Pages

Saturday, 19 March 2011

காடெல்லாம் பூத்திருக்கு (5) !






மடிந்து  விட்டதோ?! 
கண் சிமிட்டிய இளந்தளிர் " இல்லை " என்றது !!!
( புஷ்பம் அமல்ராஜ்  - 044 25730952 / 9941459848 )

     அமெரிக்காவிலிருந்து ஒரு மாத விடுமுறைக்காக வந்திருந்த என் பேத்தி கண்மணி இன்று ஊர் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள் . ஒரு மாதம் நொடியில் கழிந்து விட்டது போன்ற உணர்வு எனக்கும் அவள் தாத்தாவுக்கும். எங்களது பழைய கதைகளை கேட்பதும் , பண்பாடுகளைத் தெரிந்து கொள்வதும் அவளுக்கும் பிடித்தமான காரியம். 

     என் மடியில் தலை வைத்து கோழிக் குஞ்சாய் கட்டிப் பிடித்து உறங்கிய போது அவள் வயதில் அவள் அத்தையும் இப்படித்தநிருந்தால் என்பதை நினைவூட்டியது. கால ஓட்டத்தில்  சில நிகழ்வுகள் மறந்து போகும். ஆனால் சில சம்பவங்கள் மனதுக்குள் நீருபூத்து இருக்கும். மறுபடி வரும் சந்தர்பங்களில் அனல் தெரியும். இன்று அவள் அத்தையும் குடும்பம். குழந்தைகள் என அவள் வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருந்தாலும், அம்மா, அப்பாவை அன்று போல் இன்றும் நேசிக்கிறாள். 

     என் பேத்தி  விரும்பிய பொருள்களை எல்லாம் வாங்கி பெட்டியில் அடுக்கி தயார் செய்து விட்டோம். அவளைப் பிரிவது சங்கடம் தான் என்றாலும் போகும் நேரத்தில் அவளைச் சங்கடப்படுத்த வேண்டாமென வெளிக்காட்டவில்லை. ஒரு வழியாக அவளை விமான நிலையத்தில் விட்டுத் திரும்பி வரும் போது பேருந்தில் ஏறினேன். ஏகப்பட்ட கூட்டம். நல்ல வேலை அவள் தாத்தாவை வீட்டிலேயே இருக்கச் சொல்லி விட்டு  வந்தேன். இல்லாவிட்டால் இந்தக் கூட்டத்தில் ரொம்ப சிரமப்பட்டிருப்பார். 

     நிற்பவர்கள் ஒற்றைக் காலில் மட்டுமே நிற்க முடியும் என்பது போல் நெரிசல். எப்படியோ நானும் கூட்டத்தில் ஒருத்தியானேன். கல்லூரி மாணவர்கள் பத்துப் பேர் ஏறினார்கள். ஏறியவர்களின் பேச்சும், சிரிப்பும்  ஏதோ ஒரு திரைப்படத்தை பற்றியதாக அமைய தாங்கள் மட்டுமே பேருந்தில் இருப்பதாக எண்ணியவர்களை போல சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.  இட நெருக்கடி ... வியர்த்துக் கொட்டுகிறது. மூச்சிவிடக்  கூட முடியவில்லை. ஆனால், அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாதவர்களைப் போல் தங்களுக்குள் ஓர் உலகம் அமைந்தது போன்று மிக ஜாலியாக இருந்தார்கள். மற்றவர்களுக்குத்தான் அவர்களின் சத்தமான பேச்சும், சிரிப்பும் வேண்டா வெறுப்பாக இருந்தது. நடத்துனர் கூட பயணச் சீட்டு கொடுக்க சிரமப்பட்டு " சார் , கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்" என்றார். அசைந்து கொடுத்தார்களே தவிர ஒதுங்கவில்லை. 

     ' என்ன இது பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற இங்கிதம் கூட தெரியாமல் இந்தக் காலத்தில் பிள்ளைகள் இப்படி இருக்கிறார்களே. ..' என எனக்கு முன்னாள் நின்ற என் வயதை ஒத்த அம்மா முனங்கினார். ஆண்களுக்கு கூட கோபம் தான் என்ன செய்ய...?  அவர்கள் ஒரு கூட்டமாய் பத்து பேராய் இருக்கிறார்களே எப்படிச் சொல்வார்கள்?  சென்று கொண்டிருந்த வண்டி தீடீரென்று பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. எட்டிப் பார்பதற்குள் கம்பியை பிடித்து கொண்டு வாசல் ஓரமாய் நின்றிருந்த பெண் நிலை தடுமாறி ஆடை அலங்கோலமாய் பறக்க, கீழே  விழுந்தாள்.  யாரும் எதிர் பார்க்க வில்லை. அரட்டை அடித்து கொண்டிருந்தவர்களில் ஒருவன் பக்கத்துப் பெண்ணின் துப்பட்டாவை உருவினான். அந்தப் பெண் பயத்தில் காத்த முடியாமல் விழிக்க ' சாரி '  ஒரே வார்த்தை.

    துப்பட்டா விழுந்த பெண்ணின் மேல் போர்த்தப்பட்டது. பேருந்தில் வந்த அனைவரும் எப்படி நடந்தது என்பதில் ஆராய்ச்சி செய்ய ஆனால் அந்தப் பையன்களோ அடுத்து என்ன செய்யலாம் என ஆய்ந்து ' டேய் கர்சிப் கொடுடா ... இரத்தம் போகுது" என வாங்கி இறுக்கிக் கட்டினான். '"டேய் மாப்ளே ! எந்தப் பெண்ணோட பேக்கிலே போன் நம்பர் இருக்கா பாரு. இந்தா செல் போன் " " ஆட்டோ கூப்பிடுடா... பக்கத்திலே ஆஸ்பத்திருக்குத் தூக்கு" என பல உத்தரவுகள் இராணுவ நடவடிக்கையாய் தொடர ஆட்டோவில் ஏறியவுடன் " அம்மா யாரவது பொம்பளைங்க வாங்கம்மா" என அக்கறையுடன் அழைத்த போது அனைவரும்க்கும் தயக்கம். நேரம் கடத்த நேரமில்லை என அவர்களின் கண்களில் தெரிந்த அவசரம் கண்டு " தம்பி! தள்ளி உட்காரப்பா. நான் வாரேன். " என நான் ஏறி பெண்ணை என் மடியில் சாய்த்து கொண்டேன். மருத்துவமனையில் நடந்த விவரம் , பேருந்து எண் என எல்லா விவரமும் கூறி அந்தப் பெண்ணை சேர்த்தேன். அவளிடமிருந்து கிடைத்த எண்ணுக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு மருத்துவமனையின் பெயர், விவரம் கூறியவுடன் உடனே வருவதாகக் கூறினார்கள். மருத்துவர் மருந்து எழுதிக் கொடுத்து வாங்கி வருமாறு சொல்லவே அவர்களிடமிருந்த பணத்தை சேர்த்தார்கள். நானும் என்னிடமிருந்த பணத்தையும் கொடுக்க மருந்து வாங்கி வந்தார்கள். அதற்குள் அவளின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். விவரம் கூறி சமாதானப்படுத்திய பின் அவர்கள் என்னைப் பார்த்து கும்பிட்டபோது " இங்கே பாருங்க , நான் ஒன்றும் செய்ய வில்லை . எல்லாம் இந்தப் பிள்ளைகள் தான் செய்தார்கள். நான் இவர்களோடு வந்தது மட்டும் தான் செய்தது. " என்றேன். நன்றியுடன் அவர்கள் பிள்ளைகளைப் பார்த்து கை கூபினார்கள். " என்னங்க நீங்க பெரியவங்க. எங்க வீட்டுப் பெண்ணுக்கு இப்படி நடந்தா சும்மா இருப்போமா? அதெல்லாம் ஒண்ணுமில்லே நீங்க பாத்துகோங்க. பாட்டி பாவம் ரொம்ப நேரமாச்சி. நாங்க அவங்களை வீட்டிலே விட்டு விடுறோம்" என்றவர்கள் " வாங்க பாட்டி போகலாம்" என்றார்கள். " நான் போயிடரேன்... நீங்க புறப்படுங்க " என்றேன் நான். " பாட்டி ரொம்ப நேரமாச்சு , உங்களை தனியா அனுப்ப முடியாது " என்றவகள் என்னை வீட்டில் விட வந்தார்கள். தத்தா கவலையுடன் காத்திருக்க நடந்த விவரமெல்லாம் கூறி பிள்ளைகளை அறிமுகப்படுத்தினேன். வீட்டிலிருந்ததை சாப்பிடக் கொடுத்து பிள்ளைகளை வாழ்த்தி அனுபினேன். 

    அவர்கள் சென்ற பின் அதே சூழ்நிலை என்னை சுற்றிச் சுற்றியே வந்தது. எப்படி பொறுப்பிலாமல் சூழ்நிலை தெரியாமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவர்கள் அடுத்த வினாடியே பொறுப்போடு நடந்து கொண்டு ஓர் உயிரைக் காப்பாற்றிய துணிவு என்னை வியப்பில் மட்டுமல்ல. சிந்திக்கவும் தூண்டியது. கலாச்சாரம் மாறி விட்டது. இது காலத்தின் கட்டாயம். அதனால் நம்முடைய பண்பாடு, இன்னல் கண்டு பதறித் துடிக்கும் பாசம் இன்றும் அப்படியே தான் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள்  பாசத்துக்கும் , பண்பாட்டிற்கும் பண்படுத்தப்பட்டவர்கள்தான் . காந்தியும்,  நேருவும், காமராசரும், குமரனும், பகத்சிங்கும் இளமையில் தான் சுதந்திர இந்தியாவுக்காக பாடுபட்டார்கள். துள்ளித் திரியும் இளைஞர்கள் எனக்கு சொல்லாமல் சொல்லும் செய்திகள் ஏராளம்.

     அடுத்த நாள் தோட்டத்தில் நான் நட்டு வைத்திருந்த செடி பட்டுப் போய் விட்டதே என எண்ணி அதை பிடுங்கி எறியலாம் என்று சென்றேன். என்ன ஆச்சரியம்..! இரு துளிர்கள் சிரிப்பது போல் தோன்றியிருந்தது. எனக்கு மகிழ்ச்சி. மடிந்து விட்டது என எண்ணுவது சில வேலை மடிவதில்லை. மாறாக, புது வீரியத்தோடு புது பயன் தர பூத்து வருவதும் உண்டு. என் மனதிலும் இளைஞர்கள் பற்றிய நல்ல தெளிவு நம் வருங்கால இந்தியாவின் பலம் புது தெம்போடு தெரிகிறது. (மீண்டும் பூக்கும் )


அன்புள்ளவனே !


இளைஞனே ! உன்னை 
வீரத்திற்கு சிங்கம் என்றார் 
விவேகத்திற்கு புலி என்றார்
புயல்  என்றார்
மலை என்றார்
படை என்றார்
பாசறை என்றார் 
நான் உன்னை நன்னிலம் என்பேன் 

இளைஞனே! நீ ! நிலம் 
உழைத்தால் பொன் தருவாய் 
துளிமழை பட்டு விட்டால் 
மண் வாசம் தருவாய்
காய் , கனி தருவாய் 
கனிமமும், தங்கம், வைரமும்,
தன்னகத்தே மறைத்திருப்பாய் !

இளைஞனே ! உன்னைத் தட்டிக் கொடுத்தால் 
தாவிஎழுந்து வான் தொடுவாய்
சரியாகத் தூண்டி விட்டால் 
சாதனை சரித்திரம் படைத்திடுவாய் 
மறைந்து கிடக்கும் சக்தியால் 
சுனாமியானாலும் தோள் கொடுப்பாய் 
மனதில் உறுதி கொண்டு விட்டால் 
மாமலையும் உன் முன் கடுகாகும்

அன்புள்ளவனே !
கோணலானவைகளை நேராக்க ,
உன்னால்! உன்னால் !! மட்டுமே முடியும் 
என்பதால் நாளைய நல்லுலகம்
உங்கள் கையில் என்ற வாழ்த்துக்களோடு... 


                                                        என்றும் அன்புடன், 
                                                           புஷ்பம் அமல்ராஜ் :) 

13 comments:

  1. Great Poem. Enjoyed Reading. Simple and elegant

    ReplyDelete
  2. nice periyamma.........(a pratical story)

    ReplyDelete
  3. nice periyamma............(a pratical story)

    ReplyDelete
  4. பேருந்து கதை super...poem too very nice ma..:)

    ReplyDelete
  5. anthony wilson babu,ammu, jenifer20 March 2011 at 9:09 pm

    Very nice mom, I am so proud to be your son.
    you have young mind Athai.
    Very nice poem appatha.

    ReplyDelete
  6. I am so proud to be your son.
    Very nice story.very young mind.
    Very nice poem.

    ReplyDelete
  7. இளைஞர்களை இதற்க்கு மேல் ஊக்கபடுத்தும் செய்தியோ கவிதையோ உண்டோ........அம்மா உங்கள் பிள்ளைகளாகிய நாங்களும் இளைஞர்கள் தாம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.........நாங்கள் என்றும் அன்புடனும்....ஆக்கம் சார்ந்த படைப்பாளிகளாகவும் வாழ இறைவனை மன்றாடுங்கள்......உங்கள் எழுத்துக்களும் நீங்களும் பல நூறாண்டு வாழ இறைவனை மன்றாடுகிறேன்.......அன்புடன் மகன்......அருள்

    ReplyDelete
  8. Nice Story and Truth one about the boys.
    Nice Aunty....
    :)

    ReplyDelete
  9. உன்னை மாதிரி எனக்கு நிறைய பிள்ளைகளை கொடுத்த கடவுளுக்கு நன்றி....
    என் பிள்ளைகளுக்கு இறைவனின் ஆசியும் எனது வாழ்த்துக்களும் !!!!!!!!!!!
    என்றும் அன்புடன்
    புஷ்பம் அமல்ராஜ்

    ReplyDelete
  10. Very nice poem. I read this many times, makes me to think and act in a right way. Youth should be rejuvenated by your poem and story.

    ReplyDelete
  11. பெரியம்மா.
    மிகவும் நல்ல சிந்தனை . உங்களை எனக்கு அறிமுகம் செய்த தங்கை மகள் சுகநன்றியை இந்நேரத்தில் உரித்தாக்குகிறேன்...நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. என்னை போன்ற அறிவியல் ஆர்வலர்களுக்கு உங்களை போன்ற கவிய படைப்பாளிகள்தானே ஒரே ஆறுதல் ...இன்னும் பல காடுகள் பூக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

    ReplyDelete