( புஷ்பம் அமல்ராஜ் - 044 25730952 / 9941459848 )
கோடை வெயில் வாட்டி எடுக்க தூக்கம் கண்ணை தழுவாத இரவு வேளை. ஃபேன் சுற்றிய வண்ணம் இருந்தாலும் புழுக்கம். தலையெல்லாம் வியர்த்து கொட்ட "ஏங்க மொட்டை மாடியில் போய் படுத்துக்கலாமா ?" என அவரிடம் கேட்ட போது சட்டென எழுந்து பாய் தலையணையை எடுத்து கொண்டு 'வா போகலாம்' என்றார். மேலே சென்று படுக்கையை போட்டோம். லேசான காற்று மெல்ல வந்து உடலைத் தொட்டிலாக்கி தாலாட்டியது. தூக்கம் மட்டும் கண்களில் புகாமல் அழிச்சாட்டியம் பண்ணியது. வானத்தை நோக்கிய படி படுத்திருந்தேன். நிர்மல வானில் பஞ்சு பொதிகளாய் பல்வேறு உருவங்களை உருவாக்கி வெண் மேகங்கள் விளையாட்டு காட்டியது. சிங்கம் ஒன்று வாய் திறக்க குறு முயல் ஒன்று அதான் வாய்க்குள் சென்றது. கருமேகம் ஒன்று வெண் திரளைச் சுற்றி தட்டாமாலை ஆடியது. விண்மீன்கள் மினுக் மினுக்கென கண்சிமிட்டியபடி இதை கண்டு ரசித்து சிரிப்பது போல் தோன்றியது. வெண் நிலவோ குளிரொளி தந்து இவை கண்டும் காணாதது போல் ஊர்வலம் போய்கிறது. எத்தனை இன்பம் வான் வெளியில். மனம் மகிழ்ச்சியில் துள்ள மயங்கி போனேன் . இயற்கையே உன் தூரிகையில் எத்தனை படைப்பு திறன்.
உறக்கமே என்னில் நீ விலகி நின்றாய் நன்றி உனக்கு. நாளைய கனவில் இன்றைய நினைவுகள் நிச்சயம் வரும் . அல்லியும் மல்லியும் தந்த மணத்தோடு தங்க நிலா வான் கூட்டுக்குள் மெல்ல மறைய தொடங்கியது. கிழக்கே தனக்கே உரிய கம்பீரத்தோடு அகண்ட ஒளி பரப்பி அண்டம் ஆட்கொள்ள அழிகிய வண்ணங்களை அள்ளி வீசியபடி சோம்பல் முறித்து எழுகிறது சூரியன். அதன் வருகை கண்டு சிறகு தட்டி பறக்கும் பறவை இனம். மணம் வீசி மலரும் பூவினம். இரவெல்லாம் இலைகளின் மேல் தன்னாட்சி புரிந்த பனி துளி எல்லாம் பறக்கிறது. இரவின் மாயாஜாலத்தின் என்னவரிடம் வியந்து உரைத்தேன். " ச்ச! நான் தான் நல்லா தூங்கிட்டேமா ! " என கவலையோடு சொன்னார்.
அன்று மாலை காற்று வாங்க நானும் அவரும் கடற்கரை சென்றோம். கடலின் அலையில் கால் வைத்த போது காலை தழுவி ஓடியது கடல் நீர். காலுக்கு அடியில் இருந்த மணல் என்னை அறியாமலே அரித்து சென்ற போது கால் கூசிற்று. அது கூட சுகமே. மறுபடி இறுக்கி பிடித்த போதும் அதே அனுபவம். வானில், நீரில், இலையின் நுனியில் துளிர்க்கும் பனியில் பரிதியின் ஒளியில் நிலவின் அழகில் நிர்மல வானில் என இயற்கையில் கொட்டிகிடக்கும் சுகங்கள் எத்தனை! எத்தனை!.
காலை நேரம் கடற்கரை எல்லாம் மக்கள் கூட்டம். ஒவ்வொருவரும் வெவ்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டனர். நடை பயிற்சி, விளையாட்டு பயிற்சி, சிரிப்புக்கென ஒரு பயிற்சி, யோகா பயிற்சி, கடற்கரை முழுவதும் தனிதனி பயிற்சி கூடங்கள். எல்லாம் முடிந்து அவர்கள் செல்கையில் புகையை கக்கிய படி வாகனங்கள் பறக்கின்றன. வாகனம் விடும் புகையால் மாசு படுகிறது சுற்று சூழல். உடலை காக்க பயிற்சிக்கு வந்தவர்கள், எட்டா தூரத்திலுள்ள உள்ள ஒசோனை ஓட்டை போட்டு விட்டு அல்லவா செல்கிறார்கள். ஓசோனின் ஓட்டை வழியே புது புது நோய்கள் வந்த வண்ணம் இருக்க நாம் அவைகளுக்கு புதிய பெயர்கள் சூட்டி மருந்துகள் கண்டு புடித்து கொண்டிருக்கிறோம். அதற்கு போலியாக மருந்து கண்டு பிடிப்பதில் வேறொரு கூட்டம் தயாராகிகொண்டிருக்கிறது.
காடுகளை அழித்த மனிதன் வெட்டி சாய்த்த மரங்களுக்கு எண்ணிக்கை இல்லை. மரங்கள் அற்ற பூமியில் மலிந்து போயின துயரங்கள். மழை இல்லை, நீர் நிலைகளில் கரை இல்லை, சுவாசிக்க தூய காற்றும் இல்லை, நீர் வாழ் உயிரினம் உய்ய வழி இல்லை. கூடுகள் இன்றி அலைந்தன பறவை இனம், அவற்றை சுலபமாய் வேட்டை ஆடியது மனித இனம். காடெல்லாம் பூத்திருக்க கண்டு களித்த மனித இனம் கல்லால் கட்டிய மாளிகையை மேலும் மேலும் உயர்த்தவும் மெருகூட்டவும், நினைத்த போது நெஞ்சகத்தில் வேரூன்றிய ஆணவம் அணுவை பிளக்கவும் அதில் ஆயிரம் அழிவுக்கும், சாதனைகள் புரிய முற்பட்ட போது அணுவை பிளந்தான். அணு உலைகள் எந்த நாட்டில் அதிகமோ அதுவே வல்லரசு என வாழ்த்த பட்டது.
எதனை கொண்டும் அழிக்க முடியா பிளாஸ்டிக் மண்ணில் வீச புதைந்து புதைந்து நீர் ஊற்று கண்கள் அடைபட்டு போனது. கடலில் வீச வீச கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து போகும். மரங்கள் அடர்ந்த இடத்தில் மழை கொட்டினாலும் வேருக்குள் நீர் செல்ல விடாது தடுத்து அணை போடும். தேங்கி நிற்கும் நீர் வெளிசெல்ல இடம் இன்றி துர்நாற்றம் அடிக்கும். மனித உடலில் நோய்களை பரப்பும். மனிதன் ஆக்கிவிட்ட பிளாஸ்டிக்குக்கு அழிவே இல்லை. அதனால் மனிதனுக்கு தொல்லையோ தொல்லை.
மனிதன் அழித்த மரங்களை, செடிகளை, மீண்டும் ஓரளவாவது புதுபிக்க பழக வேண்டும். உன் நண்பனின் பிறந்த நாளுக்கு செடியில் இருந்து கொய்த மலர்களை விடுத்து, ஒரு செடியை பரிசாக கொடு. அது வளர்ந்து வளர்ந்து பூக்கும் போதெல்லாம் உன்னை ஞாபகப்படுத்தும். மரம் என்றால் கனி தரும் போதெல்லாம் உன் நட்பின் இனிமையை உணர செய்யும். மனிதர்களால் கை விடப்பட்ட வேளை கூட இயற்க்கை உன்னோடு வந்து மனதுக்கு தெம்பும் தைரியமும் தந்து வழிநடத்தும். மொத்தத்தில் மனிதன் இயற்கையை நேசிக்க கற்றுக்கொள்ளவும், கற்றதை நினைவில் கொண்டு பழகும் நாளே பூமி சொர்க்கமாகும் நாளாகும். அந்த சொர்க்க பூமியில் வாழ நாங்கள் இருவரும் ஆசையுடன் காத்திருக்கிறோம் என்ற போது என் பேரன் சிரிக்கிறான். ஏனென்று கேட்டால் ஆசை இருக்கலாம் அது பேராசையாய் இருக்க கூடாது பாட்டி. ஏனெனில் உங்களுக்கு இப்போதே 95 தாத்தாக்கு 100. இன்னுமா வேண்டும் வாழ்வு? கிண்டலாய் அவன் கூறிய வாழ்த்து வாழ்க வளமுடன். (புதிய பூக்கள் மீண்டும் பூக்கும்)
வானுயர்ந்த மரங்கள் ,
சுற்றி படர்ந்த கொடிகள்,
வகைவகையாய் மலர்கள்,
தேகம் சிலிர்க்க தென்றல் ,
அந்தி சாய்ந்த வேளை,
மின்மினி அடிக்கும் வெளிச்சம்,
பரவசமும் பயமும் கலந்து ,
படபடக்க வைக்கும் உள்ளுணர்வு,
கைகோர்த்த படி நடக்கும் எங்களுக்கு,
இறைவன் கொடுத்த ,
இயற்கையின் இனிய வரவேற்பு !!!
எப்படி மறப்பது அந்த நாளை,
ஏக்கமாய் எண்ணுகிறேன் இந்த நாளை!!!
வானுயர் மரங்கள் இல்லை,
வண்ணவண்ண பூக்கள் இல்லை ,
சில்லென்ற காற்றும் இல்லை,
கண் சிமிட்டிய மின்மினியும் இல்லை,
வெண்சாமரம் வீச மரங்கள் இல்லை,
வெறிச்சோடிய பொட்டலில்,
பறவைகள் அடையும் கூடுகள் அழிந்து,
மனிதர் அடையும் வீடுகளாய்,
காட்சி தருகின்றன நாங்கள்
ரசித்து நடந்த நந்தவனம்!!!
எங்களின் இணைந்த கைகள் ,
பிரிந்து பதைபதைகிறது,
இது சோகமா? வேதனையா?சோதனையா?
இயற்கையை அழிக்க மானிடா,
உனக்கென்ன உரிமை? துணிவு?
இந்த கொடுமைக்கு ஒரு நாள் ,
தீர்வு வரும் அந்நாளில்,
கடலின் ஓடும் கப்பல் சாலையில் சரிந்து கிடக்கும்,
நீ சொகுசாய் பயணித்த வாகனம்,
கடலில் பொம்மையாய் மிதக்கும் ,
நீ வாழும் கல்மரக்காடு ,
அத்தனையும் பூமித்தாயின் அகலத்,
திறந்த வாய்க்குள் சங்கமம் ஆகும்.
கடல் நீர் அத்தனையும்,
ஆணவமாய் நீ ஆண்ட,
அண்டத்தை அமிழ வைக்கும்.
மனித உடல்கள் ஆயிரமாயிரமாய்,
ஆழப்படு குழியில் இயற்கையே
அடக்கம் செய்யும் காசின்றி
தேவை தானா? மனிதனே சிந்தித்து பார்.
சொந்தங்கள் அற்ற பூமியில்
பாசத்துக்கு ஏங்கும் பாவியாய்
தனந்தனி மனிதனாய்
தவித்தல் உனக்கு தேவை தானா?
நான் தான் வல்லவன் என காட்ட
கட்டிய அணு உலைகள் அத்தனையும்
கட்டுப்பாட்டை மீறி வெடித்ததுவே ,
அதன் வீரியத்தை அடக்கல்
ஆயிற்றா உனக்கு ? விளைவு
பலநூறு ஆண்டுகள் உன் சந்ததி
குறை உடலாய் குற்றுயிராய்
அணுவின் ஆக்கிரமிப்பில் இருந்து
தப்பா முடியாமல் திண்டாடுமே !
இனியேனும் சிந்திப்பாயா ?
இயற்கையின் கோபத்தை
சற்றேனும் தணிப்பாயா?
சிந்தித்து செயல் பட்டால்
உனக்கு மட்டும் அல்ல
மனித குலத்துக்கே மறுவாழ்வு !!!
என்றும் அன்புடன்
அம்மா....மிகவும் அழகான வரிகள்......பூமியின் வெப்பத்தை தடுக்க எங்களால் முடிந்தவற்றை கண்டிப்பாக செய்வோம்.........அன்பு மகன் அருள்
ReplyDeleteReally nice story, interesting and informative.
ReplyDeleteYouth should take a moral and plan their lives accordingly. Please write more and often.
பசுமையான கதை+நல்ல வர்ணனை!
ReplyDeletenice..
ஆம் பசுமையான .. பசுமைக்கான கதை
ReplyDeletenice one.
ReplyDelete