க முடியலைப்பா. நம்ம கார் செட்டிலே வேலை கத்துகிறேன்ப்பா" என்றான். மறுநாள் தொடக்கி கார்செட் தான் அவனது சொர்க்கமானது.
அப்பாவும் ஒவ்வொன்றாகக் கற்று கொடுத்தார். வருடங்கள் வழுக்கிக் கொண்டே ஓடியது. அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்து அவனும் எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்டு அவனால் ஒரு காரையே உருவாக்க முடியும் என்ற நிலை வந்தது. பிசினஸ் பயங்கர சூடு பிடித்தது. இப்பவும் அவனது அப்பா அவன் கூடவேயிருந்து மேலும் அவன் உயரத்தில் ஏறும்போதெல்லாம் கவனமாய் பார்த்துக் கொண்டார்.
அவன் கூடப் படித்த நண்பர்கள் இப்பவும் கூட அவன் எழுதிய வார்த்தைகளைச் சொல்லி கேலி செய்வார்கள். அவனுடைய தேர்வுத்தாளைத் திருத்தும் ஆசிரியர்களுக்குப் பைத்தியம் தான் பிடிக்கும். உதாரணத்திற்கு தமிழில் திருக்குறளை எழுதியவர் யார்? என்றால், " ர்யா ர்வயாதிழுஎ ளைறகுக்ருதி " என்பதையே பத்து வரிகள் எழுதியிருப்பான். எந்த ஆசிரியருக்குத்தான் கோபம் வராது? அடிப்பார்கள், திட்டுவார்கள், வெளியில் நிற்க வைப்பார்கள். அவனுக்கும் தண்டனைக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரியே இருப்பான். அவனைப் போன்ற பிள்ளைகளைத்தான் கற்றலில் குறைபாடு உடையவர்கள் என்பதாக என்னைப் பார்க்க வந்தவர்கள் கூறினார்கள். அவனுக்கு கிடைத்த அப்பாவைப் போல் கிடைத்தால் அப்படிப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒன்றில் தனித் திறமை இருப்பதை அறிந்து அதில் பயிற்றுவிப்பார்கள். நான் உங்கள் முன் இப்படிப் பேசுகிறேன் என்றால் நான் பட்ட வலிகள் தான் என்னைப் பேச வைக்கிறது. மேலே குறிப்பிட்ட அந்தப் பையன் வேறு யாருமல்ல, நான் தான்! தயவு செய்து என்னைப் போன்றவர்களைக் கண்டு பிடித்து புதிய முயற்சி எடுத்துள்ள இவர்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்போம். அறுபது பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் அவர்களைக் கண்டுபிடிப்பதும் திருத்துவதும் ஆசிரியர்களுக்கு மிகவும் சிரமமான காரியம். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் குறைபாட்டை உணர்ந்து அதைப் போக்க முயற்சிப்பது என்ற நிலைக்கு திருந்துவோம்.
நம் பிள்ளைகள் திருந்த வழிவகுப்போம். அதை விட்டு அவர்களை அடிப்பதால், திட்டுவதால் மன அழுத்தம் கொடுத்து தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைவரை தள்ளி விட்டு பின்னால் வருந்தி பயனில்லை. அவர்களை திருத்தும் முயற்ச்சியில் ஈடுபடுவோம். இதுவரை சொன்னதிலே, பாதிக்கபட்டவன் நானே சொல்வதால் பிள்ளைகளின் வலி என்ன என உணர்வீர்கள். பல வருடங்களாய் மனதில் அழுத்திக் கொண்டிருந்த எனது சுமையை இறக்கி வைக்க ஓர் அறிய வாய்ப்பினை நல்கிய இந்தச் சகோதரிகளுக்கு நன்றியுடன் அவர்களின் சேவை மனப்பான்மை வளர வாழ்த்துக்களுடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன்" என்று கூறி அமர்ந்தேன்.
என்னுயிரே! என் இன்னுயிரே!!
ஆண்டவன் படைப்பில் ஏற்றத்தாழ்வு!
தவிர்க்க முடியா ஒன்றல்லாவா!?
படைப்பே அவ்வாறு எனில் படிப்பில்?!
கற்றலில் குறைபாடு கண்டறிந்து
பயிற்சிகளை பிள்ளைகள் பெரும் போது
ஊக்கமுடன் படிக்க உதவுமன்றோ!
படி படி என பாடாய் படுத்தி
மென்மேலும் பளுவை ஏற்றுவதால்
மன அழுத்தம் கொண்டு உயிர்விட்டாலும்
உயிர் எடுத்தாலும் யாரால்
தாங்க முடியும் என்னுயிரே சொல்.
பயிற்ச்சிகள் பலவும் இருக்கையிலே
பாழ்பட்டு போகலாமோ இன்னுயிரே
நாமே திருந்தவும் சிறார்களை
திருத்தவும் வழிவகுப்போமா?
என்றும் அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்

superb amma...:)
ReplyDeletethank u preethi.
DeleteNice story again. Very much true and something fits to the current time and generation.
ReplyDeleteThis is the one blog, I eagerly await every time to read.
Keep writing. Hope more people read and enjoy.
Dear Anonymous{ I am so happy to see your comment.Now a days the younger generation prove that they are very talented.But sometimes it failed.I think that all because of parents. you too feel like this. thank you so much for the comments
Deletevery touching story..... Tel my congrats to amma...
ReplyDeletethank you da padmavathy.I am so happy to read your comment.
ReplyDeleteவணக்கம் அம்மா.தற்போது சமுதாயத்துல நடக்கும் விஷயங்கள கதையா சொல்றது ரொம்ப நல்லா இருக்குமா.அதுவும் பாதிகப்பட்ட மாணவன் மூலமா கத சொன்னவிதம் super.கண்டிப்பா இத எல்லோரும் உணரனும்..கவிதையும் அருமை ம்மா .
ReplyDeleteசமுதாயத்தில் நாம் எதை பெற்றாலும் பெற நினைத்தாலும் அதை நமது அனுபவமாக கொள்கிறோம். அதை
Deleteபிறருக்கு எடுத்துச் சொல்லும்போது பாடமாகிறது. அதைத்தான் இந்த கதை வடிவில் சொல்லி இருக்கிறேன். உனக்கு பிடிச்சதை சொன்னது சந்தோசம் .
வாழ்த்துகளுடன் புஷ்பம் அமல்ராஜ்
Very Nice , true Story Periyamma ............... !!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteVery Nice , true Story Periyamma ............... !!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteVery Nice and True Story Periyamma .....!!!!!!!!!!!!!
ReplyDeleteDEAR SHAFA,
ReplyDeleteTRUE STORIES ARE VERY VALUABLE SO I HAVE TO WRITE LIFE STORIES ONLY.THANK U SHAFA GOD BLESS U.
The story is a wake up call for especially the parents and teachers. Making a school topper as a scientist, engg. or Dr. is not at all a matter. Inherently every child has some talent either in education,art,business and so and so forth. First the parent should find their child's interest and nurture them as they want to be. Happy to see such a valuable story nowadays.
ReplyDeleteDear Gurumurugan
DeleteThank you for the valuable comment.The readers comment is a tonic
for the authors mind, thank u so much
”திருந்துங்கள் திருத்துங்கள்” கதைக்கேற்ற தலைப்பு
ReplyDeleteகல்வி கற்பிக்கும் முறையினை ஆசிரியர்களுக்கும்
கல்வியினை குழந்தையிடம் திணிக்கக்கூடாது என்பதை பெற்றோருக்கும்
கல்வி கற்றலின் அவசியத்தை மாணவர்களுக்கும்
தங்களின் கதை நன்கு அறிவுறுத்துகின்றது.
தங்களின் ஒவ்வொரு கதையும்
சமுக நிகழ்வுகளை பிரதிபளிக்கும்
கண்ணாடியாக காட்சியளிக்கிறது.
எனது கருத்தினை கூற வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி!
அன்புள்ள ராஜீவ்காந்தி|
Deleteஉங்களின் விமர்சனம் என்னை இன்னும் பல சமுதாய தொடர்பான கதைகளை எழுதத் தூண்டுகிறது ; கதையை ஆழ்ந்து படித்து நீங்கள் எழுதும் கருத்துக்கள் மிகவும் பயன்னுள்ளது வாழ்த்துக்களுடன் தங்கள் வரிகளை எதிர்பர்ர்ககிரேன்.
என்றும் அன்புடன்
damn super story....
ReplyDelete