அன்பு பூக்கள் கொட்ட ஆறிய காயம்!!!
( புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )
எண்ணக் குவியல்களின் மேல் ஏறி, கடந்த நாட்களை எட்டி பார்க்கிறேன். உதிர்ந்த இலைகள் சருகுகளாய் பொன்னிறத்தில் கொட்டி கிடப்பது போல் என் கடந்த நாட்களும் உதிர்ந்த சருகாய் தெரிகிறது. சருகுகள் மக்கினாலும் உரமாவது போல் காலங்களால் அலைகழிக்க பட்டாலும் உதிர்ந்த நாட்கள் ஏதோ ஒரு வகையில் உரமாய் மற்றொரு செடிக்கு துணை நிற்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் சூரிய கதிர்கள் ஒளி மறைத்து ஓய்வெடுக்க போகும் நேரம் நானும் எனது நடை பயிற்சியை முடித்து திரும்பிக்கொண்டிருக்கிரேன். மரங்கள் அடர்ந்த சாலையின் ஓரம் தாயும் ஆறுமாத குழந்தையும் ஒதுங்கி சோர்ந்த நிலையில் படுத்த படியும் இல்லாமல் உட்கார்ந்த படியும் இல்லாமல் கால் நீட்டி இருந்தார்கள். நானும் பேருந்தின் வருகைக்காக காத்திருந்த போது அவர்களின் நிலையை கண்டேன். கண்களின் சோகத்துடன் விழிநீர் வடிந்த படி இருக்க குழந்தை தரையில் தவழ்ந்த படி இருந்தது. இதோ பாரும்மா வண்டி எல்லாம் போற இடம் குழந்தை எடு என்றேன். அவள் ஒற்றைக் கையில் குழந்தையைப் பிடித்தபடி வெறித்த பார்வையுடனும் சோகத்துடனும் இருந்தாள். அவள் சோகத்திலும் அழகாகவே இருந்தாள். நான் அழைப்பது காதில் விழுகிறதா என்பது கூட தெரியவில்லை. தட்டி பார்த்த போது தான் தூக்கத்திலிருந்து விழித்தது போல் தலை நிமிர்ந்தாள். " ஏம்மா குழந்தையை இப்படி தரையில் விட்டிருக்கியே! எழுந்திரும்மா " என்றேன். அவளால் எழுந்து நிற்க முடியவில்லை. தாங்கி பிடித்து நிறுத்தினேன் . கால் மடங்கியது. வலி தாங்க முடியாமல் மறுபடி கால் முடிக்கி கீழே உட்கார போனாள். "என்னமா என்னாச்சி என்றேன்" பேச்சே வரவில்லை. எனது பேருந்து வருவதை பார்த்து, "சரி நமக்கென்ன" என எண்ணி போக தயாரான போது என் புடவை தலைப்பை பற்றி இழுத்தாள். அந்த பெண்ணிடம் "என்னம்மா?" என்று கேட்ட போது தனக்கு பேச வராது என்பதை செய்கையால் சொன்னாள். எனக்கு தூக்கி வாரி போட்டது. பக்கத்தில் உட்கார்ந்து "என்னம்மா?" என கேட்டேன். என் உதடு அசைவை பார்த்து "தண்ணி வேண்டும்" என செய்கை காட்டினாள். சரி ரோட்டில் அவளிடம் கதை கேட்க முடியாது என ஒரு ஆட்டோவை பிடித்து மெதுவாக ஏற்றினேன். மிகவும் சிரமப்பட்டு என்னை பற்றிய படி ஏறினாள். குழந்தையை மெதுவாக தூக்கி ஏற்றினேன். என் வீட்டின் முன்னால் ஆட்டோவை நிறுத்தி அவளையும் குழந்தையையும் மெதுவாக இறக்கினேன். பூட்டை திறந்து அவளை உள்ளே அழைத்து வந்தேன். குழந்தை சிரித்த படி உள்ளே வந்தது. எனது கட்டிலில் அமர வைத்தேன். "இரும்மா நான் போய் உனக்கு காப்பி போட்டுவருகிரேன்" என அடுக்களைக்குள் சென்றேன்.
சட்டென அவள் தண்ணீர் கேட்டது நியாபகத்துக்கு வரவே தண்ணீர் எடுத்து கொடுதேன். தண்ணீரை கண்டதும் ஆவலாய் வாங்கி குடித்தவள் குழந்தைக்கும் கொடுத்தாள். குழந்தைக்கு என்ன அப்படி ஒரு தாகமோ மடக்மடக்கென குடித்தது. காப்பி போட்டதோடு இரு தோசையும் சுட்டு கொண்டு வந்து தந்தேன். பசியோடு இருந்ததால் இருவருக்கும் தேனாய் இனித்திருக்க வேண்டும் . சாப்பிட்டார்கள், சாப்பிட்டதும் தட்டை எடுத்து கொண்டு வந்தவளை "கொடுமா" என்றேன். வேண்டாம் என்றவள் கழுவுமிடம் எங்கே என சைகை காட்டினாள். காட்டியதும் தட்டை கழுவி கவிழ்த்து விட்டு வந்தாள். முந்தானையில் தண்ணீர் நனைத்து குழந்தையின் வாயை துடைத்து விட்டாள். குழந்தை என்னை பார்த்து சிரித்தவாறு என்னிடம் தாவியது. வாரி அணைத்து கொண்டேன். எத்தனை காலம் ஆயிற்று இப்படி ஒரு பாசத்தை கண்டு .
எனது காலமும் வீணாய் கடந்து விட்டது.சரி முதலில் இந்த பெண்ணை பற்றி கேட்கலாம் என அந்த பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்தேன். சைகை மூலமாக "ஏன்? இப்படி வந்தே" என கேட்டேன். ஒரு நோட்டும் பேனாவும் கேட்டாள். கொடுத்தேன்.
அவள் எழுத தொடங்கினாள். நானும் மதிய சமையல் வேலையை தொடங்கினேன். குக்கரில் அரிசியை கழுவி வைத்து விட்டு எட்டி பார்த்தேன். குழந்தையை மடியில் போட்டுக் கொண்டே எழுதி கொண்டிருந்தாள். மறுபடி சாதம் ஆனவுடன் எட்டிப் பார்த்தேன். குழந்தை கட்டிலில் தூங்கியது. அவள் இன்னமும் எழுதிக் கொண்டே இருதாள். என்ன இவ்வளவு எழுதுகிறாளே என்று எண்ணியவளாய், அவளை பற்றி அறியும் ஆவலில் வேகமாக தயிர் சாதம் மட்டும் கிளறி உருளைக்கிழங்கு பொரியலை செய்து விட்டு கேசை அணைத்து விட்டு வந்தேன் . அவளும் முடித்திருந்தாள். அழுதழுது கண்கள் சிவந்து போயிருந்தது .
சிவப்பாய் இருந்த அவள் முகம் மேலும் சிவந்து வீங்கி இருந்தது. "அழாதே" என அவளை சமாதான படுத்தினேன் . அவளின் எழுத்துக்கள் மணி கோர்த்தது போல் அழகாய் இருந்தது. வாசிக்க ஆரம்பித்தேன்.
மரம், செடி, கொடிகள் அனைத்தும் பூத்து குலுங்கும் பெரிய நிலப்பரப்புக்கு இடையில் மிக அழகிய பள்ளி கட்டிடம் தலை நிமிர்ந்தது இருக்க அமைதியான சூழலில் அமைந்திருந்தது அந்த பள்ளிக்கூடம். எந்த நேரத்திலும் எந்த சத்தமுமே கேட்காத இடம். சில வேளை எழும் சிரிப்பொலி கைதட்டல் தவிர வேறேதும் கேட்க்காத ஊமை பள்ளிக்கூடம். எங்களை போன்றோரின் படிப்பிற்காக உள்ள இடம். அமைதியாய் போய் கொண்டிருந்த பள்ளி வாழ்வில் மின்னலாய் வந்து ஒளிகொடுத்து உணர்வுகளை தூண்டி எழுப்பியது ஆனந்தனின் வரவு. அவனை எல்லோரும் அழகான சுறுசுறுப்பான பையன் என்பார்கள். வகுப்பில் ஏதாவது செய்து எங்களை மிக மகிழ வைக்கும் அவன் பெரிய பணக்கார வீட்டு பிள்ளை என்பார்கள். அவனை பள்ளியில் விடுவதற்கு அப்பாவும் , அம்மாவும் பெரிய காரில் வருவார்கள். அவனது அப்பா ஆனந்தனை அணைத்தபடி சாந்தமாய் வருவார். அவனது அம்மா ஆடம்பரமாய் அலட்டலாய் வருவாள். காரை விட்டிறங்கியதும் ஆனந்தன் ஆவலாய் எங்களை பார்க்க ஓடி வருவான். அவனை கண்டதும் துள்ளும் என் மனம் என்னிடம் வந்து பேச மாட்டானா என ஏங்கும். ஏன் இந்த மாற்றம்.
எனக்கு தெரியவில்லை. சில வேளை என்னை பார்த்து புன்முறுவல் பூப்பான். பூவால் என்னை குளிப்படியது போன்ற உணர்வு. நாட்கள் ஓடியது. கால் பந்தி விளயடியவனின் காலில் அடிபட்டது அறிந்து ஓடி சென்று பார்த்தேன். நன்றி என சொல்லியவனை கண்டேன். என் கண்ணில் துளிர்த்த கண்ணீர் கண்டு ஒன்றும் இல்லை சரி ஆகிவிடும் என விழி நீர் துடைத்தான். அவன் விரல் பட்ட இடத்தை தொட்டு பார்த்து பூரிப்படைந்தேன். நட்பு வளர்ந்தது.
பள்ளி இறுதி ஆண்டு முடித்த இருவரும் கல்லூரி படிப்புக்கு சென்றோம். ஆனந்தன் இன்றி என் வாழ்வில் ஆனந்தமே இல்லை என நானும் அதே உணர்வில் அவனும் இருந்தோம் . எங்கள் படிப்பு முடிந்த நிலையில் அப்பாவிடம் அறிமுக படுத்தி,என் வாழ்க்கை துணையாக இவளை தான் தேர்ந்தெடுத்துள்ளேன் என்றான். அவரும் மிக மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டார். அம்மாவிடம் அறிமுகம் செய்தான். அரை மனதை சிரித்து கொண்டார்கள். நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. நானும் ஆனந்தனும் எப்போதாவது அவர்களின் வீட்டிற்கு செல்வோம்.
அப்பா அன்போடு வரவேற்பார் ஒரு கட்டத்தில் எண்களின் திருமணம் முடிந்தது. அம்மா மட்டும் அவ்வப்போது எங்க இருவரின் குறைகளை சுட்டி காட்டி நான் பயந்தது போல் பிறக்கும் குழந்தை இவர்களை போல் இருந்து விட்டால் எண்ண செய்வது என கலக்கத்தில் கண் கலங்குவார். தாயின் நியாயமான கவலை தானே என நாங்களும் கலங்கினோம். இதனால் இறைவனனின் திட்டத்தை தள்ளி போடா முடியுமா? மகிழ்வும் கலக்கமும் கலந்த சூழலில் என் வயிற்றில் இவன் உருவானான். என் ஆனந்தனுக்கு மட்டும் அளவில்லாத மகிழ்ச்சி. என்னை இளவரசியை நடத்தினார். நானும் குறை இன்றி மகிழ்ந்தேன். காலம் எதை பற்றியும் கவலை படாமல் நீரோடையாய் சலசலவென ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் வரபோகும் எங்கள் குழந்தையை பற்றிய கனவுகளில் மிதந்து கொண்டு வந்தோம். மாலை வேளை புழுக்கம் அதிகமாய் கொண்டிருந்தது. ஆனந்தனும் நானும் காரை எடுத்து கொண்டு கடற்கரை நோக்கி சென்றோம். என்னை சீண்டிக் கொண்டும் சிரித்து கொண்டும் காரை ஒட்டி சென்ற ஆனந்தனின் பார்வை என் மேல் இருந்த வேளை குறுக்கே ஓடிய சைக்கிள் சிறுவனைத் தவிர்க்க திரும்பிய வேகத்தில் எதிர் பட்ட லாரியில் இடிக்கவே, என்னை அணைத்த படி இருவரும் கீழே சாய்ந்தோம். கண் விழித்து பார்த்தேன். என் ஆனந்தனை தேடினேன். கைகளால் சைகை காட்ட கூட முடிய வில்லை. அழுகிறேன் என் அருகில் யாரும் இல்லை. எப்போதாவது வருகிறவர்கள் கூட என் ஆதங்கத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. என் பிறவி நிலையை எண்ணி அழுது நொந்து போனேன்.
நாட்களின் கழித்தலில் எழுந்து நடக்க முடிந்த நிலையில் தடுமாறிய படி வெளிவந்து நின்றபோது , மாமா என் கைகளை பிடித்தார். என் கண்ணில் வழிந்த நீரை துடைத்தபடி அணைத்து அழைத்து சென்றார். ICU வார்டுக்குள் நுழைந்த நான் அவரின் கோலத்தை கண்டவுடன் மயக்கத்தில் விழப் போனேன். எப்படியோ சமாளித்து அவரின் கைகளை பிடித்தேன். கன்னத்தில் நீர் வடிய முத்தமிட்டேன். உடலின் சிறிய அசைவு , கண்களின் இமைகள் துடிக்க என் முகம் பார்க்கிறார். அந்த பார்வையில் பல விவரங்கள் பரிமாறப் பட்டது. அவர் கைகளை பிடித்தபடி இருந்த என்னை நர்ஸ் அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என அவர் பிடித்திருந்த கையை எடுத்து என்னை இழுத்தார். அவர் பற்றி இருந்த என் கைகளை இழுத்த படியே வெளியே வந்தேன். மயங்கி போனேன் கண் விழித்து பார்த்தபோது வீட்டை சுற்றிலும் கூட்டம். நிதானமாய் நினைவுக்கு கொண்டு வந்த போது தொடர்வாய் நிகழ்வுகல் கண் முன் தோன்றிய வேளை பொறி தட்டியது. என் ஆனந்தன் எங்கே என வெளியில் ஓடி வந்தேன். என் ஆனந்தன் அசையாமல் மாலையுடன் படுத்திருந்தார். என் வாழ்வே மறைந்தது. என் ஆனந்தன் என்னோடு இல்லை என்ற உணர்வு எனை ஆட்டி படைத்தது.
காரியங்கள் எல்லாம் முடுந்த அன்று எனக்கு வலி எடுக்கவே மருத்துவமனை அழைத்து சென்றார்கள். ஆனந்தனையே உரித்து வைத்தாற்போல் ஆண் குழந்தை. என் ஆனந்தனே என்னிடம் வந்த உணர்வில் மகிழ்ந்து போனேன். சில நாட்களில் அம்மாவிடம் மாற்றங்களை கண்டேன். "என் மகனை போயிட்டான், இவளை இன்னும் ஏன் வைத்திருக்க வேண்டும்?" என்ற பேச்சினால் அத்தைக்கும் மாமாக்கும் அடிக்கடி வாக்குவாதம். பிசினஸ் விசயமாக மாமா ஊருக்கு சென்றார். எதோ காரணமாய் பேசிகொண்டே அத்தை என்னை கீழே தள்ளிய போது நிமிர்ந்து பார்பதற்குள் தலையில் விழுந்த கட்டை என்னை நினைவிழக்க செய்தது. விழித்து பார்த்த போது என்னையும் குழந்தையும் வெளியே போட்டிருந்தார்கள். நாடு நிசி வேளை பயந்தபடி கதவை தட்டினேன். திறந்தவர்கள் நாளைக்குள் வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் உள்ளே சேர்த்தார்கள். ஊமை பிள்ளையை வளர்க்க பாடாய் பட்டேன். இனி ஒரு ஊமையை வளர்க்க முடியாது என கூறினார்கள். கையில் ஆயிரம் ரூபாயுடன் வெளியேறினேன். எங்கெங்கோ சுற்றி இங்கு வந்தேன் என சுயசரிதம் எழுதி இருந்தாள்.

எனக்கு என்ன செய்வது என தெரியாத நிலையில் சரி ஒருவாரம் இருக்கட்டும் என எண்ணினேன். நான் வேலைக்கு போய் திரும்பிய போய் வீடு திரும்பும்போது வீடு பளிச்சென இருந்ததோடு இருந்த காய்கறிகளோடு சமையலையும் முடித்திருந்தாள். என் களைப்பை போக்க காப்பியுடன் நின்றாள். யாரும் இல்லாமல் தனித்திருந்த என்னக்கு துணையாகவும், என் வீட்டுக்குள் வளைய வரும் அழகு குழந்தையும் கிடைத்ததில் பெருமிதம் கொண்டேன். நாட்கள் நகரும் வேகத்தில் மூன்று ஆண்டுகள் கடந்து இன்று ஜூனியர் ஆனந்தனின் பள்ளி ஆண்டு விழா என்ற அழைப்பிதளுடனும் பெரியம்மா என்ற கட்டி பிடித்து முத்தமிட்ட அவனின் அன்பு வியப்படைய வைத்தது. மறுநாள் நானும் அவன் அம்மாவும் பள்ளி சென்றோம். மாறுவேட போட்டி என்றார்கள். போட்டி தொடங்கியது. பாரதியின் வேடமணிந்த சிறுவனின் கணீர் என்ற குரல் அனைவரையும் திகைக்க வைத்தது.
" ஜாதிகள் மதங்கள் இல்லை
மனிதரில் பேதம் இல்லை
ஊனம் என்று யாரும் இல்லை
ஊக்கமும் முயற்சியும் உண்டானால்
உயர்வுக்கு தடையென ஏதும் இல்லை
ஏற்றமுடன் எழுச்சி என்றும்
நமக்கு வாழ்வில் தரும்
வெற்றி மேல் வெற்றி "
அரங்கம் அதிர கைதட்டல். கண்களில் ஆறாய் பெருகும் கண்ணீர்கிடையில் நானும் அழகிய ஜோதியும் கட்டி பிடித்தோம்.
என்றும் அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்
Very encouraging story. Touched by the nice ending with super poem. Nice story for this generation.
ReplyDeletewonderful story.
ReplyDeleteஎன்ன சொல்லன்னு தெரியல.எழுத வார்த்தைகள் இல்லை.
ReplyDeleteஇளைப்பாற இடம் இல்லை என்றாலும் - நல்ல
இதயங்கள் உண்டு.
தொடருங்கள்.......... ,,,,,,,,,,,
ரொம்ப நன்றி அர்ச்சனா ...
ReplyDeleteஅன்புள்ள வாசகர்களுக்கு ,
ReplyDeleteஉங்களது ஊக்கமுள்ள விமர்சனங்கள் என்னுடைய எழுத்தை
மேலும் வலுஉள்ளதாக மாற்றுவதில் மிக்க நன்றி
என்றும் அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்
அன்புள்ள வாசகர்களுக்கு
ReplyDeleteஉங்களின் விமர்சனகள் மட்டுமே என் எழுத்துக்களை வலிமை உள்ளதாக மாற்றும்
ஆதலால் உங்க்ள் கருத்துகளை எழுதுங்கள் .
என்றும்அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்