Pages

Saturday, 11 June 2011

காடெல்லாம் பூத்திருக்கு (10) !


அக்னி சாட்சியாக.........!
( புஷ்பம் அமல்ராஜ்  - 044 25730952 / 9941459848 )


             
" என்னடி தாமரை நீ ரொம்ப அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டியோனு  நினைக்கிறேன்"." இன்னும் கொஞ்சம் பொறுமையா யோசிக்கலாமே". "ரோஜா, உன்னோட பயம் எனக்கு புரியுது ஆனா மாத்தி யோசிச்சாலும் இது தான் சரின்னு படுதுடி". "சரி நீ எடுத்த முடிவு கூட சரி தான்". "அதை ஏன் இங்கேயே செய்ய கூடாது?"  "நம்ம பிரெண்ட்ஸ்  கிட்ட சொல்லி செய்யலாமே? " அதை விட்டுட்டு 'எங்கேயோ ஒரு காட்டுக் கோவில்லே தான் செய்வேன்னு அடம் புடிக்கிறே?' என்றேன். 'காட்டுக் கோயில் சாமிகிட்ட வேண்டிக்கிட்டு தாலி கட்டினா காலமெல்லாம் கண்கலங்காம பாத்துக்கும்' என்றாள். 'என்னடி நீ எம்.பி.எ படிச்சே இப்படி ஒரு மூட நம்பிக்கை வச்சிக்கிட்டு நீ தான் இப்படின்னா தமிழ் செல்வன் அவருமில்லடி உன்ன மாதிரியே இருக்காரு'. 'அவராவது உனக்கு எடுத்து சொல்வாரு பார்த்தா, தாமரை ஆசைபடுதுங்க அது விருப்பப்படியே நாங்க ரெண்டு பேருமாப் போய் கலியாணத்தை முடிச்சிட்டு கிராண்டா பார்ட்டி ஒன்னு குடுத்துரலாம்' என்று சொல்றாரு. 'சரியான ஜோடி தான் நீங்க ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காம இருக்கீங்க'. ' நாளைக்குத்தானே கிளம்புறீங்க. நான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விடுகிறேன். பத்திரமா திரும்புங்க.' 

              'நாளைத்தானே நம்ம ஆபிசிலிருந்து ரிசார்ட்டுக்கு போக போறோம்'. அதைத்தான் வீட்டில் சொல்லி விட்டு புறப்பட போறேன். 'மறந்து எதையாவது உளறித் தொலைச்சிடாதீங்க'.

              தாமரை வீட்டிற்கு வந்தவுடன் "அம்மா என்கிருகீங்க ? பசி எடுக்குதும்மா, எதாவது இருந்தா எடுத்து வை. சாப்பிட்டு கடை வரை போய் வரணும் " என்றாள். "வந்து வீடு ஏறல, மறுபடி கடையா?" என்ற அம்மாவிடம். "இல்லேம்மா நாளை என் பிரெண்டுக்கு திருமணம் இல்லையா ? அதனாலேயே அவளுக்கு ஒரு பட்டு புடவை வாங்கணும். நீ வந்து செலக்ட் பண்ணும்மா, நான் சாப்பிட்டு வரேன். நீ ரெடியாகு "என்றேன். அம்மா பட்டுப்புடவை செலக்ட் செய்ய என்றவுடன் தடதடவென ரெடியானாள். நானும் சாப்பிட்டு ரெடியானேன். எப்போதுமே அம்மா கைசமையல் நன்றாய் இருக்கும். இன்று இன்னும் நன்றாய் இருந்தது. 'அம்மா இன்னிக்கு சமையல் சூப்பர் ' என்றேன். 'எப்போதும் போலத்தாம்மா செஞ்சேன். நீ இன்னிக்கு குஷியா இருக்கியே அதனாலே ருசியா தெரிஞ்சதோ? என்னவோ? ' என்றார். நான் மகிழ்ச்சியாய் இருப்பது அம்மாவுக்குத் தெரிஞ்சிரிச்சோ. அகம் காட்டும் கண்ணாடி முகம் அல்லவா? நானும் அம்மாவும் கடைக்குச் சென்று அம்மாவுக்குப் பிடித்த புடவையை வாங்கினேன். "பெண் என்ன நிறம்?" என்றாள். 'ஏறக்குறைய என் நிறம்' என்றேன். கடைக்காரர் ஆசிர்வாதம் பண்ணித்தந்தார். "அம்மா, அந்தப் பொண்ணு நல்லாயிருக்கனும்னு நீயும் ஆசிர்வாதம் பண்ணிகுடும்மா" என்றேன். அம்மாவும் கண்மூடி ஆசிர்வாதம் பண்ணினாள். 'நாளை கலியானத்துக் போயிட்டு எங்க கம்பெனி ஸ்டாப் எல்லாம் ரிசார்ட்டுக்கு போறோம்மா. அப்பா வந்தா சொல்லிடு' என என் ரூமுக்குச் சென்றேன். சற்று நேரத்துக்கெல்லாம் அப்பா வந்தார். அம்மாவும் அவரிடம் எல்லாம் சொன்னார்கள். கேட்டுக் கொண்டு தானிருந்தேன். அப்பா, தஞ்சாவூர் பக்கம் வந்த வரனைப் பற்றி அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  'ஐம்பது சவரன் நகை கேட்கிறார்களாம்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஐம்பது சவரன் ரொம்ப ஆசைபடுகிறார்கள். இல்லாத அப்பா, அம்மா என்ன செய்வார்கள்? கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையே. பொண்ணும் சம்பாதிக்கணும், அழகாயிருக்கணும், அடக்கமயிருக்கணும், ஐம்பது சவரனும் வேணுமாம். என்னடா சாமி கொடுமை என்று எண்ணிக் கொண்டே உறங்கி போனேன். பொழுது நல்ல படியாக விடிந்தது.      
               
                   அப்பா ஹாலில் இருந்தார். 'தாமரை நான் வந்தப்போ நீ தூங்கிட்டே , அதனாலே பேச முடியலே. நம்ம ஊர் பக்கத்துப் பையன் நல்லா படிச்சி நல்ல கம்பனிலே பாம்பேல்ல வேலையாம், நம்மாளுங்க பையனை கண்டுபிடிக்கறது சிரமமாச்சே. நீ என்னம்மா சொல்றே. உங்களுக்குத் தோணுறத செய்ங்கப்பா ' என்றேன். 'அம்மா, நான் சீக்கிரம் கிளம்புறேன்' என்றேன். 'சரிசரி கிளம்பு ' என்றாள். 'பாட்டியோட சின்ன நகை டப்பா எங்கே' என்றேன். 'அது எதுக்குடி? ' . 'அம்மா எல்லாத்தையும்   போட்டுட்டு போக முடியாது. அதிலே வச்சி எடுத்துட்டு போறேன்' என்றேன். 'யேய்! அது பரம்பரையாய் தாலி வைச்சி புதுப் பெண்ணுக்கு குடுக்குற பெட்டி. அது எதுக்குடி' என்றாள். 'ஏன் தாலிதான் வைக்கணுமா? குடும்மா நெறைய வேலைப்பாடு இருக்குதில்லே என்  பிரண்ட்ஸ் கிட்ட காட்டிட்டுக் கொண்டு வர்றேன்' என்றேன். 'யேய்! பத்திரமா கொண்டு வந்துடு' என்று அரைகுறை மனதோடு தந்தார்கள். வாங்கி பத்திரப் படுத்திக் கொண்டு சென்றேன்.

                   வழியெல்லாம் ஒரே பரபரப்பு. தமிழுக்கு போன் செய்த போது அவனும், மோகனும் நகைக் கடையில் தாலி வாங்கிக் கொண்டு இருப்பதாகவும் நேர கிளம்பி ரேமான்ஸ் துணிக் கடைக்கு வருமாறு சொன்னார்கள். நானும் சென்றேன். தமிழுக்கு அழகான ஷர்ட் எடுத்துக் கொண்டு ரோஜாவும் அங்கே வந்து விடவே நால்வரும் பேசிக் கொண்டே இருந்தோம்.

                      'ஏன் தாமரை குறிப்பா அந்தக் கோவிலுக்குத் தான் போகனுமின்னு பிடிவாதமா இருக்கீங்க. அதுவும் நீங்க ரெண்டு பேரு மட்டும்' என்று கேட்டார். 'சின்ன வயசிலிருந்து அப்படி அந்த சாமிக்கிடே ஒரு ஈர்ப்பு. நாங்க ரெண்டு பேரு மட்டுமே தீர்மானம் பண்ணி ரெண்டு வீட்டுக்காரங்களும் இல்லாமச் செய்யறோம். அதனால தான் இந்த முடிவு. நாங்க போயிட்டு உடனே வந்துட போறோம். அப்புறம் பார்த்துக்கலாம். இது பாருங்க பரம்பரையா புதுப்பெண் தாலி வைக்கிற பெட்டி' என எடுத்து காட்டியபோது அதன் அழகை மூவரும் ரசித்து அதில் வாங்கிய புது தாலியை வைத்துப் பத்திரப் படுத்தினார்கள். 'நீங்க ரெண்டு பேரும் யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம். நாங்க வந்த பிறகு சொல்லிக்கலாம். பஸ்டாண்ட் வந்தடைந்தோம். ஏறி எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். சரி பத்திரமாய் போய் வாங்க, எங்கள் வாழ்த்துக்கள் . நாங்க வரட்டுமா'. சற்று நேரத்துகெல்லாம் பேருந்து புறப்பட வெளிக்காற்று வேகமாக வீச தொடங்கியது. 

            "தமிழ்ச்செல்வன் எம்.பி.எ , தாமரை எம்.பி.எ இருவரும் காட்டுக் கோவிலில் திருமணம் செய்ய போகிறார்கள்" என கிண்டலாய் பேச நறுக்கென எறும்பு கடிக்கிறதே என பார்த்தால் தாமரை தான் என்னை கில்லி விடுகிறாள். 'யேய் என்ன கிண்டலாயிருக்கா? ஆமா நாம கலியாணம் கட்டிக்கிட்டு எப்படி இருப்போம் கனவு காணப் போகிறேன் தமிழ்' என்றாள். சரி நான் உன்கிட்டே எப்படில்லாம் அடங்கி நடக்கணுமோ? நானும் சின்னதா ஒரு கனவு கண்டு கொள்ளவா? பெர்மிசன் கிராண்டட். ரொம்பவும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் கண்களை மூடிக் கொண்டு சாய்ந்தபடி படுத்திருந்தனர். 

                    திடீரென எழுந்த தாமரை தாலிப் பெட்டியை தன் கையில் பொத்திப் பிடித்தவள் தமிழின்  கையை எடுத்து தன் கையோடு பொத்திக் கொண்டாள். நான்கு கைகளின் பிடிக்குள் பெட்டியிருக்கையில் பேருந்தில் அனல் தெரிகிறது. தமிழ், தாமரை இரு வார்த்தைகள் மாத்திரம் எதிரொலிக்கிறது. ஐயோ என்ற ஒலியை விட தாமரை என்ற சப்தம் மாத்திரமே அதிகம் கேட்டதாக தப்பி பிழைத்தோர் தெரிவித்தனர். 

                 மறுநாள், "ரோஜா பேசுகிறேன்". "அப்பா நம்ம தாமரை" என்ற போது, மறுமுனையிலிருந்து ரோஜா "நான் அப்பா தான் பேசுறேன்". "தாமரை ரிசார்ட்டுக்குப் போயிருக்கா" . "இல்லேப்பா அவ அந்த பஸ்லே, எந்த பஸ்லேம்மா". அவரது பதறலை பார்த்த அம்மா ரிசீவரை கையில் வாங்கி " ரோஜா நே எந்த பஸ்ஸ சொல்ற". " அம்மா தாமரை போனா பஸ் எரிந்து போச்சிமா சீக்கிரம் வாங்க". அவசரமாய் புறப்பட்டனர். 

A man looks at a burning bus after the assassination of Benazir Bhutto during her election campaign in Rawalpindi today, during protests in Lahore Pakistan 27 December 2007. Pakistani opposition leader Benazir Bhutto died Thursday after a suicide bomber targeted her vehicle following a election campaign rally in the city of Rawalpindi, government and police officials said. The former prime minister, who had survived a previous suicide attack two months ago after returning from exile abroad, died after being rushed to a local hospital following the attack, said Colonel Imran Yaqub, an Interior Ministry spokesman.  EPA/RAHAT DAR
                 எரிந்து கூடாய் நிற்கும் பஸ்லிருந்து இரு உடல்கள் கைகளுக்கு இடையில் தாலி பெட்டி இருப்பதை கண்டவுடன் கத்தி கதறி மயக்கம் போட்டு விழுந்த தம்பதிகளை மருத்துவமனைக்கு அழைத்து போனது ஆம்புலன்ஸ். ( கோடை பூக்கள்   மீண்டும் பூக்குமா? )



காற்றிலே கலைந்த கனவுகளே!!! 

எத்தனை கனவுகள் கண்டோம்  !
அத்தனையும் நினைவாச்சா  ?
நாளைய நாளை நீ கண்டால்
நண்பா நீ தான் பாக்கியவான்
நான் இல்லாத போதும்
உன்னோடு என் ஞாபகங்கள் 
என்றென்றும் வாழ்வதால்
நானும் வாழத்தானே 
என் பிரியத்தின் ஆணிவேரை 
உன்னிடமே விட்டுச் செல்கிறேன்
அக்னியின் சாட்சி நாங்கள்
அழிவில்லை பிரிவில்லை 
                                                                                            என்றும் அன்புடன
                                                                                            புஷ்பம் அமல்ராஜ்  

6 comments:

  1. Nice Story and Kavithai. This kavithai is so genuine and simple. I love this.

    ReplyDelete
  2. இப்ப நடக்ர சூழ்நிலைக்கு தகுந்த கதை..but feeling for the climax.:(.poem very nice ma.

    ReplyDelete
  3. hmm.. feeling for thamari and tamil....:(

    ReplyDelete
  4. superb........Hands off to our author....... 'அம்மா இன்னிக்கு சமையல் சூப்பர் ' என்றேன். 'எப்போதும் போலத்தாம்மா செஞ்சேன். நீ இன்னிக்கு குஷியா இருக்கியே அதனாலே ருசியா தெரிஞ்சதோ? என்னவோ? ' என்றார். நான் மகிழ்ச்சியாய் இருப்பது அம்மாவுக்குத் தெரிஞ்சிரிச்சோ. அகம் காட்டும் கண்ணாடி முகம் அல்லவா?
    gud moral story for youngsters........

    ReplyDelete
  5. Heart touching & very nice story

    ReplyDelete