Pages

Saturday, 30 April 2011

காடெல்லாம் பூத்திருக்கு (8) !


பாரெல்லாம் விலை பேசினாலும் பாசத்துக்கு உண்டோ விலை?

( புஷ்பம் அமல்ராஜ்  - 044 25730952 / 9941459848 )

     காத்திருந்த நேரத்தைக் கணக்குப் பார்க்கிறேன். மனம் கனத்துப் போயிற்று. ' என்ன ஆயிற்று , வருவதாகச் சொன்னவளை இன்னும் காணோமே? தவிர்க்க முடியாத காரணம் ஏதாவது என்றால் கூட போனில் சொல்லியிருக்கலாமே?' என எண்ணிக் கொண்டிருக்கையில் என்னை நோக்கி வரும் உருவம் தங்கை தான் என உறுதி செய்து கொண்டேன். வந்தவள் பக்கத்தில் அமர்ந்து கைகளை இருக்க பிடித்துக் கொண்டாள். அந்த இருக்கமே அவளின் மன இறுக்கத்தை வெளிக்காட்டியது. 

     " என்னம்மா என்ன ஆச்சு? " பதிலே இல்லை. " நீ பேசாமலிருந்தால் எனக்கு எப்படித் தெரியும்? எதுவாயிருந்தாலும் சொல்லு". எனது பேச்சி சற்று கடுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். " உன்னைப் பார்க்கக் கூடாதாம். பேச கூடாதாம். ' உனக்கு துரோகம் செஞ்சிட்டு தன சுகம்தான் பெரிசா நெனச்சிட்டு போயிட்டானே? குடும்ப மானம் போச்சு' ன்னு சத்தம் போடுறாங்க. உங்க கூட பேசாம, பார்க்காம இருந்தா தலையே வெடிச்சிடும் போல இருக்கு. அண்ணன் தங்கசியாயிருந்தும் தெரியாமப் பார்த்துப் பேசிக்கிறோமே, ரொம்ப கொடுமைய இல்லையா? "  " சரிம்மா விடு. கொஞ்ச நான் அப்புறம் அம்மா அப்பா கோபம் மாறிப் போகும். "

     " என்ன அண்ணா, நீ மட்டும் எனக்காக முப்பத்திரண்டு வயசு வரை திருமணம் செய்யாம காத்திருந்தே. எனக்கு வரன் சரியா அமையல. அண்ணி வீட்டிலே திடீர்னு கலியாணத்தை நிச்சயம் பண்ணப் போனதாலே தானே. நீயும் இந்த முடிவுக்கு வந்தே. நம்ம வீட்டிலே பழைய வேண்டாத விசயங்களை மனசிலே வச்சிக்கிட்டு வீணா வம்பு பண்ணிட்டாங்க. உன்னை வீட்டை விட்டுப் போக சொல்லலைனா நான் கவலைபடாம ஜாலியா இருந்திருப்பேன்". " என்னவோ போம்மா. எல்லாமே வேகமா முடிஞ்சி போச்சு. உங்க அண்ணியும் உசுர விட்ட்ருவேன்னு ஒத்தக் கால்லே நின்னா. வேற வழி தெரியலாமத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். அதுக்கு நீயும் உங்க அன்னிக்கு சப்போட்டா இருந்துட்டே. இப்பப்பாரு அம்மா, அப்பா என்னை வெறுக்கிற மாதிரி ஆயிடுச்சு". 

     " அண்ணா, நீ எடுத்த முடிவு சரியானதுதான். உனக்குன்னு ஒரு வேலை வேண்டும். அதான் இப்போ ரொம்ப அவசியம். ஆமாம்மா, அதுக்காக தான் பல வழிகளிலும் முயற்சி பண்ணுறேன். வெறுங்கை முழம் போடுமா? "அண்ணா" வெறுங்கை என்பது பலவீனம். பத்து விரல்களும் உன் மூலதனம் எனப் படிச்சிருக்கேன். உன் பத்து விரல்களோடு இந்த தங்கச்சி தரும் இதையும் வச்சிக்கிட்டு சின்னதா ஏதாவது பிசினஸ் தொடங்கு. முடியாது என நெனச்சி நாளைக் கடத்துரதை விட முடியும் என்ற நம்பிக்கையோட செய்யுற காரியமெல்லாம் வெற்றியடையும்". 

     தங்கை கொடுத்த வளையல்களை கண்டு திடுக்கிட்டவனாய் " வேண்டாம்மா, என் கூட பேச கூடாது எனக் கட்டளையிடும் அம்மா, அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவு தான்" என்றவனிடம் " இதோ பார், இதுக்கும் அந்த வளையலுக்கும் வித்தியாசம் தெரியுதா, அப்புறம் என்ன நான் சமாளிச்சுகிரேன்" என்றவள், ஆமா அண்ணி, இன்னுமா வேலை முடிச்சு வரலை?" என்றால். " அதோ பாரு வந்துக்கிட்டே இருக்கா" என சைகைக் காட்டினான். 

    "என்ன நாத்தனாரே , எப்ப வந்தீங்க? இப்பத்தானே வேளையிலே சேர்ந்திருக்கேன், வேலைய கத்துக்க கொஞ்சம் டைம் எடுக்குது. என்னம்மா, எப்படி இருக்கே? என்னால தானே உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்?  சில வேளைஅப்படி செஞ்சிருக்க கூடாதுன்னு தோணுது".

     " அது சரி நீங்க இருட்டுன்னுகூட பார்க்காம எங்க வீட்டுக்கு வந்தாலே தானே எங்க அண்ணனுக்கு வாழ்க்கையிலே வெளிச்சம் வந்துச்சு. சரி விடுங்க அண்ணி, நாளைக்கே கூட அத்தையும், மருமகளும் சேர்ந்துகிட்டு என்னைக் கழட்டி விட்ட்ருவீங்க. சரி அண்ணி, நேரமாகுது, நடந்த கதைய மறந்துட்டு நடக்கப் போறதா கவனிங்க அண்ணா. வரட்டுமா... இந்தா அண்ணா அன்னிக்கு பூ வாங்கிகுடு" என நூறு ரூபாயைக் கொடுக்க " வேண்டாம்மா, என்கிட்ட பணமிருக்குது. நான் வாங்கி குடுக்குறேன். நீ பத்திரமா போம்மா" என்றான். 

     அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் " உங்க தங்கச்சிக்கு உங்க மேலே ரொம்ப பாசம்க. உங்களுக்காக அவ ரொம்ப விட்டுக் கொடுத்திருக்கா" என்றவளிடம் இரு வளையல்களையும் கொடுக்கிறான். 

    " என்னங்க இது? என ஆச்சரியபட்டவளிடம் அண்ணனுக்காக தங்கையின் மூலதனம்" என்றவனிடம், " ஏங்க உங்களுக்குக் கொஞ்சமாவது இது இருக்கா? பாவம் அவ, நம்மைப் பார்க்க வர்ரதுகூட தெரியாம வரும் பொது இது கூட சேர்ந்தால் வீட்டிலே என்ன பாடுபடுத்துவாங்க ? " என்றவளிடம் " நானும் சொன்னேன். நான் சமாளிச்சிக்கிரேன்" என்றவனிடம் " இதோ நான் போட்டிருக்கரதைத் தாரேனே என்றவளைத் தடுத்து அதையும் வாங்கினாத்தான் ஏதாவது செய்ய முடியும்" என்றான். இதோ பாரும்மா, நா படிச்சது கேட்டரிங் தான். பெரிய நட்சத்திர ஹோட்டல்ல வேளை பார்க்குறதை விட சுய தொழில் தொடங்கினா நல்லாயிருக்குமே என நெனச்சேன். இப்போ முதலும் இருக்கு, என் தங்கச்சி சொன்ன மாதிரி பத்து விரலும் மூலதனம் என்ற என் உழைப்பும் இருக்கு. புதுத்தெம்பும் தைரியமும் தன்னம்பிக்கையும் கெடச்சிருக்கு. நாளைக்கே இது தொடர்பான வேலையைத் தொடங்குறேன். உன் சம்பளத்திலே குடும்பச் செலவை பார்த்துக்கோ. எனக்குக் கிடைக்கும் வருமானம் என் தங்கையின் திருமணத்துக்கு தான் என்னம்மா சரி தானே. !" என்றேன். மகிழ்ச்சியோடு தலையாட்டினாள். " ஆனா உங்க வீட்டிலே ஏற்கனவே என்னைக் குறைவா எடை போட்டிருக்காங்க. இப்ப சாப்பாட்டுக் கடை வச்சிருக்கானேன்னு கேவலமா நெனைப்பாங்க" என்றான். " ஏங்க நம்ம நாட்டிலிருக்க முக்கால் வாசிப் பேரோட வாழ்க்கை இப்படித்தாங்க கெடுத்து. அவங்க இவங்க நேனைக்கிரதேல்லாம் பெருசா எடுத்துக்காம உழைங்க, தாழ்வு மனப்பான்மையை விட்டுருங்க. நாம வாழ்வது நமக்காகத்தானே தவிர   மற்றவர்களது  விருப்பு வெறுப்புக்கு இடமே இல்லைங்க. உழைங்க, உங்களுக்கு துணையா நானும் , உங்க தங்கச்சியும் இருக்கோம்" என்றாள். 

    இந்த நம்பிக்கையான வார்த்தைகள் உரமிட மளமளவென வேலைகள் தொடங்கியது. பதினைந்து நாட்களில் 'தங்கை ஷாப்' என்றொரு நாகரிக இளைஞர்களுக்கான சிறிய கடை புதிய கலாச்சார உணவு வகைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. சிலசமயம் சுறுசுறுப்பாகவும், சில வேளை சற்று மந்தமாகவும் நடந்த கடை தற்போது மிக சுறுசுறுபாயிற்று. கண்மூடி கண் திறப்பதற்குள் மூன்றாவது ஆண்டில் கால் வைத்த வேளை சுப முகூர்த்ததில் தொடங்கியது. 

     " என்ன தங்கை ஷாப் மூடியிருக்கு?" என்றவரிடம் " தங்கைக்கு கலியாணம். ஓனர் ரொம்ப பிசி. ஒரு வாரம் விடுமுறை" என்றார். 

    வீட்டில் எல்லாரும் மகிழ்ச்சியோடு திருமண ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தார்கள். "அம்மா எல்லாம் வாங்கியாச்சில?" எனக்கேட்ட மகனிடம் " எம் மருமகளே  எல்லாம் லிஸ்ட் போட்டு வாங்கிட்டாடா' என மருமகளை புகழ்ந்து கொண்டிருந்ததை பார்த்து அண்ணியும், நாத்தனாரும் பொருள் பொதிந்த சிரிப்பை உதிர்த்தார்கள். காலம் நல்ல நண்பன், ஆழமான காயங்களை கூட ஆற்றிவிடும்.. (மீண்டும் பூக்கும்

பாசத்தின் மறுபெயர் உறவு....!!!!!
                    
சீரான தென்றலாய் வரும் 
பெற்றவரின் பாசம் !!!

வானையும் மேகத்தையும் 
உடைத்து தூறலாய் வரும்
அண்ணன் தங்கை பாசம்!!!

வானவில்லாய் வளைந்து 
வண்ணம் காட்டி 
வளைத்து போடும் 
காதலியின் பாசம் !!!

என்னவும் முடியாமல் 
அள்ளவும் முடியாமல் 
கண் சிமிட்டும் விண்மீனாய் 
முதுமையில் கண்ணாம்பூச்சி ஆடி 
தலை ஆட்டியபடி முத்தம் தரும் 
தாத்தா பாட்டி பாசம் !!!

தரை இறங்கிய விழுது 
வேறாய் மண்ணில் இறங்கி 
உன்னையே காக்கும் 
நட்பின் பாசம் !

பாசத்துக்கு உண்டோ விலை !!!
                                                                    என்றும் அன்புடன் 
                                                                    புஷ்பம் அமல்ராஜ்  

9 comments:

  1. super story...........poem fantastic.........

    வானையும் மேகத்தையும்
    உடைத்து தூறலாய் வரும்
    அண்ணன் தங்கை பாசம்!!!(babuanna)

    தரை இறங்கிய விழுது
    வேறாய் மண்ணில் இறங்கி
    உன்னையே காக்கும்
    நட்பின் பாசம் !(my sweet frnd PERIYAMMA)

    பாசத்துக்கு உண்டோ விலை !!!

    ReplyDelete
  2. Every time, coming up with fantastic story and poem. I am becoming the fan of this site.

    Really nice, keep writing.

    ReplyDelete
  3. Pushpam Amalraj: Dear readers i am very happy to read your comments .Your comments encourages me very much.I hope your comments make me write nice stories and poems>><<.

    ReplyDelete
  4. அன்புள்ள பெரியம்மா..
    கதையும் கவிதையும் அசத்தல்....

    இறைவனின் அருளால் எங்களுக்கு வழிகளை மறந்து வலிமையை தரும் வண்ண வண்ண படைப்புகள் இயற்றும் நீங்கள் கிடைதுள்ளீர்கள்.
    நீங்கள் மேலை நாடு செல்வதாக கேள்விப்பட்டேன். உங்கள் பயணமும் படைப்புகளும் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.

    இன்னும் பல காடுகள் பூக்கட்டும்......

    ReplyDelete
  5. அன்புள்ள பெரியம்மா..
    கதையும் கவிதையும் அசத்தல்....

    இறைவனின் அருளால் எங்களுக்கு வழிகளை மறந்து வலிமையை தரும் வண்ண வண்ண படைப்புகள் இயற்றும் நீங்கள் கிடைதுள்ளீர்கள்.
    நீங்கள் மேலை நாடு செல்வதாக கேள்விப்பட்டேன். உங்கள் பயணமும் படைப்புகளும் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.

    இன்னும் பல காடுகள் பூக்கட்டும்......

    ReplyDelete
  6. ALAGIYA JOTHI SAID,
    Hai amma, the story is very nice. Intha kathai, engalukku nambikai tharum vagaiyil irunthathu. passathirku villai illai enbathai intha kathai moolam purinthu kondom.engal valkaiyil Yentha soolnilayilum pasathai vitu koduka mattom.
    $HAPPY MOTHERS DAY$

    ReplyDelete
  7. இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.


    அழகிய ஜோதி சொல்வது,
    இந்த கதை தன்னம்பிக்கை தரும் வகையில் இருந்தது. இந்த கதையின் மூலம் பாசத்திற்கு விலை இல்லை என்பதை புரிந்து கொண்டோம். எங்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் பாசத்தை விட்டு கொடுக்க மாட்டோம்.

    ReplyDelete