பொங்கலோ பொங்கல்!!!
அன்பு பிள்ளைகளுக்கும், வாசகர்களுக்கும்,
பூக்களின் வாசமாய்
புன்னைகையின் நேசமாய்
புது பொங்கல் பொங்க
புத்துணர்வு உன்னில் தங்க
புகழும் , பாசமும், பண்பும்
என்றென்றும் நிலைத்திருக்க
இறை பாதம் வேண்டி
நல்லாசியுடன் வாழ்த்துகிறேன்.
தன்னந்தனியே நானிருக்க !!!
( புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )
'கொலுசு மணிகள் குலுங்கும் சப்தமில்லாமல் வந்து, என் கண்களைப் பொத்தி நான் யார் ?' என்று கேட்பதும், நீ வரும் வாசனை நான் அறிய வேண்டியே நீ சூடி வரும் மல்லிகையும், என்னை ஆகாயத்தில் பறக்க வைக்கிறது. ஏன் என்றால்? நீ என் அத்தை மகள். நான் வரும் வேளை அறிந்து நீ வேலை பார்ப்பதாய் நடிப்பதும். நீ இருக்கும் இடத்திற்கு நான் எட்டி பார்க்காத போது, நான் போய்விட்டேனோ? என என்னை நீ வந்து பார்ப்பதும், மறக்க முடியுமா?
கோடி கனவுகள் நம் மனதில். நம்மை சேர்த்து வைக்க இரு வீட்டிலும் கூட தடை இல்லை. என்றாலும் எனக்கொரு நல்ல வேலை, கைநிறைய பணம், நீ கேட்டதெல்லாம் மட்டும் அல்ல நான் விரும்பியதெல்லாம் வாங்கி கொடுக்க காத்திருக்கிறேன் வேலைக்காக. என் எண்ணத்தை உன்னிடம் கூறுகையில், "நான் ஒண்ணுமே கேட்கமாட்டேந்தான். அதுக்கெல்லாம் பயபடாதீங்க" என்றாய். உனக்கு அத்தையும் மாமாவும் எப்படி தான் தேர்வு செய்து பேர் வைத்தார்களோ தேன்மொழி என்று. பலமுறை வியந்திருக்கிறேன். நீ எட்டாம் வகுப்பு படிக்கும் போது உன் புத்தகத்தில் ஒரு மயில் இறகை வைத்து "தேனு இந்த மயில் குட்டி போடும்" என நான் வைத்து சென்ற புத்தகத்தை MSc படிக்கும் இன்று கூட , புத்தகத்தை காட்டி "தேவத்தான், நீ குடுத்த மயில் இறகு ஏன் இத்தனை வருஷம் ஆகியும் குட்டி போடல ? அத்தான் நீ பொய் சொல்லிட்ட" என்று நீ காட்டும் பொய் கோவம் கூட ஏன் இத்தனை அழகாய் தெரிகிறது.
வாழ்வின் எதார்த்தங்களுக்கு நடுவில் நான் கட்டிய மனக்கோட்டைகளும், கனவின் சுகங்களும் , நம்மை நாம் வாழ போகும் வளமான வாழ்விற்கு பசுமை சேர்த்து கொண்டுதானே இருக்கின்றது. கற்பனை வாழ்வை மனதில் நிறுத்தி கொண்டு, முயற்சியோடு வேலை தேடியபோது மிக மிக நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. நான் விரும்பிய கை நிறைய சம்பளம் என்பதை விட கை கொள்ளாத அளவு சம்பளம் அதிகமாக தருவதாக சொன்ன போது என் கண் முன்னே கலகலக்கும் உன் சிரிப்போடு அத்தான் உனக்கு கிடைக்காத வேலை வேற யாருக்கு கிடைக்கும் என்ற தேன் சொட்டும் வார்த்தை என் காதுகளில் ஒலித்து கொண்டிருந்தது. இப்போது அப்பா அம்மா மட்டும் அல்ல அத்தையும் மாமாவும் கூட தயாரானார்கள் எங்களின் திருமணத்தை முடிப்பதற்கு. எனது அலுவலகம் பம்பாயில் இருந்ததால் நான் அலுவல் காரணமாக அங்கே பயணப்பட்டேன். அலுவலக நேரம் தவிர செல்போனில் தேன்மொழி என்னோடு தான் இருந்தாள். நாட்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து ஓராண்டை நெருங்கி கொண்டிருதது. எங்களின் திருமணம் சிறப்பாக நடை பெற்றது. ஆறு மாதம் வேலை காரணமாக நானும் தேனும் பிரிந்திருந்தோம். நல்லதாக வீடு பார்த்து கூட்டி செல்வதாக கூறி சென்றேன்.
இருவரும் பம்பாய் வாசிகளாக மாறிப் போனோம். நான் அலுவலகம் விட்டு திரும்பி வரும் வரை தனிமையில் கழித்தாள். கொடுக்கும் சம்பளத்தில் கணக்கில் கொண்டு கம்பெனியில் பிழிந்து எடுத்தார்கள். உடல் உழைப்பு என்பதை விட மூளையின் உழைப்பு அதிகம் என்பதால், மூளை முதல் எண்சான் உடம்பும் சோர்ந்து வீடு வந்து படுக்கையில் விழுந்தால் உலகம் மறந்த தூக்கமும் வாடிக்கை ஆகி விட்டது. கெஞ்சலும் கொஞ்சலும் தேடலும் வாடலுமாய் இருந்தது. வாழ்க்கையின் ருசி மறவாமல் இதே போல் தான் வாழ்வு கழியும் என்று வந்த தேன்மொழிக்கு அடைத்த வாசலும் , நாள் முழுதும் தனிமையும் நரகம் தான் என்றாலும். நான் வந்தவுடன் இரவு நேரமாவது பேசி கழியும் என்றால் என் சோர்வும் உறக்கமும் வேதனையும் சிறிது சிறிதாக வெறுப்பையும் தந்தது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்று என் கம்பெனியில் நடக்கும் பார்ட்டிகளுக்கு அழைத்தபோது அவளது வீம்பு வெளியாகி என்னோடு வராமல் தடுத்தது. அவளது பிடிவாதத்திற்கும் கோபத்திற்கும் இடையில் மாட்டிய நான். மழை பட்டு நனைந்த காகிதமாய் தேய்ந்து போனேன். பண்டிகை வந்தது. வீட்டில் இருந்து வந்த அழைப்பை ஏற்று ஊர் வந்தோம் . என்னிடம் பேச்சை குறைத்தவள் எல்லோரிடமும் விழுந்து விழுந்து பேசினாள். என்னை பழி தீர்ப்பதாய் அவளே கற்பனை செய்து கொண்டாள். மிக மெல்லிய கீறல், எங்களுக்கு இடையில் இடம் பிடித்த வெறுமை, பொறாமை, ஈகோ , விட்டுக் கொடுக்காமை, எல்லாம் இடம் பிடித்து கீரலை விரிசல் ஆக்கியது. பம்பாய் செல்ல தயாரான போது கூட வர வில்லை என்று அடம்பிடித்தாள். எத்தனை சொல்லியும் கேட்காத அவளை வீட்டில் விட்டு சென்றேன். தனியே இருந்த எனக்கு என் கம்ப்யூட்டர் துணை ஆனது. எப்போதாவது வரும் போனில் நான் கரைந்து கரைந்து பேசினாலும் அவள் உறைந்தே இருந்தாள். பணம் கொட்டியது . பாசமோ வற்றியது. படித்த படிப்பை பாழாக்காமல் வேலையில் சேர்ந்தாள். மறுபடியும் நான் அவளை அழைத்த போது வேலை இங்கே இருக்க எப்படி பாம்பே வருவது என வீம்பாய் பேசினாள். சிரித்த சிரிப்பெல்லாம் மறந்து போய் புன்னகைக்கு கூட பிச்சை எடுக்கும் நிலையில் நாங்கள் தொலைத்த புன்னகை எங்கோ ? கண்ணில் படவே இல்லை.
வருடங்கள் மூன்று. எந்த சுகத்தையும் ஏற்க விடாமல் , மறைந்து மண்ணானது. விரிசல் முற்றி பாளம் பாளமாய் வெடிப்பு வளர்ந்தது. நாலாம் ஆண்டு மொத்த குடும்பமும் கோடை திருவிழாவில் கலந்து கொள்ள நான் மட்டும் வாடிய முகமும் வற்றிய உணர்வுகளுமாய் தன்னந்தனியே ஊர் வந்து சேர்ந்தேன். எல்லோரும் என்னை பார்த்து பரிதாப பட்டார்கள். அப்பா, அம்மா அழுதார்கள் என்னை பார்த்து . அண்ணன் தங்கையாய் இருந்த என் அப்பாவும் , அவள் அம்மாவும் கூட பாசத்தை துறந்து உறவை மறந்து இருந்தார்கள். இதை எல்லாம் கண்டு என்னை நானே சரி செய்து பழைய தேவன் ஆக முயற்சித்தேன்.
திருவிழாவின் உச்சக்கட்டமாய் வழுக்கு மர போட்டி தொடங்கியது. ஊர் கூடி தேர் இழுக்க கூட்டம் அலை மோதியது. வழுக்கு மரப் போட்டியில் தேவனின் பெயர் ஒலிபரப்பாகியது. எனது கண்கள் மட்டும் மரம் துளைக்கும் வண்டாய் கூட்டத்தை துளைத்து என் துணை எங்கே? என தேடியது. என் கண்களில் மாய பொடி தூவி மறைந்து இருந்தாள் தேன்மொழி. மரத்தில் ஏறுகிறேன். வழுக்கி கீழே வருகிறேன். தோற்று விட கூடாது என்று முயற்சியோடு ஏறுகிறேன். மேல் நுனியை தொட்டு கட்டி இருந்த துண்டை உருவி விடுவேன் என்ற நம்பிக்கையோடு எட்டுகிறேன். கை வழுக்குகிறது. தலை சுற்ற கீழே கீழே வருகிறேன். "தேவத்தான்" என்ற ஒலி மட்டுமே செவி புலனில் எட்டியது. கண் விழித்த போது என் தேன்மொழி என் கன்னத்தில் விழிநீர் வடித்து, அமர்ந்திருந்தாள். தலையை திருப்ப முடியவில்லை. கண்களை திறக்க கூட முடியவில்லை . என்றாலும், தேன்மொழியை கண்ட மனம் தாவி குதித்தது. கட்டி பிடிக்க முடியவில்லை கைகளிலும் கட்டு. ஆனால் என் மனம் மட்டும் வாழ்த்தி கொண்டே இருந்தது வழுக்கு மரத்தையும், நான் வணங்கும் தெய்வத்தையும். தேன்மொழி என்னை தொட்டு "தேவத்தான்" என்று அழைத்த போதெல்லாம் சொர்க்கம் கண்டேன்.
என் இன்னுயிரே...
சூரிய கதிர்கள் உடைந்து சிதறும் உன் பார்வைகளால்,
என் இதய தடாகம் நிரம்பி வழியும் புன்னகையால்,
தேன்நிறை கிண்ணத்தில் சுற்றி தவிக்கும் எறும்பானேன்.
அன்பு குறையா மனம் வேண்டும், . வம்பில் பிரியா நட்பு வேண்டும்,
என்றும் துணையாய் காதல் வேண்டும், சுற்றம் சிதறா வீடு வேண்டும்.
உயிரே என் இன்னுயிரே, ஈகோ மனதில் வந்தாலே ,
வழுக்கு மரமே வாழ்க்கையாகும்.
அதையும் தாண்டி கூடும் போது
சொர்க்கம் என்னடா தூசு மாத்திரம்.
என்றும் அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்
புஷ்பம் அமல்ராஜ்
ஈகோ மனதில் வந்தாலே ,
ReplyDeleteவழுக்கு மரமே வாழ்க்கையாகும்.
அதையும் தாண்டி கூடும் போது
சொர்க்கம் என்னடா தூசு மாத்திரம்.so superb amma..
thank u da preethi ! ur comments helped me to write nice stories! thankz a lot !!
DeleteSuperb story, It is written like a poetry. Great work with a good message.
ReplyDeleteDear Ravi, thank u so much for the comments ! plz read the upcoming stories & share ur thoughts with us ! thank u !
DeleteHi amma...very cute village love...in every persons life like this thenmozhi character present..poem too lovely.. "அன்பு குறையா மனம் வேண்டும், . வம்பில் பிரியா நட்பு வேண்டும்,
ReplyDeleteஎன்றும் துணையாய் காதல் வேண்டும், சுற்றம் சிதறா வீடு வேண்டும்."my fav lines ma...thanks for giving this story to us..
அன்புள்ள யோஷினி
Deleteஉன்னுடைய எல்லா விமர்சனங்களும் என்னை மீண்டும் நல்ல கதை எழுத தூண்டுகிறது . வர போகும் கதைகளுக்கும் உனது விமர்சனங்களை எதிர்பார்கிறேன் ! :)
என்றும் அன்புடன்
அம்மா !
NICE STORY...
ReplyDeletedear sujatha
Deletethank u so much for your comments
பாபு விட்டுக்கொடுத்தலின் அவசியத்தை
ReplyDeleteஇக்கதை யதார்த்தமாக அனைவருக்கும் சொல்கிறது
and more click it
http://www.twitlonger.com/show/f907aj
thanks for your comment .
Deletecontinue reading and kindly give us your feedback
Well.. We can take this Story as Preventive and Corrective measure... If you observe the Story completely it will show you the Reality of today's life and how it has changed the Natural Character of the human in today's mechanical life.. The Central point is that to give up all your ego's irrespective of age,relationship and money etc...
ReplyDeleteThanks for timely writing such a nice story.. Stick with our Culture..
Wish you Advance Pongal and Tamilar Thirunal Vaazhthukkal to all :)
அன்புள்ள குருமுருகனுக்கு,
Deleteஉங்களுடைய பரபரப்பான வேலைகளுக்கு இடையே எனது கதைகளைப் படித்து விமர்சனம் எழுதிய உங்களுக்கு நன்றி. தமிழ் கதைகளை படிக்க ஆர்வம் இல்லாத இளைஞர் மத்தியில் உங்களை போன்றவர்களை பார்ப்பதில் மகிழ்ச்சி . தொடர்ந்து படிக்க , விமர்சனங்கள் எழுத வேண்டுகிறேன்
A very warm happy pongal for all the readers of this blog. The author provides a very good story for the dissident couples to overcome their problems.We cannot allow the stupid 'ego' in our life. Once enter, it harms our relationships.I am very happy to note here that the author finished this story in favour of the subject unlike her previous stories, which was somewhat tragic. The title "Thannanthaniyae" deserves it and big claps for pictures, verses.
ReplyDeleteThanks for Amma and Babu Ajay.
hi revathi. i'm good. how r u dnging.thanks for ur comment .:)
DeleteHi aunty,
ReplyDeleteHow are you?...
Story is simply super...
Different love story...
Finally that "Kavithai" Is very Nice...
Thanks for this story...
Thanks,
RevathiShenba.D
hi revathi. i'm good. how r u dnging.thanks for ur comment .:)
Deleteஉங்கள் கவிதைக்காக என் வார்த்தைகள்
ReplyDeleteகவிதையின் வாயிலாக கதைகள்
கதைகள் வழியாக கருத்துக்கள்
கவி உலகம் காணாத கற்பனைகள்
உங்கள் கற்பனையில் நான் கண்டேன் கனவுகள்
என் கனவில் நான் காணாத காட்சிகள்
காட்சிகளை நிஜமாக்க துடிக்கும் என் கண்கள்
கவிதைக்கு நன்றிகள் பல
:)
Deleteஅன்புள்ள அருண் .
உங்களது கவிதை அருமை .இனி வரும் கதைகளுக்கும் உங்களது கவிதைகளை எதிர் பார்கிறேன் .
என்றும் அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்
Happy Pongal to all. Nice thanksgiving poem. Nice poem and story for the Pongal festival, it seems like reading this blog gives the satisfaction of eaten a nice tasty pongal with all of our friends and relatives.
ReplyDeleteHappy Pongal to All. Be cheerful and happy
உங்களது பெயர் சொலமலே நீங்கள் எழுதும் விமர்சனங்கள் எனக்கு நல்ல கதைகளை எழுத உதவி செய்கிறது நன்றி . தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்
DeleteVery Nice Story Periyamma ..................!!!!!!!!!!!!, Apt Story for Younger generations, Thank you Periyamma
ReplyDeleteShafa dear,
DeleteI feel very happy to see youngsters like you reading Tamil blogs even in your busy schedule. I am very proud of my children.Hats off.
Romba nalla irunthichu..ipo unmaiya ithan nadakuthu..panam sambatheekrom nimaithi illa...last la antha vazhukumaram really unexpected ah.irunthu..
ReplyDeleteNaan en friends - ku intha stroy ah fwd panitan..
Annaivarukum❗❗❗ Iniya PONGAL nalvazhthukal ♥♥
மிக்க நன்றி .. உங்கள் கருத்துக்களுக்கு :) உங்கள் நண்பர்களும் இந்த கதையினை படித்து பயன்புற செய்யுங்கள். . . என் அம்மா இதில் எழுதிய அநேக கதைகள், கதையல்ல நிஜம். உங்களுக்கு என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்....
Delete