Pages

Thursday, 26 January 2012

காடெல்லாம் பூத்திருக்கு (20)!



மாறாத சூரியன்,
 நிலை மாறும் நிலவு

புஷ்பம் அமல்ராஜ்  - 044 25730952 / 9941459848 )

                             காலை தொடங்கி களைகட்டத் தொடங்கியது கிராமம், இரவெல்லாம் போகி கொண்டாடிய சிறுவர் கூட்டம் குளித்து புத்தாடை அணிந்து பொங்கல் பானையைச் சுற்றி எப்போ பானை பொங்கும் - பொங்கலோ பொங்கலென கத்தி மகிழ்ச்சியை வெளிபடுத்தலாமெனக் காத்து நிற்கிறது. வீட்டுக்கு வீடு கொண்டாட்டம். நானும் பொங்கல் சாமான், தோரணம், மஞ்சள் , இஞ்சிக் கொத்தென எல்லாம் வாங்கி வைத்து என் பிள்ளைகளுக்காக - பேரன் பேத்திக்காக காத்திருக்கிறேன். 

          தட்டு முட்டு சாமானெல்லாம் ஒதுக்கி, வெள்ளை அடித்து, பித்தளைப் பாத்திரங்களையும் புளி போட்டுத் தேய்த்து காய வைத்தால் முகம் தெரியும். அழகான கோலம் நடுவே பூசணிப்பூ. தெருவாசலை பார்த்தாலே போதும் தெய்வம் வந்து குடியிருக்க ஆசைப்படும். போகி நெருப்பைச் சுற்றி கும்மியடிக்கும் பெண் பிள்ளைகள். என் மகள் பாடும் பாட்டு கும்மி அடிக்கும் பிள்ளைகளை ஊக்கபடுத்தும். ஆண் பிள்ளைகள் தலையில் ஒரு துண்டு, கையிலொரு துண்டு என வைத்துக் கொண்டு எதிர்ப்பாட்டாக ஒயிலாடுவார்கள். சிரிப்பும் கும்மாளமும், வருடமெல்லாம் விவசாய குடும்பம் வயக்காட்டில் பட்ட துன்பமெல்லாம் மறந்து - மறைத்து - குதூகலமான பொங்கல் விழா மக்களை மகிழ்ச்சியின் எல்லைக்கு இட்டுச் செல்லும், காலம் நாட்களாய், மாதங்களாய், வருடங்களாய்த் தேயத்தேய பிள்ளைகள் வளர்ந்தார்கள். பள்ளியில் படித்தவர்கள் கல்லூரி சென்ற போது வெளியிடத்தின் கலாச்சாரப் பூச்சோடு வந்தார்கள். முன்பிருந்த வெகுளித்தனம், விளையாட்டு எல்லாம் குறைந்தாலும், என் பிள்ளை பெரியவனாக மாறிவிட்டதில் எனக்கும், என்னவருக்கும் பெருமையாகத்தான் இருந்தது. என் பெண்ணும் அவள் வயதுக்கேற்ற வளர்ச்சியும் - பொறுப்பும் மட்டுமல்ல, அழகிலும் என் 'பொண்ணா இவள்?' என்ற அளவில் என்னையே பூரிக்கச் செய்தாள்.  

            காலம் தான் எத்தனை எத்தனை மாற்றங்களை செய்து விட்டு எதுவுமே தெரியாத மாதிரி அமைதியாய் இருக்கிறது. வயக்காடு, ஆடு, மாடு, பிள்ளைகள், நான் என என்னவரது உலகமே இவற்றுக்குள் தான் ஐக்கியமாகி இருந்தது. அப்படி இருந்தவரை பாம்பு ஒன்று எமனாய் வந்து தீண்ட எல்லாம் மறந்து பறந்து விட்டார். என்னால் அவரை மறக்க முடியவில்லை. என்றாலும், காலை சுற்றி நின்ற பிள்ளைகளை பார்த்து என் கவலையெல்லாம் நெஞ்சோடு வைத்துகொண்டு உலகோடு ஒத்து வாழ முற்பட்டேன். பத்து ஆண்டுகள் தனி ஒருத்தியாய் நின்று இரு பிள்ளைகளின் திருமணத்தை பலர் பாராட்ட செய்து முடித்தேன். என்னவர், போகி அன்று என் மகனிடம், "குப்பையை எரிச்சது போதுமடா. நம்ம வறுமையை எரிக்க பாருடா" என்றார். என் பையன் அப்பா சொன்ன சொல்லை காப்பாற்றி விட்டான்.  கார், பங்களா என செழுமையோடும் இரு பிள்ளைகளோடும் வசதியாக இருக்கிறான். மகள் மகராசியா குடும்பம் நடத்துறா. இவை எல்லாம் ரசிக்க அவங்க அப்பா மட்டும் இல்லை.

            மனதுக்குள் எண்ணங்கள் அலையலையாய் வந்து போகிறது. கண்நிறைய கண்ணீரோடு கடந்த கால காட்சிகளை கண்டு கொண்டிருந்த நேரம், "என்னக்கா? பொங்கல் வைக்காம உக்காந்துருக்கியே? இந்தா என் வீட்டு பொங்கல்னு" என் சிந்தனையை கலைத்தாள் மல்லிகா. 'இதோ இப்ப பிள்ளைங்க வந்துருவாங்க. வந்த உடனே பொங்கல் வைக்க வேண்டியதுதான். புள்ளைங்க இல்லாம என்னமா பொங்கல்' என மனசோகத்தை வெளியில் காட்டாமல் பேசினேன்.  நேரம் கடந்து கொண்டே இருந்தது. பிள்ளைகளுக்கு என்னமோ ஏதோ என்ற பயம் மனதில் பற்றி கொண்டது. மகனை போனில் கூப்பிட்டால் பதில் இல்லை. மகளை அழைத்தால், 'அம்மா ! அவருக்கு முக்கியமான வேலை . வந்த உடனே வரோம்மா' என்றாள் சலிப்புடன். 

            கிராமமே ஆடிக்களித்த சோர்வில் அயரும் நேரம் . கார் வரும் சத்தம் கேட்டு ஆவலாய் ஓடி வந்தேன். பேர பிள்ளைகள் 'அப்பத்தா!' என ஓடி வந்து கட்டி புடிக்கும் என எதிர் பார்த்தேன். அப்பா அம்மா பின்னால் ஒதுங்கியே நின்றார்கள். 'வாங்கப்பா! வாம்மா!' என அவசரமாய் அழைத்தேன். 'என்னம்மா எப்படி இருக்கே? பொங்கல் வச்சியா?' என கேட்ட மகனிடம், நீங்க யாருமே இல்லாம எப்படிடா பொங்கல் வைப்பேன். இதோ சித்த நாழில பொங்கல் வச்சிருவேன். முதல்ல கொஞ்சம் காப்பி சாப்பிடுங்கப்பா' என்றவளை தடுத்து, அம்மா ! எங்க கம்பெனில எல்லாம் கொண்டாடிட்டு தான் வரோம்'. "லதா அம்மாவுக்கு இந்த சேலையை கொடு" என்றான் மனைவியிடம். மருமகள் என் கையில் புடவை பொட்டலத்தை கொடுத்தாள். நான் வாங்க போகும் வேலை கார் சத்தம் கேட்டது. 'இதோ தங்கச்சி வந்துட்டாப்பா' என வாசலை நோக்கி பாய்ந்தேன். மகளும், மருமகனும் பிள்ளைகளுடன் வந்தார்கள். 'வாடி என் செல்ல  கண்ணு' என பேத்தியை வாரி எடுக்க போனேன். 'மம்மி!' என என் மகளுக்கு பின்னால் போனாள். மனதுக்குள் கொஞ்சம் வலித்தாலும் காட்டிகொள்ளாமல் 'வாங்கப்பா உள்ள' என்ற படி உள்ளே அழைத்தேன். 'அண்ணா நீ எப்போ வந்த ? அண்ணி நல்லா இருக்கீங்களா? புடவை சூப்பர் அண்ணி' என விசாரித்து கொண்டார்கள். 


         அவர்களுக்காக வாங்கி வைத்திருந்த பலகாரங்களையும் பழங்களையும் எதிரில் வைத்தேன். 'அம்மா வயிறு full. உன்ன பாத்துட்டு உனக்கு எடுத்த புடவைய குடுத்துட்டு போகலாம்னு தான் வந்தோம்' என முடித்தாள். 'அண்ணா நீ இருந்துட்டு தானே வர போற'.  இல்லம்மா நாளைக்கு உன் அண்ணிக்கு முக்கியமான மீட்டிங். போயே ஆகணும்' என கிளம்பி கொண்டே 'அம்மா நாங்க வரட்டுமா?' என மகனும், 'அத்தை நாங்க போயிட்டு வரோம்' என முதல் முறையாக முதல் வார்த்தையை உதிரத்தால் அன்பு மருமகள். ' இந்தாம்மா இத வச்சிக்கோ' என பாக்கெட்டில் இருந்து மகன் பணத்தை எடுத்து கொடுத்தான். வாங்கி கொண்டேன். சூட்டோடு சூடாக மகளும் புறப்பட்டாள். 

               இப்போ , எப்பவும் போல நான் மட்டும் தனியானேன். இதே தரையில் என் சேலை முந்தானையில் தலையை நுழைத்து கொண்டும், என்னை அணைத்து கொண்டும் , குன்னிகொண்டும் கூட்டு புழுவாய் சுருண்டு படுத்து 'அம்மா! அம்மா!' வென சுற்றி சுற்றி வந்தே என் செல்வங்கள் எங்கே ? நான் அவர்களை மட்டுமே என் உலகம் என்றிருந்தேன். ஆனால் அவர்களுக்கோ நான் மட்டும் அல்ல. அவரவர் குடும்பம், வாழ்வு, பிள்ளைகள் எல்லாம் உண்டு . ஆனால் இறைவா, அவர்கள் பிள்ளைகளால், இப்படி ஒரு தனிமை நிலையை அவர்கள் அடையக்கூடாது. சின்ன பிள்ளைகள் அவர்கள். தனிமையை தாங்க மாட்டார்கள் என அழுதாலும், என் பிள்ளைகள்  எனக்காக வாங்கி தந்த சேலைகளை கட்டி பிடித்து கொள்கிறேன். அதுவே என் பிள்ளைகள் என் கைக்குள் இருப்பது போன்ற நிம்மதி தருகிறது. (நிம்மதி பூக்கள் இந்த காட்டில் இனியாவது பூக்கட்டும்)

உன் விரல் பிடித்து நடக்க வேண்டுமடா..... !

போகியில் எரிப்பது குப்பை அல்ல 
தீண்டாமை , வேண்டாமை, கல்லாமை, 
கயமை, வறுமை இன்னபிற மைகளைத் தான் 
வறுமை எரிந்து செழுமை 
பூத்தப்பின் பழமை மறவாமை 
முளைவிட்ட பயிராய் வளரவேண்டும் 
நிலவை மட்டுமே காட்டினேன்.

குளுமையாய் அழகாய் இருப்பதால் 
மாறும் நிலவு மனதில் இருக்க 
மறையாத சூரியன் நினைவிலில்லை 
நீயும் ஒரு நாள் மாறுவாய் 
சூரியனாய் வெப்பம் உணர்வாய்
வேர் பிடிக்க உதவும் சூரியனாய்
உன் விரல் பிடித்து நடக்க உதவுவாயா?! 

                                                                                           என்றும் அன்புடன்
                                                                                            புஷ்பம் அமல்ராஜ் 


 


          

14 comments:

  1. Nice story, visualizes the charming, green, slushy village. Captures my imagination with the reality, scintillating story.

    Nice kavithai too.
    I am proud to add my comment for the beautiful story and kavithai.

    ReplyDelete
  2. dear anonymous,


    உங்களுடைய விமர்சனம என்னுடைய பொறுப்பு அதிகமாவதை உணர்த்துகிறது . நல்ல கதைகளை கற்பனை செய்து உங்களின் அபிமானத்தை பெற முயற்சிக்கிறேன் . உங்களின் விமர்சனம் வள்மான கற்பனை யோடுதான் இருக்கிறது .நன்றி . மீண்டும் தொடருங்கள்
    உங்களுடைய விமர்சனம என்னுடைய பொறுப்பு அதிகமாவதை உணர்த்துகிறது . நல்ல கதைகளை கற்பனை செய்து உங்களின் அபிமானத்தை பெற முயற்சிக்கிறேன் . உங்களின் விமர்சனம் வள்மான கற்பனை யோடுதான் இருக்கிறது .நன்றி . மீண்டும் தொடருங்கள்
    உங்களுடைய விமர்சனம என்னுடைய பொறுப்பு அதிகமாவதை உணர்த்துகிறது ல கதைகளை கற்பனை செய்து உங்களின் அபிமானத்தை பெற முயற்சிக்கிறேன் . உங்களின் விமர்சனம் வள்மான கற்பனை யோடுதான் இருக்கிறது .நன்றி . மீண். நல்டும் தொடருங்கள்v


















    vvvvvvvvvvv





































    vv

    ReplyDelete
  3. dear anonymous,


    உங்களுடைய விமர்சனம என்னுடைய பொறுப்பு அதிகமாவதை உணர்த்துகிறது . நல்ல கதைகளை கற்பனை செய்து உங்களின் அபிமானத்தை பெற முயற்சிக்கிறேன் . உங்களின் விமர்சனம் வள்மான கற்பனை யோடுதான் இருக்கிறது .நன்றி . மீண்டும் தொடருங்கள்.

    ReplyDelete
  4. தலைமுறைமாற்றம் அதன் விளைவினை
    தாங்கள் கவிதையின் உவமை (சூரியன், நிலா) தெளிவாக உணர்த்துகிறது.

    கண்ணுக்கும் இனிமையான நிலா காலத்தினால் மறையும் ஆனால்
    சூரியன் (பெற்றோர்) ஓயாமல் ஒளியினை (அன்பு)
    அளித்துக்கொண்டே இருக்கும்.
    சிறப்பான உவமை.

    தன் தனிமைநிலை தன் பிள்ளைகளுக்கு
    அவர்கள் பிள்ளைகளால் வரக்கூடாது என்று
    நினைக்கும் தாயின் மனதினை
    இக்கதையின் மூலம் உணர்வுப்பூர்வமாக கூறியுள்ளீர்கள்.

    இக்கதை அனைவருக்கும்
    ஒரு அறிவுரையாக நான் கருதுகிறேன்.

    இக்கருத்தினை தங்களுடன் பகிர்ந்து கொள்ள
    வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Dear RAJIV GANDHI,

      கதையை உன்னிப்பாக படித்து அழுத்தமான கருத்தினை தெளிவாக உணர்த்திய உங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் . தொடர்ந்து விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

      Delete
  5. வணக்கம் அம்மா..கிராமிய பொங்கலை மையமா வச்சு எழுதுன கத அருமை..இன்றைய நடைமுறைல துரித பொங்கல் விழவா ஆய்டுச்சு இல ம்மா..நீங்க சொன்னது ரொம்ப உண்மை.."
    "என் பிள்ளைகள் எனக்காக வாங்கி தந்த சேலைகளை கட்டி பிடித்து கொள்கிறேன். அதுவே என் பிள்ளைகள் என் கைக்குள் இருப்பது போன்ற நிம்மதி தருகிறது"..அம்மா னா அம்மா தான்..கவிதை சூப்பர் ம்மா .

    ReplyDelete
    Replies
    1. Dharshini Dear;
      வாழ்க் கை என்னும் நூல் கொண்டு நெய்தால் எதாரத்த கதைகள தான் எ ழுத வருகிறது . நடைமுறைபபேச்சில் நீ எழுதும் ;விமர்சனங்ககள் மிகவும் அருமை . நன்றியுடன் அம்மா

      Delete
  6. nice story anna... tel my regards to amma.... title choosen perfect anna...

    ReplyDelete
    Replies
    1. Dear Padmavathy
      Thank u so much for the super comment All credites goes to your babu anna

      Delete
  7. கதையை உண்ணிப்பாக படித்து அழுத்தமான கருத்தினை தெளிவாக உணர்த்திய உங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் . தொடர்ந்து விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. Lovely Pongal based Village Story Periyamma ..........!!!!!!!!!!!!!!!,Elegant Kavithai .............

    ReplyDelete
  9. shafa dear
    thank u shafa. i like your comment so much.kavithi unnaku pidichchiruntha ankku santhosama.

    ReplyDelete
  10. My warm wishes to amma for writing this kind of story. Again one more good story added with her previous list. The story depicts mother's affection over their family members. since changes only static in the realistic world, no one is exception for that. But limitless changes in our life will erode our tradition. Family members should realise their false, otherwise they will meet this kind of situation in the near future. Excellent.... !
    Thank you

    ReplyDelete
    Replies
    1. இன்றைய இளைஞர் பற்றிய பலநுர்று விமர்சனைங்கள் தமிழை படிப்பதும் பேசுவதும் இல்லை என்பதே . வேலை , படிப்பு ,என்றுஅயராது உழைத்துக் கொண்டும் சமயம் கிடைக்கும் போது தமிழைப் படித்து, ரசித்து மனதில் பட்டதை விரிவாக , தெளிவாக , விமர்சிகிறார்கள் . என்பதை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது .வாழ்த்துக்கள் விஜயன்

      Delete