Pages

Tuesday, 8 March 2011

காடெல்லாம் பூத்திருக்கு (4) ! மகளிர் தின வாழ்த்துக்கள்




பூவே உன் புன்னகையின் பொருள் என்ன ?
( புஷ்பம் அமல்ராஜ்  - 044 25730952 / 9941459848 )

      வரிசையாய் போடப்பட்டிருக்கும் கட்டில்கள் அழுக்குக் கரை போகாத மெத்தை விரிப்புகள். கட்டிலில் நோயாளியும் அருகே அவருக்குக்காக துணையாளியும் பலதரப்பட்ட நோய்கள் அதற்காக முக்கல், முணங்கல், விசும்பல், அழுகை, கலக்கம், மயக்கமென பலதரப்பட்ட உணர்வுகளுடன் மத்திய அரசு பணியாளர் மருத்துவமனை நிறைந்திருந்தது. காலை மணி ஒன்பது போங்கம்மா போங்க . இவங்க எல்லாம் வெளியே போங்க. பெரிய டாக்டர் வரப் போறார். கேட்டைப் பூட்டப் போறேன் என பெரிய தொனியில் அதட்டியபடி அந்த வார்டின் பிரதான மனிதரான வார்டு பாய் விரட்டிக் கொண்டிருந்தான். 

      அனைத்து சப்தமும் அடங்கி அந்த இடம் அமைதியானது. என்னைப் பார்த்தவன் எரிச்சலுடன் " ஏம்மா, எல்லாருக்கும் தானே சொல்றேன். வெளியே போம்மா " என்றான். பக்கத்திலே வந்த நர்ஸ் " பெரியவருக்கு டாக்டர் கிட்டே பேச முடியாது அவங்ககூட இருக்கட்டும்" என சிபாரிசு செய்யவே குறை மனதாய் என்னை விட்டுச் சென்றான். 

      ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக் கொண்டு வந்த டாக்டர் பக்கத்து கட்டிலுக்கு வந்தார். நோயாளியை கண்ணைத் திறந்து பார்க்கச் சொன்னார். நாடித் துடிப்பைப் பார்த்தார். "எங்கே வாயைத் திறங்கள்" என்றார். திறந்த வாயைப் பார்க்க முடியாமல் அவர் மூக்கைப் பொத்தினார். " உம் .. மூடு .. மூடு " என்றார். "சரி உனக்கு என்ன செய்யுது? " என்றவரிடம் "சார், சாப்பிட முடியல, தூங்க முடியல்லே " என அடுக்கினார். 

      எனக்கோ தூக்கி வாரி போட்டது. ஆறு இட்லியை அடுக்கா சாப்பிட்டு காப்பி குடித்தார். இராத்திரி முழுசும் எங்களைத் தூங்க விடாமே குறட்டை விட்டு தூங்கிய இவரா இப்படிச் சொல்கிறார் என்று ஆச்சர்யம். 

      "சரி, கூட யார் இருக்காங்க? அவுங்களை வரச் சொல்" என்றவுடன் பெயர் சொல்லி கூப்பிட்டார்கள். அந்த அம்மா வந்தார். "என்னம்மா இவருக்கு என்ன செய்யுது?" என்றார். "சார், நாலு மாசத்துக்கு முன்னாடி வண்டியிலே போகும்போது விழுந்துட்டார். அதிலிருந்து நடக்க கஷ்டப்படறார். வேலைக்குப் போக மாட்டேங்கறார். நான் கட்டாயபடுத்தி வேலைக்கு அனுப்பினா உடனே திரும்பி வந்திடுறாரு. ரொம்ப கோபப்படுறாரு. தயவு செய்து அவருக்கு வேலை பார்க்க முடியலேன்னு ஒரு சேர்டிபிகட் (Certificate) கொடுத்திங்கனா என் பையனை அந்த வேலையில் சேர்த்திருவோம்" என சொல்லிட்டு அவர் முகத்தை பார்த்தவனை " இதோ பாரும்மா, இதென்ன அரசியலா? அப்பா போனா பையன் அந்தப் போஸ்டுக்கு வர்றதுக்கு. அப்படி எல்லாம் செய்ய முடியாது. சரி .... பெரிய டாக்டர் வந்தது பார்ப்பார் " என பல பக்கங்களில் தனது கருத்தைப் பதிவாக்கி விட்டு சென்றார். 

      அவர் சென்றவுடன் படுக்கையிலிருந்து எழுந்தவன் "எங்கேடி ஓடிப் போயிட்டே, பசிஎடுக்குது, ஏதாவது சாப்பிட குடு" என்றான். அவனையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்த அவளை " ஏய் உன்கிட்டேதானே சொல்றேன், சாப்பிட ஏதாவது குடு" என அதட்டினான். தனக்கு சாப்பிட வைத்திருந்த நாலு இட்லியை அவனிடம் கொடுத்து விட்டு பார்த்துக் கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடித்த கையை நீட்டி "உம்" கழுவி விடு என அதட்ட சிரிப்பு மாறாமல் கழுவி விட்டாள். "என்னை நல்ல படுக்க வை" என்றான். " டாக்டர் இருக்காரு, கத்தாதே, திட்டுவாரு" என்றவளை ' பட் ...பட் ... ' என நாலு அரை கன்னத்தில் அடித்தான். அதையும் வாங்கிக் கொண்டு சிரித்த முகத்தோடு படுக்க வைத்தாள்.

      'என்னடா பொண்ணு, அவன் கண்ட படி திட்டறான், அடிக்கிறான், சிரிக்கிறாளே....' என வியந்தேன். 

      பகல் பொழுது பரபரப்பை கழிந்தது. இரவு மணி எட்டு பக்கத்துக் கட்டில் ஆள் கும்ப கர்ணனை தூக்கத்தில் இருந்தான். 

      அந்த பெண் என் அருகில் வந்தாள். 

      "அம்மா, நீ சாப்பிடிருக்க  மாட்டே வா சாப்பிடலாம்" என வந்த சாப்பாட்டைப் பிரித்து அவளுக்கு கொடுத்தேன். 

      முதலில் வேண்டாம் என்றவள் நான் வற்புறுத்தியதால் வாங்கி கொண்டாள். 

      சாப்பிட்டு முடித்ததும் " ஏம்மா,  உன்னைப் பார்க்க சங்கடமா இருக்கும்மா. இவரு எபவும் இப்படிதானா? அடிக்கிறாரு, திட்டறாரு நீயும் சிரிச்சிகிட்டே இருக்கியே? " என்றேன். 

      "இல்லேம்மா, எப்பவும் இப்படித்தான். எனக்கு கலியாணம் ஆகும் போது பதினாறு வயசு அவருக்கு முப்பத்தைஞ்சி. எங்க அப்பா விவசாயி. சின்னதிலேயிருந்து கஷ்டப்பட்டவரு. நாங்க மூணு பொண்ணுங்க நான் அரசு பள்ளியிலே பத்தாவது படிச்சிட்டு இருந்தேன். இவரு மத்திய அரசு ஊழியர். வந்து பொண்ணு கேட்டாங்க. பெரிய வேலையிலே இருக்காரு. நாம பட்ட கஷ்டத்தைப் பொண்ணு பட வேண்டாம்னு அப்பா சம்மதம் சொல்லப் போரேன்னாரு  . அப்பா வேண்டாம்ப்பா, எனக்கு இன்னும் வயசாகலேப்பா, படிக்கிறேன்னு கெஞ்சி கேட்டேன். அம்மா, கவர்மெண்ட்டு உத்தியோகம் . உன்னை நல்லா வச்சிருப்பார்னு சொன்னாரு. அப்பா நான் படிச்சி வேலைக்கு போயி உன்னை நல்லா வச்சி காப்பாத்துரேன் என்றேன். உனக்கு பின்னாலே ரெண்டு பொண்ணுங்க இருக்கு. நா என்னம்மா செய்வேன்? என என் வாயை அடைத்தார். நான் வேதனையில் குனிந்தேன். என் கழுத்தில் தாலி ஏறியது. மனம் முடித்து மூண்டு மாதம் கழிந்தது . எதெற்கெடுத்தாலும் ஏட்டியும் போட்டியுமாம்  நாட்கள்  ஓடியது. என் வீட்டிலிருந்து யார் வந்தாலும் வான்னு சொல்ல மாட்டாரு. இரண்டு மூன்று தடவை வந்தார்கள். அதன்பின் மதிக்காத வீட்டு தலைவாசல் மிதிக்க மாட்டோம் என் அவர்கள் சுய மரியாதையை காத்து கொண்டார்கள். காலமும் ஓடிபோச்சி. முதலில் அவரது அடியும் திட்டும் நரக வேதனையை அழுவதிலும், சாப்பிடாமலிருப்பதிலும் கழிந்தது. நான் அழுவதை பார்க்கும் போது என் பலவீனத்தை உணர்த்து மேலும் பலத்தோடு அடிப்பார். வேண்டாத வார்த்தைகளால் திட்டுவார். அதன் பிறகு என் பவீனத்தை வெளிக்காட்டாமல் தாங்கி கொண்டு சிரித்தேன். என் அழுகையாய் நிறுத்தினேன். எப்படி அவர் திட்டினாலும், அடித்தாலும் சிரிப்பேன். என் சிரிப்பு அவருக்கு எரிச்சலையும், பலவீனத்தையும் ஏற்படுத்தவே அடியை நிறுத்தி விடுவார். அம்மா என்னுடைய ஆயிரமாயிரம் அவஸ்த்தைகளின் வெளிப்பாடு தான் இந்தச் சிரிப்பு. 

      குமுறிக் குமுறி அழுதாள்.

      "அம்மா, நான் அழுது எவ்வளோவோ நாளாச்சி. உங்களது அன்பும், அனுசரணையான பேச்சும் என்னை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு போய் விட்டது. என்றவளை அனைத்துக் கொண்டு " அம்மா நீ அழு, நன்றாக அழுது விடு. இத்தனை துக்கத்தையும்  பூட்டிப் பூட்டி வைத்திருந்தால் மன அழுத்தம் உன்னை பித்தாக்கிவிடும். கடவுள் தந்த பலம் எபோழுதும் உன்னோடு இருக்கும் " என்றேன். 

      " அம்மா , சின்ன வயசில் படிப்பைக் கெடுத்து பெண்களை அடிமை போல் திருமணம் என்ற பெயரில் விற்று விட்டு அதன்பிறகு பெற்றோர் அவர்களுடைய தன்மானத்தையும், மரியாதையும் பார்க்கிறார்களே. அரசின் வயது வரம்பையாவது அவர்கள் பின்பற்றினால் எத்தனை பெண்கள் காப்பாற்றபடுவார்கள்!  பெண்கள் படித்து சரியான வயதில் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்யும் நான்தான் என் போன்றோர்களுக்கு நல்லா நாள். 

      பேச்சு முடியும் போது " யேய் , எங்கேடி போயிட்டே? எனக்கு நல்லா போர்த்தி விடு என்றவனை நோக்கி சிரித்து கொண்டே சென்றவளை பார்த்து ஆச்சரியப்பட மட்டுமே என்னால் முடித்தது.  

(மீண்டும் பூக்கும் )

பெண்ணே , உன் சுதந்திரம் எங்கே? 


சுதந்திரமாய் வீசும் காற்று, 
யாராலும் தடுக்க இயலா மழை, 
தானே கழன்று விழும் பனித்துளி,
எதற்கும் கட்டுப்படா  கடல், 
கிழக்கே எழும் சூரியன்,
தனக்குரிய வாசம் வீசும் மலர்,
நினைத்தால் பாடும் குயில் - என 
எல்லாம் சுதந்திரமாயிருக்க
பெண்ணே! நீ மட்டும் எப்படி அடிமை பட்டாய்...

கருவறையில் பெண்ணென்றால் ,
உலகைக்கான முடியாமல் அழிக்கப்படுகிறாய்,
மீறி பிறந்த பின்னும் கட்டுப்பாடு அடிமைத்தனம்
பள்ளியிலே பாடம் பயில ஆசானிடம் அடிமை
வளர்ந்த பின் உன் விருப்பம் நசுக்கப்பட 
பெற்றோரின் கனவுகளால் திணிக்கப்பட 
திருமண பந்தம் மற்றவர்களால் அமைகிறது 

அடிமை தப்பிக்க முடியா கொடுமை
சுதந்திரம் பெற்றோம் என்கிறார்கள்
அந்த காற்றையாவது சுவாசித்திருக்கிறாயா?
எப்போது விடுதலை உனக்கு
சின்ன முட்டையை உடைத்து வெளிவரும்
பறவையாய் மனக்கூட்டைக்கோட்டை உடைத்தெறி 
சங்கிலித் தொடரை கட்டுண்டு கிடக்கும்
மடமையை அறுத்தெறிந்து வெளியே வா
சுவாசி சுதந்திரக்காற்றை நேசி
உனக்குள் சில்லிட்டு வெளிவருகிறதே
உணர்வு அதுவே சுதந்திரம்
நுகர்ந்து கொள், உள் வாங்கு, காப்பாற்று,
சுதந்திரம் என்றும் உனதாகும்
...........அன்புடன்  புஷ்பம் அமல்ராஜ் 



8 comments:

  1. This story conveys that a men starts his life with help of women and ends with a help of women..............without the presence of women world is treated as absence...............
    Women smile can do whatever she desires.........
    I LOVE U PERIYAMMA...........

    ReplyDelete
  2. Nice Story.....

    This story dedicated for women... on women's day :)

    "pengalin arumae yai unarthu girathi" Goood

    ReplyDelete
  3. Very nice poem. Simple and elegant

    ReplyDelete
  4. its true,happenin in women's life...nice story ma.

    ReplyDelete
  5. Anna amazing.. nice story and heart touching... Women smile can do whatever she desires and can do anything... some smile shows their happiness and some smiles hide their sadness....

    ReplyDelete